இறும்பூது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

இறும்பூது(பெ)

 1. வியப்பு, அதிசயம், அற்புதம்
  விட்புலம் போய திறும்பூதுபோலும் (சிலப். பதி. 8).
 2. தகைமை
 3. மலை
 4. சிறு தூறு
 5. தளிர்
 6. தாமரை
 7. வண்டு
 8. காந்தள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. amazement, wonder, a matter of surprise
 2. magnanimity
 3. mountain
 4. shrub, bush
 5. shoot, sprout
 6. lotus
 7. bee
 8. malabar glory lily
விளக்கம்
 • இறும்பூதும் இறுமாப்பும்
தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் உரைகளில் எழுத்துகளில் இவ்விரு சொற்களும் நிரம்ப இடம் பெற்றிருக்கும். இறும்பூது என்னும் சொல்லுக்கு வியப்பு, அற்புதம், பெருமை, வண்டு, மலை, தாமரைப் பூ எனப் பல பொருள் உண்டு. "உங்கள் வளர்ச்சி கண்டு நான் இறும்பூதடைகிறேன்" என்றால் பெருமையடைகிறேன் என நல்ல பொருளில் கொள்ள வேண்டும். நான் வியப்படைகிறேன் என்று பொருள் கொண்டால், பாராட்டு மாறிப் பழிப்பாகிவிடும். இறுமாப்பு என்பது, செருக்கு, அகந்தை, பெருமிதம், நிமிர்ச்சி, ஆணவம் என்று பலவாறு பொருள் சொல்லப்பட்டாலும், ஏறத்தாழ ஒரே பொருள் தருவன அச்சொற்கள்.
அரிய பல நல்லவற்றை, ஆற்றலை, வெற்றியைப் பாராட்டும்போதும், வியப்பான செய்திகளைக் கேட்டபோதும் இறும்பூது என்னும் சொல்லை ஆளுதல் நன்றாம். இறுமாப்பு - பெருமிதம் என்ற பொருளில் மனிதர்க்கு இருக்க வேண்டிய நற்பண்புகளுள் ஒன்றே. ஆனால் அது அகந்தையாய், ஆணவமாய் ஆகிவிடக்கூடாது. கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு மாந்தரிடையே இருப்பது இயற்கையே.(பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, தினமணிக்கதிர், 12 டிச 2010)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இறும்பூது--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

இறும்பு - சுரும்பு - இரும்பு - வியப்பு - இறுமாப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறும்பூது&oldid=1014644" இருந்து மீள்விக்கப்பட்டது