உள்ளடக்கத்துக்குச் செல்

புணர்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
புணர்த்தல்:
என்றால் சிருட்டித்தல்..விநாயகர், வியாசர் சொல்ல, மகாபாரதத்தை சிருட்டிக்கிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புணர்த்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  1. சேர்த்தல்
    (எ. கா.) நின்கழற்கணே புணர்ப்பதாக (திருவாச. 5, 71).
  2. எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல்.
    (எ. கா.) பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் (தொல். எழுத். 108). (இலக்கணம்)
  3. நிகழ்த்துதல்.
    (எ. கா.) தூமமென்குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் (கம்பரா. திருவவ. 48).
  4. பாகுபடுத்தல்.
    (எ. கா.) நாவினாற் பூவை புணர்த்து . . . பேசும் (பு. வெ. 12, வென்றிப். 12).
  5. கூட்டிச்சொல்லுதல்.
    (எ. கா.) தருக்கிய புணர்த்து (தொல். பொ. 50).
  6. கட்டுதல்.
    (எ. கா.) புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்பாண். 218).
  7. சிருட்டித்தல்.
    (எ. கா.) புணர்க்கு மயனாம் (திவ். திருவாய். 2, 8, 3).
  8. பிரபந்தமாகச் செய்தல்.
    (எ. கா.) நாயகன் பேர்வைத்துப் புணர்த்த புணர்ப்பு (ஈடு. 5, 9, 3).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To combine, connect, unite
  2. To combine letters or words, in canti (சந்தி)
  3. To do,make, bring about
  4. To analyse, choose,resolve
  5. To speak connectedly
  6. To fasten,tie
  7. To create
  8. To compose



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணர்த்தல்&oldid=1279329" இலிருந்து மீள்விக்கப்பட்டது