அப்பிராணி
Appearance
அப்பிராணி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அப்பிராணி = அ+பிராணி
- பிராணி மூர்க்கமான விலங்கு. அந்த விலங்குப் பண்பில்லாத சாதுவான, அப்பாவியான ஒருவரை அப்பிராணி (அ+பிராணி) என்று தமிழர் வழங்குகின்றனர். ( மின்தமிழ், கூகுள் குழுமம்)
பயன்பாடு
- எங்கே போகிறான் யாரோடு கூடித் திரிகிறான் என்று பார்க்க வேண்டாமா ? வீட்டுக்குள் அப்பிராணி மாதிரி ஒரு முகம், வெளியில் சண்டியன் மாதிரி இன்னொரு முகம். ( விடியும், திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்)
- தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்த அப்பிராணி அவன், எங்கள் குழுவிலேயே அவன்தான் சீக்கிரம் முன்னுக்கு வருவான் என நினைத்திருந்தேன் ( ராமசாமி, செந்தில்)
- எல்லா விலங்குகளிலும் ஆணை விடப் பெண்தான் அதிக வேட்டுவத் தன்மைகொண்டு இருக்கும். கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் அப்பிராணி, கடிக்காது. ஆனால் பெண், துரத்தித் துரத்திக் கடித்து மலேரியாவைப் பரப்பும். காரணம், பெண்ணுக்குத்தான் தன் குட்டிகளைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத் திறன், அதிக பார்வைக் கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித் திறன், அவ்வளவு ஏன்... துரித கதியில் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றைத் தகவமைத்து இருக்கிறது. (ஆனந்த விகடன், 20 அக் 2010)
- அப்பிராணி உயிரினமாக இருந்தாலும் சில வகை எறும்புகள் ஆளையே காலி செய்துவிடும் என்ற பேச்சும் உள்ளது. உதாரணமாக ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள பிரமாண்ட எறும்பினங்கள் யானையையே உணவாக்கிவிடும் என்றும், ஆஸ்திரேலியாவில் உள்ள குதிக்கும் எறும்புகள் மனிதனுக்கு எமனாகின்றன என்றும் சொல்லப்படுகிறது. ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அப்பிராணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +