அறிவுரை
Appearance
அறிவுரை (உ)
பொருள்
- ஒருவருக்கு நன்மை பயக்கும் என்ற நோக்கத்தில் அளிக்கப்படும் கருத்து; ஆலோசனை; புத்திமதி
- உலக நன்மைக்காக ஈன்ற கருத்துகள்; உபதேசம்; பொன்மொழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் சொன்ன அறிவுரை என் மனத்தில் ஊறிப்போயிருந்தபடியால் புகைக்குடியை நான் மிக வெறுத்தேன் (அகல் விளக்கு, மு, வரதராஜன்)
- பழங்கள், காய்கறி, கீரை, காய்ச்சின பால் எல்லாம் நிறையச் சாப்பிட வேண்டுமென்பதும் அவர் கூறி அனுப்பியிருந்த அறிவுரை (குறிஞ்சி மலர், நா. பார்த்தசாரதி)
- சாலைப் பணி: மழைக் காலத்துக்கு முன்னர் முடிக்க ஆட்சியர் அறிவுரை(தினமணி, 2 ஜூலை 2009)
- விவேகானந்தரின் அறிவுரைகளை நினைத்துப் பார்த்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் பெற முடியும் ([1])
- அறிவுரைகள் சொல்வது எளிது. அதன்படி வாழ்ந்து காட்டுவது கடினம்
- தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் - நோய்
- தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---அறிவுரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +