பயனர் பேச்சு:Info-farmer/2009

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பயனர் பேச்சு:தகவலுழவன்/2009 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இயங்குபடத்தை நீக்க வேண்டுகிறேன்[தொகு]

மொழிபெயர்ப்பு என்னும் தலைப்பில் ஓர் இயங்குபடம் (அசையும் படம்) இணைத்து உள்ளீர்கள் (Ball mill.gif). அது கண்ணை உறுத்துகின்றது. நீக்கலாமா? அழகான ஒரு சிறு பல்நிறப்படம் (அசையாத படம்!) இருக்கலாம், ஆனால் இயங்குபடம் இருப்பது தேவை இல்லாமல் கண்ணை அலைக்கழிக்கின்றது.--செல்வா 05:06, 27 ஜனவரி 2009 (UTC)

  • சாதாரண காகிதத்தில் நாம் பெறக் கூடியத் தகவல்கள் வடிவமைப்புப் போல் அல்லாமல், விக்சனரிப் பக்கம் பல்லூடக வடிவமைப்பினை உடையது என்பதனை உணர்த்த, அந்த அசைப் படத்தினை இட்டேன்.
  • அந்த அசைப் படம், இவ்வுலகம் பல மொழிகளைக் கொண்டு இயங்குகிறது; ஒவ்வொரு புள்ளியும், ஒவ்வொரு மொழி என்பதனையும் தெரிவிக்கிறது.
  • சிறுவர்களும், மற்றவர்களும் நம் தளத்தினைக் காண வேண்டும் என்பது என் அவா. ஒரு குறிப்பிட்ட பயனர் எல்லைகளை மட்டும் அடைவதோடு நின்று விடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன். 'பயனர்' தொடர்ந்து படிக்க, சின்ன சின்ன விளையாட்டுத் தனங்கள் அவசியமே. அது எவ்வகையிலும், நம் இலக்கைத் தடுக்காது. எனவே, எனக்கு அதனை நீக்குவதில் உடன்பாடில்லை. நன்றி. தகவலுழவன் 05:35, 27 ஜனவரி 2009 (UTC)
உங்கள் கருத்து புரிகின்றது, ஆனால் கண்ணை உறுத்துகின்றது, நன்றாக இல்லை, தேவை அற்றது என்பது என் நேர்மையான கருத்துகள். பல்லூடகத்தன்மையை கருத்து தெரிவிப்பதில் காட்டலாம்.ஓடு என்னும் சொல்லூக்குப் பொருளாக தருவதுடன், இயங்குபடம் இணைக்கலாம். ஊசல், ஊஞ்சல் போன்ற சொற்களுக்கு இயங்குபடம் சேர்த்துக் காட்டலாம். குதிரையின் நடையில் gallop என்பதற்குத் தமிழில் உள்ள பல சொற்களுள் சுருளம் என்று ஒரு சொல் உண்டு. இதனை விளக்க சுருளப் பாய்ச்சலில் குதிரை ஒட்டுவதை இயங்கு படமாக காட்டலாம். எனவே இது போல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இடங்களில் தகுந்த இயங்குபடம் காட்டலாம். அவை பயன் பெருக்குபவை. இப்பொழுது உள்ள Ball mill.gif இயங்குபடம் தெளிவாகவும் இல்லை, நன்றாகவும் இல்லை, கண்ணையும் உறுத்துகின்றது. பிறர் கருத்தையும் அறியலாம். பலரும் இருக்க வேண்டும் எனில் இருக்கட்டும். நீங்கள் தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் அளித்துவரும் பங்களிப்புகளை நான் மிகவும் போற்றுகிறேன். என் கருத்துகளை வளர்முக நோக்கத்துடனேயே இடுகின்றேன். நன்றி.--செல்வா 13:54, 27 ஜனவரி 2009 (UTC)
  • ஓங்குக தமிழ் வளம்!
  • இயங்குபடம் எனக்குத் தெளிவாகத் தான் தெரிகிறது. எனினும், அனுபவம் மிக்க, தங்களது கருத்துக்களைப் பின்பற்றுகிறேன். வழிகாட்டியமைக்கு நன்றி!
  • ஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள உரையாடல் என்ற தத்தலைச் சொடுக்கும் போது தோன்றும் பக்கம், பழையப் பெயரிலேயே இருக்கிறது. அதாவது, பயனர் பேச்சு என்றே தோன்றுகிறது. அதனையும் பயனர் உரையாடல் என மாற்ற, நிர்வாகியான உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
  • Mass uploader பற்றி தங்களது வழிகாட்டல்களைத் தெரிவிக்கவும். தானியங்கிப் பற்றியும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். என்னைப் போன்றவர்களுக்கு, தங்களின் அனுபவ அறிவு மிக்கத் தேவை. நம் தமிழை இங்கு முதலிடத்திற்கு உயர்த்த, சிறந்த புத்தகங்களை பதிவேற்றம் செய்தாலே போதுமெனத் தோன்றுகிறது. எனக்கு நூலகம் சென்று குறிப்புகள் எடுப்பதில் பிரச்சனையில்லை. அனைத்தையும் பதிவேற்றம் செய்யும் போது, தளர்ந்து விடுகிறேன். நன்றி!தகவலுழவன் 15:51, 27 ஜனவரி 2009 (UTC)
மொத்தத் தரவேற்றி (Mass uploader) பற்றிய உங்கள் கேள்வியை சுந்தர், ரவி, நற்கீரன் அவர்களுக்கு நேரடியான மின்னஞ்சல் வழி கேட்டேன். சுந்தர் உங்களுக்காக பேச்சு:அருமை என்னும் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். பார்க்க வேண்டுகிறேன். நான் விக்சனரியில் நிருவாகி அல்ல. ரவியிடம் கேட்டால் அவர் "பயனர் பேச்சு" என்பதை மாற்றித்தர உதவுவார். சிறந்த புத்தகங்களை, அதுவம் நாட்டுடைமை ஆக்கப்பட்ட புத்தகங்களை விக்கி மூலத்தில் வலையேற்றுவது மிகவும் பயன்தருவது. எது குறித்தும் தளர்ந்து போகாதீர்கள். உடைமை என்பது கூக்கம் உடைமை என்று வள்ளுவர் கூறுகிறார். ஊக்கம் உடைமை, உடைமை என்கிறார். புத்துணர்வு பெற பிற பணிகளில் சற்று நேரத்தையும், உள்ளத்தையும் ஊன்றி செலவழித்துவிட்டு மீண்டும் வந்தால் புத்தூக்கத்துடன் பணியாற்ற இயலும். --செல்வா 20:15, 27 ஜனவரி 2009 (UTC)

அனைத்தினையும் ,உள்வாங்கிக் கொண்டேன். நான் எதிர்பார்த்த வழிகள் காட்டப்பட்டுவிட்டன. 'இனி ஒரு விதிசெய்து, அதனை எந்த நாளும் காக்க வேண்டும். காப்பேன்.' எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தகவலுழவன் 06:51, 28 ஜனவரி 2009 (UTC)

அசைப்படம் நீக்கப்படுதல்[தொகு]

அன்பிற்கினிய நண்பருக்கு

  • இழுப்பு திசைவேகத்திற்கு நீங்கள் இணைத்துள்ள அசைப்படம் உண்மையில் எலக்ட்ரானின் இயக்கத்திற்கான அசைப்படம். எனவே அந்த அசைப்படம் நீக்கப்படுதல் நல்லது. இப்போதைக்கு எந்த இணைப்பிலும் இழுப்பு திசைவேகத்திற்கான படங்கள் உள்ளவாறு தெரியவில்லை. --பரிதிமதி

ஓங்குக தமிழ் வளம் !

பண்பிற்கினிய பங்களிப்பாளரே!

  • drift_velocity
  • எந்த சொல்லுக்குரிய உரையாடல் பக்கத்தில் உங்கள் கருத்துக்களைக் கூறினாலும், அது அச்சொல்லை உருவாக்கியவர்கள் மீண்டும் புகுபதிகை செய்யும் போது, அது தானாகவே அவர்கள் கவனத்திற்கு வரும். பிறகு நீங்கள் புகுபதிகை செய்யும் போது, அவர்கள் செய்த மாற்றங்கள், உங்களுக்கு அக்குறிப்பிட்ட சொல்பக்கம் செல்லாமலே தெரியவரும். இந்த குறிப்புரை தங்களுக்கு, இத்தள புரிந்துணர்வை மேம்படுத்துமென நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்.(தகவலுழவன் 08:03, 4 மே 2009 (UTC))[பதிலளி]

இசுலாம்[தொகு]

அருள்கூர்ந்து இசுலாம் என்றே எழுதுங்கள். இஃசுலாம் என்பது தேவை இல்லை. Oxford முதலான சொற்களில் ஆக்சுபோர்டு என்றுஎழுதுவதை விட ஆக்ஃசுபோர்டு என்று எழுதுவது சரியாக இருக்கும். பொதுவாக ts, ks முதலான ஒலிப்புகளுக்கு ட்ஃசு, க்ஃசு என்று எழுதுவது பொருந்தும். திருக்குறளில் வருவதையும் பார்க்கலாம்:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

இதில் வரும் கஃசா என்பது kahsaa என்பது போல ஒலிக்கவேண்டும். எனவே ஆக்ஃசுபோர்டு, லினக்ஃசு போன்ற இடங்களில் பயன்படுத்ட்தலாம். ஆனால் இசுலாம் என்னும் இடத்தில் தேவை இல்லை.--செல்வா 02:03, 11 ஜூன் 2009 (UTC)


தமிழ் பேராசிரியர் நன்னன் அவர்கள்,
தொல்காப்பியத்திலுள்ள ஒலிப்பயன்பாடுகளைப் பற்றிய, கருத்துக்களைக் (நிகழ்படமாக) கூறக் கேட்டேன். அதன்படி, உயிரெத்துக்களின் பின்னால் வரும் என்ற எழுத்தானது, அதற்கடுத்து வரும் , உயிர்மெய் எழுத்தின் ஒலியமைப்பை மாற்றியமைக்கும். அதற்கான விளக்கங்கள் தொல்காப்பியத்தில் இருப்பதாக க் கூறினார். அது பற்றி முழுமையாக க் கற்க முயலுகிறேன். என்முயற்ச்சி, தற்போது முயல் வேகத்திலிருக்கிறது! குறித்த, உங்கள் கூற்றினையும் உள்வாங்கிக் கொண்டேன். தாங்கள் அவ்வப்போது தரும், வழிகாட்டல்களை கவனித்தே வருகிறேன். உடனுக்குடன், செயல்பட முடியவில்லை.
உங்களது ஒலிக்குறியீடுகள் பற்றியக் கட்டுரையை, உங்கள் வலைப்பூவில் படித்தேன். நல்ல ஆழமான வளர்முக சிந்தனை. அதே போல, தமிழ் எழுத்துக்களைப் பற்றி சில எண்ணங்கள் என்னுள் இருக்கிறது. விரைவில், அதுபற்றி உங்களுடன் உரையாட உள்ளேன்.
மாகாணம் குறித்த படத்திற்கு தமிழ் விக்கிப்பீடியாவை நாடினேன். அதிலுள்ள படத்தை விக்கி ஊடக நடுவத்திற்கு ஏற்ற வேண்டும். பிறகே, இங்கு இணைப்புத் தர வேண்டும். எனவே, தாமதம். என்றும் ஏற்புடன், (தகவலுழவன்)

வடிவமைப்பு பற்றிய கருத்து[தொகு]

த.உழவன், நீங்கள் மிகவும் முனைந்து விக்சனரிக்கு வளம் கூட்டுகிறீர்கள், அழகு கூட்டுகிறீர்கள், மிகவும் பாராட்டுகிறேன். ஆனால் சிலவற்றை மிகையாக செய்வதால், அழகு/பயன் கெடுகின்றது என்பது என் கருத்து. பொருள் என்று தரும் பொழுது அங்கு "தமிழ்" என்று உள்ளிணைப்புடன் தர வேண்டுமா? பிறமொழிகளில் பொருள் தரும் பொழுது அவற்றை அங்கு சுட்டினால் போதும். அதுவும் ஆங்கிலம் என்பதை ஆங் என்று குறிப்பதனையும் உள்ளிணைப்பு இல்லாமலும், சற்று சிறிய எழுத்தாகவும் இருந்தால் நன்றாக இருக்கும். ஆங்காங்கே நீங்கள் துணுக்கூண்டு இயங்குபடங்களை/அசைபடங்களை இணைக்கிறீர்கள். அவை கண்ணை மிகவும் உறுத்துகின்றன. இது பற்றி மிக முன்னரும் ஒருமுறை கூறியுள்ளேன். சொல்லுக்கு ஏற்ற நல்ல படங்களை நீங்கள் இணைக்கின்றீர்கள். அது மிகவும் பாராட்டுக்குரியது. நான் வரவேற்கிரேன். ஆனால் தேவை இல்லாமல் அழகு, கவர்ச்சி என்று நினைத்து அசையும் படங்களையும்/குறிகளையும் இணைப்பது நன்றாக இல்லை. நிறங்களையும், அழுத்த/அச்சு எழுத்துகளையும், சாய்வு எழுத்துகளையும், அசையும் படங்களையும், தக்க இடங்களில், தேர்ந்து, தக்க அளவுடன் சிறிதளவு பயன்படுத்தினால்தான் அழகாக இருக்கும். பயனுடையதாக இருக்கும். ஒரு சீரிய ஆக்கத்தில், இவற்றை அளவுடன் பயன்படுத்தினால் நேர்த்தியாக இருக்கும். அருள்கூர்ந்து இவற்றை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 16:51, 8 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆவணப்படுத்துவதில் வந்த ஆர்வக்கோளாறுகளைத் தவிர்க்கிறேன்.
    • இனித் தேவையில்லா அசைப்படங்களைத் தவிர்ப்பேன்.
    • ஒரு சொல்லுக்குரிய, பொருளை மட்டும் உடனே காண வேண்டும்.பெயர்ச்சொல், வினைச்சொல்..,தமிழ், ஆங்கிலம், இலத்தீன்,.. போன்ற தகவல்களை தேவைப்பட்டால், சொடுக்கியைபச் மிகச்சுருக்கமாக உள்ள எழுத்துக்கள் மீது வைத்தாலே முழுமையாகத் தெரியும். மிகச்சுருக்கமாக, உள்ளவற்றைச் சொடுக்கிப் பார்க்கத் தேவையில்லை.(எ.கா)பெ.மேலும், புத்தகத்திலிருப்பது போல சுருக்கமாகச்சொல்லும் பழமையையும் பின்பற்ற வேண்டும் என்பது அவா.
  • இங்கு வந்து பொருள் காண்பவர் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எத்தனை நபர்கள் தினம் வருகிறார்கள்?என்பனவற்றை எப்படி தெரிந்து கொளவது? த*உழவன் 17:23, 8 ஆகஸ்ட் 2009 (UTC)

நன்றி த.உழவன். தமிழ் விக்சனரி நாள்தோறும் குறைந்தது 30,000 முறை பார்வை இடப்படுகின்றது என நினைக்கிறேன். விக்கிப்பீடியா பயனர் சுந்தர் ஒருமுறை ஓரிணைப்பு தந்திருந்தார், இப்பொழுது நினைவில்லை. அதில் எல்லா மொழி விக்கிப்பீடியாக்கள், விக்கியின் துணைத்திட்டங்கள் யாவற்றியும் பயன்பாடுகள் பற்றிய புள்ளிக்குறிப்புகள் இருந்தன. சுந்தரைக் கேட்டு இவற்றை ஓரிடத்தில் ஆவணப்படுத்த வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் இச் செய்தி எங்கோ உள்ளது (ஆலமரம்?). கிடைத்தால் சுட்டி தருகின்றேன். --செல்வா 23:27, 8 ஆகஸ்ட் 2009 (UTC)

உங்கள் கேள்விக்குப் பதில்[தொகு]

ஆலமரத்தடியைப் பார்க்கவும்.--trengarasu 07:06, 14 ஆகஸ்ட் 2009 (UTC)

வேற்றுமொழிச் சொற்களுக்குக்கான பொருள்[தொகு]

வேற்றுமொழிச் சொற்களுக்குக்கான பொருளை, "பொருள்" என்னும் தலைப்பின் கீழ் முதலில் தமிழில் தர வேண்டும். "பொருள்" என்னும் தலைப்பு அங்கு இருந்து பின் என்ன பயன்?! பிறமொழிகளில் தலைப்புச் சொல்லுக்கு ஈடான சொற்கள் தருவது நல்லது, ஆனால் அங்கு பிறமொழிகளில் ஒன்றாக தமிழில் இருப்பது பொருத்தமல்லாதது. முதலில் வேற்றுமொழிச்சொல்லை எப்படி பலுக்குவது/ஒலிப்பது என்று குறிப்பதும், அதன் பொருள் தமிழில் என்னவென்பதும் தரவேண்டுவது விக்சனரியின் முதல் தேவை/கடமை. --செல்வா 03:07, 16 ஆகஸ்ட் 2009 (UTC)

  • ஆம். இருப்பினும் ஆங்கில சொற்களுக்கான அமைப்பில் இருப்பது போல, முதலில் பலுக்கல் அதன் பிறகு இந்திச்சொல், பிறகு ஒலிப்பு என்ற வார்ப்புரு, தமிழ் பொருள், மொழிபெயர்ப்புகள் என்று அமைக்கலாமா?

ஒலிப்புதவி[தொகு]

Wiktionary:ஒலிப்புதவி பக்கத்தை துவங்கியுள்ளேன். வளர்தெடுக்க உங்கள் உதவி தேவை.--trengarasu 02:06, 20 ஆகஸ்ட் 2009 (UTC)

  • என்னால் முடிந்ததைத் தவறாமல் செய்கிறேன். என்ன செய்ய வேண்டும்?த*உழவன் 18:12, 20 ஆகஸ்ட் 2009 (UTC)

திரு.பழ கந்தசாமியுடனான உரையாடல்கள்[தொகு]

  • தமிழக அரசு முத்திரை போன்ற படங்கள் சேர்ப்பது அருமை! தொடர்க உங்கள் பணி! இந்தியில் புகுந்து விளையாடுகிறீர்கள். எங்கு வசிக்கிறீர்கள்?

- (பதில்-->பழ.கந்த) தங்கள் உவப்புரைகளுக்கு என்வணக்கங்கள். சேலம், தமிழகத்தில் வசிக்கிறேன். இந்தி எனக்குத் தெரியாது. சகோதரிகளின் துணைக் கொண்டு செய்கிறேன்.

  • உரிமை மீறல் இல்லாத படங்களை எங்கு பெறலாம்? - பழ கந்தசாமி.

- (பதில்-->பழ.கந்த) படங்கள் பற்றி உங்களுக்கு இணைப்புக்களை உங்கள் உரையாடல் பகுதியில் கொடுத்துள்ளேனே? அதுபோக வாய்ப்பு கிடைக்கும் போது, அடுத்தவர் கருவியில், நானே எடுக்கிறேன். த*உழவன் 08:34, 15 செப்டெம்பர் 2009 (UTC){தொடர்புக்கு..}[பதிலளி]

  • தங்கள் உற்சாகத்தை பாராட்டுகிறேன். எனக்கு ஓரளவுக்கு இந்தி தெரியும். உங்கள் இந்திப் பதங்களைப் பார்க்க வேண்டும். நன்றி - பழ கந்தசாமி

- (பதில்-->பழ.கந்த) குறிப்பிட்ட தமிழ்ச்சொல்லுக்கான காட்சியகத்தை விக்கி ஊடக நடுவத்தில் முன்பு உருவாக்கிப் பார்த்தேன். அதை அப்படியே விட்டுவிட்டேன். தங்களிடம் உரையாடினதால் மீண்டும் அதில் ஈடுபட வேண்டும்.

இந்திப் பதங்களை பார்த்தால் நலம்.எனினும் இப்போதைக்கு தள்ளிப் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மகாகவிஞன் ஒவ்வொருவருக்கும் ஐந்து மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்றான். அதற்கான சோதனை முயற்சியே இந்திச் சொற்களுக்கான முயற்ச்சிகள்.

ஒரு இலட்சத்தைத் தாண்டியவுடன், பகுப்பு:கருவச்_சொற்களுக்கு ஐம்மொழி மாற்றத்தைச் செய்ய வேண்டும். அப்பொழுது அச்சொற்களுக்கு, உங்களது வாக்கியப் பயன்பாடு அமைவாக்க மிருந்தால், அம்முயற்சி மிகச்சிறப்பாக அமையும்.உங்களின் வாக்கியப் பயன்பாடு அருமை. இருப்பினும், இப்போதைக்கு அனைத்து புதிய சொல்லுக்கும் ஒரு எடுத்துக்காட்டு போதுமென்பது எனது எண்ணம்.

படங்களுக்கு அதிக நேரம் செலவாகிறது என்று கூறியிருந்தீர்கள். அதை நானே பெரும்பாலும் செய்கிறேன். உங்களுக்கு நேரம் மீதமாகும்.

ஒரு நாளைக்கு பத்து சொற்கள் என இருவரும் பதிவேற்றினால், விரைவில் ஒரு இலட்சம் என்ற எல்லையைத் தொடலாம் என்பது என் எண்ணம். ஒவ்வொருச் சொல்லும் ஒரு 500பைட்டுகளுக்குச் சற்று அதிகமா இருந்தால் நலம். ஒவ்வொருச்சொல்லுக்கும் மேலுள்ள வரலாறு என்ற தத்தலைச் சொடுக்கினால் பைட்டுகள் கணக்குத் தெரியும். உங்களுக்கு தெரியுமென நம்புகிறேன். எனினும், சொல்லுகிறேன்.

அதிகச் சொற்களுக்கான பதிவேற்றத்திற்கு இந்தத் தானியங்கி உதவுமென் நம்புகிறேன். நீங்கள் கணினி நிபுணர் என்பதால், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். எனது கணினி அறிவு என்பது ஒரு சில வருடங்களே. அதுவும் ஆர்வத்தினால் கற்றுக் கொண்டது. தமிழைச் சிறப்படையச் செய்ய கணினி அறிவும் தேவை என்ற எண்ணத்தால், நண்பர்களைத் தொந்தரவு செய்து கற்றுக் கொண்டேன். அது மாதிரி இந்த விசயத்தில் என்னால் ஏற்படும் தொந்தரவைப் பொறத்தருளவும்.த*உழவன் 14:52, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

இலகரம் என்ற சிகரம்[தொகு]

த*உழவன் அவர்களே! தங்கள் இணைத்த மாட்டு வண்டி போன்ற படங்களை இன்று தான் பார்த்தேன். நன்றி.

தினம் பத்து பதங்கள் குறைந்தபட்சமாவது நான் தொகுக்க எண்ணி உள்ளேன். முடிந்தால் அக்டோபர் இறுதிக்குள் இலகரம் என்ற சிகரம் சென்றடைய முயற்சிப்போம்.

நன்றி பழ. கந்தசாமி.

(பதில்-->பழ.கந்த) தாங்களுடன் இணைந்து செயல்பட பேராவால் கொண்டுள்ளேன்.சற்று முன் பராசக்திக்கான படம் தேட விக்கி ஊடக நடுவம் சென்றேன். இந்திய திரைப்பட வரிசையில் தமிழுக்குரியப் பகுப்பு இல்லை. அதைவிட வேதனை சிவாசியை இந்திய நடிகர்கள் வரிசையில் சேர்க்கவில்லை. பராசக்திக்கான படம் தமிழ் விக்கிப்பீடியாவிலும் இல்லை. கிடைத்தப் படத்திற்கு மெருகேற்ற வேண்டும். இப்போது இணைய உலவுக் கடைகளிலிருந்து செயல் படுவதால் மெருகேற்ற முடியவில்லை. இன்று இரவு நண்பனின் வீட்டுக்குச் சென்று பதிவேற்ற வேண்டும்.~~~~ இக்குறியீடை ஒவ்வொரு உரையாடல் முடிவிலும் பயன்படுத்தி, பிறகு முன்தோற்றம் பாருங்கள். உங்களின் பதிவுச்சுவடு உருவாகும்.த*உழவன்

கருவுக்கான படம்[தொகு]

ரத்தத்துடன் கொஞ்சம் பார்க்க ஒரு மாதிரி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கண்ணுக்கிசைந்த படம் போட்டால் நலம். fetus, foetus,கர்ப்பிணி, முதலியவற்றில். நன்றி Pazha.kandasamy 02:25, 18 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

.(பதில்-->பழ.கந்த) கரு,fetus முதலியவைகளுக்கு கண்ணுகுகந்தப் படம் இட்டு விட்டேன். என்னைத் த*உழவனே ! என்ற அழைத்தாழே போதும். அனைவரிடமும் அவ்விதமே கேட்டுக்கொள்கிறேன். நன்றி. என்றும் தோழமையுடன். த*உழவன் 05:09, 18 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

  • நன்றி. முந்தைய படத்தை விட இது எவ்வளவோ பரவாயில்லை. இருப்பினும் நேரம் கிடைக்கும்போது இன்னும் கொஞ்சம் சிறந்ததாகப் போடலாம். இவற்றுக்கு வரைந்த படம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். கர்ப்பிணி, கருப்பிணி இவற்றிலும் மாற்றிவிடலாமா?.Pazha.kandasamy 05:35, 18 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

.(பதில்-->பழ.கந்த)மேலும், கருவிற்கான தமிழ்விக்கிப்பீடியக் கட்டுரைப்பக்கம் காண்க.இங்கும் மாற்றியுள்ளேன்.

இற்றையாக்கம்[தொகு]

என்றால் என்ன? :( Pazha.kandasamy 07:32, 18 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

.(பதில்-->பழ.கந்த) - இற்றைப்படுத்தல் நாம் பேசும் தலைப்புகளுக்கு ===இற்றையாக்கம்=== மூன்று சமக்குறியீடு இட்டால் 16.1,16.2,16.3 என்று வரிசையாக நம் பேச்சு அமைந்தால் நன்றாக இருக்கும். த*உழவன் 07:49, 18 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

விஷமத் தொகுப்பா?[தொகு]

umblical cord‎ விஷமத் தொகுப்பா? Pazha.kandasamy 20:30, 19 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

(பதில்-->பழ.கந்த)விசமத்தனமாகப் படவில்லை. ஆர்வக்கோளறு என்றே கருதுகிறேன். தேவையான பயிற்சிக்குரிய இடத்தை கீழுள்ள தொகுத்தலுக்கான உதவி என்ற பக்கத்தில் இணைத்து உள்ளேன். எனினும், அப்பக்கத்தில் இன்னும் நிறைய எழுத வேண்டும். இலகரத்தை அடைந்தவுடன், உங்களின் உதவியுடன் ஒரு வாரத்தில், அதனை சிறப்பாகச் செய்ய வேண்டும். umbilical cord என்ற பக்கம் உள்ளபடியால் இப்பக்கத்தை நீக்கக் கோரலாம். அவ்வாறு நீக்க, இந்த வார்ப்புருவை {{delete}} இட்டாலே போதும். பின்னர் வந்தவர், அதனைத் தான் செய்துள்ளார். அப்பக்கத்தின் வரலாற்றினைக் கண்டாலே அதனை உணரலாம்.த*உழவன் 05:08, 20 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

நதியின் படம்[தொகு]

த*உழவனே! நதி ஓடை போல் சிறிதாக உள்ளதே? மாற்ற முடியுமா?

கடைகால் முதலிய படங்களுக்கு! கொசுவம் படம்? நன்றி Pazha.kandasamy 02:30, 21 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

(பதில்-->பழ.கந்த) அமராவதி நதி, காவிரி ந்தியுடன் இணையும் கரூரில் இணையும் படமிது. எனினும், சிறப்பான படம் சேர்த்து விட்டேன். கடைகால் என்ற சொல்லுக்கும் மாற்றி விட்டேன். இங்கு இன்னும் மின்நிறுத்தம் உள்ளது. இன்னும் இரண்டுமணிக் கழித்து வருகிறேன்.த*உழவன் 02:37, 21 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

தாங்கள் எந்தத் துறை?[தொகு]

த*உழவனே! தாங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்? உங்கள் ஆர்வம் அசத்துகிறது! 38.99.25.34 02:48, 24 செப்டெம்பர் 2009 (UTC) Pazha.kandasamy 02:49, 24 செப்டெம்பர் 2009 (UTC) :)[பதிலளி]

(பதில்-->பழ.கந்த) சட்ட நூலகத்துறை. எனினும், அதற்குரிய கட்டமைப்பு தமிழகத்தில் இல்லை. பொதுவாகக் கும்பியடிக்க விரும்பாததால், தற்போது நண்பருடன் இணைந்து உணவுத் துறை. இதற்கு மேல் தயவுசெய்து வேண்டாம். என் பங்களிப்புகளை, உங்கள் சுட்டு விரலால் அளந்தால், அதுவே, எமக்குச் சுகம். காலப்போக்கில் வாழ்வதை விட, காலத்தினையும் தாண்டி தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற பேரார்வமே, என்னை வழி நடத்துகிறது.

என்றும் நட்பு வேண்டி முடிக்கும்,-->த*உழவன் 05:25, 24 செப்டெம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..[பதிலளி]

(பதில்-->பழ.கந்த) உங்கள் ஆர்வத்தினால் கேட்டீர்கள். இயல்பாக எல்லோர் மனதிலும் எழும், அறிந்து கொள்ளும் ஆவல் தானே? உங்கள் கேள்வியால், என் அகத்தை வெளியிட்டேன். அதனால் உங்களகத்திலும் இடம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி! எதையும் தவறாக கருத முயற்சி செய்வதில்லை. யாவற்றிலும் உள்ள இயல்புகளை மதிக்கிறேன். இயன்றவரை செய்கிறேன். எல்லைகளுடன் வாழ்கிறேன்.த*உழவன் 06:48, 24 செப்டெம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..[பதிலளி]

எழுத்துகள் எண்ணிக்கை[தொகு]

த*உழவனே! 5௦௦ எழுத்துகளுக்கு குறைவாக இருப்பதை அதற்கு மேல் ஆக்கினால் வார்த்தைகளின் எண்ணிக்கை உடனே அதிகரிக்காதா? Pazha.kandasamy 02:44, 26 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

(பதில்-->பழ.கந்த) அவ்வாறு அதிகரிப்பதில்லை. எனினும், சிறந்த தொகுப்பு எண்ணிக்கையில், விக்சனரி தலைமையகத்தால், கணக்கிடப்படும். அங்ஙனம் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு படம், ஒரு பகுப்பு, பிற விக்சனரிகளுடன் இணைப்பு முதலியவற்றினை செய்து பார்க்க வேண்டும். இதுபற்றி இன்னும் தெளிவாக அறிய முடியவில்லை. எனினும், இப்பக்கத்திலுள்ள மேலும் என்ற உபத் தலைப்பினையும் காணுங்கள். த*உழவன் 04:48, 26 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

நாக்கு[தொகு]

த*உழவனே! தாங்கள் உடனுக்குடன் அளித்து வரும் படங்கள் (எ.கா. மேல்மாடம்) உண்மையிலேயே என்னை அசத்துகிறது! நீள நாக்குடைய பெண்ணின் படம் ஒரு எதிர்மறையான தாக்கத்தைத் தருவது போல் தோன்றுகிறது. அதை மாற்றிவிடலாமா? நன்றி Pazha.kandasamy 16:28, 26 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

(பதில்-->பழ.கந்த) எனக்கு இப்படம் இயற்கையின் அதிசயம்.எனினும், மாற்றி விட்டேன். என் முயற்சிகளை அவ்வப்போது பாரட்டுவதற்கு மிக்க நன்றி. அதனால் எனக்குள், இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.த*உழவன் 01:02, 27 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

சதம்[தொகு]

த*உழவனே! இன்று வேகமாக சதம் அடித்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள் இந்த பதங்களுக்கு தமிழாக்கம் எப்போது செய்வது? நன்றி. Pazha.kandasamy 08:40, 27 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

(பதில்-->பழ.கந்த) 98 என்று நீங்கள் கூறிய பிறகு எண்ணி தெரிந்து கொண்டேன். எனினும், பலு, பளு, பழு என்ற மூன்றினை மட்டும், இன்று எழுதிய மகிழ்ச்சி மட்டுமே என் மனதில்..தமிழாக்கம் வழக்கம் போல தினம்10 முடிக்க எண்ணியுள்ளேன். பிறரிடம் மொழிபெயர்த்து தருமாறு கேட்கும் போது, முதல்ல பழச முடி. அப்புறம் கேள் என்கின்றனர். அதனால் இன்று இத்தனை வேகம். முழுமையற்ற வேகம் என்றே உணருகிறேன். வெளிப்படையாகச் சொல்லப்போனால் celery என்பதற்கு தமிழாக்கம் தெரியவில்லை. இது போல பல. எனினும், செய்கிறேன். விக்சனரி குழுமத்தில் பிறகு எழுத வேண்டும். அவ்வப்போது நீங்களும் மொழிபெயர்த்தால் நல்லது. த*உழவன் 16:35, 27 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

த*உழவனே! இங்கே இருக்கக் கூடாத பதிவா? Pazha.kandasamy 07:19, 2 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

நம் விக்சனரியில் உயர்வானக் கட்டுரைகளாக இருந்தாலும், இடம் கிடையாது. திரும்ப, திரும்ப ஒரேநபர் இத்தகைய பங்களிப்புகளைச் செய்தால், அவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாப்பற்றி அறிமுகப்படுத்தலாம். இவர் புகுபதிகை செய்யாத நபர். பெரும்பாலும், அவரது வெள்ளோட்ட முயற்சி எனக் கொள்ளலாம். நீக்கல் வார்ப்புரு = {{delete}} என்பதை நகலெடுத்து ஒட்டினாலே, போதும். தயங்காமல் இத்தகைய உரிமையை எடுத்துக் கொள்ளுங்கள். அயராது நீங்கள் தொடர்ந்து பங்களிப்பது, என் சோம்பேறித்தனத்தை விரட்டுகிறது. நன்றி!த*உழவன் 13:09, 2 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

celery[தொகு]

தகவலுழவன்! பழ. கந்தசாமியுடன் நல் போட்டி போட்டுக்கொண்டு இலகரத்தை விரைவில் எட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமைக்கு முதலில் என் வாழ்த்துகள். பழ. கந்தசாமியுடனான உங்கள் உரையாடலில் celery க்கான தமிழ்ச்சொல் பற்றி வினவியிருந்தீர்கள். பின்வரும் இணைப்பில் Spices Board India கொடுக்கப்பட்டுள்ள தமிழ்ச்சொல்லும் (ஆஜ்மோடா) அன்னியமாகப் படுகிறது. சில தருணங்களில் மலையாளச் சொற்கள் தமிழுக்கு நெருக்கமாக இருப்பதுண்டு. ( பறவைகள் பெயரிடுதலில் முனைவர். க. இரத்னம் இம்முறையைக் கையாள்வதுண்டு). அவ்வாறாக, இவ்விணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலையாளச் சொல் அயமோதகம். இச்சொல்லையும் அடைப்புக்குறியில் மலையாளம் என்று குறிப்பிட்டு celery பக்கத்தில் சேர்க்கலாம். -- பரிதிமதி 04:45, 3 அக்டோபர், 2009 (UTC)

  • Spices Board India தளம் கண்டேன். இனி பயன்படுத்திக் கொள்கிறேன்.

வாரம் ஒரு முறையாவது வந்து பங்களிக்க வேண்டுகிறேன். மேலும், ஒருமுறை <references> என்பதை ஒரு சொல்லுக்கு பயன்படுத்தியிருந்தீர்கள். எந்த சொல் என்று எனக்கு மறந்து விட்டது. அதைப் பயன்படுத்திய போது தோன்றியப் பிழையைச் சரி செய்து விட்டேன். உங்களுக்கு, அச்சொல் ஞாபகம் இருக்கிறதா? உங்களின் மூலம் எனக்கு கிடைத்த அனுபவம். தேவைப்படும் இடங்களில் அதனைப் பயன் படுத்த வேண்டும். முடிந்தால் வண்டலூர் பற்றி விக்கி ஊடக நடுவத்தில் இருக்கும், இந்த கோப்புகளில் பறவைகள் பெயரினைச் சேர்க்கவும். நன்றி.த*உழவன் 11:07, 3 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

மந்தப் பங்களிப்பு[தொகு]

த*உழவனே! மிக வேகமாக செயல் பட்டு வருகிறீர்கள். நன்றி. நேற்று என்னால் அதிகம் பங்களிக்க இயலவில்லை. வெள்ளி வரை அது நீடிக்கலாம். இருந்தாலும் தினமும் சில வார்த்தைகளாவது சேர்த்த முயல்வேன். Pazha.kandasamy 02:19, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

வீங்கிய தொண்டை படம்[தொகு]

த*உழவனே! ஒரு சிறு கருத்து. உடலின் உள்புறம் உள்ள இரத்தம் தோய்ந்த அல்லது சிவப்பான (நுண்ணிய) பாகங்கள் பொதுவாகக் கண்ணுக்கு இசைவானவையாக இருக்காது என்று எண்ணுகிறேன். வெளிப்புற படங்கள் வார்த்தைகளின் பொருள்களை சிறப்பாக உணர்த்தும். இதை முடிந்தால் மாற்றவும். என்றும் நன்றியுடன். Pazha.kandasamy 02:41, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

த*உழவனே! பேச்சு: tamil என்பது முறையான பக்கமா? நீக்கப்பட வேண்டியதா? Pazha.kandasamy 16:37, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

தீபாவளிக்குள் இலகரக் கொண்டாட்டம்?[தொகு]

த*உழவனே! செல்லும் வேகத்தில் தீபாவளிக்குள் இலகரம் அடைய முடியும். அடைந்தால் நாம் ஒருவரை ஒருவர் முதுகில் தட்டிக்கொள்ளலாம்! Pazha.kandasamy 06:56, 14 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இலகரம் எட்டுவதற்கான வாழ்த்துக்கள்[தொகு]

தகவலுழவன்! தமிழரனைவருக்கும் தீபத்திருநாள் பரிசாக நம் விக்சனரி நமக்கு இலகரத்தைத் தருவதற்கு உதவியமைக்கு நன்றி. உங்கள் அரும்பணி தொடரட்டும். தமிழ் ஒளி உலகம் முழுவதும் பரவட்டும். -- பரிதிமதி 03:10, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இலகரம் என்பதே பேச்சு[தொகு]

த*உழவனே; chat செய்ய வருகிறீர்களா? Pazha.kandasamy 07:15, 15 அக்டோபர் 2009 (UTC) tha.uzhavan@gmail.com இந்திய நேரம் மாலை 7 மணிக்கு தான்முடியும். தற்போது மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதுவரை அரட்டை அடித்தது இல்லை? முயற்சிக்கிறேன். உங்களுக்கு இந்த நேரம் ஒத்து வருமா? இல்லையென்றால், எந்த இந்திய நேரம் என்பதனை குறிப்பிடவும்.நன்றி!த*உழவன் 07:26, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இப்போது அரட்டை செய்யலாம். சில நிமிடங்களில் நான் உங்களுக்கு (gmail chat) மூலம் அழைப்பு அனுப்புகிறேன். இன்னும் இரண்டு வார்த்தைகள் உள்ளன. இலகரம், இலட்சாதிபதி என்று பதிவு செய்யலாமா? யார் எதை பதிவு செய்யலாம்? Pazha.kandasamy 07:38, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
தங்கள் மின்முகவரி முகப்பு பக்கத்தில் உள்ளதுதானே? --> ஐ . என்று மாற்றி முயற்சித்தால் , தவறான முகவரி என வருகிறதே? Pazha.kandasamy 07:50, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
நான் இலட்சாதிபதி ஆகி விட்டேன்; நீங்கள் இலகரம் பதிவு செய்யவும். Pazha.kandasamy 08:18, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
த*உழவனே! இலகரம் அசைபடம் அருமை! வாழ்த்துக்கள் Pazha.kandasamy 16:26, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
  • முன்பு நான் சொன்னபடி இன்றிரவு 7 (IST) மணிக்கு வந்தேன். வழக்கமாக நான் பயன்படுத்தும் கடையை, 7.30மணிக்கே மூடுவதாக் கூறினார். எப்பொழுதும்இரவு 9 மணிக்கு தான் அக்கடையை மூடுவர். எனவே, அவசர, அவசரமாக செயல் பட்டேன்.

நீங்கள் இலகரம் முடித்திருப்பீர்கள் என்று நினைத்து (தினமும் செய்யும் பணிகளை முடித்து) வந்தேன். நீங்கள் எனக்கு விட்டதற்காக அகமகிழ்ந்தேன். உங்களிடமும், அம்மகிழவை உண்டாக்க எண்ணியே, அந்த அசைப்படத்தை உருவாக்கினேன். என் வாழ்விலேயே, ஒரு முடிவு எடுத்து, உடனே அதை செய்து முடித்தது இதுவே முதல் முறை.

இலகரம் பற்றி தற்போது முழுமையாக படிக்க வில்லை. ஆதார இணைப்பை மட்டும் மாற்றி உள்ளேன். இலகரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். த*உழவன் 18:28, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

Tamil 100,000+[தொகு]

வணக்கம் The following message is reproduced for your kind notice please. --TRYPPN 09:36, 30 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]


Please note that Tamil is having more than 101,046+ words. we request you to kindly move Tamil in the 100,000+ Category.

--TRYPPN 00:16, 29 November 2009 (UTC)

please send a message, once the job is done, in my user talk page

http://en.wikipedia.org/wiki/User:TRYPPN

Regards and Best wishes.

Done. —Stephen 03:46, 30 November 2009 (UTC)

Thank You for moving TAMIL to 100,000+ Category on English Wiktionary mainpage. --TRYPPN 05:14, 30 November 2009 (UTC)


Explanation Required[தொகு]

தகவலுழவன் அவர்களக்கு வணக்கம். தங்களது வரவேற்புக்கு நன்றி.

Please Explain in English --- How to find out by using TAB the Number of Bytes it contains in a PAGE. I tried my level best to understand and attempted all sort of methods. I did not find the details. So, I request your good self to Explain on this matter.

மேலே கூறியபடி கொஞ்சம் விளக்கம் தேவை. வணக்கம் --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:00, 3 டிசம்பர் 2009 (UTC)


  • ஒவ்வொருச் சொல்லும் 500 பைட்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
இந்த பைட்டுகள் எண்ணிக்கையை, ஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள தத்தலைச் சொடுக்குவதன் மூலம் காணமுடியும்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:04, 3 டிசம்பர் 2009 (UTC)

முறத்தின் படம்[தொகு]

த*உழவனே! நம்ம ஊர் முறத்தின் படம் இணைக்க முடியுமா? பழ.கந்தசாமி 19:36, 24 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

  • பட்டியல் இடுங்கள். நான் எடுக்கிறேன். விரைவில் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனெனில், என்னிடம் நிழற்படக்கருவியில்லை. எனினும், அதிக பட்சம் 10 நாட்களுக்குள் எடுக்க முடியும். த*உழவன் 13:20, 25 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

முதல் பக்கம்[தொகு]

தமிழ் விக்சனரியின் முதல் பக்கம் புதிதாக வருபவர்களுக்கு, குறிப்பாக பொருள் மட்டும் அறிய விரும்பி வருபவர்களுக்கு தேடல் பெட்டி எங்கே உள்ளது என்று தேட வேண்டிய அளவுக்கு 'கச கச' என்று இருப்பது போல் உணர்கிறேன். அப்படி இருந்தால் புதுப் பயனர்கள் வந்தவுடன் செல்வது மட்டுமல்லாது திரும்ப வராமலே போய்விட வாய்ப்பு உள்ளது. கூகுல் முதல் பக்கம் போல் தேடல் பெட்டி நன்கு தெரிய வேண்டும். மேலும், தேடுவோர்க்கு ஆக்குவோர்க்கு என்று பிரித்து தேடுவோர்க்கான இணைப்புகள் மேலே எளிதில் பார்க்குமாறு இருக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். உங்கள் கருத்து என்ன? பழ.கந்தசாமி 02:17, 29 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

  • உங்களின் கருத்தினை முழுமையாக ஏற்கிறேன். இது பற்றி நானும் நிறைய எண்ணுகிறேன். விரைவில் இதற்கு தீர்வு காண்போம்.அதிக சொற்களை உருவாக்குவது போல, பதிவேறி இருப்பதை மேம்படுத்த வேண்டும். கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றே நானும் எண்ணுகிறேன். விரைவில் இதனை செயல்படுத்துவோம்.த*உழவன் 07:07, 31 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

முதல் பக்கம்: தமிழ் எழுதத் தெரியாதவர்கள் எளிதில் தேட?[தொகு]

த*உழவனே! வணக்கம்! சந்தித்து சில நாட்கள் ஆகிவிட்டன. முதல் பக்கம் கணினியில் தமிழ் எழுதத் தெரியாதவர்கள் எளிதில் தேட வசதியாக தட்டச்சு விசைப்பலகை போல அல்லது வேறு வழி செய்யவேண்டும், தற்பொழுது உள்ளடக்கம் வழியாக செல்லவேண்டியுள்ளது. இதுபற்றி நாம்யோசிக்கவேண்டும் பழ.கந்தசாமி 06:25, 17 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

  • வாங்க! நானும் அது பற்றி சிந்தித்தேன். பிற விக்சனரியில் அத்தகைய வசதிகள் இல்லை. எனினும், அது குறித்த தொழில்நுட்ப அறிவோ அல்லது அதற்கேற்ற அனுபவமோ இல்லாததால், அதனைத் தள்ளி வைக்கிறேன். எனினும், இத்தளத்தில் உள்ளது மாதிரி அமைய வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.மேலும், பலவற்றினைக் கருதும் போது, நீங்கள் நிர்வாகி ஆனால், நன்றாக இருக்கும். அத்தகைய மாற்றங்களை எளிமையாகக் கொண்டு வரலாம்.த*உழவன் 06:47, 17 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
  • எனது நண்பர் ஒருவருக்கு இதில் அனுபவம் உள்ளது என்று நினைக்கிறேன். இத்தளத்தில் அவருடையது.

பழ.கந்தசாமி 07:07, 17 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

  • அவைகள் அருமை; எளிமை; மேன்மை. பல தமிழ் முன்னோடிகள் குடத்தில் இட்ட விளக்காக உள்ளனர். அவர்களை உங்களைப் போன்றோர் தான் ஒருங்கிணைக்க வேண்டும். முன்பு உடன் பதில் எழுத முடியவில்லை. காரணம், எனது இணைய வாடகை நேரம் முடிந்து விட்டதால் சென்று விட்டேன். ஒவ்வொரு முறையும் 1 அல்லது 1.5மணி நேரமே இருப்பேன் என்பதனை, எப்போதும் மறக்காமல் ஞாபகத்தில் வைக்கவும். இனி நீங்கள் கொடுத்தத் தொடுப்புகளைப் பயன் படுத்துவேன். உங்கள் நண்பனின் இணையங்களை, அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.த*உழவன் 12:25, 17 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

படமும் அவைகளின் இடமும்[தொகு]

த*உழவனே! பேசி நிறைய நாட்கள் ஆகிவிட்டன. ஒரு நாள் அரட்டையில் சந்தித்து விக்சனரி அமைப்புக் குறித்துப் பேச வேண்டும்.

நாம் படங்கள் இணைக்கும்போது, அவை வார்த்தையின் பொருளை பக்கத்தின் மிகக் கீழே தள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓரிரு படங்களுக்கு மேல் வரும்போது அது மிக முக்கியம். பொருள் தேட வருவோர் பொறுமையற்றவர்களாக இருக்கக்கூடும் பழ.கந்தசாமி 02:06, 3 டிசம்பர் 2009 (UTC)

  • கோளம் அமைப்பு சரியா? அகரமுதலி நோக்கத்தின் அடிப்படையில், அவ்வமைப்பு சரி தானே? நாம் இது பற்றி விவாதிப்போம்.இன்னும் 10 நிமிடங்களில் இரண்டு மணிநேர மின்தடை. அதன் பிறகு, கடைக்கு வருவேன். இப்பொழுது நண்பனின் வீட்டிலிருக்கிறேன். அவனுக்கு சிக்கன்குனியா . அதனால் இந்நேரத்திற்கு 15-20 நாட்களாக வரவில்லைத*உழவன் 02:20, 3 டிசம்பர் 2009 (UTC)
  • நன்றி! பொருளைப் பார்த்தாலே புரியும் ஒரு முக்கியப் படம் மேலே பக்கவாட்டில் வரலாம், மற்ற படங்கள் கீழே இருக்கலாம். பழ.கந்தசாமி 02:22, 3 டிசம்பர் 2009 (UTC)
  • இப்படியா? கோளம்த*உழவன் 05:47, 3 டிசம்பர் 2009 (UTC)

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:13, 9 டிசம்பர் 2009 (UTC)

Original message கோளம் என்று நீங்கள் ஆரம்பித்தப் பதிவினை சோதனை முயற்ச்சிக்காக மேம்படுத்தியுள்ளேன். இதுபற்றி உங்கள் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன். என்னுடைய கருத்து வருமாறு;- 1) ஒவ்வொருசொல்லுக்கும் வலப்பக்க மேல் மூலையில் மிகப் பொருத்தமான ஒரு படம் இருந்தால் நலம். 2) பிற படங்கள் சொல் இறுதியில் இருந்தால் நலம். அங்கும் நான்கு படங்களுக்கு மேல் வேண்டாம்.

REPLY

தகவலுழவன் and Pazha.kandasamy | பழ.கந்தசாமி, அவர்களுக்கு, வணக்கம். தங்களது கருத்துக்களை கவனித்தேன்.

  • தங்களது கருத்தில் சறிது மாற்றம். அதாவது, மிக அதிகமாக 8 படங்களை சேரக்கலாம் என்று எண்ணுகிறேன்.
  • யாராவது 8 படங்களுக்கு மேல் சேர்த்தால் அதனை மற்ற பயனர்கள், 8-க்கு மேற்பட்ட, தேவை அற்ற படங்களை நீக்க அனுமதிக்கலாம்.
  • கோளம் --- என்று ஆரம்பித்தப் பதிவினை சோதனை முயற்ச்சிக்காக மேம்படுத்தியுள்ளேன். இதுபற்றி உங்கள் கருத்தறிய ஆவலாக இருக்கிறேன்.

--- என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

நன்று. எனது கருத்துக்கள் ---

  • நான் கடந்த சில நாட்களாக பல சொற்களை பகுப்பு செய்யும் போது கவனித்தேன். (Difficult to type in Tamil. So, I am switching over to English to Save Time. Please pardon me.)
  • Each and every word is having different FORMAT. The appearance of the PAGE is not having any particular STANDARD.
  • My suggestion is that in the initial stage of CREATING the word, the proper TEMPLATE should be provided. Then only we can maintain a standard.
  • Now yourself mentioned that you have improved the page by inserting the better format. I appreciate that, but as all of know; now we are having more than 1 Lakh words.
  • Is it possible to improve those number of words which are really requiring major “clean up” in formatting.
  • If any separate list for “clean up required” provided, then any user can try to clean those pages.
  • For the future development I request that we should try for a appropriate TEMPLATE FOR ADDING NEW WORDS. This is the real requirement.
  • How to Create Template and How to attach with the New word Creation Template. --- If I get little bit idea on the subject, then I can put my effort to develop and contribute.

I expect the reply from both தகவலுழவன் and Pazha.kandasamy | பழ.கந்தசாமி.

Thank you for reading upto this. நன்றி. வணக்கம்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 12:13, 9 டிசம்பர் 2009 (UTC)


நிருவாகப் பொறுப்பு சரியான கைகளில்[தொகு]

தகவலுழவன்! ரவி செய்தது சரியே. உங்களை நிருவாகப் பொறுப்பேற்குமாறு பிடித்துத் தள்ளியது விக்சனரிக்கு இலாபமே. என்னால் இயன்ற வரையில் கருத்துகளை அளிப்பேன். -- பரிதிமதி 10:05, 10 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)

  • த*உழவனே! வாழ்த்துகள். இருந்த வெற்றுமாக்கோலத்தை புது வண்ணமிகு (மணக்) கோலமாக்கிவிட்டீர்கள். எப்போது நாங்கள் "மாக்கோலம் கொண்ட மகனே! புது மணக்கோலம் போடு மயிலே!" என்று வாழ்த்திப் பாடுவது? :) அன்புடன் பழ.கந்தசாமி 21:36, 10 டிசம்பர் 2009 (UTC)
  • நன்றி! அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இரவி, அதற்குரிய ஆவண மாற்றங்கள் செய்ய வேண்டுமென நினைக்கிறேன். த*உழவன் 01:47, 11 டிசம்பர் 2009 (UTC)

புதிய பகுப்பு: எப்படி?[தொகு]

த*உழவனே! 'எசுப்பானிய உடல் பாகங்கள்' என்ற புதிய பகுப்பை உருவாக்கவேண்டும்? எப்படி? அது சம்பந்தமான சொற்களில் அப்பகுப்பை இணைத்துள்ளேன்? நன்றி பழ.கந்தசாமி 05:33, 13 டிசம்பர் 2009 (UTC)

  • உங்கள் பேச்சுப்பக்கத்தில் விவரித்துள்ளேன்.காண்க - ceja --த*உழவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

த*உழவனே! தமிழ்ச் சொற்களுக்கு அனைத்து மொழி மொழிபெயர்ப்புகளும் செய்யவேண்டும். ஆனால், வேறுமொழிச் சொற்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் (ஆங்கிலம் அங்கே நமது மொழிபெயர்ப்பைக் கூராக்க உதவும், அதற்காகத்தான்). அங்கு தரப்பட்ட தமிழ்மொழி பெயர்ப்பைச் சொடுக்கினால், அதன் மூலம் மற்ற மொழிபெயர்ப்புகளைப் பெறமுடியுமே! (நீங்கள் எசு. சொற்களுக்கு இந்தி மொழிபெயர்ப்புத் தந்ததன் விளைவே இந்தக் கருத்துகள்). நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பழ.கந்தசாமி 23:44, 13 டிசம்பர் 2009 (UTC)

  • உங்கள் கருத்தை ஏற்கிறேன்.ஆனால், இதைப் படிப்பதற்கு முன்பே, ceja வில் மாற்றம் செய்து விட்டேன்.த*உழவன் 01:46, 14 டிசம்பர் 2009 (UTC)

பகுப்புகள் செய்வது குறித்து[தொகு]

ORIGINAL MESSAGE

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:21, 15 டிசம்பர் 2009 (UTC)

  1. நீங்கள் தொடர்ந்து தமிழ் பகுப்புகளில் கவனம் செலுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.
  2. 500bytes கணக்கை, நான் உங்களுக்கு அறிய வைத்தேனா?
  3. பழ.கந்தசாமி அவர்கள் எசுப்பானியம் மொழியில் கவனம் செலுத்துகிறார். அவருக்கு நாம் தோள் கொடுக்க வேண்டுமென நினைக்கிறேன். (நான் அச்சொற்களுக்கு விக்கிப்படம், இந்தி மற்றும் தமிழ்சொற்களுடன் இணைத்தலைச் செய்கிறேன்.)
நீங்களும் இணைய விரும்பினால், கீழ்கண்ட இணைப்பிலுள்ள சொற்களில் பகுப்பு மாற்றம் செய்யலாம்.

http://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit&redlink=1

இதிலுள்ள 10 சொற்களிலுள்ள பகுப்பை நீக்கி விட்டு, பகுப்பு: எசுப்பானியம் - உடற்பகுதிகள் என்று சேர்க்கலாம்.

  • திரு.பெரியண்ணன் அவர்களே! தங்களுடைய தொடர் அர்ப்பணிப்புக்கு நன்றி!

நான் த*உழவன் பேச்சில் குறிப்பிட்டதுபோல எசுப்பானியம் போன்ற வேறுமொழிச் சொற்களுக்கு மொழிபெயர்ப்புகளை தமிழ், ஆங்கிலத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். தமிழ் மொழி வார்த்தைகளுக்கு நமக்குத் தெரிந்த எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

பழ.கந்தசாமி 06:21, 15 டிசம்பர் 2009 (UTC)

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:21, 15 டிசம்பர் 2009 (UTC)


REPLY

தகவலுழவன் and Pazha.kandasamy | பழ.கந்தசாமி, அவர்களுக்கு, வணக்கம்.

தங்களது கருத்துக்களை கவனித்தேன்.

  1. ஓரெழுத்துச் சொற்கள்
  2. இரண்டெழுத்துச் சொற்கள்
  3. மூன்றெழுத்துச் சொற்கள்

என்ற பாகுபாட்டின் கடைசி பகுதியை இன்று அல்லது நாளை செய்து முடித்துவிடுவேன்.

அதன் பிறகு தங்கள் இருவருடனும் இணைந்து, செயல்படுவேன். நான், இதனை, தமிழுக்காற்றும் சிறு தொண்டாக கருதுகிறேன்.

தொடர்பு கொண்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.

--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:21, 15 டிசம்பர் 2009 (UTC)

பங்களிக்கத் தூண்டுங்கள்![தொகு]

தகவலுழவன்!

  • அடிக்கடி என்னை பங்களிக்குமாறு அழைக்கின்றீர்கள். இது தான் என்னை மீண்டும் மீண்டும் பங்களிக்கத் தூண்டுகின்றது. உங்கள் ஆவலும் உழைப்பும் (நேர்த்தியும்) பிரமிக்க வைக்கின்றது. நீங்களும் பழ. கந்தசாமியும் போட்டி போட்டுக்கொண்டு செய்வது மிகவும் சிறப்பான ஒரு கட்டத்தில் விக்சனரியை இருத்தியுள்ளது. ஆனால் இன்னும் செய்ய வேண்டியது மிகவும் நிரம்ப உள்ளது.
  • அந்த மீன்கொத்தியின் பெயர் பொரி மீன்கொத்தி அல்லது வெள்ளை மீன்கொத்தி. ஆதாரம்: தமிழில் பறவைப் பெயர்கள் -- முனைவர் க. ரத்னம்

நீக்கவும்[தொகு]

தமிழ் விக்கிமேற்கோள், தமிழ் விக்கிசெய்திகள் திட்டங்கள் தொடர வாக்களியுங்கள்.

இது முடிந்துவிட்டது. தயந்து நீக்கவும்.

நீக்குவது எப்படி? என்பதை அறிய விழைகிறேன்த*உழவன் 05:31, 17 டிசம்பர் 2009 (UTC)

செய்ய வேண்டிய தலைப்புகள் சில[தொகு]

தகவலுழவன்! உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. த.வி. - யில் அவசியம் எழுத வேண்டிய தலைப்புகள் சிலவற்றை நீங்கள் செய்ய வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சென்னைப் பல்கலையின் தமிழ் சொற்களஞ்சியம் (Tamil Lexicon) பற்றியும் அது போன்ற சொற்களஞ்சியங்களை எண்முறைப்படுத்தி ( digitize ) நாம் பயன்படுத்த வகை செய்த ஆய்வு நூலகங்களுக்கான மையம் (Center for Research Libraries), சிக்காகோ பல்கலைக்கழகம் (University of Chicago) ஆகியவை பற்றியும் தகவல்களைத் திரட்டி த.விக்கியில் எழுத வேண்டும். உங்களால் முடியும் என்று நினைக்கிறேன். -- பரிதிமதி 13:43, 21 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)

  • தமிழ்விக்கிப்பீடியாவில் விரைவில் எழுதத் துவங்குகிறேன். வரும் பொங்கலுக்குள், கணினி வாங்கி விடுவேன். நிறைய எழுதணும். உயிரியிலில் எழுதத் திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக புவி வெப்பமாதல் ஆராய்ச்சியில், பயனாகும் நுண்ணுயிரிகளைப் பற்றியும், பள்ளிப் பாடங்களில் இருப்பவைப் பற்றியும்.

ஒரு மாத த்தில் 100 குறுங்கட்டுரைகளாவது . சந்திப்போம். த*உழவன் 02:06, 22 டிசம்பர் 2009 (UTC)

பக்கவடை[தொகு]

த*உழவனே! பக்கவடிவமைப்பைத் தான் சொல்கிறேன். dove பக்கம் பற்றிப் பேசினோம், ஓரிரு கருத்துக்கள். - பெயர், உரி முதலியன எங்கே? சில சமயங்களில் ஒரே வார்த்தை இரண்டாகவும் வருகிறது. எ.கா: equestrian - தமிழ்ப் பக்கங்கள்: ஒத்த சொற்கள், சொல்லின் வேறு வடிவங்கள் (எ.கா: அழகு, அழகான, அழகிய), ஒருமை, பன்மை முதலியன முக்கியச் சொல்லோடு கொடுக்கப்பட்டால் நலம், மேலும் சொல்லுக்கான பேச்சுவழக்கும்.

எப்படிச் செய்யலாம்? பழ.கந்தசாமி 01:49, 29 டிசம்பர் 2009 (UTC)

  • பேச்சு வழக்குகள் பல உள்ளனவே.எதைப்பின்பற்றுவுது? எனினும், கருவச்சொறகளில் மட்டுமே அதனை பின்பற்றியுள்ளனர். கருவச் சொற்களின் பகுப்புரையில், அதைப்பற்றி குறிப்பிட்டு உள்ளேன். அதை நாம் பின்பற்றலாமா?
  • ஒத்த சொற்களை சொல்வளப்பகுதியில் முதலில் எழுதலாம். மற்றவற்றை பின் எழுதலாம்.
  • {{PAGENAME} என்பதற்கு அடுத்து சொல்லின் திரிபு வடிவங்களைக் கூறலாம்
  • பெயர், உரி (equestrian போல)முதலியன பற்றி யோசிக்கிறேன்.த*உழவன் 02:00, 29 டிசம்பர் 2009 (UTC)
  • பேச்சுவழக்குப் பல, அதை எழுத்துவடிவத்தில் தருவதிலும் கொஞ்சம் கடினம் என்றாலும், நீங்கள் சொன்னதுபோல கருவச் சொற்களுக்கு முதலில் தரலாம். அதே போல, சொற்களுக்கு பொதுவான பேச்சுவழக்கு இருந்தால் அதைக் குறிப்பிடலாம்.
  • dove பக்கம் ஆங்கிலத்துக்கும், ஏதேனும் ஒரு தமிழ்ச்சொல்லுக்கும் நாம் திரிபு, பன்மை, ஒத்தகருத்து, மூலம் முதலியவற்றோடு செய்து முடிவெடுக்கவேண்டும்

பழ.கந்தசாமி 02:08, 29 டிசம்பர் 2009 (UTC)

  1. கருவச் சொற்களுக்கு முதலிடம் என்பதில் மகிழ்ச்சி தான். இத்தொடுப்பினை காண்க. எனக்குத் தெரிந்து கருவச்சொற்களில் தான் பேச்சு வழக்கு கொடுத்துள்ளனர். பேச்சு வடிவத்தை, ஒலிக்கோப்புகளாகவே கொடுத்தால் நன்றாக இருக்கும். இதுவரை யாரும் அந்த முயற்சியை எடுக்கவில்லை. த*உழவன் 02:22, 29 டிசம்பர் 2009 (UTC)
  • அத்தொடுப்பில் உள்ளமாதிரி பக்கவாட்டில் தரலாம். பேச்சுவழக்கு => எழுத்துவழக்கு சொல் பெறும் வசதியும் தமிழ் புதிதாகப் படிப்பவர்களுக்குத் தேவைப்படுகிறது (தமிழ் தெரிந்தவர்களுக்கும் கூட) பழ.கந்தசாமி 02:40, 29 டிசம்பர் 2009 (UTC)
  1. ஒன்றும் இதில் உள்ளபடி அமைக்கலாமா? எனக்கு ஒலிக்கோப்பாக அமைப்பது தான் மிகச் சரியாகப் படுகிறது. எனினும், இப்படி எழுதி அமைப்பது உடனுக்குடன் அவ்வேலை முடிந்து விடும் என்பதும் புரிகிறது.த*உழவன் 04:50, 29 டிசம்பர் 2009 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer/2009&oldid=1284339" இலிருந்து மீள்விக்கப்பட்டது