முளைப்பாரி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- முளைப்பாரி, பெயர்ச்சொல்.
- சுபச் சடங்குகளில் நவதானிய விதை முளைக்க வைத்த மட்பாண்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- ஒரு பானையில் மண் நிரப்பி அதில் தட்டாம் பயறு, பாசிப்பயறு முதலியவற்றின் விதைகளை நெருக்கமாகத் தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் நாலைந்து நாட்களுக்கு வைத்துவிடுவார்கள். தினமும் பானையில் இருக்கும் மண்ணிற்கு நீர் ஊற்றி வருவார்கள். எனவே, பயறுவகை விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்து, வளர்ந்து நிற்கும். இப்பானையை நோன்பிருந்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். இதையே 'முளைப்பாரி' என்கிறார்கள். (அப்படியும் சில பழக்கங்கள்; இப்படியும் சில வழக்கங்கள், கழனியூரன்)
- முளைப்பாரி இல்லாத மாரியம்மன் விழா இல்லை. முளைப்பாரி பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாயச் சடங்கு. (அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை, ஜெயமோகன், திண்ணை)
- இவர்கள் மீது வெயில் பட்டு பல வருஷங்கள் ஆகின்றன . அரங்கு வீட்டின் இருட்டில் வளார்க்கப்பட்ட முளைப்பாரி பயிர்கள் போல வெளுத்துக் காணப்படுகிறார்கள். (புன்னகைக்கும் கதைசொல்லி, ஜெயமோகன், திண்ணை)
ஆதாரங்கள் ---முளைப்பாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:முளை - முளைப்பு - நவதானியம் - தானியம் - முளைப்பாலிகை