நிழல்
Appearance
நிழல் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர். ஒளிமறையுரு.
- கதிரவன் ஒளியை மறைத்து நிற்கும் பகுதியில் வெப்பம் குறைவாக இருப்பதால், குளிர்ச்சி, காப்பு.
- தெளிந்த நீர் அல்லது பளபளப்பான தளத்தின் மீது ஒரு பொருளின் புற உருவம் எதிரொளியாகப் பட்டுத் தோன்றும் ஒளியுரு. ஏதிரொளியுரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- shade, shadow
- image, reflection, as in a mirror
- type, representation, counterpart
- lustre
- coolness
- grace, favour, benignity
- justice
- protection, asylum, refuge
- place
- wealth, prosperity, affluence
- branch of a tree
- disease, ailment
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நாணிழற் போல (நாலடியார், 166)
- நிழனோக்கித் தாங்கார் மகிழ் தூங்கி (சீவக. 2790)
- நிழல்கா னெடுங்கல் (சிலப்பதிகாரம், 5, 127)
- தண்ணிழல் வாழ்க்கை (பட்டினப்பாலை 20)
- நீரு நிழ லும் (நல்வழி. 2)
ஆதாரங்கள் ---நிழல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +