விருத்தாந்தம்
Appearance
பொருள்
விருத்தாந்தம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- occurrence, incident, event
- account, history
- tidings, news, rumour, report
- subject, topic
- fable, story
- nature
- kind, sort
- manner
- fullness, entirety
- rest, leisure
விளக்கம்
பயன்பாடு
- அம்மா என் கன்னத்தை தொட்டு "சரி, ஆவியுலகத்துடன் பேசுவதை இன்றுடன் நிறுத்து. நீ பேச்சுப்போட்டியில் முதலாவதாய் வரவேண்டும். நேரத்தை வீணாக்கக்கூடாது", என்றார். அம்மா சொன்ன ஆவியுலக விருத்தாந்தம் இதுதான். பக்கத்து வீட்டில் ஆவியுடன் பேசுவார்கள். நாலு பக்கமும் சட்டம்போட்ட ஒரு சதுரக் கண்ணாடியில் சுற்றிவர A,B,C,D என்று எல்லா ஆங்கில எழுத்துக்களும் எழுதியிருக்கும். கண்ணாடி நடுவிலே ஒரு மைப்புட்டியின் மூடியை கவிழ்த்து வைத்து, ஒரு சிறுவனும் சிறுமியும் எதிரெதிராக உட்கார்ந்து மூடியின் மேல் இரண்டு விரல்களால் தொட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த மூடி தானாகவே அசைந்து ஒவ்வொரு எழுத்தாக தொட்டுச் செல்லும். அந்த எழுத்துக்களை குறித்துவைத்து ஆவிகள் என்ன பேசுகின்றன என்பதைச் சொல்வார்கள். வீட்டுக்காரருடைய மகள் தனலட்சுமிதான் மீடியம். நான்தான் எதிர் மீடியம். ஆணும் பெண்ணும் எதிரெதிராக அமர்ந்தால்தான் மீடியம் முழு விசையுடன் செயல்படுமாம். (பேச்சுப் போட்டி, அ.முத்துலிங்கம்)
- இரவு பகலாக தொடர்ந்து வாசித்தேன். அதுதான் காரணமோ என்னவோ என் இடது கண்ணில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. கண் சிவப்பாகியது. நீர் வடிந்தது.. குடும்ப வைத்தியரிடம் போனேன். எங்கே சென்றாலும் ஒரு வரவேற்பாளினி இருப்பார். அவரைத் தாண்டுவதுதான் பெரிய காரியம். நான் என் கண் விருத்தாந்தத்தைக் கூறி மருத்துவரை பார்க்கமுடியுமா? என வினவினேன். அவர் மறுத்து கண் மருத்துவரைப் பார்ப்பதுதான் உசிதம் என அபிப்பிராயம் சொன்னார். (நான் உதவமுடியாது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விருத்தாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வேதாந்தம் - சித்தாந்தம் - வர்த்தமானம் - சம்பவம் - வரலாறு - செய்தி