தோரணை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தோரணை (பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஒருவரின் பதவி, செல்வம், எண்ணம் முதலியவற்றை வெளிப்படுத்தும் பாவனை/மிடுக்கு/முறை/கம்பீரம்
- ஒருவர் ஒரு செயலைச் செய்யும் விதம்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவன் வந்து நின்ற விதம், மிகவும் ஆத்திரப்பட்ட தோரணை, பேசிய சீற்றம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்துப் பார்த்தால் அப்படி இது அவனுக்கு மறந்து போய்விடும் என்று தோன்றவில்லை (ராணி மங்கம்மாள், தீபம் நா. பார்த்தசாரதி)
- அவருடைய குரலில் தொனித்த அதிகார தோரணை எல்லோரையும் சிறிது நேரம் மௌனமாக இருக்கச் செய்தது (பொன்னியின் செல்வன், கல்கி)
- அதற்கு என்ன கம்பீரம், என்ன அதிகாரத் தோரணை! அப்பெண்ணோ, நெடுநேரம் குழந்தையையே நோக்கி நின்று சிரித்துக் கொண்டிருந்தாள் (பிரம்ம ராக்ஷஸ், புதுமைப்பித்தன்)
- பழைய படங்களில் சிவாஜி கணேசன் அடிக்கடி வேதனை, கையாலாகாத்தனம், பெரியமனிதத் தோரணை எல்லாம் கலந்த ஒரு முகபாவம் காட்டுவார். (அ.மார்க்சின் உபன்யாசமும் சில கேள்விகளும், மு.கார்க்கி)
- செம்பட்டையன் பொண்டாட்டியைக் காணவரும் கிழவிகள் அவளது உடை, கால் மீது காலிட்டு அமர்ந்திருக்கும் தோரணை எல்லாம் கண்டு அவளது மாமியாளை நகைக்கிறார்கள் (ரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை, பிரவீன்)
- பெரிய பந்தாவோடு ஆய்வு நடத்தி, அனைவரையும் அலட்சியமாக ஒதுக்கி, அநாவசியத்திற்கு அவர்களை கவலைக்குள்ளாக்கிவிட்டு, தங்களை வல்லுநர்கள் போல தோரணை செய்து கொண்டு, அபத்தமான ஆலோசனைகளை உதிர்த்துக்கொண்டு, அதையும் அவர்கள் கவனமாகக் கேட்பதை ரசித்துக்கொண்டு, யதார்த்தத்தை சகித்துக் கொள்ளாமல் வெறும் ஏமாற்றல்களினால் மட்டுமே அவர்களைத் திருப்தியடையச் செய்து, தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்கின்றனர். (சந்தேகத்தின் பலன், ஜி.குப்புசாமி)
- கல்விக் கட்டண விஷயத்தில் தமிழக அரசுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாதது மாதிரியான தோரணை ஊடகங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது (, புதிய மொந்தையில் பழைய கள், தினமணி, 5 ஜூலை 2010)
- பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தோரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +