செந்தூரம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செந்தூரம்(பெ)
- சிவப்பு
- நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி
- வெட்சி எனும் பூச்செடி
- செங்குடை
- செந்நிற உலோக ஆக்சைடு; செந்நிற மருந்துக் கலவை; செந்நிற இரசாயனக் கலவை
- யானைப் புகர்முகம்
- சேங்கொட்டை
- செவ்வியம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- redness
- vermilion, red paint, red powder for a spot that Indian women sport on their forehead
- a flower shrub; scarlet ixora
- red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally
- red umbrella
- elephant's face, as spotted red
- marking-nut tree
- red lead, minium
விளக்கம்
- செந்தூரம் = சிந்தூரம்
பயன்பாடு
- அவன் படிகளில் இருந்து கொஞ்சம் செந்தூரம் எடுத்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு மீண்டும் கைகூப்பிவிட்டு வெளியே வந்தான். (பழையமுகம், ஜெயமோகன்)
- தோழி அத்தானைப் பார் என்று உனைக் கிள்ள
- முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள
- பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த (திரைப்பாடல்)
- காயகல்பத்தில் பயன்படுத்தும் மருந்துகள் பல இருக்கின்றன.அவற்றில், வீரம், பூரம், அயம் எனபவை சில. அயம் என்றால் இரும்பு. இரும்பை நெருப்பில் வேக வைத்து, "அய காந்த செந்தூரம்" போன்ற செந்தூரங்களைச் செய்து உட்கொள்வார்கள். வேக வைத்த இரும்பு = வெந்த அயம் = செந்தூரம் ([1])
- அயச் செந்தூரம் அப்படியே எடுத்துக்கொள்ளும் போது மலக்கட்டினை ஏற்படுத்தும். எனவே அதனை திர்பலை என்னும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்துச் செய்யப்படும் சூரணத்துடன் வழங்குவது சிறந்தது (அயம் Ferrum, சித்த மருத்துவர் பிரின்ஸ்)
- பயிற்சியில் மூலிகை பற்றிய விவரங்கள், எந்த எந்த மூலிகைகள் எந்தெந்த நோய்களுக்குப் பயன்படும், மூலிகைகளைக் கொண்டு பற்பம், செந்தூரம், லேகியம், சூரணம் முதலியவை தயாரிப்பது எப்படி போன்றவை செயல்முறையில் விளக்கம் அளித்து கற்றுத் தரப்படும். (மூலிகைத் தொழில் பயிற்சி, தினமணி, 10 பிப் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செந்தூரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +