பயனர்:Jambolik/பயனர் பேச்சு:Jambolik-2013-2014
வெளிஊடகப் படங்கள் பதிவேற்றும் முறை என்ன?
[தொகு]விக்கியின் ஊடகக் கோப்பகத்தில் இல்லாதப் படங்கள், என் பங்களிப்புக்குத்தேவையான படங்கள், வெளிஊடகங்களில் நிறையவே கிடைக்கின்றன...அவைகளை நகலெடுத்து விக்சனரியில் புதிய சொற்களை உண்டாக்கும்போது ஒட்ட முடியவில்லை...விக்சனரியில் இவை தோன்ற என்ன செய்யலாம்? --Jambolik (பேச்சு) 18:52, 26 திசம்பர் 2012 (UTC)
- நீண்ட நாட்களாகியும் மேற்கண்ட வினாவிற்கு பதிலில்லை...விரைவில் எதிர்பார்க்கிறேன்.--Jambolik (பேச்சு) 15:18, 7 சனவரி 2013 (UTC)
- உங்கள் கேள்வியை, எனது பக்கத்தில் கேட்டறிந்தால் எனக்குத் தெரிந்திருக்கும். மற்றொருன்று பொதுவாக யாரிடமாவது கேட்டறிய வேண்டும் என்ற அவா இருந்தால், நீங்கள் இங்குள்ள ஆலமரத்தடி பகுதியில் கேட்டறிய வேண்டும் என்ற பொதுவழிமுறைகளை அறிக. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் பக்கம் உங்கள் மனம்.
இப்பகுதியில் உள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றினால், நீங்கள் பதிவேற்றும் ஊடகம், 280க்கும் மேற்பட்ட மொழிகளில் தெரியும். பின்பற்றுக.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 12:21, 8 சனவரி 2013 (UTC)
படத்தை மறைக்கும் நிரல்களை..
[தொகு]- படத்தை மறைக்கும் நிரல்களை அமைத்தமைக்கு நன்றி.Jambolik !
- உங்களைப்பற்றி பிறரிடம் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலவரிகள் எழுதுங்களேன். நம் விக்கி குடும்பத்தாரோடு, பகிர்தல் ஒரு மகிழ்வே. ஆவலுடன்.--த♥ உழவன் +உரை.. 04:25, 7 சனவரி 2013 (UTC)
பிழை-நன்றி
[தொகு]ஆங்கில சொற்களுக்கிடைய, இடைவெளிகளை ஏற்படுத்தியமைக்கு நன்றி!,ஜம்! நிரல்வழுவால் மாற்றத்தால் வந்தவை. களைய முற்படுகிறேன்.ஏனெனில், இப்பதான் பைத்தான் என்னும் கணினிமொழியைக் கற்கும் கத்துக்குட்டி நான். இனி கவனமாக செயல்படுவேன். எனினும், இதுபோலவரின் எனக்கு தயவுசெய்து சுட்டவும். என்றும் நட்புடன், வணக்கம்--த♥ உழவன் +உரை.. 03:44, 17 சனவரி 2013 (UTC)
மீனாட்சி, பெயர் விளக்கம்
[தொகு]மீனாட்சி என்னும் பக்கத்தில் உரையாடல் பகுதியில் சில விளக்கங்களைக் கொடுத்தேன்...இப்போது அங்கு தரப்பட்ட சொற்பொருள் பிழை என்றும் தெரிவித்தேன்...மேற்கொண்டு ஒரு விடயமும் நகர்வதாகக் காணோம் ?--Jambolik (பேச்சு) 14:01, 17 சனவரி 2013 (UTC)
விளக்கம் பகுதி
[தொகு]நீங்கள் தொடர்ந்து, விரிவாக, புதியச் சொற்களை உருவாக்குதலுக்கு நன்றி. அவ்வாறு உருவாக்கும் போது, விளக்கம் பகுதியில் ஏதுவும் எழுதாமல் இருந்தால் மட்டும் அங்குள்ள முன்று புள்ளிகளை அப்படியே விடவும். ஏதேனும் எழுதினால், அம்மூன்று புள்ளிகளை நீக்கவிடவும். சந்திப்போம். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 14:29, 10 பெப்ரவரி 2013 (UTC)
- சரி...மாறுபட்ட பல பொருள் மற்றும் விளக்கங்களைத் தரும்போது :*... என்றக் குறிகளை அடியோடு நீக்கிவிட்டு # எனும் குறிகளைப் பயன்படுத்தலாமா? எ.கா..'புதுமனைப் புகுவிழா' பக்கத்தைக் கவனியுங்கள்--Jambolik (பேச்சு) 14:12, 11 பெப்ரவரி 2013 (UTC)
//:*... என்றக் குறிகளை அடியோடு நீக்கிவிட்டு # எனும் குறிகளைப் பயன்படுத்தலாமா? // # குறியீடுகளை பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளனவென்று தெரிகிறது. நான்கு வருடங்களுக்கு முன் அக்குறியீட்டின் பயன்பாடு இருந்தது.இடையில், :*... என்றக் குறிகளைப் பயன்படுத்தினோம். ஆனால், நீங்கள் சொல்வது போல, நானும்# குறியீட்டின் முக்கியத்துவத்தை உணருகிறேன்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 18:15, 11 பெப்ரவரி 2013 (UTC)
மாறுபட்ட தலைப்புக்கு நகர்த்துவது எப்படி?
[தொகு]- ஒரு தலைப்பிலிருந்து வேறொரு தலைப்புக்கு ஒரு பக்கத்தை நகர்த்துவது எப்படி?...விவரமாக விளக்குவீர்களா?--Jambolik (பேச்சு) 15:36, 26 பெப்ரவரி 2013 (UTC)--Jambolik (பேச்சு) 00:14, 3 மார்ச் 2013 (UTC)
விடை பெறுகிறேன்
[தொகு]சென்ற முறையைப் போலவே, வரும் எட்டு மாதங்களுக்கு என்னிடமிருந்து பங்களிப்புகள் ஒன்றும் இருக்காது...அனைவரிடமிருந்தும் விடை பெறுகிறேன்...இதுவரை ஒத்துழைத்ததற்கு மிக்க நன்றி...மீண்டும் சந்திப்போம்..வணக்கம்...GOOD BYE--Jambolik (பேச்சு) 23:27, 2 மார்ச் 2013 (UTC)
- மிக அருமையான பங்களிப்புகள். அதற்கான எங்களது உளங்கனிந்த பாராட்டுகள். மீண்டும் சந்திப்போம். பழ.கந்தசாமி (பேச்சு) 00:53, 3 மார்ச் 2013 (UTC)
கொச்சைச் சொற்கள்
[தொகு]வணக்கம் நண்பா! கொச்சைச் சொற்களை சேர்ப்பது சரிதான். ஆனால், சொல்லின் பின்னொட்டுகளுடன் எழுதுவது தவறு. எ.டு: செய் என்று மட்டுமே எழுத வேண்டும், செய்கின்றான், செய்த போன்றவற்றிற்கு கட்டுரை எழுதுவது தவறு. அதுபோலவே, இட்டா, கூட்டியா என்று எழுதுவதும் தவறு. இட்டா என்பதற்கு மூலச் சொல் இருக்குமானால் (இட்டுவா/இழுத்துவா) அதை மட்டுமே எழுத வேண்டும். இட்டா, இட்டாந்தான். இட்டார போன்ற சொற்கள் சேர்க்கப்படக் கூடாது! அதைப் போலவே, கூட்டிவா என்று சேர்க்கலாம். கூட்டியா என்று சேர்ப்பது தவறு. இவ்வாறு சேர்த்தால், ஏகத்திற்கும் சொற்கள் சேர்ந்து குழப்பத்தை உண்டு பண்ணும். இதை ஏற்றால் அங்கன, அங்கின, அங்கென, அங்க, அங்கிட்டு, அந்தாண்டை, அந்தசைடு போன்றவற்றிற்கும் சேர்க்க வேண்டியிருக்கும். :(
1. கொச்சை சொற்கள், செந்தமிழ் வழக்கின் சிறு மருவலால் தோன்றியன என்றால் சேர்க்க வேண்டாம்.
2. கொச்சை சொற்களை மட்டும் சேர்க்கலாம். அவற்றை, வினைமுற்று, வினையெச்சம் போன்றவற்றுடன் சேர்த்து கட்டுரை எழுத வேண்டாம்.
நீக்கல் வேண்டுகோள் போட்டிருக்கேன். கருத்து வேறுபாடு இருந்தால் தெரிவிக்கவும்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:27, 1 நவம்பர் 2013 (UTC)
- வணக்கம்..உங்கள் அறிவுரைக்கு நன்றி...நான் பங்களித்த இட்டா, கூட்டியா ஆகிய சொற்கள் விக்சனரியின் கொள்கை, நிபந்தனைகளுக்குட்பட்டில்லையானால் தாராளமாக நீக்கிக்கொள்ளவும்...தமிழை முறையாக படிக்காதலால் இலக்கணச் சொற்களைப்பயன்படுத்தி தெரிவிக்கப்பட்ட உங்கள் கருத்துகள் முழுவதும் எனக்குப்புரியவில்லை!எனினும் தவறுகள் என்னால் உண்டானால் இப்போதுபோலவே தெரிவித்துவிடவும்...
வேண்டுகோள் விடுத்து தவறாக இடப்பட்ட சொற்களை நீக்கும் பத்ததி மிக நாகரீகமான ஒன்று...பாராட்டுகிறேன்...
ஆங்கில விக்கிபீடியாவில் என் பங்களிப்புகளை, வந்தேன், கவிழ்த்தேன் என்னும் ரீதியில் சொல்லாமல் கொள்ளாமல் நீக்கிவிட்டார்கள்..இத்தனைக்கும் நீக்கப்பட்டவைகள் உண்மையானத் தகவல்களே!..இப்போதெல்லாம் நான் அந்தத் திசையிலேயே தலைவைத்துப் படுப்பதில்லை!--Jambolik (பேச்சு) 19:51, 5 நவம்பர் 2013 (UTC)
பகுப்பு மேம்பாடு
[தொகு]- நீங்கள் தொடர்ந்து சொற்களைப் பதிவேற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படங்களும் இணைப்பதால், மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது. உங்களது இப்பதிவுகள் பலரையும் எளிதில் அடைய இருக்கும் வழிகளில் ஒன்று, பகுப்பு இடுவது ஆகும். எனவே, பின்வரும் பகுப்புகளை இடக் கோருகிறேன்.
- நீங்கள் பதிவேற்றும் புதியசொல் தமிழ் சொல்லாக இருந்தால்,பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை என்றும், ஆங்கிலச் சொல்லாக இருந்தால், பகுப்பு:ஆங்கிலம்-படங்களுள்ளவை என்றும் பகுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- அதோடு, பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள், பகுப்பு:இரண்டெழுத்துச் சொற்கள், பகுப்பு:நான்கெழுத்துச் சொற்கள் என்பதையும் தேவையெனில், இட்டுக் கொள்ளவும்.
- இரண்டு தமிழ் சொற்களின் கூட்டு என்றால், பகுப்பு:கூட்டுச்சொற்கள் எனவும் இடக் கோருகிறேன். இந்த பகுப்புகளில் இருந்து, சொற்களை பிற திட்டங்களுக்கு பயன்படுத்துவது எளிமை என்பதால், இக்கோரிக்கையை தங்களிடம் கேட்கிறேன். சந்திப்போம். வணக்கம். --த♥ உழவன் +உரை.. 01:58, 7 நவம்பர் 2013 (UTC)
- சரி ஐயா...நீங்கள் குறிப்பிட்ட மேற்கண்ட பகுப்புகளின் பெயர்களை இட்டால் போதுமா?...மேலும் பல பகுப்புகள் எ.கா வணிகவியல், பொருட்கள், கருவிகள்,உணவுப்பொருட்கள், சைவம் போன்றவையும் உள்ளனவே?..ஆனால் எந்தச்சொல் எந்தப் பகுதிக்குப் போகவேண்டும் என்பதில் எனக்கு சற்றுத் தடுமாட்டம் ஏற்படலாம்?...'பகுப்புகளிடுவது எப்படி' என்பதை மிகத்தெளிவாகத் தெரிவித்தால் முயற்சி செய்கிறேன்..முன்பொரு முறை முயற்சித்து எனக்குக் கைகூடவில்லை!...பொதுவாக என் பங்களிப்புகளைப் பற்றி அபிப்பிராயம் என்ன?..அனுபவம் இல்லாததால் கேட்கிறேன்!..தேவை உண்டாகுமானால் என்னைத் திருத்திக்கொள்ளலாமல்லவா?--Jambolik (பேச்சு) 14:40, 7 நவம்பர் 2013 (UTC)
- நீங்கள் மிக நேர்த்தியாக, சிறந்த பங்களிக்கிறீர்கள். இதில் ஆங்கில பகுப்புகளைக் காணலாம். அதிலுள்ள ஆங்கிலம் என்பதனை எடுத்துவிட்டால் தமிழ் பகுப்புகள் வரும். சில பகுப்புகளில் தமிழ் என்ற முன்னொட்டும் வர வாய்ப்புண்டு. மேலுள்ள விருப்பத்தேர்வுகள் என்பதில் கருவிகள் என்ற த த்தல் இருக்கும். அதில் // HotCat, easily add / remove / change a category on a page, with name suggestion [example]// என்பதனைத் தெரிவு செய்து கொண்டு, கீழுள்ள சேமி என்பதைச் சொடுக்கவும். அப்படி செய்து கொண்டால், ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும், பகுப்பினை எளிமையாகச் சேர்க்க வசதி ஏற்பட்டு விடும். அங்குள்ள கூட்டல் குறியை அழுத்தினால், ஒரு கட்டம் வரும். அதில் ஓரிரு தமிழ் சொற்களை அடித்தால், ஏற்கனவே இருக்கும் பகுப்புகள் தெரியவரும். தேவையானவற்றை சேமிக்க வேண்டும் அவ்வளவே. வேறு ஐயம் இருப்பின், தயங்காது கூறவும். சந்திப்போம். வணக்கம். --தகவலுழவன் (பேச்சு) 15:29, 7 நவம்பர் 2013 (UTC)
- நீங்கள் சொன்னபடியே விருப்பத்தேர்வுகள்--கருவிகள்--விரைவுக்குப்பி (HotCat) என்று சென்று சேமித்தாகிவிட்டது...ஆனாலும் சொல்லை படிவமிடும்போது 'உருவாக்கம்' பக்கத்தில் சொல்லின் இறுதியில் + அல்லது - குறி தோன்றவில்லை..இது 'விருப்பத்தேர்வு' என்பதனைச் சொடுக்கும் நிலையில்(stage) நான் செய்திருக்கக் கூடிய தவறு காரணமாகயிருக்கலாம்...முதலில் நான் பங்களிக்கும் முறையைச்சொல்கிறேன்...விக்சனரி முதற்பக்கத்தில் 'தேடு' என்னும் இடத்தில் ஒரு சொல் ஏற்கனவே உள்ளதா என்று தேடுகிறேன்...அந்த சொல் விக்சனரியில் இல்லாதபோது 'xxx பக்கத்தை இந்த விக்சனரியில் உருவாக்கவும்' என்று தோன்றுகிறது.பிறகு புதிய சொற்களை சேர்க்கவும்' என்பதை சொடுக்கினால் 'புதிய பக்கத்தை உருவாக்குதல்'தோன்றி அதில் ஒரு சொல்லை படிவமிட்டால் 'xxxx உருவாக்கம்' என்னும் பக்கம் வருகிறது...மேற்கொண்டு செய்யவேண்டியனவற்றைச் செய்கிறேன்...இப்படியாக சொற்களை விக்சனரியில் சேர்க்கிறேன்...இப்போது சொல்லுங்கள், எந்த நிலையில் 'விருப்பத்தேர்வுகள்'என்பதை பயன்படுத்தவேண்டும்?...விரைவுக்குப்பியில் தெரிவு செய்தபின் எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்வது?--Jambolik (பேச்சு) 17:44, 7 நவம்பர் 2013 (UTC)
- //சொல்லை படிவமிடும்போது 'உருவாக்கம்' பக்கத்தில் சொல்லின் இறுதியில் + அல்லது - குறி தோன்றவில்லை.// 'உருவாக்கம்' பகுதியில் இக்கருவி தோன்றாது. ஏனெனில், சேமித்த பக்கமொன்றில் தான், இக்கருவி பகுப்பிடும் திறன் உடையது. எடுத்துக்காட்டாக, நீங்கள் உருவாக்கிய ஆடுமாசனம் என்ற சொல்லை எடுத்துக் கொள்ளவும். அதன் அடியில் பகுப்பு (++):பெயர்ச்சொற்கள் (−) (±) (↓) (↑) (+) என்று தெரிகிறது அல்லவா? அவற்றில் இறுதியாக உள்ள (+) குறியை அழுத்தினால், ஒரு வெற்றுகட்டமும், ok Cancel என இரு ஆழிகளும் (buttons) தோன்றும். அந்த வெற்றுக் கட்டத்தில், தமிழ்-படங்களுள்ளவை அல்லது பொருட்கள் அல்லது கூட்டுச்சொற்கள் என்ற பகுப்புகளை, ஒவ்வொன்றாக இணைக்கலாம். --தகவலுழவன் (பேச்சு) 02:07, 8 நவம்பர் 2013 (UTC)
- ஒருவழியாகத் தெரிந்துக்கொண்டேன்!!..கொடுத்த பகுப்பீடு அனைத்துமே சொல்லுக்குரிய பக்கத்தில் தோன்றுவதில்லையே ஏன்?..சிவப்பு நிறத்தில் சில எழுத்துக்கள் தோன்றக் காரணமென்ன?.. ஒரு பக்கம் உருவாக்கப்படும்போதே பகுப்பையும் தரமுடியாதா?..உருவாக்கத்தில் புள்ளிகள் கூடாது என்றால் என்ன?(பத்ததி வாசித்தல்) என்னும் பக்கத்தைக் கவனியுங்கள்..கேள்விகளால் மிகுந்தத் தொல்லை கொடுத்துவிட்டேனோ?..மன்னிக்கவும்!--Jambolik (பேச்சு) 13:28, 8 நவம்பர் 2013 (UTC)
- கேள்விகளால், தொல்லைகள் ஏதும் இல்லை. அப்படி என்றும் நினைக்க மாட்டேன். உங்கள் கேள்விகளில் இருந்தே, நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பற்றி, அறிந்து கொள்ள இயலுகிறது. அதனால் மகிழ்ச்சியே. பகுப்புகள் மறைமுக பகுப்பாக இருக்கும் போது தெரியாது. இப்பொழுது அவை தெரியும் படி செய்துள்ளேன். எனவே, மீண்டும் ஒருமுறை, ஆடுமாசனம் சொல்லை கவனிக்கவும். //உருவாக்கத்தில் புள்ளிகள் கூடாது என்றால் என்ன?//பத்ததி வாசித்தல் என்ற சொல்லை, நீங்கள் உருவாக்கும் போது, சொல்லின் இறுதியில் முற்றுப்புள்ளியை வைத்து உருவாக்கியிருந்தீர்கள். அங்ஙனம் உருவாக்கக் கூடாது என்பதே அதன் கருத்து. பத்ததி வாசித்தல். என்று உருவாக்கக் கூடாது.ஒரு சொல்லை உருவாக்கும் போதே, பகுப்பை உருவாக்க இயலும். காண்க: அப்பா. ஒவ்வொரு சொல்லையும் அம்மா போன்று உருவாக்க நிரலாக்கம் கற்று வருகிறேன். அதனைக் கண்டு இங்கு கருத்திடவும். --தகவலுழவன் (பேச்சு) 15:54, 8 நவம்பர் 2013 (UTC)
- மிக்க நன்றி தகவலுழவன் அவர்களே... உடனுக்குடன் தரப்படும் பதில்கள் என்னைப் பெரிதும் ஊக்குவிக்கின்றன...
பகுப்புகள் மறைமுக பகுப்பாக இல்லாமலிருக்க என்ன செய்யவேண்டும்?--Jambolik (பேச்சு) 16:57, 8 நவம்பர் 2013 (UTC)
- பெரும்பாலும் பகுப்புகள் மறைக்கப்படுவதில்லை. பராமரிப்புக் காரணங்களுக்காக மறைக்கப்பட்டாலும், ஒரு உருவாக்கப்பட்ட சொல்லொன்றின் பக்கமொன்றைத்தொகுக்கும் போது, தொகுசாளரத்தின் கீழே மறைத்தப் பகுப்புகளை, நீங்கள் காண இயலும். --தகவலுழவன் (பேச்சு) 19:59, 9 நவம்பர் 2013 (UTC)
பழைய பதிவேற்றங்கள் எங்கே போயின?
[தொகு]என் பேச்சு என்னும் இந்தப் பக்கத்தில் இதுவரை பதிவான உரையாடல்கள் திடீரென்று காணாமல் போய்விட்டன! அவைகளில் விக்சனரி தொடர்பான பல குறிப்புகள் உள்ளன...அவைதான் என்னை வழி நடத்துகின்றன...அவைகளை மீண்டும் பெறவேண்டும்!1 எப்படி செய்வது?--Jambolik (பேச்சு) 16:03, 11 நவம்பர் 2013 (UTC)
- மீளமைத்திருக்கிறேன். எப்படி இந்த தவறு நிகழ்ந்ததெனத் தெரியவில்லை. இடையூறுக்கு மன்னிக்கவும். ஒரு வேண்டுகோள் எந்த ஒரு புதியத்தலைப்பையும், ஒரு சமக்குறியீடு கொண்டு தொடங்க வேண்டாம். இரண்டு சமக்கோடுகள் கொடுத்தேத் தொடங்கப்பட வேண்டும் என்பது பல்மொழி விக்கியிலும் உள்ள நடைமுறை ஆகும். வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 16:24, 11 நவம்பர் 2013 (UTC)
- நன்றி..உயிரே வந்தாற்போல் இருக்கிறது!..'எட்டேகால் லட்சணம்' என்னும் பக்கத்தில் கீழ்கண்டவாறு வினவியிருந்தேன
'இந்த 'எட்டேகால் லட்சணம்' பக்கத்தில் வரும் ஔவையாரின் பாடலைச் சிறிய சொற்தொடர்களில் ஒன்றின் கீழொன்றாக பதிவேற்றுவது எப்படி? எண்கள் போடாவிட்டால் நீண்ட பெரிய சொற்தொடராகவன்றோ பதிவாகிறது?'-- தயவு செய்து விளக்குங்கள்...சில செய்யுள்களை பதிவேற்ற விழையும்போது ஏலாமையாக இருக்கிறது.--Jambolik (பேச்சு) 16:44, 11 நவம்பர் 2013 (UTC)
- எட்டேகால் லட்சணம் பார்க்கவும். உரிய குறிகளை அறிமுகப்படுத்தியுள்ளேன். சரியா?--தகவலுழவன் (பேச்சு) 16:47, 11 நவம்பர் 2013 (UTC)
சரி, நன்றி--Jambolik (பேச்சு) 18:55, 11 நவம்பர் 2013 (UTC)
நீக்கப்பட்ட பக்கங்களை மீண்டும் இணைக்கலாமா?
[தொகு]விக்சனரியில் ஒட்டைச் சிவிங்கி, கழுதைப்புலி, காண்டா மிருகம், கோவேறுக் கழுதை, நீர்யானை ஆகிய பக்கங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டிருக்கின்றன..என்ன காரணமோ?...மீண்டும் உருவாக்கலாம் என்றால் எச்சரிக்கைவேறு விடுக்கப்பட்டிருக்கிறது?!.உருவாக்கவா அல்லது விட்டுவிடவா?--Jambolik (பேச்சு) 22:43, 11 நவம்பர் 2013 (UTC)
இவற்றில பல உள்ளன. கோவேறு கழுதை என்று சந்தியெழுத்து இல்லாமல் உருவாக்கலாமென்றே எண்ணுகிறேன். ஒட்டைச் சிவிங்கி என்பது தவறான சொல்லென்றே எண்ணுகிறேன். காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, நீர்யானை போன்றவை உள்ளன. இடைவெளியினால் இல்லாதது போல, காட்டும், (எ. கா.) காண்டா மிருகம், ஒட்டகச் சிவிங்கி, நீர் யானை எனவே, ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.--தகவலுழவன் (பேச்சு) 02:08, 12 நவம்பர் 2013 (UTC)
சேமிக்கப்பட்ட பக்கங்களில் புதிதாய் பகுப்புகளை இணைப்பது எப்படி?
[தொகு]- ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு பக்கத்தில் மேலும் விவரங்களைச் சேர்க்கும்போது ஏற்படும் தேவையின் காரணமாக புதிய பகுப்புகளை இணைக்கவேண்டி வருகிறது...அப்போது சில பக்கங்களில் இறுதியில், பகுப்பினைச் சேர்க்க வசதியாக கூட்டல் குறியோடு கூடிய நீள்கட்டங்கள் இருப்பதில்லை...வெறும் அ|ஆ|இ|ஈ என்றே தெரிகிறது..
அப்போது என்ன செய்தால் குறிகளோடு கூடிய நீள்கட்டங்களைப் பெறலாம்?--Jambolik (பேச்சு) 19:19, 12 நவம்பர் 2013 (UTC)
- பகுப்பு ஒன்று தேவைப்படுமாயின், [[பகுப்பு:பெயர்]] என்று தொடங்கலாம். அநேகமாக பகுப்பொன்று வார்ப்புருவுக்குள் அடக்கி தானாகவே தோன்றுமாறு செய்யும்போது அவ்விதம் தெரியும். அதைத்தான் சொல்கிறீர்கள் என எண்ணுகிறேன். (எ. கா.) அப்பா என்பதனைத்திறந்து பார்க்கவும்.அதில் தமிழ்-பெயர்ச்சொற்கள் என்பது, {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}} என்ற வார்ப்புருவால் தானாகவே தோன்றும். மேலும், இந்த வார்ப்புரு மூலம் பராமரிப்பு எளிது. ta என்பதை, en என்று மாற்றினால், அது தமிழிலிருந்து ஆங்கிலமாக மாறிவிடும். அது போல அனைத்து மொழிகளுக்கும் அது தானாகவே மாறும். பக்கமொன்றை உருவாக்கும் போது பகுப்பு இடாவிட்டாலும் அது தானாகவே தெரியவரும். எனவே, அப்பா என்பதனை அடிப்படையாக வைத்து செயற்படவும். அதற்கு கீழுள்ள {{subst:noun-ta|}} என்பது உதவும். {{subst:noun-ta|தமிழ்விளக்கம்|ஆங்கிலவிளக்கம்|}} என எழுதினால், தானாகவே படிவமும், அதற்குரிய பகுப்புகளும், உட்பிரிவுகளும் இடப்பட்டு விடும். --தகவலுழவன் (பேச்சு) 01:18, 13 நவம்பர் 2013 (UTC)
தொடங்கிய கட்டுரைகளைக் காண்பது சிரமமாக இருக்கிறது!
[தொகு]இன்று நான் தொடங்கிய கட்டுரைகளைக் காண முயற்சிக்கும்போது 'Notice: This tool has now permanently moved to labs. You will now automatically be redirected to the new location on labs within 30 seconds. Please note that the tool you seek is now located at https://tools.wmflabs.org/xtools/pages/index.php' என்ற செய்தி வருகிறது...அனால் பட்டியல் எத்தனை நேரமானாலும் தெரிவதில்லை!..இந்தப் பட்டியலை ஆதாரமாகக்கொண்டுதான் நான் இதுவரை பங்களித்தப் பக்கங்களை சீரமைத்துவருகிறேன்...தயவு செய்து நான் தொடங்கிய பக்கங்களைக் காண தேவையானவற்றைச் செய்யுங்கள்..--Jambolik (பேச்சு) 22:29, 4 திசம்பர் 2013 (UTC)
- எனக்கும் அப்படிதான் வருகிறது. மேலும், பல அளவீட்டுக் கருவிகள் இலத்தீனிய எழுத்துக்களில் இருந்தால் மட்டுமே வேலைசெய்கிறது. இதனை நிரலாக்க வல்லமை மிக்கவர்களே தீர்க்க முடியும்.
- ஆவாரை என்பதில் நீங்கள் ஏற்படுத்திய மேம்பாடு அருமை. அதில் மூலிகைகள் என்று ஒரு பகுப்பும், மருத்துவ.. என்று ஒரு பகுப்பும் உள்ளது. இரண்டும் ஒன்றே, இங்கு உங்கள் கருத்திடவும்.--தகவலுழவன் (பேச்சு) 01:53, 5 திசம்பர் 2013 (UTC)
- ஒரு சமக்குறியீடு கொண்டு எத்தலைப்பையும்,எங்கும் தொடங்க வேண்டும். அதனை மூன்று =குறியீடுகளாக,ஆவாரையில் மாற்றியுள்ளேன். ஏனெனில், பொருளை ஆழமாகவும், பொருத்தமாகவும் நீங்கள் விளக்கியுள்ளதால் மற்றவை மூன்று சமக்குறியீடுகளின் கீழ் வருகின்றன. ஒரு சமக்குறியீடு தலைப்பு, இருசமக்குறியீடு பிரிவு (பொருள். மொழிபெயர்ப்புகள்,சொல்வளம், இலக்கிய மேற்கோள் (பொருத்தமான மேற்கோள்கள் அப்பொருளுக்கு அருகிலேயே கொடுக்கப்படுகிறது. மற்றவை இலக்கிய மேற்கோள் என்ற தனிப்பிரிவில் தரப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளக் கோருகிறேன்.(எ. கா.) அப்பா, அம்மா))
- ஒரு சமக்குறியீடு கொண்டு அமைவது அழகாக இருக்கிறது. அதனை சில நிமிடங்களில் .cssமாற்றத்தை ஏற்படுத்தி அனைத்து பக்கங்களிலும், வேண்டும் பட்டையையும், அதன் நிறத்தையும், தொகு வசதியுடன் கொண்டு வர இயலும். எடுத்துக்காட்டாக, 5சமக்குறியீடுகள் இட்டுப்பாருங்கள். வெளிர்நிறமான பட்டையொன்று வரும். இது சோதனைக்கானது. முதலில் எண்ணைக்கையை கூட்ட வேண்டும். பிறகே பக்க அழகை கூட்ட பலருடன் உரையாடி ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். மற்றவை பிறகு..வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 02:10, 5 திசம்பர் 2013 (UTC)
தட்டச்சு செய்வதெப்படி?
[தொகு]அழகி மென்பொருள் சரியாக ஒத்துழைப்பதில்லை...புகுபதிகையானவுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இலத்தீனிய வரிவடிவுக்கு மாறமுடியவில்லை...மாற்று? --Jambolik (பேச்சு) 18:58, 6 திசம்பர் 2013 (UTC)
- அழகியில் எந்த முறையில் நீங்கள் தட்டச்சுகிறீர்கள்? நான் வின்டோசில் எ-கலப்பையைப் பயன்படுத்துகிறேன். பெரும்பாலும் லினக்சில் இயங்குவதால் அதில் எந்த தடைகளும் வருவதில்லை. நீங்கள் எந்த இயக்குதளத்தில், எந்த முறையில் தமிழை தட்டச்சுகிறீர்கள்? --தகவலுழவன் (பேச்சு) 02:10, 7 திசம்பர் 2013 (UTC)
- ஏதோ, இணையத்தில் பிரச்சினை போலிருக்கிறது! சுமார் பத்து நாட்களாக இருந்த பிரச்சினை இப்போது இல்லை!..நான் விண்டோஸ் 7-ல் அழகி V6.0-Build 6.3.1 -ஐ தரையிறக்கம் செய்து Non -unicode edit-ல் எழுத்து மொழிப்பெயர்ப்பில் தட்டச்சு செய்கிறேன்...விக்சனரியில் புகுபதிகை ஆனவுடன் F10 ஐ சொடுக்கினால் சிவப்பு நிறத்திற்கு அழகி icon மாறும்போது தமிழ் எழுத்துகளும், மறுபடியும் சொடுக்கி நீல நிறத்திற்கு மாறும்போது இலத்தீன் எழுத்துகளும் வரும்..கடந்த சில நாட்களாக நீல நிற icon உபயோகத்திலிருந்தபோதிலும் வேறுவிதமான தமிழ் எழுத்துக்களே வந்தன...--Jambolik (பேச்சு) 20:00, 8 திசம்பர் 2013 (UTC)
- நீங்கள் தமிழில் எழுத்துப்பெயர்ப்பில் தட்டச்சு செய்ய அதைவிட எளிமையான வழி இங்குள்ளதே.அதனை முயன்று இருக்கிறீர்களா?ஏதாவது தடை உங்களுக்கு அதில் உள்ளதா? நீங்கள் பிறரின் கணினியில் அமர்ந்தால் கூட தட்டச்சு செய்வதில் எந்த தடையும் வராது. அழகி போன்ற இடைநிலை மென்மிய நிறுவல் செய்யாமலேயே தட்டச்சு செய்யலாமே? இதனை சோதிக்க,
- முதலில் அழகி போன்ற செயலியின் இயக்கத்தின் நிறுத்துங்கள்.
- இப்பொழுது உங்கள் கணினி ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்வதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்
- இந்த இணையபக்கத்தின் இடபக்கமுள்ள பற்சக்கரம் போன்ற அமைப்பைச்சொடுக்குங்கள்.அப்பொழுது,
- தட்டச்சுகருவியை செயலாக்கு என பச்சைநிற பட்டை ஒன்று வரும். அதனைச் சொடுக்கவும். அப்பொழுது
- தோன்றும் பட்டியலில் எழுத்துப்பெயர்ப்பு என்ற முதல் தெரிவை தெரிவு செய்து கொள்ளவும்.
- அமைப்புகளைப் பயன்படுத்து என்ற ஆழியை அழுத்திய பிறகு, அந்த சாளரத்தை மூடிவிடுங்கள்.
- இப்பொழுது தமிழில் எழுத்துப்பெயர்ப்பு முறையால் எழுதலாம்.
- ஆங்கிலம் வேண்டுமெனில், தட்டச்சுப்பலகையின் Ctrl என்ற விசையை முதலில் அழுத்திக்கொண்டு, பிறகு M என்ற விசையை அழுத்தவும்.
- இப்படியாக தமிழ், ஆங்கிலம் என வேண்டும் தட்டச்சு உள்ளீடுமுறையை நீங்கள் செய்யலாம். ஒவ்வொரு முறையும் Ctrl+M அழுத்தும்போது ஒரு சிறிய குறிப்பு தட்டச்சுபலகைபடத்துடன், இத்தொகுத்தல் சாளரத்தில் தோன்றி மறையும் என்பதையும் கவனிக்கத்தவறாதீர்கள்.
இதில் ஏதேனும் ஐயம் இருப்பின் கூறவும். மீண்டும்சந்திப்போம்.வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:53, 9 திசம்பர் 2013 (UTC)
- மிக்க நன்றி..தெரிந்துகொண்டேன்...ஆனால் தமிழ் விக்சனரியிலேயே தெலுங்கு, இந்தி, சமசுகிருதம் போன்ற மொழிகளில் சொற்களைச் சேர்க்கவேண்டுமெனில் எப்படிச் செய்வது?--Jambolik (பேச்சு) 00:07, 10 திசம்பர் 2013 (UTC)
- தமிழ் என்ற ஆழியை(button)அழுத்தித்தான் எழுத்துப்பெயர்ப்பை தெரிவு செய்தீர்கள். அல்லவா? அதற்கு அடுத்து ஆங்கிலமும், அதற்கு அடுத்து இந்தியும் இறுதியாக முற்று புள்ளிகள் உள்ள ஒரு ஆழியும் இருக்கும் அதற்குள் சென்று முன்பு போலவே வேண்டும் மொழியை தெரிவு செய்து கொள்ளுங்கள். இந்திய மொழிகள் எதில் வேண்டும் புதிய சொற்களை உருவாக்க இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளவும். ஒரு குறிப்பிட்ட சொல்லுக்குரியவைகளை இதுபோல உருவாக்கிக் கொண்டால், பிறகு அதனை மேலும் சிறப்பாக எளிமையான நிரல் மாற்றம் மூலம் அந்த ந்த மொழிதிறனாளர்களைக் கொண்டு மேம்படுத்தலாம். முதலில் இல்லாததை உருவாக்க வேண்டும். அப்புறம் இருப்பதை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது முறையாக வைத்துள்ளேன். மற்றவை உங்கள் எண்ணம் கண்டு. உங்கள் பயனர் பக்கத்தில், உங்களைப்பற்றி குறிப்பொன்று எழுதக் கோருகிறேன். மிகச்சிறப்பாக சொற்களை உருவாக்கும் உங்களை பற்றி அறிய ஆவலுடன்...--தகவலுழவன் (பேச்சு) 01:29, 10 திசம்பர் 2013 (UTC)
- Jambolik, வணக்கம். நானும் அழகி மென்பொருளையே தமிழில் தட்டச்சு செய்ய பயன்படுத்துகிறேன். இதுவரை எனக்கு எந்த சிரமமும் ஏற்பட்டதில்லை. அழகி மென்பொருளை உருவாக்கிய பா. விசுவநாதன் அவர்கள் உங்களின் இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு முடிந்தால் உங்களுக்கு உதவுமாறு என்னைக் கேட்டுள்ளார். நீங்கள் நேரடியாக அவருக்கு எழுதலாம். அவர் கண்டிப்பாக பதிலளிப்பார். அவரது மின்னஞ்சல் noblehearted@gmail.com - Uksharma3 (பேச்சு) 16:06, 3 பெப்ரவரி 2014 (UTC)
- மிக்க நன்றி...தற்சமயம் அழகி மென்பொருளைப் பயன்படுத்துவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் எழவில்லை...ஏதாவது உண்டானால் தாங்கள் தெரிவித்ததைக் கவனத்தில் கொள்வேன்...பா. விசுவநாதன் அவர்கட்கும் மிக்க நன்றி--Jambolik (பேச்சு) 17:09, 3 பெப்ரவரி 2014 (UTC)
பொருளடக்கம் அட்டவணையை எவ்வாறு தோன்றச் செய்வது?
[தொகு]அறிமுகம்
[தொகு]ஒரு முறை தெரிவித்தீர்கள்! சரியாக வரவில்லை...தட்டச்சு செய்வதெப்படி என்பதை மிக விவரமாகத் தெரிவித்தாற்போல இதையும் சிரமம் பாராது மீண்டுமொரு முறை விளக்க முடியுமா?--Jambolik (பேச்சு) 20:38, 10 திசம்பர் 2013 (UTC)
- Jambolik! என்பவர் யார் என்பதில் மிகுந்த ஆர்வம் உடையவனாக இருக்கிறேன். நிச்சயம் இது உங்கள் புனைப்பெயர், வாழ்க்கையில் மிகுந்த அனுபவம் உடையவர். நன்கு கல்விபயின்றவர் என்று மட்டுமே புரிகிறது. இங்கு பங்களிப்பவரில் நான் சிறியவன். உங்களைப்பற்றி பிறரிடம் பேச எண்ணுகிறேன். அதனால் கேட்கிறேன். தயவு செய்து உங்களைப்பற்றி உங்கள் பக்கத்தில் எழுதுங்கள். நாம் ஓரிருவர் தான் இங்கு செயல்படுகிறோம் நம்மையே நமக்குத் தெரியவில்லையென்றால் எப்படி? நான் உங்களைப்போன்று ஆழமாக ஒரு கட்டுரையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மேலோங்கினாலும், குறைந்த நேரமே எனக்குக்கிடைக்கிறது. அதிக ஆசையால் அதிக சொற்களை செய்து விட்டு ஓடிவிடுகிறேன்.
அடிப்படைத்தேவை
[தொகு]எடுத்துக்காட்டாக ஒரு பக்கத்தைத் தாருங்கள் என்றால் நான் உங்களின் பக்கத்தையே காட்ட எண்ணுகிறேன். ஒரு அகரமுதலிக்கான பக்கம் என்ற வகையில் உங்கள் பக்கம் மிக அருமை. அற்பதம். பல பக்கங்களை மேலாண்மை செய்யவும், பிற மொழி விக்சனரியினரும் கணினி நிரல் வழியே நமது வளங்களைப் பயன்படுத்தவும் இந்த பொளுடக்கம் தோன்றும் முறை மிகமிக அவசியம். அலைப்பேசி தொழில்நுட்பத்தை கையாளவும் இந்த பொருளடக்க வடிவம் மிக மிக முக்கியம். அவ்வப்போது பல நுட்பங்கள் அவ்வப்போது மீடியாவிக்கி நிரல் நுட்பத்தில் செய்வர் அது தோன்றவும் இந்த பொருளடக்க வடிவ முறை தவிர்க்க முடியாதது ஆகும்.
பொருளடக்கம்
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவையோ அல்லது பிற மொழி விக்சனரிகளையோ நாம் கவனித்தோம் என்றால் தலைப்பொன்றை சமக்குறியீடுகள் கொடுத்தே எழுதி இருப்பர். எடுத்துக்காட்டாக, மொழி, ஒலிப்பு, பொருள், மொழிபெயர்ப்புகள் போன்றவைகளை அவர்கள் பயன்படுத்தியிருந்தால், இந்த சொற்களுக்கு முன் சமக்குறியீடுகள் கொடுத்தே செய்திருப்பர். அப்பொழுதே இந்த பொருளடக்க அட்டவணைத்தானகவேத்தோன்றும், இந்த சமக்குறியீடுகள் இல்லாமலேயே அழகாக வடிவமைத்துள்ள மொழியினரும் உள்ளனர். பிரான்சியம், கொரியம் போன்ற மொழிகளைச் சொல்லலாம். அவர்களின் நிரல் மேலாண்மை அதிகம் என்பதால் அதனை செய்துள்ளனர். பின்புலமாக செயல்படும் அவர்களது நிரல்வன்மை அசத்துகிறது. நாம் பல நிரலர்களைக் கொண்டு இருந்தாலும், அவர்கள் விக்சனரியில் கவனம் செலுத்தாவண்ணம் இருக்கின்றனர். நாளை அவர்கள் இங்கு செயல்பட்டால், மேற்சொன்ன கொரியம் போன்ற மொழியினரின் அமைப்பைவிட சிறப்பாக அமைக்கவும் இந்த பொருளடக்க அட்டவணை முதல் தேவை ஆகும். எனவே, இந்த சமக்குறியீடுகளைப் பயன்படுத்துவதே முதல் அடிப்படை. பிறகு அழகை ஒன்று கூடி பேசி கொண்டுவரலாம்.
நீங்கள் பயன்படுத்தும் வடிவம், முன்பு பலரும் ஒன்று கூடி ஏற்படுத்தியதே. அப்பொழுது நானும் உரையாடினேன். ஆனால் தற்போது இருக்கும் நிரல் அறிவு அன்று இல்லை. அதனால் உங்களிடம் இப்ப கூறுவதை, அன்று கூறவில்லை. கூறியிருந்தால், சிறப்பாக அமைக்க அவர்கள் அடிகோலியிருப்பர். அன்றை பேசி முடிவு எடுத்த வடிவத்தை, அப்படியே பொருளடக்கம் வரும் வடிவத்திற்கு மாற்றுவது கடினம். தற்போது நீங்கள் பயன்படுத்தும் நிறப்பட்டை வடிவம் உள்ள சொற்கள் அனைத்தையும், பொருளடக்கம் தோன்றும் வடிவத்திற்கு மாற்றுவது மிகுந்த பணியடர்வைத்தரும். ஒவ்வொரு சொல்லாக, அதுவும் ஒவ்வொரு சொல்லின் உள்ள பட்டைகள் ஒவ்வொன்றாக மாற்றணும். இதற்கு பலநாட்கள் பலமணிநேரம் தேவைப்படும். இதனை ஏற்கனவே சோதித்துப் பார்த்துள்ளேன். எப்படிஎன்றால், பொருள். மொழிபெயர்ப்புகள், ஒலிப்பு என்பனவற்றிற்கு,5சமக்குறியீடுகள் போட்டு அமைத்துப்பாருங்கள் அவை நிறத்தோடும், தொகு வசதியோடும், பொருளடக்க அட்டவணையோடும் தோன்றும். ஆனால், நான்கு, நான்குக்கும் மேற்பட்ட தலைப்புகள், சமக்குறியீடுகளுடன் இருந்தால் இந்த நிறப்பட்டைத் தானகவே தோன்றும். எத்தனை கோடி சொற்கள் சமக்குறியீடுகள் அடிப்படையில் இருந்தாலும், 5நிமிடத்தில் முன்பு உரையாடி முடிவு எடுத்த வடிவத்திற்கு மாற்றச் செய்யலாம் என்பதே உண்மை.அனைவரும் ஒன்று கூடி, இதன் அவசியத்தை ஓங்கச்செய்யும் நாள் தொலைவில் உள்ளது. இப்பொழுது அண்மையில் நீங்கள் கேட்டதால் மகிழ்கிறேன். நீங்களும் அன்று திறம்பட உரையாடமுடியும் என்பதால், இதன் அவசியத்தை, ஒரளவு இங்கு விவரித்துள்ளேன்.
எண்ணமுடிவு
[தொகு]ஓரளவு நீங்கள் கேட்ட கேள்வியின் நோக்கத்தையும், அத்தியாவசத்தையும், நமது கடப்பாடுகளையும், இதனை ஒரு மாதிரியாகவும் அமைத்து தெரிவித்துள்ளேன். ஒரு சமக்குறியீடு மட்டுமே கொண்டு, அமைக்காதீர்கள். அதனை அழகை, 5சமக்குறியீடுகள் இட்டால் வருமாறோ, அல்லது இரண்டு சமக்குறியீடுகள் அமைத்தால் வருமாறோ வேண்டுவன மாதிரி அமைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு அதிக விவரங்கள் தேவையெனின், எனது எண்ணுக்கு(90 95 34 33 42 ஏர்செல்) இரவு 7.30 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும். உரையாடும் போதே, நாம் மேம்படுவோம். தட்டச்சு செய்யும் போது எனது மணிக்கட்டுகளில் பணியழுத்தம் காரணமாக வலி தோன்றுகிறது. மீண்டும் சந்திப்போம் வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:11, 11 திசம்பர் 2013 (UTC)
- நன்றி ஐயா...நீங்கள் சொன்னபடி முயற்சிக்கிறேன்...தகுந்த வலுவான காரணங்கள் இல்லாமல் நான் சேர்த்த சொற்களை எதிர்வரும் காலத்தில் விக்சனரியிலிருந்து நீக்காமலிருந்தால் சரி..--Jambolik (பேச்சு) 14:18, 11 திசம்பர் 2013 (UTC)
- மதிப்பிற்குரிய இனியவரே! எதையும் எதிர்காலத்திலோ, இப்பவோ, பிறகோ நீக்கும் எண்ணமோ, வற்புறுத்தலை செய்யவோ எண்ணவில்லை. முடிந்தவரை பலரையும் நெருங்கும், வழிமுறையையே பின்பற்றுகிறேன். தவறெனின் எடுத்துக்கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வோர் சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் என்பதை எண்ணி, இடிக்கும் கேளீராக நீங்கள் இருக்க வேண்டுகிறேன். மீண்டும் சந்திப்போம்,வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 17:06, 11 திசம்பர் 2013 (UTC)
சரி செய்யுங்கள்
[தொகு]தவறுதலாக கொட்டை முத்தெண்ணெய் எனும் பக்கத்தின் தலைப்பில் ஒரு முற்றுப்புள்ளியைச் சேர்த்துவிட்டேன்...அவ்வாறே முத்துக்கொட்டையெண்ணெய் எனும் பக்கத்தின் தலைப்பில் எழுத்துப்பிழை ஏற்பட்டுவிட்டது...இவ்விரண்டுப் பிழைகளையும் எவ்வாறு சரி செய்வதென்றுத் தெரியவில்லை...தயவுசெய்து சரி செய்யுங்கள்...அந்தந்த உரையாடல் பகுதிகளில் கோரிக்கை விடுத்திருக்கிறேன்...தவறுகளுக்கு வருந்துகிறேன்...--Jambolik (பேச்சு) 15:17, 14 திசம்பர் 2013 (UTC)
நிகழ்படங்கள்
[தொகு]நிகழ்படங்களை கட்டுரைகள் உருவாக்கும்போது இணைப்பது எப்படி?--Jambolik (பேச்சு) 17:16, 31 திசம்பர் 2013 (UTC)
- நிழற்படங்களைப் போலவே, இணைக்கப்பட வேண்டும். (எ. கா.) பகுப்பு:நிகழ்படங்களுள்ளவை --தகவலுழவன் (பேச்சு) 02:32, 1 சனவரி 2014 (UTC)
பாற்கடற் மகள்
[தொகு]அருமையான பதிவுகளைத் தொடர்ந்து இட்டுவருகீறீர்கள். அதற்காக எனது பாராட்டும் நன்றியும். பாற்கடற் மகள் என்பதில் ற் வரக்கூடாது, வலி மிகாது. பாற்கடல் மகள் என்று வரவேண்டும் என நினைக்கிறேன். பழ.கந்தசாமி (பேச்சு) 18:55, 2 சனவரி 2014 (UTC)
- நன்றி...நான் தமிழ் இலக்கணம் படிக்கவில்லை...ஆகவே எழுதும்போது வலி மிகும், வலி மிகா இடங்கள் தெரியாது...ஆயினும் கடற்படை, கடற்கரை, கடற்கன்னி, கடற்புலி, கடற்காற்று, கடற்கோள் போன்ற சொற்களைப் பார்த்த அனுபவத்தில் பாற்கடற் மகள் என்று எழுதினேன்...தவறு என்றால் மாற்றிவிடவும்...--Jambolik (பேச்சு) 19:27, 2 சனவரி 2014 (UTC)
- மாற்றிவிட்டேன். (குறிப்பு: இரண்டு சொற்களை இணைக்கும்போது முதல் சொல்லின் இறுதி ல் ஆக இருந்து, வருஞ்சொல்லின் முதலெழுத்து க, ச, ட, த, ப, ற இவற்றில் தொடங்கினால் மட்டுமே, ல் ற் ஆகும். முதலெழுத்தின் கடைசி எழுத்து ள் ஆக இருந்து வருஞ்சொல்லின் முதலெழுத்து க, ச, ட, த ப, ற இவற்றில் தொடங்கினால், ள் ட் ஆகும். )பழ.கந்தசாமி (பேச்சு) 22:20, 2 சனவரி 2014 (UTC)
- நன்றி..நான் இலக்கணப்பிழை செய்யும்போதெல்லம், பாடம் எடுங்கள், உங்களுக்கு நேரம் இருந்தால்தான்!--Jambolik (பேச்சு) 22:47, 2 சனவரி 2014 (UTC)
தட்டச்சு செய்வதில் சிக்கல்
[தொகு]விக்சனரி இணையபக்கத்தில் தமிழில் தட்டச்சு செய்ய இடபக்கமுள்ள பற்சக்கரம் போன்ற அமைப்பு சில நாட்களாகத் தெரிவதில்லை...இது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையா? அல்லது என்னிடம்தான் ஏதோ பிழையுள்ளதா?...மேலும், நவதுர்கைகளைப் பற்றி பங்களித்திருக்கிறேன்!...இதுபோல ஒரே தெய்வத்தின் அநேக திருநாமங்களை பதிவேற்றுவதில் விக்சனரிக்கு ஏதேனும் மாறுபட்ட எண்ணம் இருக்கிறதா?..அதாவது வேண்டாமே என்பது போன்றக் கருத்து!--Jambolik (பேச்சு) 15:23, 22 சனவரி 2014 (UTC)
- பெரும்பான்மையான நேரங்களில் நான் உபுண்டு(கேடீஇ) இயக்குதளத்தைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் சுட்டிய விக்கிய இணைய தட்டச்சு வசதியைப் பயன்படுத்துவதில்லை. மீடியாவிக்கியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அவற்றினை இங்கு Tech News: 2014-04 என்ற தலைப்பில் காணலாம். நீங்கள் வின்டோசைப் பயன்படுத்துவதாக இருந்தால், பத்துக்கும் மேற்பட்ட இந்தியமொழிகளையும், தமிழில் உள்ள பலவகை உள்ளீடு முறைகளையும் என்.எச்.எம்.எழுதி கருவியை நிறுவிக்கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுகல்விக்கான பதிவுகளை செய்யின் சிறப்பாக இருக்கும். இறையியல் குறித்த பதிவுகளை செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. நீங்கள் மிக அருமையான பதிவுகளை படங்களுடன் செய்கிறீர்கள் என்பதால் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். --தகவலுழவன் (பேச்சு) 01:22, 23 சனவரி 2014 (UTC)
பகுப்புகளைக் குறித்து விளக்கம் தேவை
[தொகு]விக்சனரியில் இருக்கும்
- பகுப்பு:தமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்
- பகுப்பு:தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்
- பகுப்பு:வடசொல்
என்னும் மூன்று பகுப்புகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன? ஒரே பொருளை அதாவது சமசுகிருதச் சொற்கள்/சொல் என்பதையேச் சுட்டுகிறது என நினைக்கிறேன்...அப்படியானால் மூன்று பகுப்புகள் தேவையில்லைதானே?...கருவச் சொற்கள் என்றால் என்ன?--Jambolik (பேச்சு) 15:57, 18 பெப்ரவரி 2014 (UTC)
- இதுபோன்ற செய்திகளை, அனைவரும் பார்க்கும் பகுதியான, விக்சனரி:ஆலமரத்தடி என்ற பொதுபகுதியில் இடவும். அப்பொழுது தான் அதனை கண்டு, பலரும் பதிலளிக்க ஏதுவாகும். உங்கள் பகுதிக்குள்ளேயே தெரிவிப்பதால், பலரின் கவனத்தை ஈர்க்க முடியாது. ஏனெனில், பலர் ஆலமரத்தடி மட்டும் நோக்கி விட்டு சென்று விடுவர்.
- மூன்று பகுப்புகளிலும் உள்ள வரலாற்று பக்கங்களைப் பார்த்தேன். அதனை மூவர் வெவ்வேறு காலங்களில் உருவாக்கியுள்ளனர். அவர்களது பேச்சு பக்கம் சென்று ஆலோசிக்கலாம். அல்லது உங்களது எண்ணங்களை/முடிவுகளை ஆலமரத்தடியில் கூறுங்கள். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 19:12, 21 பெப்ரவரி 2014 (UTC)
மணல்தொட்டி - எண்ணம்
[தொகு]இப்பகுதியில், உங்களின் மேலான எண்ணங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 18:11, 25 பெப்ரவரி 2014 (UTC)
- தங்களது கருத்தினை அறிந்தேன். நன்றி. பிறரின் எண்ணங்களையும் அறிந்த பிறகு மாற்றி விடுவோம். ஆதரவு என்ற இடத்தில் எதுவும் எழுதாமல், கையொப்பம் மட்டும் இடவேண்டும்.--தகவலுழவன் (பேச்சு) 00:14, 26 பெப்ரவரி 2014 (UTC)
நவீன தமிழ் எழுத்துக்கள்
[தொகு]- ஃப் (f), ஃஜ் (z) ஆகிய நவீன தமிழ் எழுத்துக்களை விக்சனரியில், கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதைப்போல பயன்படுத்தலாமா?--Jambolik (பேச்சு) 21:42, 1 மார்ச் 2014 (UTC)
- புதிய எழுத்துக்களைப்பற்றிக் கேட்டேன்...ஆங்கிலத்தில் F, G ஆகிய ஒலிகளுக்கு தமிழில் முறையே ஃப, ஃஜ என்ற எழுத்துக்கள் தமிழ் அச்சு ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன...இவை பொதுவாக ஆங்கில சொற்களை/அந்த ஒலிகளை தமிழ் எழுத்துக்களில் எழுதும்போது பயனாகின்றன...எடுத்துகாட்டாக father, formula, zero, zebra ஆகிய சொற்களை அதே ஒலிப்புடன் தமிழில் எழுதவேண்டுமானால் முறையே ஃபாதர், ஃபார்முலா, ஃஜீரொ, ஃஜீப்ரா என்று எழுதப்படும்...அகவே இந்த எழுத்துக்களை விக்சனரியில் உபயோகிக்கலாமா என்றுக் கேட்டேன்...--Jambolik (பேச்சு) 23:19, 3 மார்ச் 2014 (UTC)
- தங்கள் விளக்கத்திற்கு நன்றி. பிறரிடமும் கருத்துக்கேட்டு செயல்பட வேண்டுகிறேன். குறிப்பாக, பேராசிரியர் செல்வா அருமையான விளக்கம் தருவார். அவரது பேச்சுப்பக்கத்தில் கேட்டுப்பார்க்கவும். என்னைப் பொறுத்தவரையில், சொல்லொன்றின் ஒலிப்புமுறையை வேறொரு சொல்லாக கருத என்மனம் ஒப்பவில்லை. காரணம், பிறமொழி சொல்லை, தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டுமேயொழிய அதனை ஒலிப்புமாற்றம் செய்வது, இருமொழியையுமே சிதைப்பது ஆகும். ஒரு மொழி உருவாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியதோ! தெரியவில்லை. ஒரு சொல்லை மொழியாக்கம் செய்ய திறன் இல்லாத பல அச்சு ஊடக எழுத்தாளர்கள், அவர்கள் சூழ்நிலையின் காரணமாக, அப்போதைக்கு ஒலிபெயர்ப்பு செய்துவிடுகின்றனர். மொழியாக்கத்தை அவர்களைப் போன்ற சமூக உணர்வு உள்ளவர்கள் வளர்க்க வேண்டும் என்று ஏக்கம் கொள்கிறேன். நம் விக்கியைப் பொறுத்த மட்டில் பல சொற்களை அவ்வப்போது மொழியாக்கம் செய்கின்றனர். புதுச்சொற்களை மொழியாக்கம் செய்யும் போது அதன்மூலத்தை அடைப்புக்குறியினுள் தருவது சிறப்பு என பல மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, அத்தகைய பதிவுகளை நாம் செய்ய வேண்டாம் என்றே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். --தகவலுழவன் (பேச்சு) 06:08, 4 மார்ச் 2014 (UTC)
- ஃப என்னும் எழுத்தை திரு.சோ.இராமசாமி உண்டாக்கி தன் 'துக்ளக்' பத்திரிகையில் அறிமுகப்படுத்தினார் என்று நினைக்கிறேன்...ஃஜ எழுத்தைப்பற்றித் தெரியாது...இந்த இரண்டு எழுத்துக்களும் அழகி தட்டச்சு மென்பொருளில் இருக்கின்றன...ஒரு தகவலுக்காகத்தான் இதைச் சொல்லுகிறேன்...--Jambolik (பேச்சு) 15:51, 4 மார்ச் 2014 (UTC)
சோதனைக்கு உதவுக
[தொகு]எனது விக்கிப்பங்களிப்புகளை நீங்கள் இங்கு காணலாம். இதன் மூலம் எனக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு எனது நண்பர்களின் துணையால், விக்சனரியில் பங்களிப்புகளை, யாவரும் எளிதாகச் செய்ய, விக்சனரித் தொகுப்பான் ஒன்றினை உருவாக்கி வருகிறேன். அதனை நீங்களும் பரிசோதித்து, உங்கள் எண்ணங்களைக் கூறினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு விருப்பம் உண்டா? விருப்பம் எனில்,
- நீங்கள் புதிய சொல்லொன்றை உருவாக்கும் போது, அச்சொல் இங்கு இருக்கிறதா? இல்லையா? என எப்படி முடிவு எடுக்கிறீர்கள்?
- எந்த தரவகத்தினைப் பயன்படுத்துகிறீர்கள்? நான் சென்னைப்பேரகரமுதலி இணையப் பதிப்பைப் பயன்படுத்துகிறேன். ஏனெனில், அது கிரியேட்டிவ் காமென்சின் கீழ் இருப்பதால் அதன் தரவுகளை எடுத்துப்பயன்படுத்துவதில் எந்தவித சட்டச்சிக்கலும் நமக்கு ஏற்படாது என்று எனக்கு வழிகாட்டினர். நீங்கள் எதனைப் பயன்படுத்திகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
- நீங்கள் பெரும்பாலும் எந்நேரத்தில்(இந்திய நேரம்) பங்களிப்பு செய்வீர்கள்? ஆவலுடன்..வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 08:04, 10 மார்ச் 2014 (UTC)
- விக்சனரியில் 'தேடு' என்ற இடத்தில் புதிய சொல்லை இட்டு, சொடுக்கி அந்தச்சொல் விக்சனரியில் உள்ளதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வேன்...
- சென்னை பல்கலை.பேரகராதி, நா.கதிர்வேல் பிள்ளை அகராதி, ஆல்பின், வின்சுலோ, அகரமுதலி ஆகிய அகராதிகள், மற்ற இணைய அகராதிகளைப் பார்த்தல், கூகுல் செய்தல் ஆகிய செயல்களால் சொற்களையும், பொருட்களையும் தேடுகிறேன்...
- ஆரம்பத்தில் பெரும்பாலும் நான் படித்த, எழுதிய, கேட்ட சொற்களையே நினைவிலிருந்து பதிவேற்றம் செய்திருக்கிறேன்...இன்னும் அத்தகைய சொற்களின் அட்டவணை இருக்கிறது...ஒரு சொல்லின் பொருளைத்தேடும்போது வேறு புதுச்சொற்கள் எளிதாக பதிவேற்றக் கூடியவாறுக் கிடைக்குமானால் அவைகளையும் பதிவேற்றியிருக்கிறேன்...
- பெரும்பாலும் இந்திய நேரப்படி இரவு வேளைகளில்தான் அவ்வப்போது பங்களிப்பு செய்வேன்... பெரியதாக செய்யவேண்டுமென்று அவா இருந்தாலும், இயலுவதில்லை..--Jambolik (பேச்சு) 08:49, 15 மார்ச் 2014 (UTC)
- பதிலுக்கு நன்றி. நீங்கள் சொன்னதையே நானும் செய்தேன். பின்பு, பலரிடம் பேசியதில், சிறிய நுட்பம் ஒன்றை அறிந்தேன். அதனைக் கொண்டு வேறு விக்கிக்கருவிகொண்டு, இங்கு இல்லாதச் சொற்களை அறிந்தேன். அக்கருவியைப் பற்றி சிலருக்கு சொல்லிக் கொடுத்தபோது, அனைவருக்கும் அது சிறந்தது அல்ல என்பதை உணர்ந்தேன். அவ்வசதியை சென்றமாதம், நம் விக்கித்தொகுப்பானிலேயே செய்ய வழிவகை, என் நண்பரால் செய்தேன்.35நொடிகளே ஓடக்கூடிய படிமம்:updation2-Wiktionary-toolbarPROJECT-buttons.webm இந் நிகழ்படத்தைக் காணவும். இவ்விதம் பல சொற்களுக்கு அடைப்புக்குறிகள் இட்டு, விக்கியில் முன்தோற்றம் காணும் போது, சொற்கள் இருந்தால் நீலமாகவும், இல்லையெனில் சிவப்பாகவும் தெரியும். அதனைக் கொண்டு நமக்கு வேண்டியதை இந்நிரல் பிரிக்கும். நீலச்சொற்கள் கீழ்புறம் தானாகவே போய்விடும். இதனை இன்னும் மேம்படுத்தி வருகிறோம்.விரைவில் பலவற்றையும் இவ்விதம் அமைப்போம். சோதனைகளுக்கு பிறகு, அவற்றை இங்கு நிலையான ஆழிகளாக(buttons), விக்கித்தொகுப்பானில்(wiki editing window) ஆக்குவோம். மீண்டும் நல்லசேதியோடு சந்திக்கிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 12:28, 15 மார்ச் 2014 (UTC)
ஆந்திர உணவுகள்
[தொகு]விதம் விதமான ஆந்திர உணவுகளின் பதிவுக் கண்டு மகிழ்ச்சி. அதையெல்லாம் உண்ண வேண்டும் போலுள்ளது! புறமொழிச் சொற்கள் என்பது போல, தெலுங்கு வழிச்சொற்கள் என்ற பகுப்பை இடலாமா? உங்களுக்கு தெலுங்கு மொழி எழுதப்படிக்கத் தெரியுமா? ஆவலுடன்--தகவலுழவன் (பேச்சு) 13:59, 17 மார்ச் 2014 (UTC)
- நான் விக்சனரிக்கு வந்த ஆரம்ப நாட்களில் பதிவு செய்த சொற்கள் இவை...அத்தகைய பதிவுகளை மீளாய்வு செய்து, வேண்டிய இடங்களில் படங்களை இணைத்தும், பகுப்புகள் இட்டும், தகுந்தவாறு விளக்கங்களை விரிவுபடுத்தியும் வருகிறேன்...இட்லி, வடை, தோசை, உப்புமா என்றால் எல்லா மொழிகளிலும் அப்படியே ஒலிக்கப்படும்...இவை தமிழகத்தில் தோன்றியதால் தமிழில் பெயர் அவ்வளவுதான்...மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கவும் ஏலாது..பூரி, சப்பாத்தி, குருமா, போண்டா, பிரியாணி, புலவு, பஜ்ஜி, ஜாங்கிரி, ஜிலேபி, அல்வா என பிறமொழியில் பெயருள்ள உணவுகளை அதே பெயர்களுடன் தமிழகத்தில் பயன்படுத்துகிறோம்...விக்சனரியிலும் உள்ளன... தெலுங்குப் பெயருள்ள ஆந்திர உணவுப் பொருட்களைப் பற்றி நான் பதிவேற்றம் செய்தபோது, கீழ்கண்டவாறு விக்சனரியிலிருந்து செய்தி வந்தது...அன்றிலிருந்து தெலுங்கு நாட்டு உணவுகளைப்பற்றி பதிவேற்றம் செய்வதை, வாதம் செய்ய விருப்பமில்லாமல், நிறுத்திவிட்டேன்...சம்பந்தப்பட்ட சொற்கள் தமிழ் விக்சனரியிலிருந்து நீக்கப்படும் என்று நினைத்தேன்...அனால் அப்படி நடக்கவில்லை...
- "ஜம்போ, வட்டார வழக்குகள் தமிழ் அகராதியில் இருப்பது சிறந்தது, ஆனால் அனைத்தும் தமிழ் சொற்களாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ் அகராதியில் proper தெலுங்கு சொற்களைச் சேர்ப்பதில் எனக்கு ஏற்பு இல்லை :-)"
புரிந்துக்கொண்டேன்.. தங்களின் பெயர் ? நன்றி.--Jambolik 17:12, 8 சனவரி 2012 (UTC
- எனக்கு தெலுங்கு மொழியில் பாண்டித்தியம் இல்லையெனினும் ஒரு சாமானியனாக அந்த மொழியில் நன்றாக பேச,எழுத, படிக்கத் தெரியும்...குழந்தைப்பருவத்திலிருந்தே நான் ஓர் இருமொழியாளன்...பள்ளியில் படித்தது தமிழே...தெலுங்கு வழிச்சொற்கள் என்று ஒரு பகுப்பு இருந்தால் அதில் சொற்கள் அதிகம் இல்லாது போகலாம்... --Jambolik (பேச்சு) 16:03, 17 மார்ச் 2014 (UTC)
- இனி, பதிவேற்றாமல் விட்ட ஆந்திர நாட்டு உணவுகளைப்பற்றியும், பிற இந்திய உணவு வகைகளைக் குறித்தும் பதிவேற்றலாமா?...ஆனால் அவற்றின் பெயர்கள் தமிழில்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்கப்போவதில்லை!--Jambolik (பேச்சு) 21:42, 18 மார்ச் 2014 (UTC)
பிறமொழி உணவுகள்
[தொகு]- விரிவான உங்கள் எண்ணங்களுக்கு நன்றி. //சேர்ப்பதில் எனக்கு ஏற்பு இல்லை// என்ற மேற்கூறிய எண்ணங்களை யார் வெளிப்படுத்தினார்கள் என்று அறிய விரும்புகிறேன். தமிழகத்தில் இருக்கும் உணவுகள் பல, பிற மொழி, பிற நாட்டு உணவு வகைகளைப் போலவே இருப்பதை பல நேரங்களில் அறிய முடிகிறது. அட டே இது தமிழ்நாட்டிலும் வேறு பெயரில் அல்லவா இருக்கிறது. என்று நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணர்ந்து இருப்பீர்கள். அத்தகையச் சொற்களை நீங்கள் பதிவேற்ற நான் விரும்புகிறேன். விளக்கப் பகுதியில் இது தமிழ் நாட்டு உணவுவகையான ...ஒத்தது என்று குறிப்பினைத் தருக. இதனால் நமது கலாச்சார ஒற்றுமை ஓங்கும். நீங்கள் சொல்வது போல, அந்நாட்டு பெயர்தான் சரி. ஆனால், அது அந்த குறிப்பிட்ட மொழியில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ருசியை அடிப்படையாகக் கொண்டு, இது தமிழ்நாட்டு வகை ஆனால், இந்த வேறுபாடு உண்டு என்று விளக்கப்பகுதியில் நீங்கள் எழுதமுடிந்தால், அது காலத்தையும் தாண்டி நிற்கும் பதிவுகளாக இருக்கும். நம் கலாச்சார ஒற்றுமையையும் வளர்க்கும். தெலுங்கு மொழி எழுதப்படிக்க தெரிந்ததில் மிக்க மகிழ்ச்சி. விரைவில் அது குறித்த திட்டத்தோடு சந்திக்கிறேன். மற்றவை உங்கள் எண்ணம் கண்டு. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 04:14, 19 மார்ச் 2014 (UTC)
- நன்றி தகவலுழவன் அவர்களே! "சேர்ப்பதில் எனக்கு ஏற்பு இல்லை" என்று சொன்னவர் யார் என்றுத் தெரியாது...அவர் கையொப்பம் இடவில்லை...உங்கள் பெயரென்ன என்று நான் கெட்டதற்கும் பதிலில்லை...ஆனால் அது அந்த குறிப்பிட்ட மொழியில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னீர்கள்...சரியாகப் புரியவில்லை... தமிழ்ப்படுத்தாமல் அந்தந்த மொழிகளில் ஒலிக்கப்படுவதைப்போலவே பதிவேற்றுங்கள் என்கிறீர்களா?...விக்சனரியின் தெலுங்கு மொழி திட்டத்திற்கு நான் பயனுடையவனாக இருப்பேன் என்பது சற்று சந்தேகத்திற்குரியதே!..ஆண்டில் பல மாதங்கள் விக்சனரியின் பக்கமே வரமாட்டேன்...என் நிலைமை அப்படி!--Jambolik (பேச்சு) 08:51, 19 மார்ச் 2014 (UTC)
- என்னை, தயவுசெய்து //அவர்களே// என்று அழைக்க வேண்டாம். தகவலுழவன் என்று அழைத்தாலே போதும். பால் என்பதற்கு தெலுங்கு பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. அதனை தலைப்பாக வைத்து தமிழில் சொல்ல தொடங்க வேண்டாம். அதுபோல, தமிழகத்தில் 'பால்கோவா' என்ற உணவுப்பொருள் உள்ளதல்லவா? அதற்குரிய தெலுங்குப்பெயரை தமிழில் எழுதி, சொற்களை உருவாக்க வேண்டாம். ஆனால், அதன் ருசியை போன்ற, ஆனால் வேறுருசியை தரும் வேறு பட்ட பால் உணவுப்பொருள் இருந்தால், அது தெலுங்கு மொழிக்காரர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம் உடையது என்றால், அதன் பெயரை அப்படியே தமிழில் வைத்து, வழக்கம் போல படமிட்டு, ஒரு சொல்லைத் தொடங்க விரும்புகிறேன். கையெழுத்துப் போடாமல் கருத்து எழுதிய பக்கத்தினைத் தரவும். ஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள வரலாறு என்ற தத்துலுக்குள் போய், அவர் பெயரைக் கண்டறியலாம். --தகவலுழவன் (பேச்சு) 11:20, 19 மார்ச் 2014 (UTC)
தெலுங்குச் சொற்கள்
[தொகு]அங்கே என்ற சொல்லுக்குரிய தெலுங்கு சொல், అక్కడ ஆகும். அச்சொல்லில் உள்ள சொல்வளம் என்ற பகுதியைக் காணவும். இச்சொற்களுக்கு உள்ள வேறுபாட்டையும், நெருக்கத்தையும் உங்களைப் போன்ற மொழி தெரிந்தவர்கள் தான், திருத்த முடியும். அல்லது சரி என்று கூற இயலும். இதுபோல சரி தவறு கொடுக்கப்பட்ட சொற்களில் இதுவே பொருத்தமானச் சொல் எனக் கூறினால் போதும். நீங்கள் விக்சனரியில் இருக்கும் போது, ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். நான் அட்டவணை வடிவில் கொடுத்து விடுகிறேன். நீங்கள் எதுவும் எழுதத் தேவையில்லை. சரியான சொல்லு நகல் எடுத்து, சரி என்ற சொல்லுக்கான கட்டத்தில் ஒட்டினால் போதும். உங்களுக்கு வசதிபட்டால் தொடரவும். உங்களின் தொடக்கம் மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கவே இதனை உங்களிடம் கூற விரும்பினேன். --தகவலுழவன் (பேச்சு) 11:33, 19 மார்ச் 2014 (UTC)
- சொல்வளம் என்றால் எந்த விடயம் எனும் விளக்கம் தேவை...இதுவரை ஒருபக்கத்தின் சொல்லுக்கு, அதே பொருளைத் தரக்கூடிய, வேறு பல சொற்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்...அந்த வகையில் பார்த்தால் అక్కడ என்னும் பக்கத்தில் சொல்வளப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ఎక్కడ, ఇక్కడ,ఎచ్చట என்கிற சொற்கள் தமிழில் முறையே எங்கே, இங்கே, எங்கே என்று பொருள்படுமாதலால் అక్కడ என்ற பக்கத்தில் சொல்வளப் பகுதியில் இடம்பெற்றிருப்பது சரியா என்பதைத் தெரிவிக்கவும்--Jambolik (பேச்சு) 16:30, 19 மார்ச் 2014 (UTC)
- சொல் வளம் பகுதியில் பொதுவான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. தலைப்புச் சொல்லுக்கு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடையச் சொற்கள், அல்லது நெருங்கிய சொற்கள், எதிர்பதம், பன்மைச் சொற்கள் இப்படி. ஒத்தச்சொற்கள் என்ற ஒரு பொருள் மட்டும் கொண்டு உருவாக்கப்படும் சொற்களை மூன்று சமக்குறியீடுகளைக் கொண்டு அதன் கீழ் உருவாக்கலாம். அக்கட என்ற அச்சொல்லை உருவாக்கியவர் தெலுங்கு தெரிந்த என் நண்பர். தொழில் துறையில் அவர் பணியடர்வாக இருந்தாலும், எனது வேண்டு கோளை ஏற்று ஓரிரு சொற்களை உருவாக்கினார். ஆனால், என்னில் ஏறத்தாழ 3000சொற்களுக்குரிய தெலுங்கு சொற்கள் உள்ளன. அதில் எந்ததெலுங்கு சொல், தலைப்பாக இருக்கும் தமிழ்சொல்லுக்கு பொருத்தமானது என்று கண்டுணர வேண்டியதாக உள்ளது. அதனை அம்மொழி தெரிந்தவர்கள் தேரந்தெடுக்க வேண்டும். அவ்வகையிலேயே உங்களைப் போன்றோரை நாடுகிறேன். விரைவில் உரிய ஆவணத்தோடு சந்திக்கிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:50, 19 மார்ச் 2014 (UTC)
- புரிந்தது...இதுவரை சுமார் 100 தெலுங்குச் சொற்களையும், சில இந்திச் சொற்களையும் விக்சனரியில் பதிவேற்றி இருக்கிறேன்..--Jambolik (பேச்சு) 17:48, 19 மார்ச் 2014 (UTC)
தெலுங்குப் பகுப்புகள்
[தொகு]- தெலுங்குப் பகுப்புகளில் தெலுங்கு-உறவினர், தெலுங்கு-உறவினர்கள் என இரண்டு வகை தேவையில்லை என்று நினைக்கிறேன்... தெலுங்கு-உறவுச் சொற்கள் என்னும் ஒரு பகுப்பு போதுமே--Jambolik (பேச்சு) 16:02, 24 மார்ச் 2014 (UTC)
- நீங்கள் கூறிய இரண்டு பகுப்புகளையும் கண்டேன். இரண்டும் ஒரே நபரால், 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓரிரு நாட்கள் வேறுபாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுப்பின் உரையாடற்பகுதியில், இங்கு கூறியவற்றை அப்படியே நகலெடுத்து ஒட்டவும். பிறகு நானும் அதனை ஆமோதித்து மாற்றும் நடைமுறையைப் பின்பற்றுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 17:01, 24 மார்ச் 2014 (UTC)
தெலுங்கு-மொழிபெயர்ப்புகள்
[தொகு]நாம் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மட்டுமே மொழிபெயர்க்கிறோம். பிறமொழிச் சொற்களையும் தமிழில் பொருள் கூறினால், போதுமானது. அனைத்து மொழிவிக்சனரியிலும் இதேநடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. தெலுங்கு, கன்னட போன்ற சொற்களுக்கு ஆங்கில விளக்கம் தருவது ஆங்கில விக்சனரியின் இலக்கு.நமது இலக்கு, தமிழில் விளக்குவதே ஆகும்.எனவே, மொழிபெயர்ப்பு உட்பிரிவைத் தவிர்த்தீர்கள் என்றால், நிறைய தெலுங்குச் சொற்களை நீங்கள் உருவாக்க இயலும். இதற்கு கீழ்கண்ட வார்ப்புரு உதவும்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Jambolik/பயனர் பேச்சு:Jambolik-2013-2014--- பேச்சு:Jambolik-2013-2014 indowordnet + பேச்சு:Jambolik-2013-2014+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +பேச்சு:Jambolik-2013-2014 தெலுங்கு விக்சனரி +
--தகவலுழவன் (பேச்சு) 17:08, 25 மார்ச் 2014 (UTC)
- தமிழ் விக்சனரியில் பதிவேற்றப்படும் தமிழ் அல்லாத பிறமொழிச் சொற்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு வேண்டாம்...அப்படித்தானே!!..மற்ற விடங்கள் எல்லாம் ஒலிப்பு கொடுப்பது உட்பட சரியாக இருக்கின்றனவா?--Jambolik (பேச்சு) 21:26, 25 மார்ச் 2014 (UTC)
- ஆம். அப்படித்தான். ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும், நீலநிறக்கோடு இருப்பதைக் கண்டேன். அந்த வார்ப்புருவுக்கு பதிலாக{{ஆதாரங்கள்-மொழி|te}} என்ற வார்ப்புருவை இடகேட்டுக் கொள்கிறேன். அக்கோடு வார்ப்புரு,dado dove போன்று ஒரே இலத்தீனிய எழுத்துக்கள் பயன்படும் பல்வேறு மொழிகளுக்காக உருவாக்கப்பட்டது. எனவே தான், அக்கோடு வார்ப்புருவைத் தவிர்க்கலாமென்று எண்ணுகிறேன். --தகவலுழவன் (பேச்சு) 00:20, 26 மார்ச் 2014 (UTC)
தெலுங்குப் பகுப்புகள்
[தொகு]- தெலுங்கு வினைச் சொற்களுக்காக ஒரு பகுப்பு இல்லை...எப்படி உருவாக்குவது என்று கற்றுத் தந்தால் தேவைப்படும்போது பகுப்புகளை, தமிழ்ப் பகுப்புகளின் பெயர்கள் அடிப்படையில் உருவாக்கிக்கொள்வேன்...இதனால்தான் మనువాడు என்னும் பக்கத்திற்குப் பகுப்பிடவில்லை...--Jambolik (பேச்சு) 22:34, 26 மார்ச் 2014 (UTC)
- தெலுங்கு வினைச்சொற்களுக்கான பகுப்பைக் கண்டேன்...மகிழ்ச்சி...நன்றி--Jambolik (பேச்சு) 13:15, 27 மார்ச் 2014 (UTC)
ஆதாரங்கள் என்பதின் வார்ப்புரு இடுவதைக் குறித்து
[தொகு]- நான் உங்களுக்கு மிகுந்த தொல்லைக் கொடுக்கிறேனோ?...ஏகப்பட்ட சந்தேகங்கள் எனக்கு!...சில சொற்கள் வார்ப்புரு காட்டும் அகராதிகளில் கிடைக்காது...அத்தகையச் சொற்களைப் பதிவேற்றும்போது வார்ப்புருவை இணைக்காமலிருப்பதே நல்லது...ஒரு சொல்லிற்கு விக்சனரியில் பொருள் தேடுபவர்கள், வார்ப்புரு காட்டும் அகராதியில் ஆதாரத்தைத் தேடும்போது அதில் இல்லை என்று வந்தால் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளவர் அல்லவா?...எடுத்துக்காட்டாக தெலுங்கு మనవాడు என்னும் சொல் தெலுங்கு நாட்டில் எல்லாத்தரப்பு மக்களிடமும் மிக பிரபலம்...ஆனால் இச்சொல் எனக்கு அனுப்பப்பட்ட வார்ப்புரு அகராதிகளில் இல்லை...ஆகவே அந்தப் பக்கத்தில் இதை இணைக்கவில்லை...தமிழ் விக்சனரியிலும் இதே முறையை சமீப காலமாகப் பின்பற்றி வருகிறேன்...உங்கள் எண்ணம் என்ன? --Jambolik (பேச்சு) 13:40, 27 மார்ச் 2014 (UTC)
- పెరుగన్నం என்னும் பக்கத்தில் தெலுங்கு ஆதாரங்கள் என்பதின் வார்ப்புருவை நான் இடவில்லை...காரணம் அந்த அகராதிகளில் இந்தச்சொல் இல்லை என்பதால்தான்...பிறகு இந்த வார்ப்புருவை நீங்கள் இணைத்துள்ளீர்கள்...இந்தப் பிரச்சினையைக் குறித்து மேற்கண்ட என் செய்தியில் கூறியிருக்கிறேன்...ஒரு தெலுங்குச்சொல் இந்த அகராதிகளில் இல்லாவிட்டாலும்கூட ஆதாரங்கள்-மொழி|te என்பதைத் தெலுங்குப் பக்கங்களில் காட்டப்படவேண்டுமென எண்ணுகிறீர்களா?--Jambolik (பேச்சு) 03:52, 30 மார்ச் 2014 (UTC)
- அப்படி இல்லை. அந்த வார்ப்புரு பொது, அதில் எப்பொழுது வேண்டுமானாலும், மேலும் சில இணைய அகரமுதலிகளை இணைக்கலாம். அவ்வாறு இணைக்கும் போது, ஒவ்வொரு சொல்லுக்கும் சென்று, திரும்பவும் அந்த வார்ப்புருவை இட வேண்டிய பணியடர்வைத் தவிர்க்க, இப்பொழுதே இணைத்து விடுகிறோம். வார்ப்புரு என்பது உருவாக்கப்பட்ட பக்கங்களில், விரைந்து மாற்றத்தை ஏற்படுத்த பயன்படுத்தப் படுகிறது. இது இல்லையெனில், பல பக்கங்களுக்குத் திரும்பச் சென்று, நாம் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நீங்களும் ஒரு இணைய அகரமுதலியை, ஆதாரமாக தந்து இருப்பதைக் கவனித்தேன். அதனால்தான், அவ்வார்ப்புரு பேச்சுப்பக்கத்தில் இப்படிக் கூறிப்பிட்டிருந்தேன். பிறரின் கருத்தறிந்து, நாம் அதிலே மேலும் இணையத்தில் இருக்கும் தெலுங்கு அகரமுதலிகளை இணைப்போம். ஆகவே, இப்பொழுது இல்லை என்பது வார்ப்புருவின் குறையல்ல. அது இன்றைய நிலை. அவ்வளவே. அக்குறையை, நிறையாக மாற்றுவோம். கூடுதல் பணியடர்வைத் தவிர்க்க, அதனை இப்பொழுதே இணைத்து விட எண்ணுகிறேன். மற்றவை உங்கள் எண்ணம் கண்டு..--தகவலுழவன் (பேச்சு) 08:48, 30 மார்ச் 2014 (UTC)
నెమలి பக்கத் திருத்தம்
[தொகு]- నమలి பக்கத்தை சரியான எழுத்துக்கள் உள்ளப் பக்கமாக மாற்றும்போது ஏதோ தவறு செய்துவிட்டேன் என்றுத் தெரிகிறது...எப்படி சரி செய்வது என்றுத் தெரியவில்லை...தயவுசெய்து சீர் செய்துவிடுங்கள்...தொந்தரவு தருவதற்கு வருந்துகிறேன்--Jambolik (பேச்சு) 15:11, 28 மார்ச் 2014 (UTC)
- நான் கேட்டுக்கொண்ட தெலுங்குப் பகுப்புகள் பொருட்கள் மற்றும் மீன்கள் உருவாக்கியமைக்கு நன்றி...அதோடு மேற்கண்ட செய்தியில் சொன்ன விடயத்தையும் கவனித்து ஆவன செய்யுங்கள்..నెమలి பேச்சுப் பக்கத்திலிருந்து నెమలి தலைப்புப் பக்கமாக மாறவேண்டும்!--Jambolik (பேச்சு) 13:36, 29 மார்ச் 2014 (UTC)
- உங்கள் படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன. உங்களுக்கு உதவுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. வேறு எண்ணங்கள் என் மனதில் எதுவும் எழவில்லை. கீழ்கண்ட குறிப்புகளைப் பின்பற்றக் கோருகிறேன்.
- புதிய சொல் ஒன்றை உருவாக்கும் போது, மிக விரைவாக உருவாக்கலாம். எப்படி என்றால்,{{subst:noun||}}என்ற வார்ப்புரு கீழே2வதாக உள்ளது. அதனை ஒருபக்கம் உருவாக்கும் போது, ஒன்றுமில்லா தொகுத்தல் சாளரத்தில் உங்கள் சுட்டியை வைத்து அழுத்தினால் அந்த வார்ப்புரு சாளரத்திற்குள் வரும். அப்பொழுது அச்சொல்லினை தமிழ் மொழிபெயர்ப்பை எழுதுங்கள். பின்பு அச்சொல்லிற்கு அக இணைப்புத் தாருங்கள் ([[]]).noun| என்பதனை அடுத்து உள்ள pipelineக்கு அடுத்து, te என எழுதிக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு pipelineஇருக்கும். இதனை அடுத்தே தற்போது தமிழ்மொழிபெயர்ப்பை எழுதியுள்ளீர்கள் அல்லவா? இப்பொழுது முன்தோற்றம் காணுங்கள். நீங்கள் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு உரிய படிவத்துடன் திரையில் தெரியும். பக்கத்தைச் சேமிக்கவும். பின்பு விரைவுப்பகுப்பியைக்(Hotcat) கொண்டு,பகுப்பிடுங்கள். படமிடுங்கள். வழக்கம் போல ஒரு பக்கம் சிறப்பாக உங்களால் முன்பை விட விரைவாக உருவாக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும் te அடிப்பதற்கு பதில், {{subst:noun|te|தமிழ்விளக்கம்}} என்பதை நகலெடுத்து வைத்துக் கொண்டு, பக்க உருவாக்கலின் போது, பயன்படுத்திக் கொள்ளவும்.--தகவலுழவன் (பேச்சு) 16:19, 29 மார்ச் 2014 (UTC)
தெலுங்கு பகுப்புகள் தேவை
[தொகு]- உணவுப் பொருட்கள், இயற்கைச் சொற்கள், காய்கறிகள் ஆகிய பகுப்புகள் தெலுங்கு மொழிக்குத் தேவை என்று கேட்டிருந்தேன்...இறையியல், இந்துவியல், சமூகச்சொற்கள், அரசியல் போன்ற பகுப்புகளும் தேவைப்படும்...--Jambolik (பேச்சு) 17:44, 2 ஏப்ரல் 2014 (UTC)
- கேட்டபடியே செய்துவிட்டீர்கள்...நன்றி--Jambolik (பேச்சு) 22:13, 7 ஏப்ரல் 2014 (UTC)
தொடங்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை
[தொகு]- நான் இதுவரை தொடங்கிய சொற்களின் எண்ணிக்கையை அறிய தொடங்கிய கட்டுரைகள் என்றப் பகுதியில் சொடுக்கினால் No such user என்றே வருகிறது...பல முறை முயன்றுவிட்டேன் பலனில்லை...விக்சனரி என்னை அடையாளம் காணவே மறுக்கிறது!...எனக்கு நான் பதிவேற்றிய சொற்களின் விவரம் வேண்டும்...என்ன செய்யலாம்?--Jambolik (பேச்சு) 22:34, 2 மே 2014 (UTC)
நன்றி, விடை பெறுகிறேன்
[தொகு]- வரும் ஆறேழு மாதங்களுக்கு (நவம்பர் 2014 வரை) என் பதிவுகள் ஒன்றும் இராது...உங்கள் அனைவரிடமிருந்தும் விடை பெறுகிறேன்...அனைவருக்கும் நன்றி, வணக்கம்...மீண்டும் சந்திப்போம்...GOOD BYE...--Jambolik (பேச்சு) 18:33, 8 மே 2014 (UTC)
நீக்க வேண்டிய பக்கங்கள்
[தொகு]- மக்கள் தலைவர், முத்துக்கொட்டையெண்ணை என்னும் இரண்டு விக்சனரிப் பக்கங்களின் 'உரையாடல்' பகுதியைக் கவனித்து அப்பக்கங்களை நீக்கிவிடுங்கள்....--Jambolik (பேச்சு) 19:06, 8 மே 2014 (UTC)
தீர்வு --தகவலுழவன் (பேச்சு) 02:48, 9 மே 2014 (UTC)
ஒரு விளக்கம் தருவீர்களா?
[தொகு]- கடந்த சில மாதங்களாக திரு.தகவலுழவன் ஐயாவிடமிருந்து விக்சனரி தொடர்பாக நான் கற்றுக்கொண்டது ஏராளம்...அதற்கு அவருக்கு மிக்க நன்றி...மேலும் ஒரு விடயத்தில் விளக்கம் வேண்டும்... దానిమ్మపందు பக்கத்தை தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) நீக்கினார் (ஆசிரியர் வேண்டுகோள்: இருந்த உள்ளடக்கம்: 'File:Pomegranate03 edit.jpg|300px|Jambolik/பயனர் பேச்சு:Jambolik-2013-2014/மாத...' (தவிர, 'Jambolik' மட்டுமே...) என்னும் சொற்றொடரின் முடிவில் ' (தவிர, 'Jambolik'மட்டுமே...) என்ற குறிப்பில் 'மட்டுமே' என்னும் சொல்லுக்குப் பிறகு மேலும் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எவ்வாறு அறிவது?..வரும் மாதங்களில் தெலுங்குச் சொற்களுக்கானப் பகுதி பெருத்த அளவில் வளர்த்தெடுக்கப்படும் என்று திடமாக நம்புகிறேன்!--Jambolik (பேச்சு) 13:43, 9 மே 2014 (UTC)
- இனி என்னைத் தகவலுழவன் என்று மட்டுமே அழைக்க வேண்டுகிறேன். தங்களின் நீண்ட விடுப்பு எனக்கு வருத்த த்தையேத் தருகிறது. நீங்கள் மீண்டும் வரும் நாள் எனக்குத் திருநாள் ஆகும். அது தானியக்கமாக வருகிறது. அது ஒவ்வொரு சொல்லின் வரலாற்றுப் பகுதியில் இருந்து வருகிறது. ஒரு பக்கம் யார் யாரால் உருவாக்கப்பட்டது என்பதைக்கொண்டு அந்த சொற்கள் தோன்றுகின்றன. மட்டுமே பங்களித்திருந்தார். என்று முடியும். ஆங்கிலச்சொற்களை விட, தமிழ் சொற்கள் அதிக இடத்தை எடுத்துக் கொள்வதால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றும் அச்சொற்கள் இடப்பற்றாக்குறையால், மட்டுமே என்பதோடு நின்றுவிடுகிறது என்று சொல்லலாம்.--தகவலுழவன் (பேச்சு) 17:09, 9 மே 2014 (UTC)
- விளக்கத்திற்கு நன்றி...எனக்கும் வருத்தம்தான்...குறைந்தபட்சம் இரண்டு ஆயிரம் சொற்களைக்கூட தமிழ் விக்சனரிக்கு என்னால் தர முடியவில்லையே என்று பெருங்குறையாக இருக்கிறது...--Jambolik (பேச்சு) 17:24, 9 மே 2014 (UTC)
பிறமொழிச் சொற்களை தமிழ் விக்சனரியில் சேர்ப்பதற்கான படிவம்?
[தொகு]'புதிய சொற்களைச் சேர்க்கவும்' என்னும் பக்கத்தில் கீழ்கண்ட அறிவிப்பு காணப்படுகிறது:- விக்சனரி ஒரு பன்மொழி-தமிழ் அகரமுதலி என்பதால், தமிழ்ச் சொற்களுக்கு இணையான பிறமொழிச் சொற்களை, மொழிபெயர்ப்புகள் பகுதியில் தருவதோடு மட்டுமல்லாமல், அத்தமிழ்ச் சொற்களுக்கான விளக்கத்தைத் தமிழிலேயே முதற்கண் விளக்குங்கள். இந்த அறிவிப்பு எனக்கு சற்று குழப்பத்தைத் தருகிறது.. தற்சமயம் நான் அளித்துவரும் தெலுங்குச் சொற்களுக்கான படிவம் சரிதானா என்பதைத் தெரிவிப்பதோடு, ஏதாவது மாற்றங்கள் தேவையானால் அவற்றை விளக்கிச் சொல்லுமாறு விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்... --Jambolik (பேச்சு) 13:54, 4 நவம்பர் 2014 (UTC)
- புதிய சொற்களைச் சேர்க்கவும் என்பது பலரின் எண்ணங்களுக்குப் பிறகு மேம்படுத்தப் பட வேண்டும். எனவே, எனது எண்ணங்களையும் கண்டு விட்டு, அதன் உரையாடல் பக்கத்தில் உங்களது எண்ணங்களைத் தெரிவிக்கவும். ஒரு சொல்லின் வடிவமைப்பு குறித்த எனது எண்ணங்களை, చీపురుకట్టஎன்ற சொல்லின் உரையாடல் பக்கத்தில் கூறியுள்ளேன். உங்களுக்கு உகப்பெனில் இனி பயன்படுத்துக.--தகவலுழவன் (பேச்சு) 01:41, 7 நவம்பர் 2014 (UTC)
பகுப்பு இடுவதைப்பற்றி சில எண்ணங்கள்
[தொகு]- நீங்கள் சொன்னபடி பகுப்பிடல் செய்யும்போது, தெலுங்குச்சொற்களுக்கும் 'படங்களுள்ளவை
Mayooranathan:சோதனைப் பக்கம்' என்று வருகிறது...'தெலுங்கு-படங்களுள்ளவை' என்று குறிப்பிடவே விரும்புகிறேன்..இது என்ன 'Mayooranathan:சோதனைப் பக்கம்' ?--Jambolik (பேச்சு) 13:54, 10 நவம்பர் 2014 (UTC)
- Mayooranathan:சோதனைப் பக்கம்' என்பது உள்ள எல்லாப் பக்கங்களிலும், இனி இருக்கா வண்ணம் சிறு மாற்றம் செய்து விட்டேன்.
*{{படம்|படகோப்பின் பெயர்|te|தேவைப்பட்டால்படக்குறிப்பு|தேவைப்படும்எண்ணிக்கைpx}} என குறிப்பிட்டால், தெலுங்கு படங்களுள்ளவை தானாகவே பகுப்பாகத் தோன்றும்.இப்பொழுது படப்பகுப்பைத் தட்டச்சுவது போல, தனியே தட்டச்சுத் தேவையில்லை! இ்வ்வாறு இல்லாத படங்களில், நாம் தான் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வார இறுதியில் அதனைத் தானியங்கிக் கொண்டு மாற்றி விடுகிறேன். நீங்களே மாற்றுவதாக இருந்தாலும் சரி. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:50, 10 நவம்பர் 2014 (UTC)
புதிய தெலுங்கு பக்கம் 'భయము' ஆக்கப்படுவது பற்றி ஐயம்!
[தொகு]நான் புதியதொரு தெலுங்கு பக்கம் భయము' என்று ஆக்க முயற்சித்தபோது எச்சரிக்கை: தாங்கள் ஏற்கனவே நீக்கப்பட்ட பக்கமொன்றை மீண்டும் தொடங்க விழைகிறீர்கள் என்னும் செய்தி வந்தது!. இருந்த பக்கம் ஏன் நீக்கப்பட்டது?...இந்தத் தலைப்புக்கு ஏதேனும் தடை உள்ளதா? நான் மீண்டும் ஆக்கலாமா?--Jambolik (பேச்சு) 01:13, 15 நவம்பர் 2014 (UTC)
- நீங்கள் குறிப்பிடும் பக்கத்தைப் பார்த்தேன். அப்பக்கத்தை நானே நீக்கியிருந்தேன். காரணம் தலைப்பு சரியானதா என்பது தெரியவில்லை. மேலும் பின்வரும் உள்ளடக்கம் இருந்த தால், அதனை நீக்கினேன். //சோதனை முயற்சி: இருந்த உள்ளடக்கம்: 'ÁêèåáàĉĉëêẳẴḒḎḛḅḖḎḍ<...' (தவிர, '220.227.25.162' மட்டுமே பங்க...) // இப்பொழுது நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது, தலைப்பு சரியெனத் தோன்றுகிறது. உள்ளடகத்தை உருவாக்க வேண்டுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:23, 15 நவம்பர் 2014 (UTC)
பயனர் பக்கம்
[தொகு]சக பங்களிப்பாளன் என்ற வகையில், விக்சனரியில் செம்மையாக, காலத்தையும் கடந்து நிற்கக்கூடிய சொற்களை பதிவேற்றுபவர் என்பதால் அகமகிழ்கிறேன். மிக்கநன்றி. நான் கவனித்தவரை, படம்+விளக்கம்+சொற்பிறப்பு ஆகியன கொண்டு, ஒரு சொல்லை உருவாக்குபவர் நீங்கள் ஒருவரே. உங்களை பல நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய விரும்புகிறேன். எனவே, உங்களைப் பற்றிய குறிப்புகளை உங்கள் பயனர் பக்கத்தில் தரக் கோருகிறேன். இது போல காலப்பெட்டக உருவாக்கத்தில், உங்கள் படமும் இடம் பெற மனம் ஏங்குகிறது. பல கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது, சகபங்களிப்பாளர்களை அறிமுகப் படுத்தவது எனது கடமைகளுள் ஒன்றாக கருதுகிறேன். எனவே,ஆவணப்படுத்துக. ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 01:21, 8 திசம்பர் 2014 (UTC)
- நீங்கள் என்மீது கொண்ட நல்லெண்ணத்திற்கும், தந்த புகழுரைக்கும் மிக்க,மிக்க நன்றி...நான் தமிழ் விக்சனரிக்குச் செய்த பணி,அணுவினும் சாலச் சிறியது...இன்னும் இரண்டாயிரம் சொற்களைத் தாண்டவில்லை...அத்தனையும் தமிழ்ச்சொற்கள்கூட அல்ல...தெலுங்கு, இந்தி, சமசுகிருதச் சொற்களும், எப்போதாவது ஆங்கில,மலையாள, கன்னட சொற்களும்தான்...அவற்றிலும் எத்தனைப் பிழைகளும், தவறுகளும் இருக்கின்றனவோ?இது என்ன பெரும் சாதனை?...ஆகவே நீ்ங்கள் சொன்ன மற்ற விடயங்களில் எனக்கு ஆவலோ, ஆர்வமோ விருப்பமோ அறவே இல்லை...தயவு செய்து மன்னியுங்கள்...மீண்டும் நன்றி, வணக்கம்.--Jambolik (பேச்சு) 14:44, 8 திசம்பர் 2014 (UTC)
- //அவற்றிலும் எத்தனைப் பிழைகளும், தவறுகளும் இருக்கின்றனவோ?//
- இதில் தவறு என்று எதனையும் நான் எண்ணவில்லை. பிறர் கூறின் தெரிந்து கொள்வோம். அதுவரை இங்கு விக்கிநுட்பம் கற்கிறோம். அவ்வளவே.
- //இது என்ன பெரும் சாதனை?...//
- இங்கு அனைவரும் முயற்சியே செய்கின்றனர். அயர்ச்சி இல்லா முயற்சியே சாதனைதான். இது கல்வி சாலையல்ல. இங்கு நாமே ஆசிரியர். நாமே மாணவன். இப்பெருஞ்சாலையில் கற்பிக்கப் பட்டால் கற்பேன். அந்த வகையில் உங்கள் படைப்புகளால் பல கற்போம்.
தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
[தொகு]என், தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்களை தமிழ் விக்சனரிக்கு பதிவேற்றுவது, முறையாக, ஏற்கும்படியாக இருக்கிறதா?..ஏதாவது குறைகளிருந்தால் தெரிவிக்கவும்...வழக்கமான தெலுங்கு, இந்தி, சமசுகிருதச் சொற்களை பதிவேற்றுவதோடு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேரகரமுதலிச் சொற்களையும், மற்ற தமிழ்ச் சொற்களையும் பதிவேற்றலாமென்று எண்ணுகிறேன்.--Jambolik (பேச்சு) 17:44, 10 திசம்பர் 2014 (UTC)
- பேச்சு:கைகேசி காணவும்
- உங்களின் தமிழ்ப் பேரகரமுதலியின் சொற்களைக் கண்டு மகிழ்ச்சி. சில மாறுதல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.
- தலைப்பில் எக்குறியீடும் இருக்கக்கூடாது.
- ஒரு சொல் இருக்கிறதா எனப்பாருங்கள்.
- வேறுபாடுகளை உணர்ந்து மேம்படுத்தங்கள். (கைகூப்புதல் - கைகூப்பு-தல்)
- இத்திட்டத்தில் இணையுங்கள். சோதனைத்தரவுகளை அனுப்புகிறேன். அது நிறைய நேரத்தை உங்களுக்குக் மீதமாக்கும்.--தகவலுழவன் (பேச்சு) 01:58, 11 திசம்பர் 2014 (UTC)
- தெலுங்கு, இந்தி, சமசுகிருதம் சொற்களை படங்களுடன் மனங்கவரும் வகையில் பதிவேற்றுவது போல, தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்களையும் பதிவேற்றுகிறீர்கள். எனவே, ஒரு வேண்டுகோள். விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம் என்பதிலும் ஒரு பங்களிப்பாளர் என்ற அடிப்படையில், ஒப்பம் இடக்கோருகிறேன். சிலர் ஒப்பமிட்டு இருக்கிறார்கள். சிறந்த பதிவுகளைச் செய்யும் உங்களின் கையொப்பம் இல்லாதது எனக்கு சற்று வருத்தமாக இருக்கிறது. எனவே, ஆதரவு தருக. ஆவலுடன்,.. வணக்கம் --தகவலுழவன் (பேச்சு) 00:36, 13 திசம்பர் 2014 (UTC)
வினாவும், விடையும்
[தொகு]உங்களுக்கு ஏற்படும் வினாவிற்கு அவ்வப்போது எனக்குத்தெரிந்தவரை,விளக்கம் சொன்னேன். எனக்கு நேரப்பற்றாக்குறையும், குடும்ப இடர்களும் உள்ளன. உங்களது அலைப்பேசி எண்ணைத் தாருங்கள். வாரம் ஒரு முறை உங்களின் ஐயத்தை, உங்களுக்கு உகந்த நேரத்தில் அழைத்து விளக்கம் தருகிறேன். அல்லது ஆலமரத்தடியில் உங்கள் வினாக்களை இடுங்கள். பிறரும் உதவுவர். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 08:35, 11 திசம்பர் 2014 (UTC)
- எனக்கு நேரப்பற்றாக்குறையும், குடும்ப இடர்களும் உள்ளன--உங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டேன்!...வருந்துகிறேன்.--Jambolik (பேச்சு) 14:34, 11 திசம்பர் 2014 (UTC)
- நன்றி--தகவலுழவன் (பேச்சு) 15:48, 11 திசம்பர் 2014 (UTC)
அண்மைய மாற்றங்கள் பகுதியில் சொற்களின் விவரம்
[தொகு]- விக்சனரியில் அண்மைய மாற்றம் பகுதியில் சில சொற்களின் விவரத்தில் ஆங்கில பொருளும் காணப்படுகிறது...புதியதாகச் சேர்க்கப்பட்ட தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கில அர்த்தத்தை அந்தப் பக்கத்தை திறக்காமலேயே தெரிந்துக்கொள்ளமுடிகிறது...எனவே புதியச் சொல்லின் விவரத்தில்,
(வேறுபாடு | வரலாறு) . . பு மனைதல்; 18:44 . . (+707) . . தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) (# To make, create, form, fashio, shape)---போன்றுத் தோன்ற என்ன செய்யவேண்டும்?--Jambolik (பேச்சு) 19:34, 11 திசம்பர் 2014 (UTC)
- அது பைத்தான் நிரலாக்கம் உங்கள் அலைப்பேசி எண் தாருங்கள். முன் கூறிய திட்டபக்கத்திலும் கையெழுத்து இடக்கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 02:07, 12 திசம்பர் 2014 (UTC)
- நான் தற்சமயம் இந்தியாவிலும் இல்லை, எனக்கென்று தனியாக அலைபேசியும் இல்லை...இப்போது நான் விக்சனரியில் பங்கேற்கும் முறைக்கு மாறாக வேறொரு விதத்தில் செயல்படுவது மிகவும் கடினம்...இதுவே எனக்குப் போதும்!!நன்றி, வணக்கம்--Jambolik (பேச்சு) 14:13, 12 திசம்பர் 2014 (UTC)
ஆங்கில எழுத்துக்களைப் பற்றி ஒரு வினவல்
[தொகு]- தமிழ் விக்சனரியில் ஆங்கில சொற்களைப் பதிவேற்றும்போது பெரிய எழுத்தை (Capital letter) பயன்படுத்தல் கூடாது என்றொரு விதி இருப்பதாகத் தெரிகிறது...ஆனால் அண்மைய பதிவேற்றங்களில் பேரகரமுதலியின் மொழிபெயர்ப்புகள் பெரிய எழுத்தோடுதான் தொடங்கப்பட்டுள்ளன...இது பின்பற்றக்கூடியதா?--Jambolik (பேச்சு) 23:52, 17 திசம்பர் 2014 (UTC)
- தலைப்புச் சொல் பதிவேற்றத்திற்காக, உருவாக்கப்பட்ட விதி. அப்பொழுது, அது தவறாமல் பின்பற்றபட வேண்டும். ஏனெனில், தலைப்புச்சொல் என்ன மொழி என்பது பின்பே விவரிக்கப்படுகிறது. எ. கா. dado, dove மொழிபெயர்ப்பு பகுதியில், ஆங்கிலம் என்ற தலைப்புக்கு கீழ் வருவாதால், அவ்விதி மிகவும் பொருந்தாது.--தகவலுழவன் (பேச்சு) 00:24, 18 திசம்பர் 2014 (UTC)
- நன்றி...எனக்கு சிறிது நேரம் மிச்சம்--Jambolik (பேச்சு) 00:34, 18 திசம்பர் 2014 (UTC)
அனுமதி
[தொகு]உங்கள் பயனர்:Jambolik/மணல்தொட்டி பகுதியில் சோதனைக்கானத் தரவை ஒட்டிப் பார்க்க, தங்களின் அனுமதி தேவை? ஒட்டட்டுமா?--தகவலுழவன் (பேச்சு) 11:47, 23 திசம்பர் 2014 (UTC)
- முதற்கண் இது என்னவென்றே எனக்குப் புரியவில்லை...நான் ஏதாவது செய்யவேண்டியதிருக்குமா?...எதுவும் கட்டாயமில்லாதிருக்கும்வரை சரிதான்!...--Jambolik (பேச்சு) 14:45, 23 திசம்பர் 2014 (UTC)
- தற்கு முன், நீங்கள் கேட்ட வினாவில் (ஆங்கில எழுத்து பற்றிய வினவலில்..) //நன்றி...எனக்கு சிறிது நேரம் மிச்சம்// என்று கூறியிருந்தீர்கள் அல்லவா? அதைப்படித்த போது, மேலும் உங்களின் நேரத்தை மிச்சமாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. ஒவ்வொரு நாளும் நீங்கள் சில மணிநேரங்கள் செலவு செய்து, கை- வரிசையில் சொற்களை உருவாக்கி வருகிறீர்கள் அல்லவா? அதனை ஒவ்வொரு நாளும் நான் கண்டு மகிழ்வது வழக்கம். குறிப்பாக உங்கள் படங்களையும், விளக்கங்களையும்.. அதனை வேகப்படுத்த எண்ணி, நான் கை-வரிசைச் சொற்கள் முழுவதையும் எடுத்து, மேம்படுத்திப் பார்தேன். எனது ஒன்றரை மணி நேர ஈடுபாட்டில் கை-வரிசையில் மேலும் 300 சொற்களை, தற்போது நீங்கள் பதிவேற்றும் வடிவில் அமைத்துள்ளேன். அதனை இங்கு ஒட்டியுள்ளேன். அத்தரவுகளைக் கொண்டு, நீங்கள் உங்களின் பதிவுகளை ஒரு நாளில் முன்பை விட அதிகமாக குறைந்த நேரத்தில் உருவாக்கலாம். இப்போதைக்கு இப்பக்கத்தில் 50 சொற்களை ஒட்டியுள்ளேன். ஒரு முறை காணவும். சிவப்பாக உள்ள சொல்லைத் திறந்து, அதில் அதன் கீழுள்ள பச்சைத்தரவை நகலெடுத்து ஒட்டவும். ஒரு சொல், ஒரு நிமிடத்தில் உருவாக்கப்பட்டு விடும். பிறகு, அச்சொல்லை உங்கள் வழமையான ஆக்கத்தால், மேலும் விரிவு படுத்தலாம். மீதமுள்ள சொற்களை இவற்றை பதிவேற்றிய பிறகு ஒட்டுவேன் அல்லது உங்களின் மணல் தொட்டி பகுதியில் ஒட்டுகிறேன். நீங்கன் அனுமதித்தால்..ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 01:44, 24 திசம்பர் 2014 (UTC)
- மேற்கூறியத் தரவில் ~15 சொற்களை உருவாக்கியுள்ளீர்கள். பயனுள்ளதாக இருக்கிறதா? ஏதேனும் இடர் இருப்பின் கூறவும்.--தகவலுழவன் (பேச்சு) 01:13, 25 திசம்பர் 2014 (UTC)
- இந்த வழிமுறை எனக்குச் சரிப்பட்டு வரவில்லை,வராது!...அண்மையில் உருவாக்கிய 15 சொற்களில், 'கைப்பிடிச்சுருள்' தவிர மற்றவை என் வழக்கமான முறையில் பதிவேற்றப்பட்டவைதான்...இவ்வாறு சொல்வதற்கு வருந்துகிறேன்...நன்றி...வணக்கம்--Jambolik (பேச்சு) 14:37, 25 திசம்பர் 2014 (UTC)
- சரிங்க. கையில் தொடங்கும் மீதமுள்ள சொற்களைப் பதிவேற்றிவிடுகிறேன். வழமை போல, அச்சொற்களையும் மேம்படுத்தக் கோரி விடைபெறுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 17:01, 25 திசம்பர் 2014 (UTC)
உடல்நலம்
[தொகு]உங்களது ஆக்கங்கள் உயர்வாக இருக்கின்றன. நீங்கள் நீண்ட நாட்கள் பதிவுகளை செய்ய விருப்பம். அதேநேரத்தில் உங்கள் உடல் நலத்தையும், தயவுசெய்து பேணுங்கள். இன்று ஏறத்தாழ 7மணிநேரமாகப் பதிவு செய்கிறீர்கள். சுவர் இருந்தால் தானே சித்திரம் என்பது, தங்களுக்குத் தெரியாததல்ல. போதுமான ஓய்வும், நல்உணவும் அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள். வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 01:24, 28 திசம்பர் 2014 (UTC)
3,00,000
[தொகு]மூன்று இலகரத்தை அடையும் சொல் உங்கள் சொல்லாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இவ்வரலாற்றுப் பதிவை வழமைப் போல நல்ல படத்துடன், குறிப்புகளுடன் செய்யுங்கள். எண்ணிக்கையைக் கூட்ட விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்/பதிவேறவுள்ளத் தரவு என்ற பக்கத்திலுள்ளத் தரவை, தேவையெனில் பயன்படுத்திக் கொள்ளவும். அவ்வரலாற்றுச் சொற்பதிவை காண, ஆவலுடன் விடைபெறுகிறேன். --தகவலுழவன் (பேச்சு) 13:18, 31 திசம்பர் 2014 (UTC)
- இலக்கை நெருங்க மேலும் 15 சொற்களை பதிவேற்றுகிறன். நீங்கள் 10 சொற்களை பதிவேற்றினால் போதும். ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 15:51, 31 திசம்பர் 2014 (UTC)
- தங்களின் வேகமான பதிவுகளுக்கு நன்றி. கையோலைஎன்பது தான் தமிழ்விக்சனரியின் மூன்று இலகரமானச் சொல் அப்படிதானே?--தகவலுழவன் (பேச்சு) 16:15, 31 திசம்பர் 2014 (UTC)
- நான் சொற்களைப் பதிவேற்ற துவக்கும்முன் தமிழ் விக்சனரியில் எத்தனைச் சொற்கள் இருந்தன என்பது தெரியாது...இரண்டு இடங்களில் இரண்டுவிதமான எண்ணிக்கைகள் இருந்தன...ஆகவே கையோலை என்னும் சொல்தான் மூன்று இலகரத்தைத் தொட்டதா என்றுச் சொல்லத்தெரியவில்லை...இப்போது பதிவெற்றப்பட்டச் சொற்களை நானே மேம்படுத்திவிடுகிறேன்...மிகமிக உழைத்து மூன்று இலகரம் என்னும் இலக்கை விக்சனரி அடைய வைத்ததற்காக உங்களுக்கு என் இதயம் கனிந்தப் பாராட்டுகள்...இதற்கு உங்களைப்போன்றோரின் இடைவிடா முயற்சியும், உழைப்பும், மற்ற விக்கிகளை ஊக்கப்படுத்திய முறையுமே காரணிகள்.. நான் விக்சனரிக்கு வந்தபோது இதற்கு உலக அளவில் பத்தாவது இடம்...இப்போது இல்லை...அந்த பழைய இடத்தையும் தாண்டி முன்னேற அனைவரும் முயலுவோம்...உங்களுக்கும் மற்ற விக்கிகளுக்கும் என் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்...நன்றி..வணக்கம்...