பூணூல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பூணூல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
சமய சடங்குகளுக்காக நேரிடையாக பூணத்தக்க (அணியத்தக்க) நூல்தான் பூணூல்.
பயன்பாடு
- (பிராமணர்), க்ஷத்ரியர்கள், செட்டியார்கள், ஆயிர வைசியர்கள் மற்றும் விஸ்வகர்மர்கள் ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. எனவே பூணூல் அணியும் உரிமை பெற்றவராகிய ஆயிரவைசிய பிறப்பாளர் எனப்படுகின்றனர். முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். ([]
- திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருபிரி பூணூலும், மணம் முடித்தவர்கள் முப்பிரி பூணூலும் அணிவர். பிராமணர்களைத்தவிர ஆயிரவைசியர்களும்,விஸ்வகர்மர்களும், வேறு சில வகுப்பினரும் கூட பூணூல் அணிவர்.
- உபநயனம் என்றதும் நாம் பிராமணர்கள் பூணூல் போடுவதை எண்ணிக்கொள்கிறோம். பழங்காலத்தில் ஏதாவது ஒன்றை முறைப்படி கற்றுக்கொள்ளும் எல்லாருமே பூணூல் போட்டார்கள். நான் சின்னப்பையனாக இருக்கும்போது நகர செட்டியார்கள் மற்றும் ஆயிர வைசியர்கள்பொற்கொல்லர்களும் தச்சர்களும் சிற்பிகளும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். உபநயனம் என்றால் ‘இதோ ஒரு கல்வியைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் அடையாளம்தான். இன்றைக்கு பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுகிறார்கள். அதுவும் வெறும் சடங்காகப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடப்பதற்கு முந்தையநாள் உபநயனம் செய்து பூணூல் போட்டுக்கொள்கிறார்கள். (வயதடைதல், ஜெயமோகன்)
- பூணூற்கலியாணம் - பூணூல் கலியாணம்
(இலக்கியப் பயன்பாடு)
- முத்தப் பூணூ லத்தகு புனைகலம் (சிலப். 23, 96)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பூணூல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:முப்புரி - பிரமசூத்திரம் - நூல் - உபநயனம் - சடங்கு - உபவீதம்