உத்தமன்
Appearance
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
உத்தமன்(பெ)
- நற்குணம் உடையவன்
- மேலானவன்; உயர்ந்தவன்; பெருமதிப்புப் பெற்றவன்
- உடல் லட்சணமுடையவன்; ஆணழகன்
- (இலக்கணம்)தன்மையிடம்
- கடவுள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- person of integrity, good man
- superior person, man of sterling worth
- man possessing beauty and symmetry of body
- (gram.)first person
- The Supreme Being, God who is possessed of all moral attributes
பயன்பாடு
- "தம்பி, ஊரில் உனக்கு உத்தமன் என்று பெயர் இருக்கிறது. நல்ல குணமென்று புகழாதவர்கள் இல்லை.(சொல்லாதது, அண்ணா)
- நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் (பாடல்)
- சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார், சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் (பாடல்)
- (பாடல்)
ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு
உத்தமன் போல பேசு
நல்ல கணக்கை மாத்து
கள்ளக் கணக்கை ஏத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது
(இலக்கியப் பயன்பாடு)
- ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி (திருப்பாவை)
- உடம்பில் உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே (திருமந்திரம்)
- உத்தம னித்த னடியார் மனமே நினைத்துருகி (திருவாச. 5, 3)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:குணம் - குணவான் - குணவந்தன் - சற்குணன் - பண்பாளன்