அட்டபந்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அட்டபந்தனம்(பெ)

  1. சிலை, விக்கிரகங்கள் அசைவின்றியிருக்கும்படி அவற்றை நிறுவும்போது அவற்றின் அடியிடத்துச் சாத்தப்படும் எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த கலவைச் சாந்து
  2. தீங்கு வராமல் தடுப்பதற்குத் திக்குத்தேவதைகளை மந்திரத்தால் எண்டிசைகளிலும் நிறுத்துகை.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a kind of prepared paste or cement used at the base of a stone idol to fix it firmly, and made of eight ingredients
  2. posting by incantations the regents of the eight cardinal points round a place to ward off evil
விளக்கம்
கொம்பரக்கு —– 1 பங்கு
குங்குலியம் —– 3 பங்கு
காவிக்கல் —– 3 பங்கு
வெண்மெழுகு —– 3 பங்கு
வெண்ணெய் —– 3 பங்கு
செம்பஞ்சு —– 3 பங்கு
சுக்கான் —–முக்காற் பங்கு
சாதிலிங்கம் —– காற்பங்கு
போன்ற எட்டு விதமான பொருட்களாகும்.
  • புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்டபந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்படும். சில சந்தர்ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக்கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பாபிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில்களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம். ([1])
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அட்டபந்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

பந்தனம், அஷ்டபந்தனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டபந்தனம்&oldid=1023190" இருந்து மீள்விக்கப்பட்டது