முன்னோர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முன்னோர் (பெ)
- முன்பு இருந்தவர்கள்/வந்தவர்கள்; முன்னையவர்; முன்னையோர்; மூதாதையர்
- பண்டையோர்; புராதனர்; பூர்விகர்
- மந்திரிகளின் தலைவர்; முதல்வர்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- predecessors; ancestors
- ancients
- chief ministers
விளக்கம்
பயன்பாடு
- (மனிதனுக்கு) குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின் (கடிதங்கள், ஜெயமோகன்)
- காலில் விழுவதென்பது இந்தியப்பண்பாட்டின் மிக மிக உயர்ந்த ஒரு ஆசாரம். பெற்றோர் காலிலும் குருநாதர் காலிலும் சிரம் பணியாத இந்தியன் ஒருபோதும் அவனது முன்னோர் தேடி வைத்த சிந்தனை மரபின் ஆழங்களுக்குள் செல்லப்போவதில்லை (அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும், ஜெயமோகன்)
- வேல்சாமியின் முன்னோர் தமிழ்நாட்டுக்கு வந்து 300 வருடமாகிறது. தொல்காலம் முதல் எங்கள் முன்னோர் வாழ்ந்த நிலம் இப்போது தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது (தோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும், ஜெயமோகன்)
- என் குலத்து முன்னோர்களும், நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஐந்து தலைமுறையாகப் பாடுபட்டு எத்தனையோ வீராதி வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்துச் சோழ ராஜ்யம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது (பொன்னியின் செல்வன், கல்கி)
- "செல்வா! உன் முன்னோர் மன்னாதிமன்னராக வாழ்ந்து இறந்த இந்த அரண்மனையை இறுதியாக ஒருமுறை பார்த்துக் கொள். இனி இந்த மாபெரும் அரண்மனை இருப்பதும், இல்லாததும் உனக்குக் கிடைப்பதும், கிடைக்காததும் விதியின் ஆணையைப் பொறுத்தது" என்றார் மகாராணி. (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி)
- இந்தக் குடிசையைத் தேடித் தாங்கள் வந்தது என் முன்னோர் செய்த பாக்கியம் (பொன்னியின் செல்வன், கல்கி)
- முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
- முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல
(இலக்கியப் பயன்பாடு)
- முன்னோர் மொழிபொருளே யன்றி (நன். 9)
- திண்ணியமெய் யறிவறிந்து தெளிந்த முன்னோர்
- பண்ணியநற் பழக்கமெல்லாம் பழித்தாய் நெஞ்சே! (நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் )
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முன்னோர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +