சிங்காரம்
Appearance
சிங்காரம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- அலங்காரம், ஒப்பனை, அழகு, சிங்காரிப்பு
- நவரசத்துள் ஒன்றாகிய காதல்; இன்பச்சுவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- decoration, embellishment, beautification, beauty, especially artificial, makeover, makeup
- sentiment of love
விளக்கம்
பயன்பாடு
- சிங்காரச் சென்னை - beautiful Chennai
- முகபடாம் அணிந்த யானைகள், நன்றாகச் சிங்காரம் செய்து கொண்ட பெண்கள், குழந்தைகள், ஆண்கள், தாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையின் காரணமாக அவ்வளவு காட்சிகளும் சேர்ந்து கொண்டு அந்த ஊரை அன்றைக்குக் கந்தர்வ நகரமாக மாற்றியிருந்தன. (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)
- நாமமும் போடுவார்! பட்டையாக அல்ல; பக்குவமாக; சிறிய கோடாக சிங்காரம் கெடாமல்! (நடுத்தெரு நாராயணி, கலைஞர் கருணாநிதி )
- நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ? (பாடல்)
- சித்தாடை கட்டிக்கிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு (பாடல்)
- தீராத விளையாட்டுப் பிள்ளை - இவன் சிங்கார மன்மதந்தான் சந்தேகமில்லை (பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- கொத்தலர்தார் மார்பன் கொலு விருக்குஞ் சிங்காரம் (பணவிடு. 85)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அலங்காரம் - ஒப்பனை - சிருங்காரம் - அழகு - காதல்