எம்மான்
Appearance
பொருள்
எம்மான்(பெ)
- என் மகன்
- எம்மானே தோன்றினா யென்னையொளித்தியோ (சீவக. 1801).
- எம் ஆண்டவன்
- எந்தையே யெம்மானேயென்றென் றேங்கி (தாயு. ஆகார. 6).
- எம் தந்தை
- எம்மா னெம்மனையென்றனக் கெட்டனைச்சார்வாகார் (தேவா. 322, 3).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தலைநகரில் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நெடுநாட்கள் சிறை வைக்கப்பட்ட ஒருவர் விடுதலை பெற்று அல்ல; வெறும் பிணையில் வெளியே வருகிறார் என்பதற்கே, அவருக்கு விண்ணூர்தி நிலையத்தில் அளிக்கப்படும் வரவேற்பு, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் கூனை நிமிர்த்தி விட்டு பம்பாய்த் துறைமுகத்தில் வந்திறங்கிய எம்மான் காந்திக்குக் கூட அளிக்கப்படவில்லை. மேளதாளங்கள்; சரவெடிகள்; வரவேற்பு வளைவுகள்; தலை வெளிப்பட்டவுடன் கூட்டம் எழுப்பும் ஆரவாரம்; உரியவரைச் சுற்றி எழும் நெரிசல்; "நாளைய தமிழகமே" என்னும் வாழ்த்து முழக்கங்கள்! இங்கே புகழ் என்பது விலைக்குரிய பண்டம்! செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள்; தந்திக் கம்பத்துக்குத் தந்திக் கம்பம் வரவேற்புத் தட்டிகள்; பிடித்து வரப்பட்ட கூட்டம்; இவைபோதும் பிணையில் வந்தவரைப் பெம்மான் காந்தி ஆக்குவதற்கு! (புறமறிப் பாராய்!, தினமணி, 06 பிப் 2012 )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எம்மான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தம்பிரான், எம்பெருமான், பெருமான், எம்பிரான், பெம்மான், அம்மான், சீமான், கோமான், மான்