மண்ணாந்தை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மண்ணாந்தை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
- இன்று காலை ஒரு கல்லூரி நிகழ்ச்சி. ஒரு ஆசிரியர் இன்று "ஊடகங்கள் குழந்தைகளைக் கெடுக்கின்றன , என்ன செய்யலாம்", என்றார். "குழந்தைகளை மூடிப் போட்டு வைத்து அவர்களை மண்ணாந்தைகளாக ஆக்குவதைவிட கெட்டுப்போக வைப்பது மேல்" என்றேன். (தேர்வு-கடிதங்கள், ஜெயமோகன்)
- ஒரு சமூகமே தங்களை கொண்டாடும்படிச் செய்து அச்சமூகத்தை பற்பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடிமையாக இருக்கச்செய்து சுரண்டிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிராமணர்கள் இந்திரஜாலம் தெரிந்த மாயாவிகள் அல்ல. அப்படி அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டவும் அதை உணராமல் கும்பிட்டு காணிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் மண்ணாந்தைகளும் அல்ல (ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2, ஜெயமோகன்)
- கோபம் ஏன் வரக் கூடாது என எனக்கு புரியவில்லை எல்லாவற்றிற்கும் மந்தகாசமான ஒரு புன்னகையுடன் மண்ணாந்தை மாதிரி இருப்பவன்தான் ஒரு உன்னத எழுத்தாளன் என்பதில் உடன்பாடு இல்லை (ஆன்மாவைக் கூவி விற்றல், ஜெயமோகன், பின்னூட்டம்)
- அமெரிக்காக்காரன் ஆங்கிலத்தில் செய்வது போன்று செய்யவேண்டும், அதுவே சரியானது, முடியாவிட்டால் அறிவியக்கமே தேவையில்லை என்று சொல்லும் மண்ணாந்தைத்தனம் இந்திய தாழ்வுணர்ச்சியில் இருந்து மட்டுமே உருவாகக்கூடிய ஒன்று. (இரண்டாம் மொழிபெயர்ப்பு, ஜெயமோகன்)
:அறிவிலி - முட்டாள் - பேதை - மடையன் - ஏமாளி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +