மதி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மதி(பெ)
- பூமியின் துணைக்கோள்
- வெண்மதி வானில் தவழ்கின்றது
- அறிவு
- விதியை மதியால் வெல்லலாம்
- மதிநுட்பம் - கூரிய அறிவு
- பகுத்தறிவு
- வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டலும் அதன்படி நடத்தலுமாகிய கடமை
- மதிப்பு
- காசியபரின் மனைவியான தக்ஷன்மகள்
- பிண்டி என்னும் மரம்
- மாதம் என்னும் கால அளவு
- இராசி
- குபேரன்
- இடைகலை
- கடகம் என்னும் ராசி
- மதிநாள் - மிருகசீரிடம் என்னும் நட்சத்திர நாள்
- மது
- யானை
- ஒன்று என்னும் எண்ணைக்குறிக்கும் குழூஉக்குறி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- moon
- knowledge
- Discrimination, judgment, discernment
- Duty of listening to exposition of the Vēdas and acting in accordance with the precepts thereof
- A wife of Kāšyapa and daughter of Dakṣa
- Esteem, value
- Asōka tree
- Month
- Sign of the zodiac
- Kubēra
- Breath passing through the left nostril
- Cancer of the zodiac
- Liquorice-plant
- Elephant
- The number 'one'
:பூமியின் துணைக்கோள் - நிலவு - நிலா - திங்கள் - சந்திரன்
பொருள்
மதி(வி)
- மரியாதை செய், கண்ணியப்படுத்து
- உன்னைப்போல் பிறரையும் மதி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- respect
பொருள்
மதி(இ)
- முன்னிலை அசைசொல்
பயன்பாடு
- சென்மதி பெரும
- "மியா, இக, மோ, மதி, இகும், சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்" - தொல்காப்பியம் 2-7-26
சொல்வளம்
[தொகு]- மதி, மதிப்பு, மதித்தல்
- மதிமுகம், மதிமகன், மதிமயக்கம்
- முழுமதி, கூறுமதி, நிர்மதி, வட்டமதி, காந்திமதி, பிறைமதி
- ஏற்றுமதி, இறக்குமதி
- மிதி, மீதி.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +