சுவை
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
சுவை (பெ)
பொருள்
- நாவில் (நாக்கில்) உணரும் உணர்ச்சி (இது வெப்பம், சொரசொரப்பு போன்றவை அல்லாமல், இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற உணர்வுகளைக் குறிக்கும்)
- அறிவியலில் அடிப்படையாக நாவில் ஐந்து சுவைகளையே சுவைகள் என ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஐந்து சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, உமாமி. (காரம், துவர்ப்பு என்பவற்றை சுவைகளாக அறிவியலில் ஏற்கப்படவில்லை)
- நாவில் உணர்வதாக தமிழர்கள் கூறும் ஆறு சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, காரம், துவர்ப்பு
- உள்ளத்தின் உணர்ச்சிகள், நெகிழ்ச்சிகள் பலவும் சுவை எனப்படும். இன்பம், துன்பம், களிப்பு, இசையின்பம் என்பன போன்ற அக உணர்வுகள்.
- தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள எட்டுவகை மெய்ப்பாடுகளாக வெளிப்படும் உணர்ச்சிகள் சுவைகள் எனப்படும். அவையாவன நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
சுவை (வி)
- நாவால் உணரும் உணர்ச்சியைத் துய்(ப்பது).
- உள்ளத்தில் உணரும் உணர்ச்சிகளைத் துய்(ப்பது). (எ.கா உங்கள் கிண்டலைச் சுவைத்தேன்)
- வாயில் இட்டு சவை, மெல்லு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- taste