வராகன்
Appearance
பொருள்
வராகன்(பெ)
- வராகம் ரூபியான திருமால்
- (பழங்காலத்தில் மூன்றரை ரூபாய் மதிப்புள்ள) பன்றி முத்திரை கொண்ட பொன் நாணயம்
- கொடி வகை
- 4.2 கிராம்
- முப்பத்து இரண்டு குன்றிமணி எடை (ஒரு குன்றிமணி எடை 130 மில்லி கிராம்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Vishnu,in His boar-incarnation
- pagoda, a gold coin = 3½ rupees, as bearing the image of a boar
- pointed-leaved hogweed; boerhaavia rependa
விளக்கம்
- விஜயநகரப்பேரரசில் தமிழகம் சேர்ந்த பிறகு அவர்களுடைய தங்கநாணயம் புழக்கத்திற்கு வந்தது. விஜயநகர மன்னர் திருமலராயர் (கி.பி 1570- 1572) காலத்தில் தங்க நாணயத்தில் விஜயநகரத்தின் அரசமுத்திரையான வராகம் (பன்றி) உருவத்தோடு வெளியிடப்பட்டது
பயன்பாடு
- பிள்ளை கவிராயரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பெரிய தட்டிலே பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பட்டு வஸ்திரத்துடன் பொற்காசுகளாக ஆயிரம் வராகன் பரிசளிக்கிறார். (இடம் மாறியது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வராகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +