மதலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மதலை(பெ)
- மழலை மொழி
- குழந்தை
- மகன்
- பாவை
- பற்றுக்கோடு
- தூண்
- யூப ஸ்தம்பம்
- வீட்டின் கொடுங்கை
- பற்று
- மரக்கலம்
- கொன்றை
- சரக்கொன்றை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- prattle or lisp of children
- child, infant
- son
- doll
- prop, support
- post, pillar
- sacrificial post
- overhanging border, cornices or projections on the sides or front of a house
- desire, attachment
- ship, boat
- senna
- Indian laburnum
விளக்கம்
பயன்பாடு
- பால்குடி மாறா மதலை வாசம் (எது கவிதை, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- மதலை யிற்றமைகேட்டலும் (சேதுபு. அக்கினி. 82).
- மதலையாஞ் சார்பிலார்க்கு (குறள்,449)
- மதலைகீழ் வைத்ததென்மதலைக் கோதிலேன் (உபதேசகா. சிவத்து. 61).
- மதலைநாண் பறப்பை(கந்தபு. சாலைசெய். 23).
- மதலைமாடமும்(மணி. 1, 53).
- மதலையினெஞ்சொடு (கலித். 28).
- கொழுநிதிக் குப்பையெல்லாம் . . .மதலையேற்றி (சீவக. 505).
ஆதாரங்கள் ---மதலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +