உள்ளடக்கத்துக்குச் செல்

தசாவதாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தசாவதாரம்:
இறைவன் திருமாலின் பத்து அவதாரங்கள்-- இடதுபுற தலைப்பகுதியிலிருந்து கீழ்ப்பக்கமாக மச்சம் அவதாரத்திலிருந்து தொடக்கம்.பலராமனுக்குப் பதிலாக புத்தன் காட்சி தருகிறார்...ஒரு மாற்றுக் கருத்தின்படி புத்தாவதாரம் கிருட்டிணனுக்கு அடுத்தபடியாக வந்த அவதாரமாகக் கருதப்படுகிறது.
தசாவதாரம்:
பாண்டுரங்க விட்டலனை நான்காவது அவதாரமாகக் காட்டும் கோவா (மராத்தி) கலாசாரம்...இடதுபுறம் மேலிருந்துக் கீழாக நான்காவது திருவுருவம்.
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • தசாவதாரம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---दश+अवतार = दशावतार=த3ஸா2வதா1ர ..மூலச்சொல்
  1. திருமாலின் பத்து அவதாரங்கள் (பிங். )
  • தச(பத்து) + அவதார (அவதாரம்).

விளக்கம்

[தொகு]
  1. மச்சம் ---என்னும் மச்சாவதாரம்
  2. கூர்மம் ---என்னும் கூர்மாவதாரம்
  3. வராகம்என்னும் வராகாவதாரம்
  4. நரசிங்கம்என்னும் நரசிங்காவதாரம்
  5. வாமனன்என்னும் வாமனாவதாரம்
  6. பரசுராமன்என்னும் பரசுராமாவதாரம்
  7. இராமன்என்னும் இராமாவதாரம்
  8. பலராமன்/புத்தன்...பலராமன் என்றால் எட்டாவது பலராமாவதாரம்,அல்லது புத்தன் என்றால் ஒன்பதாவது பௌத்தாவதாரம் ஆகும்
  9. கிருட்டிணன்என்னும் கிருஷ்ணாவதாரம்
  10. கல்கி-- திருமால் இனி எடுக்கப்போகும் அவதாரம்---கல்கியவதாரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the ten incarnations of the God Thirumal...(Maha Vishnu) viz., 1.Matsyam, 2.Kūrmam, 3.Varākam, 4.Naraciṅkam, 5.Vāmaṉaṉ, 6.Paracurāmaṉ, 7.Rāmaṉ, 8.Palarāmaṉ, 9.Kiruṣṉaṉ, 10,Kaṟki...

எந்த அவதாரங்கள்?

[தொகு]
  • திருமாலின் பிரதானமான பத்து அவதாரங்கள் எவை என்பதில் பலவேறு கருத்துகள் நிலவுகின்றன..சில நூல்கள் கிருட்டிணனை எட்டாவதாகவும், புத்தனை ஒன்பதாகவும் கொள்கின்றன...ஆனால் 17-ம் நூற்றாண்டின் 'யதீந்திரமததீபிகா' என்னும் வைணவக் கொள்கையை விவரிக்கும் நூலின்படி, பலராமன் எட்டாவதாகவும், கிருட்டிணன் ஒன்பதாவதாகவும் கொள்ளப்படுகின்றனர்.
  • சில தீவிர வைணவர்கள் புத்தனை திருமாலின் அவதாரமாகவே ஒப்புக்கொள்வதில்லை...அவர்களுக்கு பலராமன் மட்டுமே திருமாலின் எட்டாவது மற்றும் கிருட்டிணன் ஒன்பதாவது அவதாரங்களாகும்...புத்தன் துவைத, சுமார்த்த, அத்துவைதக் கோட்பாட்டாளருக்கும் திருமாலின் அவதாரமல்ல...
  • மராத்தி, கோவா சம்பிரதாயத்தில் இறைவன் பாண்டுரங்க விட்டலனையும், ஒரிசாவில் இறைவன் சகன்னாதனும் புத்தனுக்கு மாற்றான திருமாலின் அவதாரமாக சில சிற்ப, சோதிட மற்றும் இலக்கிய பாரம்பரியத்தில் கருதப்படுகிறார்கள்...
  • கீத கோவிந்தம் இயற்றிய ஜயதேவர், பலராமன், புத்தன் இருவரையுமே அவதாரங்களாக்கி, கிருட்டிணனை ஓர் அவதாரமாகவேக் கருதாமல், நேரடியாக திருமாலாகவே அதாவது முழுமுதற் கடவுளாகவே உருவகப்படுத்திப் பாடியுள்ளார்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தசாவதாரம்&oldid=1282297" இலிருந்து மீள்விக்கப்பட்டது