வம்பு
Appearance
- பெயர்ச்சொல்
- வம்புக்கு இழு
- உரிச்சொல்
- வம்பு நிலையின்மை - தொல்காப்பியம் 2-8-30
- வம்ப வடுகர் (அகநானூறு 375) = நாடோடி வடுகர்
- வம்ப மோரியர் (அகநானூறு 251)
- வம்பப் பரத்தை (சிலப்பதிகாரம் 10-219)
- வம்பப் பரத்தர் (சிலப்பதிகாரம் 16-63)
பொருள்
- (பெ) வம்பு
- சண்டை
- வீண் வார்த்தை
- பழிமொழி
- தீம்பு வார்த்தை
- சரசச் செயல்
- சிற்றொழுக்கம்; கீழ்த்தரமான நடத்தை
- அசப்பியம்; கீழ்த்தரமான வார்த்தை
- வஞ்சனை
- பயனிலாமை
- நிலையின்மை
- புதுமை
- படிறு
- உவமை
- வாசனை
- அரைக் கச்சு
- மூலைக் கச்சு
- யானைக் கச்சு
- கையுறை
- மேற் போர்வை
- மிடா
- சிவிகையின் வளைகொம்பு
- வம்பு மரம் (குற்றவாளிகளைக் கட்டி வைத்தடிக்கும் குறுக்கு மரவகை)
- ஏர்க்கால் (கலப்பை வண்டியிவற்றின் நுகம் கொளுவும் உறுப்பு); நுகக்கால்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- quarrel
- idle talk; gossip
- scandal
- evil word
- wanton act; dalliance
- base conduct
- indecent language
- deceit
- uselessness, worthlessness
- instability
- newness, novelty
- falsity
- comparison, similitude
- fragrance
- girdle, belt for the waist
- stays for woman's breast
- girth of an elephant
- glove
- upper garment
- earthen vessel
- curved bamboo pole of a palanquin
- a kind of cross-tree to which criminals are tied when whipped
- shaft, as of a plough or of a carriage; thill; shaft of a plough
விளக்கம்
பயன்பாடு
- அவன் ஒருவரோடும் வம்புக்குப் போகிறதில்லை
- அவளோடு வம்பு பண்ணினான்
- வம்புச் சண்டை
(இலக்கியப் பயன்பாடு)
- வம்பு தும்பு பேசாமல் மரத்தடியில் நில்லும் (சிந்து இலக்கியம்)
- வீரர்களில் ஒருவன், "உனக்கு ஏன் அப்பா இந்த வம்பு? பேசாமல் வண்டியை ஓட்டு!" என்றான் (பார்த்திபன் கனவு, கல்கி)
- ஓரிடத்தில் இரண்டு பணிப்பெண்கள் வம்பு பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது (பார்த்திபன் கனவு, கல்கி)
- சற்று நேரம் அவர்களுடன் வம்பு பேசிப் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் (சிவகாமியின் சபதம், கல்கி)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ