வாழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாழை(பெ)

ஒலிப்பு
(கோப்பு)


பொருள்
  • ஒரு வகைப் பழ மரம்
  • அதனுடைய பழம்.
  • இலை,காய்,தண்டு அனைத்தும் பயனுள்ளவை.
  • வாழைப்பழங்கள் தமிழ் கடவுள் வழிபாட்டிற்குப் பயன்படுகிறது.

அறிவியல் பெயர்[தொகு]

  • Musa paradisica linn
மொழிபெயர்ப்புகள்
  1. 1.bananatree, 2.banana, 3.plantain.ஆங்கிலம்
  2. केला.இந்தி
விளக்கம்

(இலக்கணப் பயன்பாடு)

தமிழிலக்கணப்படி, இச்சொல், ஒருபொருட்பன்மொழி ஆகும்.

(இலக்கியப் பயன்பாடு)

  1. மால்வரை யொழுகிய வாழை (தொல்காப்பியம் சொல். 317, உரை).
  2. செழுங்கோள் வாழை (புறநானூறு 168, 13)
  3. கோழிலை வாழை (அகநானூறு 2).
  4. குலைவாழை பழுத்த (சீவக சிந்தாமணி. 1191).
  5. ததையிலே வாழை (ஐங்குறுநூறு. 460)


( மொழிகள் )

சான்றுகள் ---வாழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

David W. McAlpin என்பவரின் கருவ அகரமுதலி

*ஒத்த சொற்கள்

(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (கோள்) (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை)(மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).

  • மற்ற சொற்கள்

(இராட்டினவாழை) - (செத்தல்) - (சோடை) - (நுகும்பு) - (மொந்தன்) - - (வாழைக்கச்சல்) - (வாழைமட்டம்) - (கட்டையிலை) - (வாழைப்பூ) - (வாழைத்தார்) - (வாழைச்சீப்பு) - (ஊதல்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழை&oldid=1989015" இலிருந்து மீள்விக்கப்பட்டது