விக்சனரி பேச்சு:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம்

Page contents not supported in other languages.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முதல்கட்ட கலந்தாய்வுகள்[தொகு]

நமக்குள் ஒருமித்த கருத்தினை எட்டிக்கொள்ள இத்திட்டம் தொடர்பான சில பரிந்துரைகளும் கேள்விகளையும் முன்வைக்கிறேன். வழங்கவுள்ள சொற்களில் தட்டுப்பிழை இலக்கணப்பிழை தவிர சரியான மொழிபெயர்ப்பா, சரியான சொல்லா போன்று தொடக்கநிலையில் நாம் எதையும் தவிர்க்க வேண்டாம். காலப் போக்கில் பயனர்கள் திருத்திக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறேன். உள்ளடக்கத்தில் தமிழ் உள்ள சொற்களை மட்டுமே அனுமதித்து, கனிமக்கழிவு, கடல் வாத்து போன்றவற்றைத் தவிர்க்கலாம். இதற்கு முன்னர் பயன்படுத்திய TamilBOT கணக்கின் நிரலைப் பகிரலாமா? ஆப்ஸ்விக்கியின் விரிதாளும் உள்ளன. அவர்கள் சோதனை செய்தபின்னர் தானியங்கி அணுக்கத்தை வழங்கலாம். அல்லது தானியக்கத்தில் பதிவேற்ற வேறு யாரேனும் உதவ இயலுமா? அவ்வாறு பதிவேற்றிய சொற்களை பயனர்:KarefoIndia பெயரில் திருத்தங்களைச் செய்ய விரும்புகிறார்கள். அக்கணக்கின் பக்கத்தில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடக் கோர வேண்டும்? கிட்ஹப்பில் சொற்களை சிஎஸ்வி வடிவில் வெளியிடப் பரிந்துரைத்துள்ளேன். வேறு ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளவேண்டியவற்றையும் முன்வைக்கலாம். முழுத் தரவுகளும் தெரியாததால் இத்திட்டத்தின் சவால்கள் தெரியவில்லை. தேவைப்படின் விக்சனரி சார்பாக யாரேனும் இந்தக் அறக்கட்டளையுடன் இணைந்து செயலாற்ற விரும்பினாலோ அல்லது சிஐஎஸ் உதவியில் செயலாற்ற விரும்பினாலும் அறியத் தரலாம். இந்தப் பெரும் திட்டத்தை நிறைவுசெய்வது விக்சனரிக்கு மட்டுமல்லாமல் கட்டற்ற களஞ்சியங்களுக்கு முன்னுதாரணமாகவும் அமையும். -Neechalkaran (பேச்சு) 14:23, 17 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

விக்சனரியில் வார்த்தைகளைச் சேர்க்கும் பொழுது அது பொதுகளமாகவோ அல்லது CC-BY-SA 4.0 போன்று இருந்தால் நலம் சொற்கோவை இணையதளத்தில் மேலோட்டமாக பார்த்தால் ©2019 என்று குறிப்பிட்டுள்ளது. இதில் கார்கி அறக்கட்டளை எப்படி உள்ளளே வருகிறது என்று புரியவில்லை. சொற்கோவை வார்த்தை விளக்கங்களை பொது உரிமத்ததில் வெளியிட்டால் பிரச்சணை எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் சரிபார்த்து பதிவேற்றலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:33, 21 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
சொற்குவை தளத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பினை இந்த அறக்கட்டளை செய்துவருவதால் அவர்களே பதிவேற்றிவிட முயல்கிறார்கள். விக்சனரி தொடர்பாக யாரை அணுகுவது/ என்ன விதிமுறைகள் என்று அறியாதல் சொற்களை ஏற்ற பணியாணை வாங்கி, தொடங்கியதாகக் கூறினர். கணக்கினைத் தடைசெய்த பிறகே அவர்களைத் தொடர்பு கொண்டேன். விக்சனரி சார்பாக யாரேனும் அவர்களுடன் இணைந்து உதவக் கேட்டுள்ளனர். பொதுக்கள உரிமத்தில் ஏழு லட்சம் சொற்களையும் வெளியிடக் கோரியுள்ளேன். மேலும் சமூக ஒப்புதல் கோரிக்கையும் தானியங்கிக் கணக்கு அணுக்கம் தொடர்பாகவும் அறிவுறுத்தியுள்ளேன். எதிர்வரும் சென்னை புத்தகத் திருவிழாவிற்குள் முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களுடன் விக்சனரி குழுவினராக நாம் உரையாடி உரிய தரவுகளையும் உரிம ஆவணத்தையும் பெற வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் திட்டப்பக்கத்தில் இணையலாம். சென்னையிலிருந்தால் நேரடியாகவும், வெளியூரிலிருந்தால் இணைய வழியாகவும் நாம் உதவலாம். -Neechalkaran (பேச்சு) 12:55, 21 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
ஒரு பரிந்துரை: தனிப்பக்கங்களுக்குப் பொருந்தாதவற்றைப் பட்டியலாகச் சேர்க்கும்படி கேட்கலாமா? -- Sundar (பேச்சு) 09:12, 23 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
உரிமம் தொடர்பில் ஏற்கனவே த.இ.க. சொற்கொடைக்கென முறைப்படி தந்த மடலின் மாதிரி இருந்தால் அதை அவர்களிடம் பகிரலாம். செல்வாவிடம் படியுள்ளதா? @செல்வா: -- Sundar (பேச்சு) 09:13, 23 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
தனிப்பக்கங்களுக்குப் பொருந்தாதவை என்று எவற்றைச் சொல்லலாம் என்று நாம் தெளிவு படுத்த வேண்டும். புதியதாக உருவான தமிழ்ச்சொல்லைத் தலைச்சொல்லாக இட்டதால்தான் முக்கியத்துவமுள்ளதா எனப் பார்க்கவேண்டிவந்ததென நினைக்கிறேன். மாறாக ஆங்கிலத் தலைச் சொல்லுக்குத் தமிழ் இணைச்சொல்லை உள்ளடக்கமாக இட்டால் இச்சிக்கலில்லை என்பதால் இதைப் பரிந்துரைத்தேன். நான் இந்த இணைப்பில் உள்ளவற்றை மாதிரிக்கு அவர்களிடம் அனுப்பியுள்ளேன். வரும் திங்களன்று காலை ஒரு இணையவழிச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். விக்சனரி சார்பாக இத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் அனைவரையும் அழைத்துள்ளேன். சிலருக்கு மாலை ஏற்பாக உள்ளது சிலருக்குக் காலை உள்ளது. அனைவரது பங்கேற்பிற்கேற்ப நேரத்தை இறுதி செய்து தகவலைப் பகிர்கிறேன். -Neechalkaran (பேச்சு) 12:23, 23 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
@Neechalkaran: நன்று. ஒரு தனிச்சொல்லாக இல்லாதவற்றைத்தான் குறிப்பிட்டேன். ஆங்கிலத்தலைச்சொல்லுக்கு இணைச்சொல்லாகத் தரவியலுமெனில் பட்டியலாகத் தேவையில்லை. -- Sundar (பேச்சு) 10:43, 24 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

திசம்பர் 24 அன்று நடைபெற்ற விக்சனரி-தமிழக அரசு-கார்க்கி அறக்கட்டளை சந்திப்பில் எட்டப்பட்ட புரிந்துணர்வு[தொகு]

திசம்பர் 24-ஆம் தேதி விக்சனரி சார்பில் நீச்சல்காரன், பரிதிமதி, பாலாஜி ஆகியோருடன் நானும் இத்திட்டத்தில் ஈடுபடும் அரசுசார் அலுவலர்கள் (திரு.கோ.விஜயராகவன், திரு.செ.சரவணன் உள்ளிட்டோர்), கார்க்கி அறக்கட்டளையினர் ஆகியோரைச் சந்தித்து பயனுள்ள உரையாடலில் ஈடுபட்டோம். அக்கூட்டத்தில் நாம் அனைவருமே இத்திட்டத்தை வளர்முகமாகவே அணுகுகிறோம் என்று தெரிவித்தோம். அவர்களும் அவ்வாறே இசைந்தனர். விக்சனரியின் தரப்பில் நமது முறைமைத் தேவைகளைக் குறிப்பிட்டு அதை நிறைவுசெய்யும் வகையில் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்வதென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 1. நாம் குறிப்பிட்டவாறு (ஆங்கிலத் தலைச்சொல்லுக்குத் தமிழ்விளக்கம் முதலியன) அவர்கள் பத்து எடுத்துக்காட்டுப் பதிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நாம் பயனர் கணக்கின்மீதான தடையை நீக்குவோம். - செயற்பாடு: தடைநீக்கம்-விக்சனரி தரப்பு, பதிவேற்றம்-திரு.இராஜபாண்டியன்
 2. த.இ.க. மாதிரியில் தக்க அளிப்புரிமையின்கீழ் வெளியிடும் வகையில் கடிதமொன்றை அரசு தரப்பில் இருந்து வெளியிடுவார்கள். இது நமக்கான அடிப்படைத்தேவை. - செயற்பாடு: திரு.கோ.விஜயராகவன்
 3. அவர்கள் இத்திட்டத்தின்கீழ் பதிவேற்ற விழையும் தரவினை ஏதாவதொரு தளத்தில் வெளியிட்டு நமது பார்வைக்குத் தருவார்கள். - செயற்பாடு: திரு . மதன்
 4. அதன்பின் மேலே பதிவேற்றும் பத்துப் பதிவுகளில் நாம் திருத்தங்களை விரைந்து தெரிவிப்போம். கூடவே அவர்கள் அளிக்கும் தரவுகளைப் பார்வையிட்ட எத்தகைய சொற்களை ஏற்கலாம் விலக்கலாம் என கருத்தைத் தெரிவிப்போம்.
 5. அதன்படி கார்க்கி அறக்கட்டளையினர் விக்சனரி முறைமைக்கேற்ப பதிவேற்றுவார்கள்.

அத்துடன் இத்திட்டத்தில் பங்காற்றும் அறிஞர்குழுவினர் நம்முடன் பங்களிப்பாளர்களாக இணைந்து பணியாற்றவும் கோரினோம். @Neechalkaran, PARITHIMATHI, Balajijagadesh: மேலே ஏதும் விடுபட்டிருந்தாலோ கூடுதல் தகவல் இருந்தாலோ தெரிவிக்க வேண்டுகிறேன்.

மற்ற பங்களிப்பாளர்கள் விரைவுநோக்கிலும் அரசுடன் வளர்முகமாக ஒத்துழைத்து பயன்பெருக்கும் நோக்கிலும் அருள்கூர்ந்து விரைந்து கருத்திட்டு மேற்படி புள்ளிகளில் கருத்திட்டு முடிவையெட்ட வேண்டுகிறேன். -- Sundar (பேச்சு) 14:13, 24 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

திட்டத்தின் களமும் உரையாடலும் அவ்வப்போது விக்சனரிக்கு வெளியே நடைபெறுவதால் இயன்றோர் அவற்றில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். இதுதொடர்பில் பங்காற்றும் உறுப்பினர்களையும் இன்று கூட்டம் உடனடியாக முடிவானதால் கலந்துகொள்ளவியலாதோரையும் நன்னய அடிப்படையில் நமது தரப்பில் சில முடிவுகளை எடுக்க அனுமதிக்குமாறும் கோருகிறேன். நமது முடிவுகளையும் அவர்களிடம் தக்கவாறு எடுத்துரைப்போம். -- Sundar (பேச்சு) 14:21, 24 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
முழுச் சொல் பட்டியலும், உரிமம் தொடர்பான கடிதமும், சமூக ஒப்புதலும் கிடைத்த பின்னரே இதர சொற்களைப் பதிவேற்றுவோம் என்று உறுதியில் எதிர்வரும் பயனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவினை வழிமொழிகிறேன். -Neechalkaran (பேச்சு) 14:41, 24 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
இன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் போனதற்கு வருந்துகின்றேன். மேலே கொடுத்துள்ள 5 புள்ளிகளில் உள்ள கருத்துகள் ஏற்புடையதாகவே உணர்கின்றேன். நல்லனவாகவும் கருதுகின்றேன். கடைசி புள்ளியில் உள்ள "அதன்படி கார்க்கி அறக்கட்டளையினர் விக்சனரி முறைமைக்கேற்ப பதிவேற்றுவார்கள். " என்பது ஏன் என்று விளங்கவில்லை. விக்சனரியின் விதிமுறைகளின்படி இது சரியானதாக இருக்குமா? அவர்கள் இப்படி முன்வருவது நல்லதே, எனக்குத் தோன்றும் சில கருத்துகள்: (1) ஏற்கனவே இருக்கும் தமிழ்ச்சொற்களோடு இவை எவ்வாறு பொருந்தும் (சில முரண்படவும் குடும்). (2) சொற்குவையில் உள்ள பல தமிழ்ச்சொற்கள் (ஆங்கிலத்துக்கு ஈடான சொற்கள்) சரியற்றனவாகக் கருதுகின்றேன். இவை தவிர, இந்த செயற்பாட்டுடன் சொற்களை அழகுற (எடுப்பாக இருக்குமாறு) காட்சிப்படுத்தவும் முயலலாம். --செல்வா (பேச்சு) 15:21, 24 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
கருத்துக்களுக்கு நன்றி, @Neechalkaran, செல்வா:. ஏற்கனவே ஒரு சொல்லுக்கான பக்கம் இருக்குமிடத்தில் அப்பக்கத்தை அழித்துவிடக்கூடாது என அறிவுறுத்துவோம். சரியில்லாத மொழிபெயர்ப்புகளை ஏற்றுமுன் வடிகட்ட முடிந்தால் நலம். இல்லாவிட்டால் தனிப்பெயர்வெளியில் வைத்துத் திருத்த முடியுமா எனப் பார்க்கலாம். @KarefoIndia: இங்கே உங்கள் ஒப்புதலைத் தெரிவியுங்கள். -- Sundar (பேச்சு) 03:26, 25 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
@Sundar, செல்வா: என்னை வழிநடத்தி மேம்படுத்தியது போல, தற்போதும் நடக்கும் என நம்புகிறேன். மட்டற்ற மகிழ்ச்சி. உங்கள் வழிகாட்டுதல்களை நான் எப்போதும் ஏற்பேன். --உழவன் (உரை) 04:11, 25 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
தொடர்ந்து உங்களுடன் பங்களிப்பதில் நானும் மகிழ்ச்சி கொள்கிறேன், தகவலுழவன்! -- Sundar (பேச்சு) 05:52, 25 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

:அதன்பின் மேலே ... இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவோம்; என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்கின்றேன். மற்றபடி, இணைய சந்திப்பில் ஒரு நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டதில் மகிழ்ச்சி.-- PARITHIMATHI (பேச்சு). 06:18, 25 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

தானியக்கத்திற்கான வழிகாட்டல்[தொகு]

இதுவரை பதிவேறிய சொற்கள், கலந்துரையாடல் மற்றும் பொதுவான சவால்களின் அடிப்படையில். கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறேன். முழுச் சொல் பட்டியல் கிடைத்தவுடன் மேலும் சரிபார்க்கலாம்.

பதிவேற்றல் நிலை[தொகு]

முதல்கட்டமாகத் தானியங்கி வழியாகப் பதிவேற்றும் போது கவனிக்க வேண்டியவை.

 1. தமிழ் உள்ளடக்கம் இல்லாத சொற்களை(உதாரணம் கனிமக்கழிவு, கடல் வாத்து) ஆங்கிலத்தை தலைச்சொல்லாகவும் தமிழை உள்ளாடக்கமாகவும் இடவேண்டும்
 2. தலைச்சொல்லில் அடைப்புக் குறி வேண்டாம் (உதா: அண்மை (வானவியல்)). ஒரே சொல் பல துறைகளில் வந்தாலும் அவற்றை ஒரே பக்கத்தில் எழுதாலாம். (உதா:offline status)
 3. பெயர்ச் சொல்லின் அடிச்சொல்லே தலைச்சொல்லாக இருக்க வேண்டும். பன்மை ஏறிய சொற்கள் கூடாது(உதா: காப்புரிமை மருந்துகள்)
 4. தலைச்சொல் ஆங்கிலமாக இருந்தால், அனைத்தும் சிறிய எழுத்தாக இருக்க வேண்டும்.
 5. ஆங்கிலத் தலைச்சொல்லுக்கு பகுப்பு:ஆங்கிலம்-சொற்குவையின் சொற்கள் என்றும் தமிழ்த் தலைச்சொல்லுக்கு பகுப்பு:தமிழ்-சொற்குவையின் சொற்கள் என்றும் போட வேண்டும். பகுப்பு:தமிழ்-பெயர்ச்சொற்கள் என்று பகுப்பிருந்தால் தனியாக பகுப்பு:தமிழ் தேவையில்லை.
  • விக்சனரி பன்மொழி அகரமுதலி என்பதால், ஆங்கில விக்சனரி போன்ற தாய்பகுப்பு ஒவ்வொரு மொழிக்கும் அவசியம். பிற மொழிகளில் இருக்கும் பகப்புகளோடு நாம் ஒத்து இருத்தல் நன்று என்றே எண்ணுகிறேன். en:Category:Tamil_lemmas என்பதற்கு ஈடான தாய்ப்பகுப்பாக பகுப்பு:தமிழ் என்பதைக் கருதலாம் அல்லது 'Tamil_lemmas' என்பதற்கான மொழியாக்கம் தருக.--உழவன் (உரை) 15:29, 26 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]
சரி. நீக்கிவிட்டேன்.-Neechalkaran (பேச்சு) 08:06, 1 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

மேம்பாட்டு நிலை[தொகு]

 1. ஏற்கனவே அச்சொல்லிருந்தால் தானியக்கமாகச் செய்யாமல், அந்தப் பக்கத்தில் கூடுதல் விளக்கத்தைப் பயனரொருவர் செய்யலாம்.
 2. பெயர்ச் சொல் அல்லாதவற்றை திருத்தி, சரியான பகுப்புகளை இட வேண்டும். (உதா: அவப்பெயர் பெற்ற இன்பமான)

--Neechalkaran (பேச்சு) 07:45, 25 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

சொற்குவைப் பகுப்பு[தொகு]

பயனர்:CMR666 என்ற பயனர் இத்திட்டத்திற்கான பகுப்பினை உருவாக்கி உள்ளார். பகுப்பு பேச்சு:சொற்குவை என்ற பக்கத்தில் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இப்பயனருக்கும், இத்திட்டத்திற்கும் தொடர்பு உண்டா? இந்த திட்டத்தில் அரசு ஆவணத்திற்குரிய உரிமம் தந்த பிறகு யார்யார் பங்களிப்பர் என்று கூறினால், அவர்களுக்கு வழிகாட்டிட ஏதுவாகும். மேலும் அப்பகுப்பில் உள்ள சொற்களில் பல தேவையற்ற கூட்டுச்சொற்களாகத் தெரிகின்றன. அகரமுதலியியல் வழக்கில் இதுபோன்று கூட்டுச்சொற்களுக்கு இடமில்லை என்றே கருதுகிறேன். சொற்பிறப்பியல் என்றாலே பாவாணர் அவர்களின் படைப்புகள் விட்ட ஆய்வோ படைப்போ சிறப்பற்றது என்பது எனது முடிவு. அவர்தம் படைப்புகளைக் கொடுத்தால் விக்கிமூலத்திலும் ஏற்றி மேலும் சிறப்புற என்னால் ஒத்துழைக்க இயலும். இத்திட்டத்தில் இன்றுவரை இரு ஆங்கிலச்சொற்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதற்குரிய துணைப்பகுப்பையும் இதன் கீழ் உருவாக்கியுள்ளேன். உங்கள் எண்ணமறிய ஆவல்.--உழவன் (உரை) 15:19, 26 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

ஆங்கில மேல்/பெரிய சொற்களுக்கான நுட்பம்[தொகு]

ஆங்கில விக்சனரியில் ஆங்கில மேல் எழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்கு, Auto redirection வசதி உள்ளது. அதனை இங்கும் நடைமுறை படுத்தக்கோருகிறேன். எனவே, அனைத்துச்சொற்களையும் கீழ்/சிறிய எழுத்துக்களில் மட்டும் சொற்களைப் பதிவேற்ற, இத்திட்டத்தின் கீழ் பங்களிப்பவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஆங்கிலச் சொற்களுக்கு அவர்கள் பின்பற்றும் நடைமுறையே சிறப்பு. en:earthen:Earth, en:pigeonen:Pigeon--உழவன் (உரை) 03:14, 27 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

பயனர்:KarefoIndia பின்பற்றும் மாற்று வடிவம்[தொகு]

பயனர்:KarefoIndia என்பவரின் பேச்சுப்பக்கத்தில் வழிகாட்டியுள்ளேன். எனினும் தொடர்ந்து பிறரும் அவருக்கு வழிகாட்டினால் சிறப்பாக இருக்கும். மேலும், இதுபோன்ற இடைச்செருகல்களை அவர்/அவர்கள் செய்வதால் ஏற்கனவே உள்ள வடிவமும் பகுப்பும் மாற்றமடைகிறது. காண்க 1, காண்க 2--உழவன் (உரை) 03:22, 27 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

விக்சனரி_பேச்சு:த._இ._ப._சொற்கள்_பதிவேற்றத்_திட்டம்[தொகு]

தமிழ்நாட்டு அமைச்சரிடமிருந்து விக்சனரி தரவை பெறல்
பெறப்பட்ட விக்சனரி தரவு மாதிரியின் முதல் பத்து, இறுதி பத்துச்சொற்கள்

விக்சனரி_பேச்சு:த._இ._ப._சொற்கள்_பதிவேற்றத்_திட்டம்#தரவுகளை_வெளியிடுதல் என்ற பக்கத்தில் நுட்பவியலாளர் நீச்சல்காரனும், இதே பக்கத்தில் பேராசிரியர். செல்வாவும் தமிழக அரசு அளித்த நன்கொடைச் சொற்கள் குறித்து உரையாடி இருந்தனர். எனவே, அது குறித்த பின்னணியை இங்கு கூற விரும்புகிறேன். செம்மொழி மாநாட்டில் பல திடல்கள் இருந்தன. நான் மக்கள் திடலில் பல அரங்குகள் இருந்தன. அதில் விக்கிமீடியாவிற்கான அரங்கினை நானும், இரவியும் பார்த்துக்கொண்டோம். முதன்மை அரங்கில் அமைச்சர் அழைத்தபோது விக்கிசார்பாக இருவிக்கியிர் பெற்றுக்கொண்டனர். (படிமம்:Tamil-virutal-dictionary-handover-TI2010.jpg) இந்த நிகழ்வே எனக்குத் தெரியாது. காராணம் ஒவ்வொருவரும் ஒரு அரங்கில் செயற்பட்டு கொண்டிருந்தோம். இரவி விக்கிக் கட்டுரை பரிசளிப்பு, கூகுள் மொழிபெயர்ப்புக்கட்டுரைகள் குறித்தும், இன்னும் பிற சூழல்களால் அம்மாநாட்டின் திடல்களுக்கிடையே சுழன்று கொண்டிருந்தார். எங்களுக்குரிய அடையாள அட்டைகளையும் நாங்கள் பெற மறந்துவிட்டோம். அதனாலும் ஓரிடம் இருந்து மறுநிகழ்விடம் செல்ல தடைகள் உண்டாகின. அதே திடலில் இருந்த தமிழ் இணையக் கல்விக் கழகம் அரங்கில்/கடையில் இருந்த நண்பர்கள் என்னை உணவு இடைவெளியில், "எப்பொழுது சொற்களை பதிவேற்றுவீர்கள்" என்ற கேட்டபோது, "என்ன சொற்கள்" என்று கேட்டேன்.... எனக்கோ பேரார்வம். அடையாள அட்டை இல்லாமையால், வெளியிலும் என்னால் செல்ல இயலாது. அவர்களிடம் இருந்து ஒரு படி (as a pendrive copy) பெற்றேன். படிமம்:Tamil Internet Conference-2010-DONATION WORDLIST MODEL(first&last10words).JPG இந்த வடிவத்தில் இருந்த ஆவணத்தினைப் பெற்றேன். அது பிறகு நடந்தவைகள் விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1 என்ற திட்டபக்கத்தில் காணலாம். அதன் முழுமையான படி இரவியிடம் இருக்கலாம். த.இ. க. அலுவலகத்திலேயே வினவிப் பார்க்கவும். --உழவன் (உரை) 09:36, 30 திசம்பர் 2021 (UTC)Reply[பதில் அளி]

சொற்குவை பதிவேற்ற ஒப்புதல் கோரல் - முதல் 10000[தொகு]

சொற்குவை தரப்பில் முன்னர் முடிவு செய்தது போல உரிமம் அளிக்கும் கடிதமும், சொல்பட்டியலும் பொதுவுரிமையில் வெளியிட்டுள்ளனர். ஆனால் முதல் கட்டமாக பத்தாயிரம் சொற்களை மட்டுமே பதிவேற்ற உள்ளனர். அதற்கான பட்டியல். எனது ஆலோசனைகளை மேலே கொடுத்துள்ளேன். விரைவாக விக்சனரி தரப்பில் நமது ஒப்புதலை அல்லது ஆலோசனைகளை அளித்து இப்பணியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். -Neechalkaran (பேச்சு) 08:03, 1 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

இப்பட்டியலிலுள்ள சொற்களை மேலே நீங்கள் தந்துள்ள வழிகாட்டுதலின்படி பதிவேற்ற ஒப்புகிறேன். -- Sundar (பேச்சு) 10:28, 1 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
என்னால் அப்பட்டியலைக் காணமுடியவில்லை. வெற்று கட்டமாக இருக்கிறது. மேலும், பதிவேற்றுபவர் திட்டபக்கத்தில் ஒப்பமிடுதல் விக்கிமரபு. யார்யார் பதிவேற்ற உள்ளனர் என அறிய விருப்பம். ஏற்கனவே பதிவேற்றியுள்ள சொற்களை மறுஆய்வுச் செய்யக் கோருகிறேன். --உழவன் (உரை) 12:28, 1 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
ஏற்கனவே ஏற்றிய சொற்கள் தற்போதைய நெறிமுறைக்கு முரணாக இருப்பதாலும், திருத்துவதற்கோ மறு ஆய்வு செய்வதற்கோ உரிய காலமில்லை என்பதால் தமிழைத் தலைப்பில் கொண்டு ஆங்கில உள்ளடக்கம் கொண்ட பக்கங்களை mass delete செய்யப் பரிந்துரைக்கிறேன். புதிய முறைப்படிச் இவற்றை மீண்டும் பதிவேற்றிக் கொள்ளலாம் என்பதால் அச்சொற்களுக்கு இழப்பில்லை. -Neechalkaran (பேச்சு) 18:46, 1 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
அவற்றை நீக்கிய பின்பு பதிவேற்றுதல் நலம். பதிவேறும் சொற்பட்டியலை காண இயலவில்லை. அவற்றினை முன்கூட்டியே தமிழக ஊராட்சிகள், கோவில்கள் போன்று, பொதுவுரிமத்தில் இருக்கும் சொற்களையும் விரிதாளில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும். நீக்குதல் போன்ற பணியும் இனி தோன்றாது. --உழவன் (உரை) 01:35, 2 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
@Info-farmer: மாற்றுக் கருத்தில்லை என்பதால் KarefoIndia & மற்றொரு ஐபி கணக்கில் தமிழ் உள்ளடக்கமில்லாமல் புதியதாக உருவாக்கிய பக்கங்களை நீக்கியுள்ளேன். அவர்கள் தானியக்கத்தில் ஏற்கனவே உள்ள பக்கங்கள் சிலவற்றை மாற்றியுள்ளவையும் தெரிகிறது. அவற்றை மீளமைப்போம். விரிதாள் வடிவில்தான் முதலிலிருந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் வெளியிடாததற்கான காரணம் புரியவில்லை. இருந்தபோதும் தரவுகள் பொதுவில் வந்துள்ளதால் சிக்கலில்லை என நினைக்கிறேன். @KarefoIndia: திட்டப்பக்கத்தில் உங்கள் ஒப்பத்திற்காகக் காத்திருக்கிறோம். -Neechalkaran (பேச்சு) 07:48, 8 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
@KarefoIndia: விரைவில் திட்டப்பக்கத்தில் உங்கள் ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டுகிறோம். -- Sundar (பேச்சு) 08:43, 8 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
@Neechalkaran:தரவுகள் பொதுவில் எங்கு வந்துள்ளது. நீங்கள்தந்த இணைப்பு வெற்றாக உள்ளது. இத்திட்டப்பங்களிப்பாளர் பேசுவதே நலம். குறிப்பிட்ட தமிழ்நாடு அரசு துறையோ, மேற்குறிப்பிட்ட அறக்கட்டளையோ ஈடுபாடு கொண்டுள்ளனனர் என்பதற்கான சான்றுகளை த.இ.க. அளித்தமை போல தருதலே நல்லவழி. சான்றுகள் இல்லாமல் அவர்கள் பெயரை நாம் பயன்படுத்துதல் நன்றன்று. நாம் மட்டுமே பேசுவது நல்ல நடைமுறை அன்று. இத்தகைய வெளிப்படையற்ற சூழ்நிலையால், எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. உழவன் (உரை) 22:58, 8 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
@Info-farmer:, அந்த பிடிஎப் கோப்பு மற்றவர்களுக்குத் தெரிகின்றது. அதைப் பொதுவகத்தில் ஏற்றியோ விக்சனரியில் ஏற்றியோ விட்டால் உங்களால் பார்க்க முடியுமா? மேலும் அவர்கள் தான் ஏற்றுகிறார்கள் என்பதை இத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் சந்திப்பில் நாங்கள் உறுதி செய்துவுள்ளோம். அதே வேளையில் வெளிப்படைத் தன்மைக்கு அவர்கள் பயனர் பக்கத்தில் தங்களை அறிமுகச் செய்யச் சொல்லிக் கேட்கலாம். பொதுவான விக்கி நடைமுறைப்படி கொடையளிப்பவர்கள் இங்கே தான் விவாதிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்த இயலவில்லை ஆனால் அறிவுறுத்துகிறோம். முந்தைய த.இ.க திட்டங்களில் விக்சனரிப் பயனர் தமிழ்ப்பரிதி மாரி அரசு சார்பாக இங்கே உரையாடினார். ஆனால் இத்திட்டத்தில் அறக்கட்டளை/அரசின் தரப்பில் பங்களிக்க விக்சனரி பயனர் யாரும் முன்வரவில்லை (முதல் கருத்தில் அதற்கான கோரிக்கையை நானும் இட்டிருந்தேன்). எனவே விக்சனரியின் கொள்கைகளில் அவர்களுக்குப் பரிச்சயமில்லை என்பதாலும் வேறு அமைப்புடன் இணைந்து செயல்படத் தக்கவையில் நாமும் இணக்கமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் இங்கே விவாதிக்கவில்லை என்ற ஒரு காரணத்தைக் கொண்டு வெளிப்படையற்ற உரையாடல் என்று கொள்ளத் தேவையில்லை. இத்திட்டப் பங்களிப்பாளார்களுடன் மடல் உரையாடலில் அரசும் அறக்கட்டளையினரும் உள்ளனர். மற்றும் விவாதித்தவற்றை இங்கே பதிவு செய்து இங்கே உரையாடியே முடிவுகளை எடுக்கிறோம். -Neechalkaran (பேச்சு) 08:34, 9 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────@Neechalkaran:பட்டியல் என்ற இணைப்பில் என்னால் பார்க்க இயலவில்லை என்று கூறினேன். நீங்கள் எந்த பிடிஎப் என்று கூறுகிறீர்கள்? பொதுஉரிமத்தில் நனகொடை தருவது தமிழ்நாடு அரசு. அதனை கூகுள் ஆவணத்திலும், ஒருபடி தந்தால் என்னைப் போன்றோர், அதில் இருக்கும் தரவுகளில் பிழை இருப்பின் சீராக்க ஏதுவாகும். தமிழ்நாட்டின் அரசு ஆவணம் எனில் அதனை யார் வேண்டுமானாலும், தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக வாங்கலாம் அல்லவா? அதைவிட எளிது நீங்கள் மேற்கூறியபடி ஒரு கூகுள் ஆவணமாக தந்தால் பலரும் ஈடுபட வழிவகுக்கும். இத்தனை ஆண்டுகள் பல பயனர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பங்களிக்கும் போது, அதனை ஒரு கூகுள் ஆவணத்தில் தந்தால் பதிவேற்ற இருக்கும் தரவினை எளிதில் அனைவரும் அணுகலாமே? இம்முறை சிறந்த முன்மாதிரி இருக்கும். அரசுக்கும், நமக்கும் உள்ள தொடர்பை வலுவாக்குவதே நமது நோக்கமாக இருக்கட்டும். விக்கிமீடிய அறக்கட்டளை நமக்கு தந்திருக்கும் சிறப்புரிமையை நாம் பயன்படுத்துதே நலம். பிற அறக்கட்டளையினர் செயற்பாடுகள் குறித்து உரையாட விரும்பவில்லை. ஆனால் ஒரு புதிய பயனரின், 5000 சொற்களை முழுமையாக நீக்கியுள்ளீர்கள். இனி அந்த புதுப்பயனர் ஏற்றும் தரவு சரியாகவே இருக்கும் என்று எப்படி நம்புவது? --உழவன் (உரை) 09:45, 9 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

அதே இணைப்புதான் அதிலுள்ள பிடிஎப்பைப் பற்றியே குறிப்பிட்டேன். தற்போது அதன் நகலை தமிழ் விக்சனரியிலும் பதிவேற்றியுள்ளேன். அந்தப் பயனர்க்குச் சரியான வழிமுறையைக் காட்டிவிட்டு, அச்சொற்களை மீண்டும் ஏற்றும் பொருட்டே நீக்கியுள்ளோம். நன்னோக்கில் இதைப் பார்ப்போம். மேலும் இனி, பதிவேறுவதில் பிழை என்றால் மீளமைக்கும் நுட்பம் நம்மிடமுள்ளதால் ஒப்புதலளிக்கக் கோருகிறேன். மேலும் தரவுகளை text வடிவில் அரசிடம் கேட்பது சரியே ஆனால் அதை ஒரு காரணியாகக் கொண்டு விக்சனரியில் நாம் ஒப்புதலை மறுக்க இயலாதல்லவா? விக்சனரிக்கு வெளியே அதற்கான கோரிக்கையை வைத்துக் கொண்டே இருப்போம். வெளிவரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. -Neechalkaran (பேச்சு) 12:53, 9 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
படிமம்:Sorkuvai CC announcement.jpg என்பதிலுள்ள அறிவிப்புப்படி யாவரும் பயன்படுத்த அனுமதி தருகிறது. இங்கு பிடிஎப் வடிவில் மட்டும் கொடுத்தால் எப்படி யாவரும் பயன்படுத்துவது? தமிழ்நாடு அரசு அனைவருகுகம் அனுமதி அளித்தும் இடையில் இருப்பவர் தடை உருவாக்குவதாகவே எண்ணுகிறேன். எனவே நேரடியாக அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக கேட்க திட்டமிடுகிறேன். மேலும், பதிவேற்றும் பயனர் அவரைக் குறித்த குறிப்புகளைத் தருதல் நன்று. அவர் இதற்கு பணம் பெற்று செயலாற்றுகிறாரா இல்லையா என தெளிவு படுத்துதல் வேண்டும். எடுத்துக்காட்டாக,விக்கிமூலத்தில் நடந்த கணியம் அறக்கட்டளையின் பணிகள். இதற்குரிய விரிவான வழிகாட்டல்களை ஆங்கில விக்கிபீடியா தந்துள்ளதைக் காண கேட்டுக் கொள்கிறேன். எந்த ஒரு தனிநபரின் ஒப்புதலோ, மறுப்போ, திறமையோ, திறமையின்மையோ விக்கிமீடியா அறக்கட்டளையின் இலக்குகளைப் பாதிக்காதபடி செயற்படுவோம். அப்பயனர் தனது பேச்சுப்பக்கத்தில், என்னிடம் உரையாட கற்றுள்ளார் என்றே தெரிகிறது எனவே அவர் அவரைக் குறித்த எழுத வேண்டும். அவரே இனி உரையாடுதல் நன்று. இல்லையெனில் இது கைப்பாவை கணக்காகவே நான் கருதுகிறேன். இனிநாம் உரையாடுதல் வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். உழவன் (உரை) 00:28, 10 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

கார்க்கி பயனர்கள்[தொகு]

கார்க்கி குழுமத்தின் சார்பாக கணக்கைத் தொடங்கி பதிவேற்றும் பொழுது அந்த பயனர் பக்கத்தில் அதன் விவரங்களைத் தருவது சரியாக இருக்கும். அவர்கள் தன்னார்வமாக இல்லாமல் அரசிடம் இருந்து/வேறு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று விக்சனரியில் பதிவேற்றம் செய்யும் பட்சத்தில் அப்படிப்பட்ட விவரங்களையும் தர வேண்டும். (அதாவது பணம் பெற்று பதிவேற்றம் செய்தால் இந்த அரசு/நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று பதிவேற்றம் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டால் போதும்.) நன்றி. --பாலாஜி (பேசலாம் வாங்க!) 20:42, 8 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

ஆம். எங்களுக்கும் விக்சனரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேற்குறி்ப்பிடும் அறக்கட்டளையோ/ குழுவினரோ சொல்ல வாய்ப்பபுண்டு. பொதுவாக மேலும் ஒன்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதில் பங்களிக்க விரும்பும் பயனர்/பயனர்கள் கட்டற்ற தரவு உருவாக்கத்தில் என்ன இதுவரை செய்துள்ளார்கள்? இவர்கள் பெயரில் களங்கத்தை, பிறர் விளைவிக்கவும் வாய்ப்புண்டு. எனவே, பதிவேற்றும் பயனர் போதிய சான்றுகள் தருதல் மிக முக்கிய அடிப்படை தேவை ஆகும். தமிழ்நாடு அரசிடம் ஆவணங்களைப் பெறுதல், நமது மொழிக்கும், விக்கியில் பெருமை சேர்க்கும் செயலாகும். ஏற்கனவே பெற்ற நாட்டுடைமை நூல்களுக்கான ஆவணங்களால், நாம் பெருமையும், பிறமொழி சமூகத்தாரிடமும் நன்மதிப்பு பெற்றோம். எனவே, இத்தகைய ஆவணம்/ஆவணங்கள் அவசியமாகும். அவற்றை கண்டு பலர் முன்வருவர். தமிழும் சிறக்கும். கட்டற்ற சமூகம் என்பது தனிநபர் செயல் அல்ல என்ற எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 23:10, 8 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

@KarefoIndia: நீங்கள் இங்கு புதியவர் என்பதால், உங்களைக் குறித்து உங்கள் பயனர் பக்கத்தில் தெரிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், மேற்கூறிய விக்சனரி நிருவாகி/மேலணுக்கர் கேட்ட விவரங்களையும் தர கேட்டுக் கொள்கிறேன்.--உழவன் (உரை) 00:32, 10 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

தமிழ்நாடு அரசு பொது உரிமம் கோப்பு எங்கேனும் உளதா?[தொகு]

தமிழ்நாடு அரசு சார்பாக இதுவரை ஏதேனும் பொது உரிமம் கோப்பு இதுவரை உள்ளதா? உதாரணமாக CC உரிமம் எனில் இங்கு வைக்கப் பட்டு உள்ளது. இது போன்று தமிழ்நாட்டு அரசின் சார்பாக உள்ள பொது உரிமம் எங்கேனும் உள்ளதா? அப்படி இருந்தால் அந்த உரிமத்தை இணைத்து பொதுகளத்தில் github அல்லது தமிழ்நாடு அரசின் சார்பாக தனியாக ஒரு GITHUB-தனி இணையம் உருவாக்கி அதில் வைக்கலாம். --Pitchaimuthu2050 (பேச்சு) 08:11, 9 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

உரிமம் குறித்த தகவல்களைத் தற்போது திட்டப்பக்கத்தில் இணைத்துள்ளேன். மேலும் உங்களது மற்ற கோரிக்கையினைத் தொடர்ந்து சொற்குவைதரப்பினரிடம் முன்வைக்கிறோம். தரவுகள் ஒருங்குறி வடிவில் பெற முயல்வோம். -Neechalkaran (பேச்சு) 09:22, 9 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

சொற்குவை இயக்குனர்களுக்கு வேண்டுகோள்[தொகு]

சொற்களை பொது தளத்தில் வையுங்கள் அதன் மூலம் அனைத்து தரப்பு நபர்களும் பயன்படுத்துவார்கள். பல நகல்கள் உருவாக்கப் பட்டு தமிழ் சொற்கள் இணையத்தை ஆக்கிரமிப்பு செய்யும். உதாரணமாக

 • பாண்டிய ராஜா அவர்களின் தொடரடைவுகளை GITHUB-ல் உள்ளது
 • அ.கி.மூர்த்தி-ன் அறிவியல் அகராதி இங்கு உள்ளது

இப்படி சொற்குவை சொற்களை பொது களத்தில் வைத்தாலே போதும், அதனை எந்த ஒரு இணையமும் (விக்சனரி போன்ற தளங்கள்), பயன்படுத்திக் கொள்ளும் அல்லவா? --Pitchaimuthu2050 (பேச்சு) 08:11, 9 சனவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

சொற்குவைத் தரப்பினருடன் உரையாடல்[தொகு]

இன்று விக்சனரி மற்றும் சொற்குவை தரப்பினருடன் இணையவழி சந்திப்பு நிகழ்ந்தது. இத்திட்டம் வெகுநாள்களாக முன்னேறாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, தமிழ் வளர்ச்சித் துறையினர் வருத்தத்தை வெளிப்படுத்தினர். இன்றைய சந்திப்பில் கார்க்கி அறக்கட்டளையினரால் சொற்களைத் தானியங்கியில் ஏற்ற இயலவில்லை என்றும் தொடர்ந்து முயல்வதாகத் தெரிவித்தனர். எனவே முழுச் சொற்பட்டியலையும் சுமார் 4.62 லட்சம் ஆங்கிலம்-தமிழ் முறையில் சிஎஸ்வி வடிவில் விக்சனரி தரப்பினரிடம் வழங்க தமிழ் வளர்ச்சித் துறையினர் முடிவெடுத்துள்ளனர். முந்தைய திட்டங்களைப் போலத் தரவுகளை வெளியிட முடிவு செய்தது வரவேற்பிற்குரியது. அதனை பிப்ரவரி 28க்குள் தமிழ் விக்சனரியில் பதிவேற்றக் கோரிக்கை வைத்துள்ளனர். முதல் கூட்டத்தில் சுட்டிக் காட்டியது போல சொற்குவைச் சொற்களுக்கு மேற்கோள் கொடுக்கும் வகையில் அவர்கள் தளத்தை மேம்படுத்தியுள்ளனர். முதலில் சில சொற்களை எனது தானியங்கி வழியாக ஏற்றிக் காட்டுகிறேன். அதில் மற்றவர்கள் பரிந்துரைகளை வழங்கலாம். -Neechalkaran (பேச்சு) 12:46, 18 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

இற்றை மற்றும் ஆலோசனை வேண்டல்[தொகு]

இரு மாதங்களுக்கு மேலாக விக்சனரித் தரப்பில் கோரிய வகையில் சொற்குவை தளத்தின் ஆங்கில-தமிழ்ச் சொற்பட்டியலை அகரமுதலித் திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ளது. இது பெரிய கோப்பாக இருப்பதால் தரவிறக்க ஏதுவாக இங்கே பதினெட்டுத் தொகுப்பாகப் பிரித்தும் போட்டுள்ளேன். இதில் மொத்தம் 4.4 லட்சம் சொற்கள் உள்ளன. போலிச் சொற்களும், சொல்லல்லாதவையும் உள்ளன. அதில் முதல் கட்டமாக ஆங்கில விக்சனரியில் உள்ள சொற்களை அப்படியே ஏற்றலாம் என நினைக்கிறேன். அதன்பின்னர் ஒற்றைச் சொல் ஆங்கிலச் சொற்களை ஏற்றலாம் என நினைக்கிறேன். அதன் பின்னர் ஏற்கனவே உள்ள பக்கத்தில் இல்லாத விளக்கங்களைக் கடைசி வரியில் இற்றை செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன். ஓரளவிற்கு ஏற்கத்தக்க சொற்களை ஏற்றிவிட்டு, பின்னர் அதை மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும் சோதனையோட்டமாகச் சில சொற்களை ஏற்றியுள்ளேன். தானியங்கிப் பதிவேற்றத்திற்கு அனுமதியும் ஆலோசனைகளையும் கோருகிறேன். -Neechalkaran (பேச்சு) 20:26, 22 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

 • நீங்களே தரவுகளை கையாள்வது மகிழ்ச்சியைத் தருகிறது. பதிவேற்றியச் சொற்களைக் கண்டேன். ஒரு சொல்லுக்கு பல பொருள் தரும் போது, இரண்டிற்கும் இடைப்பட்ட குறியீடுகள் மிகவும் வேறுபட்டு இருக்கின்றன. ஏற்கனவே உள்ள விக்சனரி நடைமுறை பின்பற்றுதல் நலம். எடுத்துக்காட்டாக,
 1. quietness என்பதில் சாய்வுக்கோடு வேறுபாடு உள்ளது - அலம்// சில்லெனல்/ கோப்பியம் சாய்வு கோடு போட்டு எழுதும் வழக்கம் இதற்கு முன் நாம் பின்பற்றவில்லை. இனி பின்பற்றவதாக இருப்பின் ஒரு சாய்வுகோடு எதற்கு? இரு சாய்வுகோடுகள் எதனைக் குறிக்கிறது?
 2. largeness என்பதில் பலவித குறியீடுகள் உள்ளன.
 3. trumpet tree என்பதற்கு அப்பு என உள்ளது. ஆதாரம் தருக.
 4. //ஓரளவிற்கு ஏற்கத்தக்க சொற்களை ஏற்றிவிட்டு, பின்னர் அதை மேம்படுத்திக் கொள்ளலாம். // என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. “செய்வினைத் திருந்த செய்” என்ற பழமொழியை நான் பின்பற்ற விரும்புகிறேன். அதிகச் சொற்களை பதிவேற்றம் செய்வதால், பதிவேற்றும் போதே மெருகேற்றும் பணியும் பின்பற்றுதல் நலம். பல கல்லூரி ஆசிரியர்கள் இதில் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக NLP ஆசிரியர்கள். அவர்கள் இருப்பின் தரம் உயரும். இல்லையெனில் எண்ணிக்கை மட்டுமே உயர்ந்து, தரம் மட்டுப்படும்.
 5. தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்தில் அதிக அவசரதன்மை இருக்கிறது. குறுகிய காலத்தில் 5000 சொற்கள் நீக்கப்பட்டதும் தவறே. அவற்றில் பல சொற்களை நீக்கியிருக்கத் தேவையில்லை.
 6. பல பங்களிப்பாளர்கள் இத்திட்டத்தில் இருக்கும் பொழுது தரவுகளைப் பிரித்து நோட்டம் விட்டு, அவரவர் மணல் தொட்டி ஒட்டி காட்டி பதிவேற்றுவதால் தரம் இன்னும் உயரும். எடுத்துக்காட்டாக, பயனர்:ஆராவமுதன்/மணல்தொட்டி. இப்பயனர் பகுப்பு:சித்த மருத்துவச் சொற்கள் 10 ஆயிரம் சொற்களை அப்படியே பதிவேற்றினார். செயற்படும்போதே நல்ல வழிகாட்டுதல்களையும் அமைத்தல் நலம். மணல்தொட்டியில் இருந்துச் சொற்களை பதிவேற்றும் நுட்பத்தினை நாம் அமைக்கலாம்.
 7. “முன் ஏர் சென்ற வழியே பின் ஏர் செல்லும்.” பல முன்னெடுப்புகளை நீங்கள் இரவிக்கு அடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு விளக்கி செய்வது நன்று. இருப்பினும், இதற்கு முன் த. இ. க. உடன் ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தக்காலம் முடிவடைந்து விட்டது. அதனை புதுப்பிக்கலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையில் விக்கியருக்கான தனிப் பிரிவோ, அங்கு உறைவிட விக்கிப்மீடியர்களை, முன்பு அனுப்பியது போலஅனுப்பலாம். குழு மனப்பான்மையை இரவியின் முன்னெடுப்புகளில் காண முடிந்தது. ஆனால், இச்சொற்குவைத் திட்டத்தில் அது இல்லை. இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளவருக்கு இலக்குகளைப் பிரித்தல் நலம். திட்டமிடுக. தரமே, நிரந்தரம் அல்லவா. --உழவன் (உரை) 04:00, 23 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
மிக்க நன்றி, நீச்சல் காரன். நீங்களே பதிவேற்றுவதென்பதால் தானிங்கிப் பயன்பாட்டுச் சிக்கல்கள் இரா. மேலே தகவலுழவன் சுட்டிக்காட்டியவற்றைத் திருத்தி ஏற்றினால் நல்லது. சாய்வுக்கோட்டுக்களை ஒன்றாக்கி, அவற்றை காற்புள்ளியாக மாற்றினால் சரியாக இருக்குமென நினைக்கிறேன். -- Sundar (பேச்சு) 05:46, 23 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
@Info-farmer:, வணக்கம், நீங்கள் குறிப்பிட்டவாறு விக்சனரித் தரப்பில் யாரேனும் முன்னெடுத்தால் தமிழ் வளார்ச்சித் துறையினரும் த.இ.க.வினரும் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ள அணியமாகவே உள்ளனர். முந்தைய புரிந்துணர்வின்படி நீங்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தீர்கள் நீங்களே முன்னெடுக்கலாம். இத்திட்டத்தினைப் பொறுத்தவரை விக்சனரித் தரப்பில் அவர்களுடன் இணைந்து (அவர்கள் அலுவலகத்தில்) செயல்பட கோரிக்கை வைத்ததை நான் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். விக்சனரித் தரப்பில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. உங்களுடன் தனி உரையாடலிலும் அழைப்பு விடுத்தேன் உங்களாலும் இணைய முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறேன். இரு மாதங்களாகத் தரவைப் பார்க்காததால் திட்டமிட முடியவில்லை. அதனால் தற்போது நமது பொறுப்பில் தரவு கிடைத்துள்ளது. விரைவாக ஏற்றும் பொருட்டேன் தரவினை அவர்கள் அளித்துள்ளனர். இனி, பொறுப்பேற்றுப் பதிவேற்றுவது நமது பணி. என்ன செய்யலாம் என்று பரிந்துரையுங்கள். நீங்கள் இத்திட்டத்தின் பங்களிப்பாளராக இணைய அழைக்கிறேன். சொற்குவைத் தரப்பில் நடக்கும் கலந்துரையாடலில் நீங்களும் பங்கெடுக்கலாம்.
 1. "//" என்று அத்தரவில் இருந்தால் அதை ஒரு "," என்றும், ":-" இருந்தால் "," மாற்றிவிடுகிறேன்.
 2. trumpet tree என்பதற்கு அவ்வாறே அகராதியில் உள்ளது. மேற்கோளும் அப்பக்கத்தில் முகவரியுடன் உள்ளது. மாற்றுக் கருத்தை அப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் முன்னெடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
 3. 5000 சொற்களில் எவை ஏற்கத்தக்கவை என்று பார்க்க இயலாததால் நீக்கப் பரிந்துரைத்தோம். நீக்கவேண்டாம் என்று முன்னரே குறிப்பிட்டிருக்கலாம். பரவாயில்லை. நீக்கிய சொற்களின் பட்டியல் கீழே உள்ளது நீங்கள் சுட்டிக் காட்டினால் அதை மீளமைத்துக் கொள்வோம்.
 4. கூட்டுச் சொற்களை அவ்வாறு ஒரே பக்கத்தில் இட்டுச் சரிபார்த்துவிட்டு முதன்மைப் பக்கமாக மாற்றலாம். நல்ல யோசனை அவ்வாறே செய்யலாம்.

ஆப்ஸ்விக்கி வழியில் ஏற்றுவதற்காக அனைத்துச் சொற்களும் இங்கே கூகிள் விரிதாளில் இட்டுள்ளேன். அவையும் நமக்குப் பயன்படலாம். -Neechalkaran (பேச்சு) 09:18, 23 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

இரவியின் கருத்து[தொகு]

//விக்சனரி என்பது ஒரு அகரமுதலித் திட்டம். அது ஒவ்வொரு சொல்லுக்கும் தெளிவான பொருளைத் தர வேண்டும். விக்சனரி ஒரு thesaurus அல்ல. விக்சனரி என்பது பல வகையான சொற் திரட்டுகளைக் குவித்து வைக்கும் இடமும் அன்று. சொல்லுக்குப் பொருள் தராமல் வெறும் இணையான சொற்களை மட்டும் திரட்டி வைப்பது சரியான அணுகுமுறை தானா என்பதைச் சமூகம் ஆய்வு செய்திட வேண்டும். இதை விக்சனரியில் சேர்ப்பதை விட வேறு வடிவத்தில் விக்கிமூலம் (pdf வடிவில்) அல்லது விக்கித்தரவில் சேர்க்க வழியுண்டா என்பைதப் பற்றியும் சமூகம் ஆலோசிக்க வேண்டுகிறேன். ஏன் எனில், மாதிரிக்காக பதிவேற்றப்பட்டுள்ள சொற்களின் உள்ளடக்கம் எனக்கு நிறைவுடையதாக இல்லை. எடுத்துக்காட்டுக்கு, agni, racecourse, hillside போன்ற பக்கங்களைப் பார்க்கவும். இவற்றுள் மூன்று பிரச்சினைகள்: 1. பல பக்கங்கள் தவறான / நிறைவுறாத பொருளைத் தருகின்றன. 2. பல பக்கங்களில் சரியான பொருள் / ஈடான சொல் முதல் தேர்வாகத் தரப்படவில்லை. 3. பல பக்கங்களில் வழக்கொழிந்து போன, எந்த மொழி என்றே புரிந்து கொள்ள முடியாத சொற்கள் உள்ளன. சொற்குவை திட்டத்தின் நோக்கமும் ஒரு அகரமுதலியின் நோக்கமும் வெவ்வேறாக இருக்கலாம். இலட்சக்கணக்கான பக்கங்கள் இவ்வாறு தானியங்கி மூலம் ஏற்றப்படுவதால், பக்க எண்ணிக்கை கூடுவது தவிர வேறு பயன் உண்டா, துப்புரவுப் பணிகள் மிகுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். // தானியங்கி அணுக்கப் பக்கத்தில் இரவியின் கருத்து.

எனது பதில்: சொற்களை பிடிஎப் வடிவில் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கமல்ல. விக்கித்தரவு லெக்சிம்மில் தனித் தனி சொற்களாக உருவாக்கினாலும் பொருளைத் தான் இணைக்க முடியும், இரு மொழி இணைசொல்லுக்கான பண்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. விக்சனரி என்பது சொற்களஞ்சியமல்ல(thesaurus) என்ற கருத்து புதியதாக உள்ளது. முந்தைய உரையாடல்களிலும் thesaurus ஆக விக்சனரியைப் பற்றிப் பேசியுள்ளோம். பல சொற்கள் அவ்வாறு இருந்து பயனர்களால் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அவர்கள் வழங்கிய 4.4 லட்சத்தில் சுமார் 59,500 சொற்கள் ஏற்கனவே தமிழ் விக்சனரியில் உள்ளதால் சொல் சேர்ப்பு மட்டும் தேவை. சுமார் 17000 சொற்கள்(3.8% சொற்கள்) ஆங்கிலவிக்கியில் பக்கமாகவுள்ளன. ஆங்கிலக் கூட்டுச் சொல்லல்லாமலும் ஒன்றிற்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கொண்டவை சுமார் 39,100. மொத்தம் 56,000 புதுப் பக்கங்களும் 59000 திருத்தங்கள் மட்டும் முதல்கட்டமாகத் தானியங்கியில் செய்யவுள்ளோம். மற்றவற்றைப் பயனர்கள் சரிபார்ப்பிற்குப் பட்டியலிடவுள்ளோம். நீங்கள் குறிப்பிட்ட பக்கம் நிறைவான பொருளைத் தரவில்லை என்பதை ஏற்கிறேன். அத்தகைய சொற்கள் மிக குறைவு எனக்கணிக்கிறேன். அத்தகைய சொற்களை அவர்கள் வெளியிட்ட பட்டியலில் சுட்டிக் காட்டலாம் அல்லது ஏற்றிய பிறகும் நீக்கலாம். இருந்தபோதும் வெறும் சொற்களஞ்சியமாக இருக்க வேண்டாம் என்றால் அதற்கான தீர்வையும் பரிந்துரையுங்கள். அவர்களாகப் பதிவேற்றும் போதும் கணக்கினைத் தடை செய்தோம். விக்சனரி தரப்பில் அவர்கள் அலுவலகத்தில் இணைந்து வழிகாட்டி, செயல்பட நாம் யாரும் முன்வரவில்லை. முதல்முறையாகக் கொடுத்த தரவுகளில் ஏற்கத் தக்கவை எவை ஏற்கவியலாதவை எவை என்றாவது ஒரு பட்டியலைவைத்து முன்நகர வேண்டும். அல்லது இத்திட்டத்தை ஏற்க இயலாதென்றாவது விக்சனரி குழுவில் முடிவெடிக்க வேண்டும். நீங்களும் இத்திட்டத்தில் இணைந்து சொற்குவைத் தரப்பினருடனான உரையாடலில் கலந்து கொள்ள அழைக்கிறேன்.-Neechalkaran (பேச்சு) 06:28, 27 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
இயன்றவரை அந்தத் தொகுதியில் நமக்கு ஏற்புள்ளவற்றையாவது பதிவேற்றினால் நல்லது. அரசு என்பதற்காகக் கூறவில்லை, ஆனால் நமது திட்டங்களுக்குப் பேருதவியாக இருந்த நன்னோக்குடைய அரசு அலுவலர் முன்னெடுப்பில் அமைந்த திட்டமென்பதால் இதை அக்கறையுடன் நகர்த்த வேண்டுமென நினைக்கிறேன். முதலில் பதிவேற்றுவதாக இருந்த குழுவில் விக்கி முறைமை நுட்பம் குறித்துப் புரிதலை எட்டுவதில் சிரமம் இருந்தது. அதனாலேயே பல சிக்கல்களையும் தாண்டி, நேரடியாக நம்மிடமே சொற்குவையை அளித்துப் பதிவேற்றும்படி கோரியிருக்கிறார்கள். இதுவரை அவர்களிடம் அதை நமது தேவையாக வலியுறுத்திவிட்டு இப்போது அவர்கள் அதையும் தந்தபின் திட்டத்தை நிறுத்தினால் நன்றாக இருக்காது. சிக்கல் இருக்கக்கூடிய சொற்களை முதன்மை பெயர்வெளியிலில்லாத வேறு பெயர்வெளியில் இட்டு பின் மெய்ப்புப் பார்த்து நகர்த்தலாமா? அல்லது விக்கிமூலத்திலும் தானியங்கி விக்கிப்பீடியா கட்டுரைகளிலும் உள்ளதுபோல வார்ப்புருச் செய்தி ஒன்றைச் சேர்த்துப் பதிவேற்றலாம். பின்னர் மெய்ப்புப் பார்ப்போம். -- Sundar (பேச்சு) 02:53, 1 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
இரவி கேட்டதற்கிணங்க விவாதித்ததில் மாற்றுக் கருத்தில்லை என நினைக்கிறேன். மேலும் தானியங்கி அனுமதி கோரிக்கைக்கு இரு அதிகாரிகளும் உடனே பதிலளிக்க இயலவில்லை எனப் புரிந்துகொள்கிறேன். மேலும் தாமதிக்காமல் நெடுநாள் உரையாடல் என்ற வகையிலும் நன்னோக்கிலும் ஆங்கில விக்சனரியில் உள்ள தலைச் சொற்களைப் படிப்படியாக(அணுக்கம் கிடைக்கும் வரை) ஏற்றலாம் என நினைக்கிறேன். -Neechalkaran (பேச்சு) 18:25, 3 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
மன்னிக்கவும், Sundar. இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசோ அலுவலர்களோ மனம் வருந்துவார்கள் என்பதற்காக விக்சனரியைக் குப்பைக் கிடங்காக மாற்ற இயலாது. விரிவான கருத்துகளைக் கீழே தனிப் பகுதியில் இட்டுள்ளேன். இத்திட்டத்தைத் தொடங்கியவர்கள், ஒருங்கிணைத்தவர்கள் விக்சனரியின் தன்மையைப் புரிந்து கொண்டு இத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். விக்சனரி போல் தனியாக ஒரு வலைத்தளம் தொடங்கி, அங்கு விக்கி மென்பொருள் நிறுவி அரசுக்குத் தேவையானவாறு செய்து கொடுக்கலாம். விக்சனரியில் தானியங்கி கொண்டு இலட்சக்கணக்கான பக்கங்களைப் பதிவேற்றினால், 100 ஆண்டுகள் ஆனாலும் துப்புரவு செய்ய முடியாது. --இரவி (பேச்சு) 17:23, 12 மார்ச் 2022 (UTC)17:20, 12 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
@Neechalkaran:, //விக்சனரி என்பது சொற்களஞ்சியமல்ல(thesaurus) என்ற கருத்து புதியதாக உள்ளது. // என்ற உங்கள் கருத்து எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஏன் என்றால், விக்சனரி சின்னத்திலேயே இது அகரமுதலி என்று தெளிவாக எழுதி வைத்திருக்கிறோம். அகரமுதலி வேறு thesaurus வேறு. ஆங்கில விக்கிப்பீடியாவில் கூட ஒரு துணைத்திட்டமாக மட்டுமே thesaurus செயற்படுகிறது. பார்க்க - https://en.wiktionary.org/wiki/Wiktionary:Thesaurus . அப்படியே thesaurus ஆகச் செயற்பட்டாலும், ஈடான தமிழ்ச் சொற்களைத் தான் சேர்க்க வேண்டும். ஆனால், சொற்குவை திட்டத்தில் தரப்படுவதோ எந்த மொழி என்றே புரியாத, காலவதியான சொற்கள். இவற்றை விக்சனரியில் சேர்த்து வைப்பதற்கான தேவையும் பொருத்தப்பாடும் என்ன? சொற்குவை திட்டம் மூலம் பதிவேற்றப்பட்டுள்ள agni பக்கம் பாருங்கள். முதலாவதாக தரப்பட்டுள்ள பொருள் - மைவாகனன். இது என்ன என்று எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. விக்சனரியை நாடி வருகிற மாணவர்களுக்கு எப்படிப் புரியும்? இதுவே agni என்பதற்கு உள்ள ஆங்கில விக்சனரிப் பக்கம் பாருங்கள். https://en.wiktionary.org/wiki/agni - அதே சொல்லுக்கு ஒவ்வொரு மொழியிலும் என்ன பொருள், அது பெயர்ச்சொல்லா, அதன் சொற்பிறப்பியல் என்னவென்று விளக்கியிருக்கிறார்கள். ஆங்கிலம் தெரிந்த அனைவருக்கும் அதைப் படித்தால் புரியும். இப்படித் தான் நாம் தமிழ் விக்சனரியை வளர்க்க வேண்டுமே ஒழிய, dumping ground போல் விக்சனரியைப் பயன்படுத்தக் கூடாது. ஆகவே, ஆங்கில விக்கியில் ஒரு சொல் இருந்தால் அதை இங்கு பதிவேற்றலாம் என்று கருதக்கூடாது. அந்தச் சொல்லுக்கு இங்கு எப்படி விளக்கம் தருகிறோம் என்பது தான் பிரச்சினை. அந்தச் சொல் பிரச்சினை அன்று. நீங்கள் அக்னி என்ற பக்கத்தில் தபனன், அரன், தகனன் என்ற பல பொருள்களைத் தந்துள்ளீர்கள். இந்தச் சொற்களைத் தனித்தனிப் பக்கங்களாப் பதிவேற்றி அவற்றுக்கு என்ன பொருள் என்று அழகு தமிழில் விளக்கலாம். அது விக்சனரி திட்டத்தின் வரையறைக்குள் வரும். ஆனால், இவை எல்லாவற்றையும் அக்னி பக்கத்தில் குவித்து வைப்பது விக்சனரி திட்டத்தின்வரையறையில் வராது.
//அத்தகைய சொற்கள் மிக குறைவு எனக்கணிக்கிறேன்.// என்று கூறியுள்ளீர்கள். இதுவும் தவறு. நான் சோதிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் பிழைகள், குப்பைகள் மண்டியுள்ளன. மேற்கொண்டு சோதிக்கப் பொறுமையிழந்து தான் இங்கு கருத்திடுகிறேன். தானியங்கித் திட்டங்களில் 0% பிழை இருக்க வேண்டும். 1% பிழை என்றால் கூட 10,000 பக்கங்களைப் பதிவேற்றும் போது 100 பக்கங்கள் பிழை என்று ஆகி விடும். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய விகிதமும் அன்று. இவற்றை மனித முறையில் துப்புரவு செய்வது சாத்தியமும் அன்று என்பது தான் இத்தனை ஆண்டு கால விக்கி வரலாறு உணர்த்துகிறது. இத்திட்டத்தைத் தமிழ் விக்சனரியில் ஏற்றியே ஆக வேண்டும் என்றால் யாராவது பொறுப்பேற்றுக் கொண்டு, ஒவ்வொரு பக்கமாக மனித முறையில் பதிவேற்றி துப்புரவு செய்யுங்கள். இல்லாவிட்டால், இத்திட்டத்தைக்கை விடுவதாக அறிவிப்பது நல்லது. கடந்த இரு வாரங்களில் நீங்கள் பதிவேற்றியுள்ள ஆயிரக்கணக்கான சொற்களைத் தானியங்கி முறையில் நீக்குவதும் உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 17:20, 12 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

மார்ச் 4 வரையிலான நிலை[தொகு]

கிடைத்துள்ள 4.4 லட்சம் சொற்களையும் ஆங்கில விக்சனரியுடனும் தமிழ் விக்சனரியுடனும் ஒப்பிட்ட விளைவின் அடிப்படையில் கீழ்க்கண்ட புள்ளிவிவரம் கிடைக்கிறது. மேலே பகிர்ந்துள்ள கூகிள் டிரைவ் கோப்புகளைக் காணலாம்.

வகை சுமாரான எண்ணிக்கை பரிந்துரை
ஆங்கில விக்சனரியில் உள்ள ஆங்கிலச் சொற்கள் 0.25 லட்சம் 0.1 லட்சம் ஏற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே தமிழ் விக்சனரியில் உள்ள சொற்கள் 1.59 லட்சம் சொற்குவை வழங்கிய பொருள் இல்லாவிட்டால் கூடுதல் வரியில் சேர்க்கப்படும்
ஆங்கிலம் அல்லாத பிற மொழிச் சொற்கள்/பிழையான சொற்கள் 0.1 லட்சம் தவிர்க்கலாம்
மேற்கண்டவற்றில் இல்லாத கூட்டுச் சொற்கள் 2.5 லட்சம் பொருளை preload முறையில் தனிப்பக்கத்தில் ஆயிரம் ஆயிரமாக உருவாக்கலாம். மற்ற பயனர்கள் சரியெனப் பட்டதை பக்கமாக்கலாம்.

சுமார் 10,000 சொற்கள் ஏற்றப்பட்டுள்ளன. ஆங்கில விக்சனரியில் உள்ள வடிவத்தை அப்படியே பயன்படுத்தியுள்ளோம். ஏதேனும் பரிந்துரைகள் இருந்தால் முன்வைக்கலாம். -Neechalkaran (பேச்சு) 23:00, 4 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

இத்தொகுதியிலிருந்த ஆங்கில விக்சனரியில் உள்ள ஆங்கிலச் சொற்கள் என்ற அடிப்படையில் அடுத்த பத்தாயிரத்தை ஏற்றியுள்ளேன். மிகவும் அரிதாகவே பிழையான சொற்கள் உள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஆங்கில விக்சனரியின் முக்கிய அகராதியான பிரீ டிக்சனரி தளத்தில் உள்ள தலைச் சொற்கள் சுமார் 20,000 இருக்கின்றன. அவையும் சரியான கலைச்சொல்லாக்கமாக உள்ளன. அவற்றையும் ஏற்றலாம் எனப் பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே தமிழ் விக்சனரியில் உள்ள சொற்களான சுமார் 1.6 லட்சத்தில் இல்லாத பொருளை மட்டும் கூடுதலாகச் சேர்க்கலாம். பொருள் ஏற்கனவே இருந்தால் அவற்றைத் தவிர்க்கிறேன். பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் என்று பிரித்து விளக்கமிருந்தால் அப்பக்கங்களையும் தவிர்க்கிறேன். உதா:march <> தரவு ஏனெனில் இற்றை செய்யப்படும் சொற்களில் அத்தகைய வகைப்பாட்டுத் தரவுகளில்லை. அவ்வகையில் சில சொற்களைச் சோதனைக்காக ஏற்றியுள்ளேன். மொத்தம் 45,000 புதுப் பக்கங்கள் + 70,000 புதுத் திருத்தங்கள் செய்யக்கூடும். 62,685 சொற்கள் ஏற்கனவே அதே பொருளில் விக்சனரியில் உள்ளன. மீதிச் சொற்களை ஆயிரமாயிரமாக தனிப்பக்கத்தில் கொடுக்கலாம். இதில் மாற்றங்களையோ பரிந்துரைகளையோ அளித்து, அனுமதிக்க வேண்டுகிறேன். -Neechalkaran (பேச்சு) 21:46, 8 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
இந்தப் பரிந்துரை நன்றாகப் படுகிறது. பட்டியல் பக்கங்களாக இருந்தால் திருத்துவது எளிதாகும். திருத்தம் தேவைப்படாத பிற சொற்களை நீங்கள் குறிப்பிட்ட தொகுதிகளாகப் பதிவேற்றலாம். -- Sundar (பேச்சு) 11:53, 10 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
ஏற்றாத அனைத்துக் கூட்டுச்சொற்களையும் விக்சனரி:சொற்குவைச்_சொற்கள்_பதிவேற்றத்_திட்டம்/1 இதுபோல சுமார் 250 பக்கங்கள் உருவாக்கி விட்டால் அதிலிருந்து சரியானதைப் பிற பயனர்களும் எளிதில் உருவாக்கிக் கொள்ளலாம். எதிர்காலத்தில் சொற்குவை வழங்கும் சொற்களையும் இதே முறையிலும் உருவாக்கிக் கொள்ளலாம். -Neechalkaran (பேச்சு) 14:38, 10 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

தானியங்கிக் கணக்குக்குத் தடை[தொகு]

தானியங்கி அணுக்கம் பெறாமல் தானியங்கியை ஏவுவது பொறுப்பற்ற நடவடிக்கை என்பதால் தானியங்கிக் கணக்கை ஒரு வாரம் தடுத்து வைத்திருக்கிறேன். sugar cane பக்கம் பார்க்கவும். இந்தச் சொல்லுக்குப் பருவ யோனி என்ற பொருள் எந்த வகையில் பொருந்தும்? chest pain என்ற பக்கத்தில் அதிசாரசிலேட்டுமம், அக்கரன், அந்திரவாதம் என்று பொருள் தரப்பட்டுள்ளது. இது போல் பக்கத்திற்குப் பக்கம் குப்பைகள், பிழைகள் மலிந்துள்ளன. இலட்சக்கணக்கான பக்கங்களை இப்படித் தானியங்கி மூல்ம ஏற்றினால் இதை எல்லாம் யார் திருத்துவது? இதெல்லாம் என்ன மொழி என்றே புரியவில்லை. எந்த ஒரு மொழிச் சொல்லுக்கும் தமிழில் பொருள் விளக்குவது தான் விக்சனரி என்னும் அகரமுதலித் திட்டம். இது ஒரு Thesaurus திட்டம் அன்று. அப்படியே Theasurus போல் பயன்படுத்த விரும்பினால் அதனை ஒரு துணைத் திட்டமாக முன்மொழிந்து அதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். முக்கியமாக அங்கும் தமிழ் சொற்கள் தான் தரப்பட வேண்டும். தமிழில் காலாவதியாகப் போன வட மொழி, பிற மொழிச் சொற்களை எல்லாம் விக்சனரியில் குப்பை போல் குவிக்கவேண்டாம். நான் சோதித்துப் பார்த்த ஒவ்வொரு பக்கத்திலும் இது போல் ஏகப்பட்ட பிழைகள் உள்ளன. ஒரு தானியங்கித் திட்டம் 100% பிழையே இல்லாமல் செயற்பட வேண்டும். இப்படிப் பக்கத்துக்குப் பக்கம் குப்பைகளைச் சேர்க்க அனுமதிக்க முடியாது. இத்திட்டத்தில் சேர்ந்து செயற்படுகிற பிற நிறுவனங்களுக்குத் தரப்பட்ட வாக்குறுதிக்காக இப்படி அவசர அவசரமாகச் செயற்படுவது போல் தோன்றுகிறது. இது வருந்தத் தக்கது. பல்வேறு திட்டங்கள் பொதுக் கள உரிமத்தில் கிடைக்கலாம். அவை எல்லாவற்றையும் விக்கித்திட்டங்களில் தான் சேர்த்து வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. அவை தனி வலைத்தளங்களாகவே இயங்கலாம். இத்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் விக்சனரி என்னும் அகரமுதலியின் தன்மையைப் புரிந்து கொண்டு திட்டத்தை மீள் வரையறை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தனிப்பட்ட கருத்து: இந்தச் சொற்குவை திட்டம் விக்சனரியில் இடுவது கூடாது. நன்றி. --இரவி (பேச்சு) 17:20, 12 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் குறிப்பிட்டுள்ள சொற்கள் அனைத்தும் தமிழக அரசின் அகராதியில் உள்ள சொற்கள் என்பதால் என்ன பதிலளிப்பதென்று தெரியவில்லை. chest pain, பருவயோனி, மைவாகனன் கொடையளித்த அனைத்துச் சொற்களைக் குப்பை போல அப்படியே ஏற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அதில் சுமார் 8% மட்டுமே புதுப் பக்கங்களாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். சுமார் 30% ஏற்கனவே பக்கமாக உள்ளவை அவற்றில் கூடுதல் விளக்கமாகவே இணைக்கப்படும். அச்சு அகராதியில் உள்ள இச்சொற்களே வேண்டாம் என்றால் எவ்வகையில் மனித பிழைதிருத்தம் செய்ய வேண்டும் என்ற வரையறையை நீங்கள் சுட்டிக் காட்டலாம். எச்சொற்களை ஏற்றலாம் எவை ஏற்றக்கூடாது என்று யார் தீர்மானிப்பதென்ற குழப்பமிகும். தமிழ் விக்சனரியில் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ் விளக்கமாக இல்லாமல் இணையான தமிழ்ச் சொல் கொண்ட பக்கங்கள் பாதிக்கும் மேல் உள்ளன. மேலும் ஏற்றப்பட்டுள்ள சொற்கள் எல்லாம் அது போன்ற ஒரு முயற்சியாக நினைத்தேன். அதிக இணைச் சொற்களைப் பதிவேற்றினால் அதிலிருந்து வளர்த்தெடுக்க எளிதாக இருக்கும் என நினைத்தேன். மனித முறையில் தான் முதலில் அந்த நிறுவனத் தரப்பில் ஏற்றப்பட்டது. அதை விக்சனரித் தரப்பில் தான் தடை செய்தோம். தமிழக அரசு நிறுவனத்துடன் இணைந்து 2016 காலகட்டத்தில் செயல்பட்டது போலப் பதிவேற்ற விக்சனரித் தரப்பிலும் யாரும் முன்வரவில்லை. பின்னரே விவாதித்து கவனம் பெற்ற சொற்களைத் தேர்வு செய்து தானியங்கி முறையில் பதிவேற்றத் திட்டமிட்டோம். தொடக்கம் முதல் உரையாடலில் கலந்து ஆலோசனை வழங்கியிருக்கலாம். த.இ.க.வுடன் முன்னர் நீங்கள் ஒருங்கிணைத்து ஏற்றிய சொற்களைத் தான் முன்மாதிரியாகக் கொண்டு பல கோரிக்கைகளை முன்வைத்து, உரிமம், தரவு, மேற்கோள்களைப் பெற்று ஏற்ற முயன்றோம். துணைத் திட்டமாக நிகண்டை உருவாக்கலாம் என்ற பரிந்துரை இல்லாததால் இச்சொற்களை இவ்வகையில் ஏற்ற முனைந்தோம். இனி, துணைத் திட்டமாகவும் ஏற்றுவதற்கு முதலிலிருந்து விவாதித்தாலும் தானியங்கிக்கு அணுக்கம் கிடைக்காதென்றே நினைக்கிறேன். தமிழ் வளர்ச்சித் துறையின் அகராதி சார்ந்த அனைத்துச் சேகரிப்புகளையும் பொதுவுரிமத்தில் வெளியிட இந்த முன்னெடுப்பு உதவும் என்ற காரணத்தாலேயே பங்கெடுத்தேன். ஆனால் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் தனிப்பட்ட முறையில் நீங்கள் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளதால் மேலும் விவாதிப்பதில் முடிவு எட்டாது என நினைக்கிறேன். தமிழ் வளர்ச்சித் துறையின் தரவுகளை மாற்றுத் திட்டங்களிலும் விக்கிக்கு வெளியில் வேறு வகையிலும் கொண்டுவர முயல்வோம். நன்றி. -Neechalkaran (பேச்சு) 18:28, 12 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
ஒரு மாணவர் அல்லது பயனர் தமிழ் விக்சனரிக்கு ஏன் வருகிறார்கள்? தெரியாத சொல்லுக்குப் பொருள் அல்லது விளக்கம் காண வருகிறார்கள். Chest pain என்பதற்கு ஈடாக அந்திரவாதம், அக்கரன், அதிசாரசிலேட்டுமம் என்று பொருள் சொன்னால் தமிழ்நாட்டில் எத்தனைப் பேருக்குப் புரியும்? மாறாக, அந்திரவாதம் (இந்தப் பக்கம் குடல்வாதம் என்று பொருள் தருகிறது. ஆனால், இதனை Chest pain என்பதற்கு ஈடாகச் சேர்த்துள்ளீர்கள். எது சரி? இதை யார் சரி பார்ப்பது? சரி பார்க்காமல் ஏன் பதிவேற்ற வேண்டும்?), அக்கரன், அதிசாரசிலேட்டுமம் ஆகியவற்றை எல்லாம் தனிப்பக்கங்களாக உருவாக்கி அங்கு அவை எந்த மொழிச் சொல், பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா போன்ற குறிப்புகள், அதற்குத் தமிழில் நெஞ்சு வலி என்று பொருள் தந்து, ஆதாரமும் தந்தால், அதுவே விக்சனரித் திட்டத்தை வளர்க்கும் முறை. //சுமார் 30% ஏற்கனவே பக்கமாக உள்ளவை அவற்றில் கூடுதல் விளக்கமாகவே இணைக்கப்படும்.// இது தான் எனக்கு உண்மையிலேயே மிகப் பெரிய பிரச்சினையாகத் தோன்றுகிறது. ஏன் என்றால், ஏற்கனவே நல்ல தமிழில் உள்ள பக்கங்களில் எல்லாம் காலாவதியாகிப் போன வட மொழி, எந்த மொழி என்றே தெரியாத சொற்களைச் சேர்த்து குப்பையாக மாற்றுகிறது. இது தமிழ் விக்சனரியை சமசுகிருதமயமாக்கும் திட்டம் போல் தோன்றுகிறது. தனித்தமிழ் இயக்கம் கண்டு பிற மொழிச் சொற்களை நீக்க ஒரு நூற்றாண்டு உழைத்த பிறகு மீண்டும் அவற்றை ஏன் சேர்க்க வேண்டும்? கீழ்க்காணும் வேறுபாடுகளைப் பார்க்கவும்:
நீங்கள் thirst என்பதற்குச் சேர்த்துள்ள புதிய சொற்கள் சில
நீங்கள் sky என்பதற்குச் சேர்த்துள்ள புதிய சொற்கள் சில
ஏற்கனவே thirst என்றால் தாகம், வேட்கை என்று அழகாக பொருள் புரியும் வகையில் உள்ள பக்கத்தில் ஏன் மேற்கொண்டு அநுபர்தை, அசாத்தியகாசம் போன்ற என்ன மொழி என்றே தெரியாத சொற்களைச் சேர்க்க வேண்டும்? ஏற்கனவே sky என்ற சொல்லுக்கு காகனம், ஆகாயம் என்ற சொற்கள் பொருள் தரப்பட்டுள்ளன. அதோடு வானம் போன்ற சொற்களைச் சேர்த்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஏன் திகந்தராளம், திராபம் போன்ற சொற்களைச் சேர்க்க வேண்டும்? இன்று வெளியாகும் கிரியா தமிழ் அகரமுதலியோ வேறு ஏதோ ஒரு நவீன அகரமுதலியோ இப்படி எல்லாம் பொருள் தருகின்றனவா? ஆங்கிலத்தில் பல கிரேக்க, லத்தீன மூல சொற்கள் இருக்கலாம். ஆனால், ஆங்கில விக்சனரியில் ஆங்கிலத்தில் தானே விளக்கம் தருகிறார்கள்? பழங்கால ஆங்கிலச் சொற்களைக் குவித்து வைப்பது இல்லையே?
சந்தையில், அரசு திட்டங்களில் பல்வேறு வகை அகரமுதலிகள், சொற்களஞ்சியங்கள் இருக்கலாம். அவற்றுக்கான தேவை வேறு. விக்சனரியின் scope வேறு.
//எச்சொற்களை ஏற்றலாம் எவை ஏற்றக்கூடாது என்று யார் தீர்மானிப்பதென்ற குழப்பமிகும்.// விக்சனரி என்பது பன்மொழி அகரமுதலி. இங்கு எந்த மொழிச் சொல்லுக்கும் தனிப் பக்கம் உருவாக்கலாம். மைவாகனன் என்ற பக்கம் தொடங்கி அங்கு அதற்கு என்ன பொருள் என்று நல்ல தமிழில் விளக்கலாம். சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியில் குறிப்பிட்டுள்ள விளக்கத்தைத் தரலாம். ஆனால், அக்னி என்ற பக்கத்தில் வெறுமனே மைவாகனன் என்று குறிப்பிட்டு வைத்தால், அதற்கு என்ன பொருள் என்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி படித்துத் தான் புரிந்து கொள்ள முடியும். இங்கு வருகிறவர்களே பொருள் தெரிந்து கொள்ளத் தான் வருகிறார்கள். அவர்கள் இங்குள்ளதைப் புரிந்து கொள்ள இன்னொரு அகரமுதலிக்குப் போக வேண்டும் என்றால் அது இத்திட்டத்தின் தோல்வி. இது தான் நான் சுட்டும் பிரச்சினை. சொற் பொருள் விளக்கங்கள் யாவும் நல்ல, தூய, எளிய தமிழில் அமைய வேண்டும். நன்றி. --இரவி (பேச்சு) 19:19, 12 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
திட்டத்தின் விளக்கப் பக்கத்தில் "முடிக்க வேண்டிய இலக்குகள்" என்ற இடத்தில் இவற்றிற்கான பணியைக் குறிப்பிட்டுள்ளோம். பொருளற்ற அல்லது தவறான பொருளை அடையாளம் கண்டு நீக்கவும் திட்டமுள்ளது. தரவுகளே வெளிவராத நிலையில் எவை எல்லாம் பிழை என்ற முன்முடிவிற்கு எங்களால் வரமுடியவில்லை. தரவு வெளிவந்து பக்கமாக ஏறும் போதே வழுக்கள் தெரியும். அவற்றைப் பின்னர் திருத்துவதே இத்திட்டம் வளருவதற்கான முறை. அடுத்த தொகுதியில் கொடையளிக்கவுள்ள சொற்களில் இவற்றிற்கான பொருள் இருக்கலாம். பொருளில்லாத போது மேலே நீங்கள் குறிப்பிடும் சொற்களைச் சொல்வளப் பகுதிக்கு மாற்றலாம். ஆனால் அவை இனி விக்சனரிக்கே தேவையில்லை என்ற கருத்தில் முரண்படுகிறேன். விக்சனரி:சொற்குவைச்_சொற்கள்_பதிவேற்றத்_திட்டம்/1 இதுபோல சுமார் 60% சொற்களை மனித சரிபார்ப்புடன் தான் ஏற்கத்தக்கவற்றை ஏற்கவுள்ளோம். பகுப்பு:தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள் என்ற பகுப்பின் நோக்கத்தை அருள்கூர்ந்து கவனியுங்கள். வளரும் திட்டமானது விளக்கமில்லாமல் உருவாக்கப்பட்டாலும், பின்னர் விரிவாகும் என்ற பொதுவழக்கைச் சுட்டிக் காட்டவிரும்புகிறேன். யார் சரி பார்ப்பது என்ற உங்கள் கேள்வியுடன், சரிபார்த்துத் தான் பதிவேற்ற வேண்டும் என்ற உங்கள் கருத்தையும் புரிந்துகொள்கிறேன். இதர ஒருங்கிணைப்பாளர்களும் ஏற்கும் பட்சத்தில் திட்டத்தைக் கைவிடலாம். -Neechalkaran (பேச்சு) 20:01, 12 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
விக்கித்திட்டங்களே எளிமையாகவும் பிழைகளுடனும் தொடங்கி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறுவதே. ஆனால், அதற்கு அவை மனித முறையில் உருவாக்கப்பட்டாலே, அந்த வேகத்திற்குப் பிறகு வரும் மனிதர்களால் ஈடு கொடுத்துத் திருத்த முடியும். இலட்சக்கணக்கான பக்கங்களைத் தானியங்கியால் உருவாக்கிவிட்டு, பிறகு வரும் யாரோ சிலர் அதைத் துப்புரவு செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த 17 ஆண்டு கால அனுபவத்தில் அப்படி எந்தத் திட்டமும் துப்புரவானதாகத் தெரியவில்லை. சரி செய்யவே முடியாத பிழைகளுடன் விக்கிப்பீடியாவில் பல திட்டங்கள் தேங்கியுள்ளன. வருங்காலத்தில் "இருக்கலாம்", "மாற்றலாம்" என்ற ஊகத்தின் அடிப்படையில் இப்போது பிழைகளைத் தெரிந்தே உருவாக்க முடியாது. பதிவேற்றுகிற வரை வழுக்கள் தெரியாது என்றால், அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரு வார காலத்தில் 10,000 வழுவுள்ள பக்கங்களைப் பதிவேற்றி உள்ளீர்கள். இதில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்த எத்தனை மாதங்கள் ஆகும், எத்தனைத் தன்னார்வலர்கள் அதற்கு உறுதி அளிக்கிறார்கள் என்று தங்களால் கூற முடியுமா? தெரியாத தரவை விக்கிமீடியா திட்டத்திற்கு வெளியே இன்னொரு விக்கியில் ஏற்றி சரி பார்த்து, பிழைகளைத் திருத்தி நல்ல பக்கங்கள் மட்டும் இங்கு ஏற்றலாம். எனவே, "தானியக்கமாகப் பதிவேற்றப்படும் எதுவும் 100% சரியான தரவாக இருக்க வேண்டும்" என்பது அடிப்படையான எதிர்பார்ப்பு. ஆகவே, திட்டத்ததைத் தொடரலாமா வேண்டாமா என்பதைத் தாண்டி, தானியக்கமாக இவ்வாறு பிழைகளுடன் பதிவேற்ற அனுமதிக்க முடியாது. --இரவி (பேச்சு) 21:56, 12 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
தானியங்கியாக ஒரு தரவைப் பதிவேற்றும் போது, தகவல் சரிபார்ப்பு தரவுத் தள அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். அல்லது, விக்கிமீடியா திட்டத்திற்கு வெளியே நடைபெற வேண்டும். விக்சனரியில் பதிவேற்றி விட்டு சரி பார்ப்போம் என்பது சரியான அணுகுமுறை அன்று. எப்படி ஒரு பயனரைத் தெரிந்தே பிழையுடன் எழுத அனுமதிக்க மாட்டோமோ, எப்படி அவரை மணல் தொட்டியில் பயிற்சி பெறச் சொல்வோமோ அது போன்றது தான் தானியக்கமாகச் சொற்களைப் பதிவேற்றுவது குறித்த என்னுடை அணுகுமுறையும் அமைகிறது. ஒரு பயனர் ஒரு பக்கத்தில் பிழை செய்தால், நாம் அதைச் சுட்டிக் காட்டி அவர் அதனைத் திருத்திக் கொண்டு அடுத்த பக்கத்தை இன்னும் சிறப்பாக உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். தானியங்கி முறையில் இந்தக் கற்றலுக்கு இடம் இல்லை. என்ன சிக்கல் என்று புரிவதற்கு முன்பே ஆயிரக்கணக்கில் பக்கங்கள் உருவாகி விடும். இது ஏற்றுக் கொள்ளக்கூடியது அன்று. இச்சொற்கள் விக்சனரிக்குத் தேவையா என்பது குறித்து. மைவாகனன் என்று பக்கம் உருவாக்கி அங்கு இப்போது விளக்கியுள்ளது போல் விளக்கலாம். இதற்கு ஒரு தடையும் இல்லை. ஆனால், agni என்கிற பக்கத்தில் தானியக்கமாக முதல் சொல்லாக மைவாகனன் என்று பொருள் தருவது தவறு. ஆகவே, சொல் தேவையா இல்லை என்பதில் நாம் முரண்படவில்லை. ஒரு சொல்லுக்கு எப்படிப் பொருள் தருவது என்பதில் தான் முரண்படுகிறோம். நாம் தரும் பொருள் விளக்கம் பயனருக்குப் புரியவேண்டும். புரியாத சொற்களைத் தொகுத்து வைக்கும் நோக்கத்தோடு ஒரு பக்கத்தை உருவாக்கிடக் கூடாது. நன்றி. --இரவி (பேச்சு) 22:12, 12 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
வெகுசில இடங்களில் பொருத்தமான தமிழ் விளக்கமில்லை என்பதையும், வழக்கில் இல்லாத சொற்கள் இதிலுள்ளன என்பதையும் ஏற்கிறேன். அவற்றிற்கான அளவீடு என்ன என்பதை இன்னும் நீங்கள் குறிப்பிடவில்லை. பொதுப் பர்வையைத் தான் முன்வைக்கிறீர்கள். இருந்த போதும் அவற்றைச் சரி செய்யத் தான் நான்கு மாதங்களாகத் திட்டமிடுகிறோம். 4.4 லட்சம் சொற்களில் நான்கைந்து அகராதிகளின் மூலம் உள்ளன. மூலத்தின் அடிப்படையில் தேர்வினைச் செய்யலாம். அல்லது 60% சொற்களுக்குச் செய்வது போல அனைத்துச் சொற்களுக்கும் preload முறையில் சரிபார்த்துப் பதிவேற்றலாம். அல்லது தானியங்கி வழி முதல்கட்ட தெரிவாகப் பதிவேறியவற்றைச் சுற்றுக்காவல் செய்யும் நெறிமுறைகளைப் பரிந்துரைக்கலாம். அல்லது பதிவேறும் இணைச்சொல்லுக்கு உள்ளிணைப்புச் சோதனை செய்து அதன்படி அனுமதிக்கப் பரிந்துரைக்கலாம்.(முதலில் நீங்கள் குறிப்பிட்டது போல உங்களுக்குப் புரியவில்லை என்பதால் மைவாகனன் தேவையில்லை என்று சொல்லக்கூடாதல்லவா) அல்லது வழக்கில் இல்லாத சொற்கள், புதுக் கலைச்சொற்கள் போன்றவை தவிர்க்கப் பரிந்துரைக்கலாம். அல்லது துணைத் திட்டத்திற்கான பரிந்துரையை முன்வைக்கலாம். அல்லது ஒரு இணைச் சொல் தொகுதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒன்றிற்கும் மேற்பட்டவற்றைத் தவிர்க்கப் பரிந்துரைக்கலாம். அல்லது வெளியிட்ட தரவுகளைச் சரிபார்த்து உதவலாம். அல்லது வேண்டிய வடிவினை விளக்கிச் சொற்குவைத் தரப்பினர் வழங்கச் செய்யலாம். அல்லது விக்கிக்கு வெளியில் சரிபார்த்துவிட்டுப் பதிவேற்றப் பரிந்துரைக்கலாம் அல்லது மொத்தமாகக் கைவிடவும் முன்னரே பரிந்துரைத்திருக்கலாம் இவ்வாறு பல வகையில் உரையாடலைக் கொண்டு செல்லாமல் திட்டத்தைக் கைவிடப் பரிந்துரைப்பது எதிர்கால மேம்பாட்டிற்கும் உதவாமல் போகலாம். மேலே முன்வைத்த பல்வேறு பரிந்துரைகளைச் செயல்படுத்தியுள்ளோம். இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் தொடக்கமுதலே பரிந்துரைகளை முன் வைத்திருந்தால் அதற்கேற்ப முடிவெடித்திருக்கலாம் அல்லது இத்திட்டத்தைக் கைவிட்டிருக்கலாம். இன்று ஏதோ பத்தாயிரம் சொற்களைப் பிழையாக ஏற்றிவிட்டோம் என்று குறிப்பிடுவதும் தனிப்பட்டமுறையில் வேண்டாம் என்ற கருத்தினைத் தெரிவிப்பதும் முந்தைய திட்டங்களை ஒருங்கிணைத்தவர்களிடமிருந்து வருகிறதென்ற அடிப்படையில் வருத்தமாக உள்ளது. இருந்தபோதும் நீங்கள் குறிப்பிடும் குப்பையான 10,000 சொற்கள் எவையெவை என்று அறியத் தந்தால் மற்றவர்களும் இத்திட்டத்தைக் கைவிட உதவியாக இருக்கும். -Neechalkaran (பேச்சு) 09:56, 13 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

//வெகுசில இடங்களில் பொருத்தமான தமிழ் விளக்கமில்லை என்பதையும், வழக்கில் இல்லாத சொற்கள் இதிலுள்ளன என்பதையும் ஏற்கிறேன்.//

வெகுசில இடங்களில் அல்ல. கணிசமான இடங்களில். துல்லியமாகச் சொல்வது என்றால் ஏற்கனவே இருக்கிற பக்கங்களில் 30% திட்டப் பரப்பு அமையும் என்று நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஏற்கனவே உள்ள பக்கங்களில் புதிதாகச் சொற்களைச் சேர்க்கும் போது எல்லாம் அது பிழையாகவோ / குப்பையாகவோ தான் அமைகிறது. இது போக, புதிதாக உருவாக்கும் பக்கங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. ஒரு தானியங்கித் திட்டத்தில் குறைந்தது 30% பிழை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

//அவற்றிற்கான அளவீடு என்ன என்பதை இன்னும் நீங்கள் குறிப்பிடவில்லை. //

ஏற்கனவே பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்க முனைந்தேன். இன்னும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றால், எந்த ஒரு மொழிச் சொல்லுக்கான விளக்கமும் சொற்பொருளும் இயன்றவரை நல்ல, தூய, எளிய தமிழில் அமைய வேண்டும். இன்று பேச்சு வழக்கில் கம்ப்யூட்டர் என்றால் கணினி என்று எல்லோருக்கும் புரியும். அதற்காக கணினி பக்கத்தில் கம்ப்யூட்டர் என்று விளக்கம் தர மாட்டோம். அது போலவே, எந்த ஒரு பக்கத்திலும் பிற மொழிச் சொற்கள், காலாவதியான சொற்களைச் சொற்குவை என்ற பெயரில் குவித்து வைப்பது குப்பை என்றே பார்க்கப்படும். கம்ப்யூட்டர் என்ற சொல்லாவது எல்லோருக்கும் புரியும். அந்திரவாதம், அக்கரன், அதிசாரசிலேட்டுமம் போன்ற சொற்கள் எல்லாம் யாருக்குப் புரியும்? இவை எல்லாம் என்ன மொழிச் சொற்கள்? இவை எனக்குப் புரிகிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. நீங்கள் reference எடுத்துத் தரும் பழைய அகராதிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தாலன்றி தமிழ்நாட்டில் உள்ள 99.99% பேருக்கு பொருள் புரியாது என்று அடித்துச் சொல்ல முடியும். வெகு மக்கள் ஊடகங்களில் எப்படி தமிழ் நடை அமைந்தாலும், விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நடை உள்ளது அல்லவா? அது போல் பொதுவாக அகரமுதலிக்கு என்று ஒரு நடையும், விக்சனரிக்கு என்று இயன்றவரை நல்ல, தூய, எளிய தமிழில் விளக்கம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.

பருவயோனி போன்ற சொற்கள் எல்லாம் அச்சில் வெளிவந்துள்ள தமிழ் - ஆங்கிலம் அகராதியில் உள்ளன. ஆகவே, அவை தமிழ் தான் என்கிறீர்கள். அந்த அகரமுதலியில் கூட பருவயோனி என்ற entryக்கு sugar cane என்று பொருள் தந்துள்ளார்களே ஒழிய கரும்பு என்ற சொல்லுக்கு பருவயோனி என்று பொருள் தரவில்லை. அது போலவே, எந்த ஒரு ஆங்கிலம் - தமிழ் அகரமுதலியிலும் sugar cane என்பதற்குப் பருவ யோனி என்று பொருள் தர மாடாடர்கள். நீங்கள் தமிழ் விக்சனரியில் பருவயோனி என்று பக்கம் தொடங்கி, அது என்ன மொழி, பொருள் என்ன என்று தமிழில் விளக்குங்கள். அது ஏற்புடையது. sugar cane, கரும்பு பக்கங்களில் பருவயோனி என்ற பொருளைச் சேர்க்காதீர்கள். இது தான் நான் முன்வைக்கும் அளவீடு. அச்சில் பல்வேறு வகை அகரமுதலிகள் உள்ளன. அவற்றுக்கான தேவை வேறு. விக்சனரியின் நோக்கமும் பரப்பும் வேறு.

எது தமிழ், எது தமிழ் இல்லை என்பது அடுத்த உரையாடல். இன்றும் பேச்சு வழக்கிலும் உரை வழக்கிலும் பல தமிழல்லா வட மொழிச் சொற்கள் புழங்குகின்றன. வாக்கியம், வார்த்தை போன்று எல்லோருக்கும் புரியக் கூடிய சொற்களாக இருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், அந்திரவாதம், அக்கரன், அதிசாரசிலேட்டுமம் போன்ற சொற்கள் பிற மொழிச் சொல் என்பதை விட புரியாத சொற்கள் என்பது தான் முதல் பிரச்சினை. ஆகவே, இத்தகைய சொற்களைப் பொருள் விளக்கமாகப் பதிவேற்றுவதைத் தவிருங்கள். அந்திரவாதம், அக்கரன், அதிசாரசிலேட்டுமம் ஆகிய சொற்களுக்குத் தனிப்பக்கங்கள் தொடங்கி அங்கு அவற்றுக்கான பொருளை அழகு தமிழில் விளக்குங்கள். அது ஏற்புடையது. இந்தக் கருத்துகளை எல்லாம் "நீங்கள்" என்று குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றாலும் அது நீச்சல்காரன் என்ற தனிமனிதரை முன்வைத்து அல்ல. எந்த ஒரு தனிமனிதராலும் இத்தனைப் பக்கங்களைச் சரி பார்க்க முடியாது. ஆனால், இத்திட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் இக்கருத்துகளைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

//அல்லது தானியங்கி வழி முதல்கட்ட தெரிவாகப் பதிவேறியவற்றைச் சுற்றுக்காவல் செய்யும் நெறிமுறைகளைப் பரிந்துரைக்கலாம்.//

இது வரை நீங்கள் பதிவேற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களைத் துப்புரவு செய்வது குறித்து இணக்க முடிவாக நெறிமுறைகளை உருவாக்கி, துப்புரவு செய்து, அதற்குத் தேவைப்படும் உழைப்பு, காலம் ஆகியவற்றை அளவிட்டு அடுத்த கட்டப் பணிகளைச் செய்யலாம்.

//அல்லது பதிவேறும் இணைச்சொல்லுக்கு உள்ளிணைப்புச் சோதனை செய்து அதன்படி அனுமதிக்கப் பரிந்துரைக்கலாம்.(முதலில் நீங்கள் குறிப்பிட்டது போல உங்களுக்குப் புரியவில்லை என்பதால் மைவாகனன் தேவையில்லை என்று சொல்லக்கூடாதல்லவா)//

மீண்டும் சொல்கிறேன். இது எனக்குப் புரியவில்லை என்பது பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் 99.99% பேருக்குப் புரியாது. அகரமுதலி, theasarus உருவாக்கத்திற்கு என்று மரபார்ந்த முறைகள் உள்ளன. அவற்றைத் தான் பின்பற்றச் சொல்கிறேன். அனைவருக்கும் தெரிந்த, எளிய சொற்களைக் கொண்டே விளக்கம் அமைய வேண்டும். தேவையில்லாத சொற்களைச் சேர்த்து விட்டு, அவற்றுக்கு உள்ளிணைப்பு தருவது தேவையில்லாத வேலையை இரண்டு மடங்காகச் செய்வதாகும்.

//முந்தைய திட்டங்களை ஒருங்கிணைத்தவர்களிடமிருந்து வருகிறதென்ற அடிப்படையில் வருத்தமாக உள்ளது//

ஏற்கனவே பல தானியங்கித் திட்டங்களை ஒருங்கிணைத்தவன், பல துப்புரவுத் திட்டங்களின் நிலையைக் கண்டவன் என்ற முறையில் தான் என் கருத்து அமைகிறது. வரும் முன் காப்பது நல்லது. திட்டம் குறித்த உரையாடல்களில் இரு மாதம் தாமதமாகக் கலந்து கொள்வதற்கும் திட்டம் வெகுவாக முன்னேறிய நிலையில் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் அதனால் அரசு மற்றும் இதர நிறுவனங்களுடனும் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்படும் தர்மசங்கடத்திற்கும் வருந்துகிறேன். ஆனால், இவை எல்லாவற்றையும் விட விக்சனரி திட்டத்தின் நன்மை முக்கியம் வாய்ந்தது. அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது.

//அல்லது ஒரு இணைச் சொல் தொகுதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒன்றிற்கும் மேற்பட்டவற்றைத் தவிர்க்கப் பரிந்துரைக்கலாம். அல்லது வெளியிட்ட தரவுகளைச் சரிபார்த்து உதவலாம். //

பக்கம் பதிவேற்றிய பிறகு தான் வழுக்களைக் காண முடியும் என்று முன்பு சொல்லி இருந்தீர்கள். பதிவேற்றத்திற்கு முன்பு எங்கு காண முடியும் என்று இணைப்புகளைத் தாருங்கள். பார்த்து கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.

//அல்லது வேண்டிய வடிவினை விளக்கிச் சொற்குவைத் தரப்பினர் வழங்கச் செய்யலாம். //

இப்போதும் தானியங்கியில் தொழில்நுடபக் குறைபாடு ஏதும் இல்லை. பதிவேற்றும் பக்க வார்ப்புரு கூட பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், தரவே பழுதுபட்டுள்ளது. தமிழ் விக்சனரியின் நடைமுறைக்குப் பொருந்தாத சொற்களைக் cleanup செய்து விட்டுத் தான் பதிவேற்ற வேண்டும்.

நீங்கள் இது வரை மொத்தமாகப் பதிவேற்றியுள்ளது 10,000 பக்கங்கள் என்ற அடிப்படையில் என்ற கருத்துகளைக் கூறியுள்ளேன். அவற்றில் எத்தனைப் பக்கங்கள் பிழை என்று எண்ணிச் சொல்வதை விட எத்தகைய பிழைகள் மலிந்துள்ளன மேலே எடுத்துக்காட்டுகள் தந்துள்ளேன். கூடுதல் எடுத்துக்காட்டுகள் உதவும் என்றால் பிறகு தருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:59, 13 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

மாற்றம் தேவைப்படும் பக்கங்கள்[தொகு]

இத்திட்டத்தில் இது வரை பதிவேற்றியுள்ள பக்கங்களில் தேவைப்படும் மாற்றங்களை விளக்கும் வகையில் சில பக்கங்களையும் கருதுகளையும் பட்டியல் இடுகிறேன். இது முழுமையான பட்டியல் அன்று. எடுத்துக்காட்டு மட்டுமே.

 • seniors - அடிகள் என்று பொருள் தரப்பட்டுள்ளது. இது சரி தானா? ஏற்கனவே, senior என்று ஒரு பக்கம் உள்ளது. பன்மையில் அமைந்த பக்கத் தலைப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
 • arjan - அசோகம், அருச்சனம் என்று பொருள் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருள் புரியவில்லை. அசோகம், அருச்சனம் ஆகிய தனிப்பக்கங்களுக்குப் போய் பார்த்தால் அங்கு பல்வேறு பொருட்கள் தரப்பட்டுள்ளன. ஆக மொத்தம், arjan என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பயனருக்குப் புரியும் வகையில் விளக்குவது அகரமுதலியின் அடிப்படைத் தேவை. வெறுமனே சொற்களைக் குவித்து வைக்கக் கூடாது.
 • thither - அக்கட என்று பொருள் தரப்பட்டுள்ளது. இது எந்த மொழிச் சொல்? தெலுங்கா? தமிழ் விக்சனரியில் ஏன் முதல் சொல்லாக, விளக்கமாக தெலுங்குச் சொல்லை இட வேண்டும்?
 • jewellers - அக்கசாலையர் என்று பொருள் தரப்பட்டுள்ளது. இப்படி ஒரு கடையில் எழுதினால் யாருக்காவது புரியுமா? நகைக்கடை, நகை வணிகர்கள் என்று எழுதினால் புரியும். அக்கசாலையர் என்று உள்ள தனிப்பக்கம் மூலம் இது ஒரு வேளை பழந்தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் என்று புரிந்து கொள்கிறேன். இது இப்படித் தனிப் பக்கமாகத் தந்து பொருள் விளக்குவதே நன்று. Jewellers பக்கத்தில் இந்தச் சொல்லைச் சேர்க்கத் தேவையில்லை.
 • atomology - அணுசாத்திரம் என்று பொருள் தருகிறது. இது காலாவதியான வடமொழிச் சொல். இன்றைய தமிழில் அணுவியல் என்றே சொல்வோம். காலாவதியான வட மொழிச் சொல்வழி தமிழ் விக்சனரியில் பொருள் தரத் தேவையில்லை. அணுசாத்திரம் என்று தனிப்பக்கம் மட்டும் இருந்து, அங்கு அணுவியல் என்று பொருள் விளக்கம் தந்தால் போதுமானது.
 • brownish - இதற்கு நான் எதிர்பார்க்கும் பொருள் பழுப்பு நிறம் சார்ந்த என்பது போலானது. ஆங்கில விக்சனரியிலும் அவ்வாறே உள்ளது. ஆனால், தமிழில் தற்போது தரப்பட்டுள்ள சொற்கள் சரியானவை தானா என்று ஐயம் எழுகிறது. தரவைச் சரி பார்க்க வேண்டும். Brownish Twistwing என்று ஒரு பறவை உள்ளதாகத் தெரிகிறது. அதற்கு இணையான சொல் ஏதும் இப்போது கொடுக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அப்படியே தருவது என்றாலும் brownish twistwing என்று தனிப்பக்கம் உருவாக்கித் தர வேண்டும்.
 • beautifully - இதற்குத் தற்போது தரப்பட்டுள்ள வள்ளிசாய், பொற்ப, அத்தக ஆகிய மூன்று சொற்களுமே புரியவில்லை. அதற்குப் பதிலாக நான் ஆங்கில விக்சனரிக்குப் போய் பார்த்தால் அந்தச் சொல் புரியும் வண்ணமாக மிக எளிமையாக விளக்கியுள்ளார்கள். ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள் தேட நான் தமிழ் விக்சனரியைப் பயன்படுத்துவதா ஆங்கில விக்சனரியைப் பயன்படுத்துவதா?
 • obstructio - தலைப்பே எழுத்துப் பிழையுடன் உள்ளது.
 • course of action - அஃகம், பெற்றி என்று பொருள் தரப்பட்டுள்ளது. இது இரண்டுமே புரியவில்லை. மீண்டும் ஆங்கில விக்சனரிக்கு சென்று தான் புரிந்து கொள்கிறேன். ஆங்கிலம் புரியவில்லை என்று தமிழ் விக்சனரிக்கு வருகிறவர்களை மேலும் தமிழ் கற்றுக் கொண்டால் தான் அல்லது ஆங்கில விக்சனரிக்குத் தான் பொருளைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற வகையில் தான் நாம் விக்சனரி திட்டத்தை வளர்க்கப்போகிறோமா?
 • gold cloth - பொன்னாடை என்ற பொருள் அனைவருக்கும் புரியும். அதுவே போதுமானது. கூடவே, ஏன் பீதாம்பரம் என்ற சொல்லும் தரப்பட்டுள்ளது? தமிழில் தனித்தமிழ் இயக்கம் நடத்தி வழக்கொழிந்து போன சொற்களை எல்லாம் மீண்டும் ஏன் தமிழ் விக்சனரி மூலம் புழக்கத்திற்கு விட வேண்டும்? பீதாம்பரம் என்று தனிப்பக்கம் தொடங்கி அங்கு அதற்கான பொருளை விளக்குவதே முறை. பீதாம்பரம் என்ற சொல்லை gold cloth பக்கத்தில் சேர்க்கக் கூடாது.
 • sky - இந்தப் பக்கத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள பாதிச் சொற்கள் என்ன மொழி என்றே தெரியவில்லை. காலாவதியான பிறமொழிச் சொற்களைக் குவித்து வைக்கும் பக்கமாக விக்சனரி விளங்கக்கூடாது. தமிழ் போல் தோன்றும் சொற்கள் கூட தொடர்புடைய சொற்களாகவும் பழந்தமிழ்ச் செய்யுள் சொற்களாகவும் உள்ளன. அவற்றுக்குத் தனிப்பக்கங்கள் தொடங்கி விளக்க வேண்டும். அனைத்தையும் sky பக்கத்தில் குவிக்கத் தேவையில்லை. sky என்றால் வானம் என்று ஒரு வரியில் பொருள் சொன்னோலே போதும். அது தான் அகரமுதலித் திட்டத்தின் நோக்கம்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் எல்லாம், ஒரு சில பக்கங்களைப் பார்வையிடும் போதே காணக்கூடிய சிக்கல்கள். 10,000 பக்கங்களையும் சரி பார்க்க இப்போது இயலாது. 10,000 பக்கங்களும் முழுக்க பிழையானவை என்று கூற இயலாது. பயனுள்ள பல பக்கங்கள் உள்ளன. ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், ஒரு தானியங்கித் திட்டத்தில் பிரச்சினைக்குரிய பக்கங்களின் விகிதமும் பிரச்சினைகளின் தன்மையும் தீவிரமானவையாக உள்ளதால் சுட்டிக் காட்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:52, 13 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

நான் முதலில் இத்தகைய சிக்கல்களை எதிர்நோக்கவில்லை. சொற்குவைத் திட்டத்தின் கொடை முந்தைய த.இ.க. தொகுதிகளைப்போல இருக்குமென நினைத்திருந்தேன். அச்சொற்கள் பெரும்பாலும் கலைச்சொல் புத்தாக்கங்கள். அவற்றுக்குத் தேவையான தகுதிகளான நல்ல தமிழ் வேர்ச்சொற்கள், பொருள் பொருத்தம் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. மேலே காட்டியுள்ள எடுத்துக்காட்டுகளின்படி இந்தத் தொகுதி அவ்வாறானதாக இல்லை. இங்கே வழக்கூன்றிய நல்ல தமிழ்ச்சொற்களிருக்கும் தொடர்களுக்கு வழக்கிறந்த சொற்களைத் தருவதாக உள்ளது. அவற்றை தக்க பொறுப்புத்துறப்பின்றி இணைத்தால் ஏதோ வழக்குச்சொல்லென்றோ சரியான மொழிபெயர்ப்பென்றோ படிப்பவர்கள் கருத நேரிடலாம். தானியங்கி மொழிபெயர்ப்பிகளுக்கும் இவை உள்ளீடாகி தமிழ்நடையின்மீதும் சற்று எதிர்மறைத் தாக்கத்தை விளைவிக்கக் கூடும்.

// 4.4 லட்சம் சொற்களில் நான்கைந்து அகராதிகளின் மூலம் உள்ளன. மூலத்தின் அடிப்படையில் தேர்வினைச் செய்யலாம். அல்லது 60% சொற்களுக்குச் செய்வது போல அனைத்துச் சொற்களுக்கும் preload முறையில் சரிபார்த்துப் பதிவேற்றலாம். //

சிக்கலில்லாத அகராதிகளை மட்டும் அடையாளம் கண்டால் அவற்றை முதலில் பதிவேற்றலாம். அவை நீங்கலாக வழக்கிறந்த, வடமொழி கலந்த சொற்களைத் தனிப் பட்டியல்களாக்கி அவற்றுக்கிணையான நற்றமிழ்ச்சொற்களைத் தரலாம். உறுதியாகத் தெரியாதவற்றைத் தனிப்பெயர்வெளியிலோ வேறு இடத்திலோ இட்டு தரவுநிலையிலேயே மெய்ப்புப்பார்த்தபின் பதிவேற்றலாம். -- Sundar (பேச்சு) 09:20, 14 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
மேலும் விக்சனரி:சொற்குவைச்_சொற்கள்_பதிவேற்றத்_திட்டம்/1 பக்கத்தில் ஒரு 10 விழுக்காடு சொற்களைப் பார்க்கையில், சிக்கல்கள் மலிந்துள்ளதாகவே தெரிகிறது. தகவற்பிழைகள் (அக்காக்குயில் என்பது வேறு பறவை), "a tree" என்ற விளக்கம் பத்துக்கும் மேற்பட்ட மரவகைகளுக்கான தலைப்பாக உள்ளது, "a senior girl or woman who has become a cousin-sister through marriage alliance" - அக்கை போன்றவை பொதுவான சொற்களுக்கான விதப்பான பொருளைத் தருவதாகவுள்ளது. இவற்றைத் தரம்பிரித்து மட்டுமே பதிவேற்ற வேண்டுமென இப்போது கருதுகிறேன். -- Sundar (பேச்சு) 12:49, 14 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
தொகுதி ஒன்றில் நேரடியாக ஏற்றப்படாத கூட்டுச் சொற்களைத் தான் கொடுத்திருந்தேன். அதில் குழப்பமிருந்தால். சிக்கலில்லாத இரண்டாவது அகராதி 8 ஆம் தொகுப்பிலிருந்து -11 வரை வருகிறது. அவற்றில் ஏற்றக்கூடியவற்றைக் கொடுத்துள்ளேன். 8, 9, 10, 11 இவற்றைப் பார்க்கலாம். தானியங்கி அணுக்கம் கிடைக்காதென்பதால் இச்சிக்கலைச் சுட்டிக் காட்டி சொற்குவைத் தரப்பிடம் தெரிவிப்போம். -Neechalkaran (பேச்சு) 17:05, 16 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
@Neechalkaran:நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள 8, 9, 10, 11 ஆகிய தொகுப்புகள் மேலே நான் குறிப்பிட்டுள்ள சிக்கல்கள் இன்றி நல்ல தமிழில் மொழிபெயர்ப்புச் சொற்கள் போல் அமைந்துள்ளன. இவற்றை "மட்டும்" தானியங்கித் தொகுப்புகளாகப் பதிவேற்றலாம். இது போல், ஒவ்வொரு தொகுப்பையும் முன்கூட்டியே சரி பார்த்து case by case பதிவேற்றுவது என்றால், இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் இல்லை. நன்றி. இரவி (பேச்சு) 13:14, 19 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]
@Neechalkaran:8 முதல் 11 வரையிலான தொகுப்புகளை இப்போதுதான் நோட்டம் விட்டேன். அவற்றைப் பதிவைற்றலாமென்ற இரவியின் கருத்துடன் ஒப்புகிறேன். -- Sundar (பேச்சு) 15:36, 17 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]
@Sundar:நீங்கள் குறிப்பிடுவது சரிதான். ஆனால் தகவலுழவன் அனுமதி மறுக்கிறார். மேலும் அதற்கும் தானியங்கி அணுக்கம் கிடைக்கவில்லை. -Neechalkaran (பேச்சு) 18:07, 17 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]
தகவலுழவன் என்ன காரணத்துக்காக மறுக்கிறார்? இது தொடர்பாக வேறு இழையெங்கேனும் குறிப்பிட்டுள்ளாரா? -- Sundar (பேச்சு) 14:58, 19 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]
பயனர்_பேச்சு:Neechalkaran#அண்மைய_தொகுப்புகள் இங்கே சில உரையாடல்கள் நடந்தன. -Neechalkaran (பேச்சு) 19:10, 20 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

கலைக் கழகக் கூட்டம்[தொகு]

தமிழ் விக்சனரியில் மேலும் சொற்களை ஏற்ற இயலாத நிலை குறித்தும் இங்கு கூறப்பட்ட கருத்துக்களையும் சொற்குவை தரப்பிடம் தெரிவித்துள்ளேன். எதிர்வரும் கலைக் கழகக் கூட்டத்திற்கு இத்திட்டம் சார்பாக வந்து நிலை குறித்து உரையாட அழைத்துள்ளனர். ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை சொற்குவை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும். மற்ற பயனர்கள் குறிப்பிட்ட வகையில் உடனடியாக இத்திட்டத்தைக் கைவிடாமல் உரையாடலை நிகழ்த்த ஒரு வாய்ப்பாக அமையலாம். விக்சனரி சார்ந்த எந்தமுடிவும் எடுக்கமாட்டோம் என்றாலும் சொற்குவை தரப்பிடம் நமது எதிர்பார்ப்புகளை விளக்கவும் வழிகாட்டவும் உதவும். ஆர்வமுள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் அவர்களிடம் தொடர்பு எண்ணை அளித்து முறைப்படி அழைக்கச் சொல்கிறேன். -Neechalkaran (பேச்சு) 08:13, 29 மார்ச் 2022 (UTC)Reply[பதில் அளி]

முதல் வாரம் நடந்த கூட்டத்தில் தமிழ் விக்சனரி தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இன்று நான் அவர்கள் அலுவலகம் சென்று இச்சிக்கலை விளக்கினேன். பிழைகளைச் சுட்டிக் காட்டி, சரியான வடிவம் இல்லாத நிலையில் தமிழ் விக்சனரித் தரப்பில் தானியக்க அனுமதியில்லை என்பதைத் தெளிவுபடுத்தினேன். விருப்பமுள்ளவர்கள் பொதுவுரிமையில் கிடைத்துள்ள சொற்களைக் கொண்டு மனிதமுறையில் பதிவேற்றலாம். பதிவேற்றிய சொற்களை அவ்வப்போது சரி செய்தும் வருகிறேன். -Neechalkaran (பேச்சு) 19:47, 20 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]
சொற்குவைச் சொற்களில் பல அகராதிகள் கலந்துள்ளதால் இந்தச் சிக்கல் என்பதால் அவர்களின் கலைக்கழகச் சொற்களை மட்டும் தனியாகப் பிரித்து கடந்த மாதம் கொடுத்தனர். தானியங்கி அணுக்கம் இன்னும் கிடைக்காததால் முன்சுமை முறையில் பக்கங்களை உருவாக்கவுள்ளேன். ஆர்வமுள்ளவர்களும் பக்கங்களை உருவாக்கி உதவலாம். -Neechalkaran (பேச்சு) 06:58, 1 சூன் 2022 (UTC)Reply[பதில் அளி]