பயனர் பேச்சு:Info-farmer/2012
தலைப்பைச் சேர்உங்களை சிலமுறை அழைத்தேன்
[தொகு]தகவலுழவன், கடந்த மாதத்தில் உங்களை சிலமுறை அழைத்தேன். பிடிக்கமுடியவில்லை. switch-off என்பதுபோல் வந்தது. எண் மாறிவிட்டதா? பழ.கந்தசாமி 05:35, 2 சனவரி 2012 (UTC)
- அடடா!அதே எண் தான். அலைப்பேசியை மாற்றவேண்டும்.அதன் மின்கலம் அடிக்கடி சரியாக பொருந்தாமல், சற்று கழன்று விடுகிறது. வருந்துகிறேன்.மற்றொரு சந்திக்கும் நாளுக்குக் காத்திருக்கிறேன். நாங்கள் நலம். நீங்களும் நலமாக இருப்பீர்களென எண்ணுகிறேன்.வணக்கம்.--05:53, 2 சனவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
நடுக்கம்
[தொகு]தகவலுழவன், அவர்களுக்கு நீங்கள் நடுக்கம் என்னும் தலைப்பில் ஆவநாழி (மலையாளம்) என்னும் வார்த்தையை தவறாக இட்டிருக்கிறீர்கள். இது சரியெனின் எங்கு கண்டீர்கள். மலையாளத்திலும் ஆவநாழியின் பொருள் மலையாளத்திலும் அம்புக்கூடே. அன்புடன். --சிங்கமுகன் 10:35, 7 பெப்ரவரி 2012 (UTC)
- தவறுக்கு வருந்துகிறேன்.ஆம். நீங்கள் கூறியிருப்பது சரியே. இனிமேல் அதுபோல தவறு வராமல், கவனமாக இருக்கிறேன். நன்றி.--05:35, 8 பெப்ரவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
I would like to know
[தொகு]how to insert tab in wikipedia articles, i tried inserting it, using code ( ), it is failed and normal tab produces different output format. How to insert it?
- எனக்கு அதுபோன்ற தேவையில்லாததால்,அது எப்படி என்று கற்கவில்லை. நீங்கள் கற்பின், எனக்கும் கற்பிக்கவும்.--05:37, 8 பெப்ரவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
உங்கள் பயிற்சிப்பட்டறை எவ்வாறு சென்றது?
[தொகு]- பயளனுள்ளதாக அமைந்ததா? பயிற்சிப்பட்டறைநேரத்தில் சில ஆய்வர்கள் இங்கு பயனர்களாகினர். அது உங்களால்தான் என நினைத்துக்கொண்டேன். அடுத்தவாரம் இதுகுறித்துத் தொலைபேசியில் பேசலாம். பழ.கந்தசாமி 03:51, 13 பெப்ரவரி 2012 (UTC)
- தமிழ் கணிமை வளரவேண்டுமென்றால், தமிழோடு பிற துறையினரும் இணைந்து செயல்படவேண்டும் என்று உணர்த்தப்பட்டது. அவ்வாறு இல்லாமல், கணினியியல் வல்லுநர்கள் செய்த ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள தேய்வு குறித்து அலசப்பட்டது. அலைப்பேசி வழியே தட்டச்சிடல் முறை அறிமுகம் செய்யப்பட்டது.எனது பார்வை அகலமானது. விக்கித்திட்டங்களுக்கு நல்ல மரியாதை. ஆய்வாளர்கள் பலர் தமிழ்-தமிழ் அகரமுதலியை சிறப்பாக நாம் உருவாக்க உதவு முன்வந்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை ஒருங்கிணைத்து வருகிறேன். மற்றவை பிறகு..--04:09, 13 பெப்ரவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- மேலும் பலர் ஒருங்கிணைந்து பணியாற்றினால் இன்னும் சிறப்பாகச் செய்யலாம். இந்தவாரம் அழைக்கிறேன். பேசலாம். நன்றி. பழ.கந்தசாமி 04:15, 13 பெப்ரவரி 2012 (UTC)
- பல பற்றாக்குறைகளுக்கு இடையில் பணியாற்றுகிறேன். நம்பிக்கைகளுடன்.. எது எப்படியிருப்பினும் தொடர்வேன். --04:18, 13 பெப்ரவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
முதற்பக்க அறிமுகம் வேண்டல்
[தொகு]வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறேன். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்சனரி:பங்களிப்பாளர் அறிமுகம்/தகவலுழவன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? w:விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்சனரிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி--இரவி 12:20, 14 பெப்ரவரி 2012 (UTC)
- தங்களுக்கு எனது நன்றி. எனக்கு முன்னேயும், செயற்பட்டவர்கள், வித்திட்டவர்கள், வளர்த்தெடுத்தவர்கள் பற்றி வந்த பின்னர் நான் இடுகிறேன். முதற்பக்கத்தில் வருமளவு எதுவும் செய்ய வில்லை. இங்கு நிறைய கற்கிறேன். தொடர்ந்து என்னை கவனித்தமைக்கு மீண்டும் நன்றி கூற விரும்புகிறேன்.--00:31, 15 பெப்ரவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
அயல்மொழிச் சொற்கள்
[தொகு]அயல்மொழிச் சொற்களைப் பதிவேற்றுவது குறித்த தங்கள் கருத்தைப் பகிர வேண்டுகிறேன். நன்றி--இரவி 09:07, 16 பெப்ரவரி 2012 (UTC)
பரணிடுதல்
[தொகு]உரையாடல் பக்கங்களைக் காலவரிசைப்படி ஒட்டு மொத்தமாகப் பரணிடுவதே வழமை. சிலவற்றை விடுத்தும் சிவலற்றை மட்டும் தேர்ந்து பரணிட வேண்டாம். இதற்கு வார்ப்புரு இட்டு ஒப்புதல் கோரத் தேவை இல்லை. ஒரு பக்கம் அளவில் நீளும் போது, நாள் சென்ற உரையாடல் தலைப்புகளில் புதிதாக எவரும் தொடர்ந்து உரையாடவில்லை எனில் தொகுப்புக்கு நகர்த்தலாம். --இரவி (பேச்சு) 07:48, 2 மார்ச் 2012 (UTC)
- சரி. ஆனால், சில உரையாடல்கள் என்றும் அங்கேயே இருக்க வேண்டும் என்பதால் விட்டு விட்டு, அடுத்துள்ளதை மட்டும் காலவரிசைப்படி நகர்த்துகிறேன்.விடுபட்டவைகளை நகர்த்தும்போது உரிய காலக்கோர்வையை கவனித்தே நகர்த்துகிறேன்.
- மற்றொன்று, ஒரே நோக்கமுடைய உரையாடல்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்கிறது. சில உரையாடல்கள், மீண்டும் அதே நபராலோ அல்லது பிறராலோ மீண்டும் நடைபெறுகிறது. அவை அனைத்தும் ஒருங்கிணைப்பது எப்படி? அனைவரின் நேரத்தினையும் காக்கவும், இவ்விக்சனரி முன்னேறவும், இது மிக்க அவசியம் என்று கருதுகிறேன்.எப்படி?
- செம்மொழி மாநாட்டுகொடைத்தரவுகளைப் பதிவேற்றும் போது, நீங்களும், சுந்தரும் வாக்களிக்கவில்லை. என்ன இடர் என்றால் அதனை அறிந்து, மறு சீரமைப்பில் அதனை மேற்கொள்ளலாமென்று கருதுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 05:42, 6 மார்ச் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
hypen நிறுத்தற் குறியுள்ளவை போன்ற பகுப்புகள்?
[தொகு]தகவலுழவன், துறை சார்ந்த பகுப்புகளை அத்துறை சார்ந்த சொற்களை அறிய, மற்ற நிறம், உறுப்பு முதலிய பகுப்புகளால் பயனுண்டு.இவ்வாறான புதுப்பகுப்புகள் தேவையா என எனக்குத் தெரியவில்லை. நன்றி. 05:37, 9 மார்ச் 2012 (UTC)
- முன்பு சரிபார்க்கபட வேண்டியவை என்ற பகுப்பினை துவங்கினோம் அல்லவா? அதில் உட்பகுப்பு தான் இது.personal-computer என்ற ஆங்கில விக்சனரி சொல்லை எடுத்துக் கொண்டேன். அங்கு பகுப்பு இருந்ததால், நாளை ஆங்கிலச் சொற்களை மேம்படுத்துபவருக்கு, இப்பகுப்பு உதவக்கூடும். காமென்சில் hidden categories என்ற முறை பின்பற்றப்படுகிறது. அந்நடைமுறையினை ஒட்டி, இதனை பின்புலமாக வைக்க முடியும். அது குறித்து உதவுபவர்கள் ஊடகப்போட்டி முடிந்தவுடன் வருவர்.
- இப்பொழுது இப்பகுப்பில் உள்ளவைகளை, மற்றொரு பகுப்புக்கு மாற்றுகிறேன். அவ்வளவே ஏறக்குறைய ஆயிரம் சொற்கள் இப்பகுப்பில் வரும். அவை பல்வேறு இணைய ஆங்கில அகரமுதலிகளில் வேறுபட்டுள்ளன. எனவே எனக்குள் குழப்பம். அந்த மயக்கத்தை நீக்கவே, இந்த வழி.
இம்மாத இறுதிக்குள் நம் விக்சனரி, இன்னும் ஒரு படி முன்னேறும். மற்றவை தங்கள் கருத்துக் கண்டு. --05:51, 9 மார்ச் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
விளக்கம்
[தொகு]சீன, சீன எனத் தொடங்கும் எல்லா பகுப்புகளும் ச என்ற எழுத்தின் கீழேயே sort பண்ணப்படும். சீனப் பெயர்ச்சொற்கள் எனப்படும்பொழுது அது ப கீழேயே வருவது பொருந்தும். அவ்வாறே பிற. சீன உறவுசொற்கள் என்பது உ கீழே வருதல் பொருந்து. அவ்வாறு செய்வதற்காகவே அவ்வாறு இடப்படுகிறது. --Natkeeran (பேச்சு) 18:02, 10 மார்ச் 2012 (UTC)
- தங்கள் விளக்கத்திற்கு நன்றி.புரிந்து கொண்டேன். இத்தகைய மாற்றங்களை நிறைய கொண்டு வர வேண்டும்.--04:11, 11 மார்ச் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
பேச்சு
[தொகு]வணக்கம், உங்களுக்கான புதிய தகவல்கள் எனது பேச்சுப் பக்கத்தில் உள்ளன. --மதனாஹரன் (பேச்சு) 04:44, 11 மார்ச் 2012 (UTC)
கன்னட விக்சனரி - 2 இலட்சத்தைத் தாண்டி...
[தொகு]தகவலுழவன், இன்று கன்னட விக்சனரி 2 இலட்சத்தைத் தாண்டிவிட்டது. நமது வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். பழ.கந்தசாமி (பேச்சு) 15:50, 23 மார்ச் 2012 (UTC)
- ஒரு வாரத்தில் வேகத்தினை அதிகப்படுத்திவிடுகிறேன். அடிக்கடி வெளியூர் பயணம். --17:44, 23 மார்ச் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
எது சரி?
[தொகு]வணக்கம்! இணையதளம் அல்லது இணையத்தளம்? எது சரி? நமது விக்சனரியில் இணையத்தளம் என உள்ளது; தினமணியில் இணையதளம் என எழுதுகிறார்கள். இந்த வேறுபாடு விக்கிப்பிடியா கட்டுரைகளிலும் உள்ளது. நீங்கள் தெளிவுபடுத்தினால், அங்கும் சரி செய்வேன். --Selvasivagurunathan m (பேச்சு) 12:46, 5 ஏப்ரல் 2012 (UTC)
செங்கைப்பொதுவன் அய்யாவிடம் வினவியபோது, அவர்கூறியது பின்வருமாறு;-
தமிழில் உயர்திணை, அஃறிணை என்னும் பாகுபாடு உண்டு.
புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலில் வெட்சித் திணைக்கு 21 துறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் 8ஆவது துறை 'ஊர்கொலை'. இதற்கு 'ஊர்க்கொலை' என வேறு பாடமும் உண்டு எனக் காட்டியுள்ளனர்.
தமிழில் இரண்டாம் வேற்றுமைத் தொகைக்குச் சில மரபுகள் உண்டு.
தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை (திருக்குறள் 151) என்னும்போது இகழ்வாரைப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பது பொருள். இது இரண்டாம் வேற்றுமைத் தொடர். உயர்திணை உரண்டாம் வேற்றுமைத்தொகை முன் திரியும். மிகும்.
செற்றார்பின் சொல்லாப் பெருந்தகைமை (திருக்குறள் 1255) செற்றவர் பின்சேரல் (திருக்குறள் 1256) உயர்திணைச் சொல்முன் ஒற்று மிகாது
'தமிழ்நாட்டு அரசு' என்றால் 'தமிழ்நாட்டு' என்னும் சொல் அஃறிணை.
'தமிழ்நாடு அரசு' என்றால் 'தமிழ்நாடு' என்பது தமிழ்நாட்டு மக்களைக் குறிக்கும் உயர்திணை.
ஊர்கொலை என்றால் ஊரை அழித்தல் (ஊர் - அஃறிணை) ஊர்க்கொலை ஊர்மக்களை அழித்தல் (ஊர் - உயர்திணை}
இணையதளம் என்பதில் இணையம் என்பது உயர்திணை (இணையும் மக்களைக் குறிக்கும்) இணையத்தளம் என்றால் இணையும் இடத்தைக் குறிக்கும் (அஃறிணை) ----17:52, 8 ஏப்ரல் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
ஆலமரத்தடியில் கேட்டிருந்தேன் ஒரு கேள்வி
[தொகு]தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இருந்து நாம் பெற்ற சொற்களை விக்சனரியில் பதிவேற்றியதைப் பற்றி விக்சனரியில் பதிவு செய்த ஆவணப்பக்கங்கள் எங்குள்ளன என்று தெரியவில்லை. அவற்றின் இடம் மாறிவிட்டதா என்றும் தெரியவில்லை. இதைப்பற்றி ஆலமரத்தடியில் கேட்டிருந்தேன் (ஒரு மாதத்திற்கு முன்பு), நீங்கள் பார்த்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை. எங்கிருக்கின்றது என்று தெரிவிக்க வேண்டுகின்றேன். செம்மமொழி மாநாட்டில் குறிந்தகடு/இறுவட்டு வழங்கும் படமும் கூட இருந்தது. ஆலமரத்தடியில் இங்கு கேட்டிருந்தேன். நன்றி.--செல்வா (பேச்சு) 13:51, 28 ஏப்ரல் 2012 (UTC)
- நானும் தேடிப்பார்த்தேன். கிடைத்தவுடன் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். பொதுவாக நம் விக்சனரியில் ஆவணங்கள் சீர்மையாக இல்லை. குறிப்பாக உரையாடற் ஆவணங்கள்,ஆங்காங்கேச் சிதறிக் கிடக்கின்றன. இதுவரை நடந்த உரையாடல்களை சீராகக் கோர்க்க எண்ணினேன். அம்முயற்சியில் எனக்குத் தோல்வியே. அதனைவிட, விக்சனரிக்கு என்னால் இயன்றதை செய்ய எனக்கு நேரம் அரிதாகவே கிடக்கிறது. பொருளாதார சிக்கலில் சற்று சிரம ப் படுகிறேன். எனினும், எனக்குக் கிடைக்கும் நேரத்தில், விக்சனரியின் எண்ணிக்கை வளர்ச்சியைக் குறித்து செயல் படுகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--19:03, 28 ஏப்ரல் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
தேங்காய்துருவி
[தொகு]- மிக அருமையான காணொளி. இச்சொல்லை இன்றைய சொல் பகுதியில் படத்துடன் இடவேண்டும்.
- துருதுருவென்று ;) நிறைய பங்களித்துவருவதற்கும் நன்றி.
- நான் கேட்டதுகுறித்து யோசித்தீர்களா? உங்கள் விருப்பப்படி அதுகுறித்து மின்னஞ்சலிடவும். நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 17:32, 10 மே 2012 (UTC).
- அந்நிகழ்படம், காமென்சில் பதிவேறிய சில நாட்களிலே, அங்கு முதற்பக்கத்தில் சிறப்புபடமாக வந்தது. பதிவேற்றிய அப்பேராசிரியருடன் இணைந்து, தமிழ் விக்சனரிக்கு செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். அதனால் சில வேளைகள். அதன் காரணமாக, வாரத்திற்கு இரண்டொரு நாட்கள் வெளியூர் பயணம். தமிழக அரசுடன் பேசி வருகிறார். பாதி வெற்றி எனலாம்.32 தொகுதிகளில், முன்பு சொற்பிறப்பியல் அகரமுதலிகளை, தமிழக அரசு வெளியிட்டது. அதில் சில காணவில்லை. மறுபதிப்பை அரசு நிறத்தி பல வருடங்கள் ஆகிறது. அப்பதிப்புகளை, அவரது வழிகாட்டுதல் படி, தேடி வருகிறேன். உங்களது அன்றைய உரையாடல், என்னுள் புத்துணர்ச்சியைத் தந்ததுள்ளது. அதனால் என்னுள் எழுந்துள்ள ஆற்றல் என் மனதை மென்மையும், என் உடலை மேன்மையும் செய்துள்ளது. இரண்டொரு நாளில் மின்னஞ்சல் செய்கிறேன். ஞாயிறு அன்று சந்திப்போம். வணக்கம்.--18:02, 10 மே 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
மின்னஞ்சல் பார்க்கவும்
[தொகு]தகவலுழவன், உங்களுக்கு இன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும். தனிப்பட்ட உரையாடலை அங்கேயே தொடராலாம். பழ.கந்தசாமி (பேச்சு) 17:07, 18 மே 2012 (UTC).
- கண்டேன்.பதிலுரைப்பேன். வணக்கம்--00:06, 19 மே 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
இன்னோர் ஆயிரம்
[தொகு]- தகவலுழவன், வாழ்த்துகள். தொடர்ந்து அயராது பங்களித்து வருவதற்கு நன்றி. பழ.கந்தசாமி (பேச்சு) 17:17, 28 மே 2012 (UTC)
- தூரத்தில் இருக்கும் விளக்கை நோக்கி ஓடுகிறேன்.முடிந்தவரை, தரத்தையும் அதில் காக்க முயலுகிறேன்.என்னுள் இருந்து செயல்படுவர் சிலர். அதில் நீங்கள் முதல்வர். ஒருவேளை நீங்கள் விக்சனரியில் இல்லாது இருந்தால், நான் கால வெள்ளத்தில், அடித்துச்செல்லப் பட்டிருப்பேன். உங்களது பலவேலைகளுக்கும் இடையில், தரத்துடன் தமிழ் சொற்களை பதிவு ஏற்றுகிறீர்கள். அது எனக்குள் உந்து ஆற்றலாக இருக்கிறது. உங்களை விட, அதிக சொற்களை, தரத்துடன், நான் பதிவேற்ற வேண்டும் என்பதே எனது முனைப்பு. அதுவரை ஓய மாட்டேன்.நன்றியெல்லாம் கூற வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.வணக்கம்.--01:29, 29 மே 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்
[தொகு]ஓ! சரி. பார்த்துக் கொள்கிறேன். மீண்டும் மீண்டும் வரத்தூண்டுவது அல்லவா நம் தமிழ் விக்சனரி!! --பரிதிமதி (பேச்சு) 15:16, 3 சூன் 2012 (UTC)
- எனக்கும் மகிழ்ச்சியே. உங்களை அலைப்பேசியில் அழைத்தேன். எண்ணை மாற்றிவிட்டீர்களா? நான் அழைத்த அலைப்பேசியின் கடைசி 5 எண்கள் வருமாறு -----33101.எனது அலைப்பேசியின் கடைசி 5 எண்கள் -----43342--15:34, 3 சூன் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
அடுத்த இரண்டு நாட்கள்
[தொகு]தகவலுழவன், தொடர்ந்து சிறப்பாகச் செய்துவருகிறீர்கள்.
சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு என்ற மாநாட்டில் இருப்பதால் இங்கு வருகை குறைவாக இருக்கும். பார்ப்போம். பழ.கந்தசாமி (பேச்சு) 13:05, 9 சூன் 2012 (UTC)
- நிறைய நிழற், நிகழ் படங்கள் எடுக்கக் கோருகிறேன். வணக்கம்.--14:44, 9 சூன் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Categories
[தொகு]Hello,
(Speaking only very imperfectly Tamil, I am writing in English. I'm sorry).
I notice that you are a regular contributor on Wiktionary. Also, could you tell me how to use the categorization system?
Sincerely, --Ikotobaity (பேச்சு) 15:21, 4 சூலை 2012 (UTC)
- categorization is simple. [.[category:languagename-noun/verb/adjective]] you. பகுப்பு:மலகாசியம்-பெயர்ச்சொற்கள்/ பகுப்பு:மலகாசியம்-வினைச்சொற்கள்/ பகுப்பு:மலகாசியம்-உரிச்சொற்கள்
- See the changes in your uploads. esp., andevo or boaty or அட்டைப்பெட்டி Kindly try to develop a media dictionary. Will you please make a audio file of boaty
- The translation of Tamil is wrong in sama which is corrected.
- Is any online Malagasy dictionary available?
- May i furnish few standards of ta.wiktionary?
- I think you are using python. Is it?
- --18:39, 5 சூலை 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- For Tamil translations, I am basing myself on English-Tamil dictionary on Tamilcube.com ; I use the Malagasy Wiktionary for English-Malagasy translation. About dictionaries, you can use Malagasyworld.org ; but it is less complete than the Malagasy Wiktionary.
- I create a list of translation in a textfile and then upload them to Tamil Wiktionary using Python. I will try to make an audio file for andevo or boaty. I'll try to upload them to commons so we can use them on Malagasy Wiktionary too.
- Sincerely yours, --Ikotobaity (பேச்சு) 19:39, 7 சூலை 2012 (UTC)
சற்று விளக்கவும்
[தொகு]புறநானூற்றுப் பாடல்:
- வேந்துடையவையத் தோங்குபுகழ் தோற்றினன்
- வருபடை யெதிர்தாங்கினன்
- பெயர்படை புறங்கண்டனன்
இதை கொஞ்சம் விளக்குங்கள் உழவன்.. --எஸ்ஸார் (பேச்சு) 16:15, 25 ஆகத்து 2012 (UTC)
- இங்கு காணவும்.--த♥ உழவன் +உரை.. 17:11, 25 ஆகத்து 2012 (UTC)
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தகவலுழவன் அவர்களே
[தொகு]பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தகவலுழவன் அவர்களே!—முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Vatsan34 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .
- நன்றி.மறந்திருந்தேன்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 07:24, 27 ஆகத்து 2012 (UTC)
அம்மா
[தொகு]உங்களுக்கான புதிய தகவல்கள் எனது பேச்சுப் பக்கத்தில் உள்ளன.--மதனாகரன் (பேச்சு) 06:20, 15 செப்டெம்பர் 2012 (UTC)
- இன்னுந்தகவல்கள் உள்ளன. --மதனாகரன் (பேச்சு) 07:22, 15 செப்டெம்பர் 2012 (UTC)
ஒரு சந்தேகம் & வேண்டுகோள்
[தொகு]வணக்கம் தகவலுழவன், நாம் உருவாக்கும் ஆங்கிலச் சொற்களுக்கு ஆங்கில விக்கியில் கட்டுரை இருந்தால் இங்கு இணைப்பதில்லை, நான் கூறுவது சரிதானே? ஒரு வேண்டுகோள் {{subst:noun|}} {{subst:adj|}} {{subst:verb|}} போன்றவற்றை மீடியாவிக்கி:Edittoolsல் சேர்த்தால் சொற்களை வார்ப்புரு மூலம் பதிவேற்றுவது எளிதாக இருக்கும், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 01:07, 17 அக்டோபர் 2012 (UTC)
{{subst:noun|}.} இணைத்துள்ள இடம் சரியா? அல்லது முதல் வரிசையில் அமைக்கவா? ஆம் எனில், பிறவற்றினையும் இணைக்கிறேன்.பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள் என்பவற்றில் பெரும்பாலானாவை ஆங்கில விக்சனரியில் இல்லாதவை. அவர்கள் நடைமுறை உத்திகளோடு ஒப்பிடும் போது, நாம் இன்னும் தத்துப்பிள்ளைகளே. அவ்வப்போது சில தானியங்கிகள் ஆங்கி.விக்சனரியில் இணைப்பை நாம் உருவாக்காவிட்டாலும், இங்கு விக்கியிடை இணைப்பை உருவாக்கும். விக்சனரியின் விக்கியிடை இணைப்புத் தானியங்கி, விக்கிப்பீடியாவின் தானியங்கிகளை விட சிறப்பாக செயல்படுபவை. முன்பு அது ஒவ்வொரு நாளும் செயல்படும். இப்ப அப்படியில்லை. விக்சனரிக்கான தொழில்நுட்பங்களை உங்களைப் போன்றோர் தான் ஆராய வேண்டும். அப்போது தான் தமிழ் இந்திய மொழிகளுக்கு முன்னோடியாக விளங்கும். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் இருப்பது போல, விக்சனரியின் எதிர்காலமும் உங்கள் கையில்தான் உள்ளது. எனவே, சிந்திக்க வேண்டுகிறேன்.--த♥ உழவன் +உரை.. 04:53, 17 அக்டோபர் 2012 (UTC)
- மிக்க நன்றி, அதே இடத்தில் இணைத்து விடுங்கள் தகவலுழவன் மேலும் உங்கள் நம்பிக்கைக்கு நன்றி, எதோ எனக்கு தெரிந்ததை முயன்று பார்க்கிறேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 07:08, 17 அக்டோபர் 2012 (UTC)
- மிக்க நன்றி, அதே இடத்தில் இணைத்து விடுங்கள் தகவலுழவன் மேலும் உங்கள் நம்பிக்கைக்கு நன்றி, எதோ எனக்கு தெரிந்ததை முயன்று பார்க்கிறேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 07:08, 17 அக்டோபர் 2012 (UTC)
தீர்வு --த♥ உழவன் +உரை.. 12:34, 17 அக்டோபர் 2012 (UTC)
தொகுத்தலில் சிக்கல்
[தொகு]என் பெயரில் பதிகை செய்யாமல் உள்ளபோது உரையாடல், தொகு உள்ளிட்ட அனைத்து பொத்தான்களும் இயங்குகின்றன. ஆனால், என் பெயரில் பதிகை செய்யும் போது எந்த பொத்தானும் வேலை செய்யவில்லை; எனவே, என்னால் தொகுக்க இயலவில்லை. ஏதேனும் சிக்கலா? த.செ. விளக்கவும். நன்றி.--பரிதிமதி (பேச்சு) 14:40, 24 அக்டோபர் 2012 (UTC)
- எனக்கு சரியாகத்தான் இயங்குகிறது. நான் இப்ப pinguy OS இயக்குதளத்தில் இயங்குகிறேன். பைத்தான் மூலம் தானியங்கியை செயற்படுத்த முனைப்பாக உள்ளேன். பொதுவாக வின்டோசில் சில தொகுத்தல் குறைபாடுகள் அவ்வப்போது வருகின்றன. புதிய செய்திகள் கூட ஆங்கிலத்தில் தான் வருகிறது. இதுபற்றி சிறீகாந்துக்குத் தான் தெளிவாகத் தெரியும்.ஏனெனில், எனக்கு மெட்டாவிக்கி செயற்பாடுகள் பற்றி அதிகம் தெரியாது.இருப்பினும் விசாரித்து சொல்கிறேன். சந்திப்போம்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 16:32, 24 அக்டோபர் 2012 (UTC)
- இதற்கு தீர்வாக இரண்டு வழிமுறைகளைக் கையாளலாம்.
- சொடுக்கியை தொகு பொத்தானுக்கு முன்னும் பின்னும் நகர்த்துங்கள். ஏதாவது ஒரு இடத்தில் கைபோன்ற இணைப்புப்படம் வரும். அப்ப சொடுக்கினால் வேலை செய்யும்.அப்பவும் வரவில்லையென்றால், பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.
- எந்த பக்கத்தை நீங்கள் தொகுக்க விரும்புகிறீர்களோ, அப்பக்கம் செல்லவும். பிறகு, மேலுள்ள இணையமுகவரி சாளரத்தின் இறுதியில் ?action=edit என்பதனை சேர்த்து வலப்பக்கமுள்ள --> அம்புகுறியை அழுத்தவும். இப்ப உங்களால் தொகுக்க முடியும்.
- இந்த வழுபற்றி பலர் கூறியிருக்கின்றனராம்.விரைவில் தீர்வை மெட்டாவிக்கியனர் செய்து முடிப்பர்.மேற்கூறிய வழிமுறைகளால், என்ன நடந்தது என்று ஒரு வரி எழுதுங்கள்.அல்லது எனது எண்ணுக்கு எப்ப வேண்டுமானாலும் அழைக்கவும்.ஆவலுடன்..--த♥ உழவன் +உரை.. 18:05, 24 அக்டோபர் 2012 (UTC)
- என் விருப்பத்தேர்வுகளில் Modern-க்கு பதிலாக Vector-ஐத் தேர்வு செய்தபின் இப்போது தொகு உள்ளிட்ட அனைத்துப் பொத்தான்களும் இயங்குகின்றன. உங்கள் நேரத்திற்கு நன்றி. --பரிதிமதி (பேச்சு) 17:12, 26 அக்டோபர் 2012 (UTC)
வந்தேன்
[தொகு]வந்துவிட்டேன் உழவரே! இன்றும் நாளையும்(நவம்பர் 4&5) இங்கேயே இருப்பேன். விரைந்து சொன்னீர்களானால் செய்து முடிப்பேன். என் பேச்சுப் பக்கத்தில் செய்தியை இடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:37, 3 நவம்பர் 2012 (UTC)
- நீங்கள் கூறியபடியே உங்கள் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.--த♥ உழவன் +உரை.. 16:50, 3 நவம்பர் 2012 (UTC)
ஐயம்
[தொகு]மொழிபெயர்ப்புகள் பகுதியில் மொழிகளை குறிக்க வார்ப்புருக்களை பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால் வார்ப்புருக்களின் பெயர் தெரியவில்லை. மொழிகளை எப்படி குறிப்பது? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:48, 4 நவம்பர் 2012 (UTC)
- power cut. Missed call, pls. 90 95 34 33 42..த♥ உழவன் +உரை.. 13:09, 4 நவம்பர் 2012 (UTC)
உங்கள் கைபேசியில் தமிழ் தட்டச்சு இல்லையா? :( மின்சாரம் என்பது ரசினிகாந்த் மாதிரி! இப்பயெல்லாம் எப்ப வரும், எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது!! மின்சாரம் வந்தவுடன் பதிலளியுங்கள். அவசரமில்லை. உங்கள் எண்ணைச் சேமித்துவிட்டேன். தேவையான பொழுது கேட்கிறேன். :) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:27, 4 நவம்பர் 2012 (UTC)
- அம்மா என்ற சொல்லிலேயே அனைத்தும் உள்ளது. வார்ப்புருவின் பெயர்{{சிறு-மொழி|en}.} ஒன்று தான். உள்ளீடு செய்யும் மொழி தமிழ் என்றால்|(pipeline)க்கு அடுத்துta. ஆங்கிலம் என்றால் en மலையாளம் ml இந்தி hi என..ISO639 குறியீட்டை இட்டால் போதும்.விக்சனரி திட்டத்தில், அக்குறியீடுகளை இங்கு காணலாம்.--த♥ உழவன் +உரை.. 17:18, 4 நவம்பர் 2012 (UTC)
திட்டம்
[தொகு]- திட்டம் இருந்தால் கூறலாம் என்ற தங்களின் கூற்றின்படி யோசித்துப் பார்த்தேன். நான் தமிழ்ச் சொற்களை சரியாக உச்சரிப்பேன். எனவே சொற்களின் ஒலிக் கோப்புகளை பதிவேற்ற விரும்புகிறேன். பேச்சில் வட்டார வழக்கு தெரியலாம். இருப்பினும் திருத்திக் கொள்வேன்.
- தேவை:எந்த வகை(.ogg??), ஒலிப்பை துல்லியமாக பதிய மென்பொருள், ஒலிவெட்டி(mp3cutter??) போன்ற மிக மேலதிக தகவல்கள் தரவும்.
ஊருக்குச் செல்வதால் மடிக்கணினியை எடுத்துச் செல்ல முடியாது. கைபேசிவழியாக கட்டுரைகளை தொகுத்தல் கடினமான செயல். விக்சனரியில் தான் உலவ முடியும். நீங்கள் உதவினால் என் கைபேசியிலேயே சொற்களைப் பதிவு செய்து .aac வகையில் சேமித்து வைப்பேன். பின்னர் மாற்றிக் கொள்ளலாம். உரிய தகவல்கள் தந்து விளக்கவும். வழிகாட்டல் தேவை. :) -13:37, 6 நவம்பர் 2012 (UTC)
- நல்லதொரு எண்ணம்.அதனால் விக்கிப் பொதுவகத்திலும் எண்ணம் அதிகமாகும். இங்கும் எண்ணம் அதிகமாகும். பல எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே எனது அலைப்பேசியின் குறிப்பைத் தந்தேன். உங்களுக்கு உகந்த நேரத்தில் எனக்கு, உங்கள் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பவும். நானும் சனியன்று நாளை மறுநாள் திருச்சியும், பெரம்பலூருக்கும் செல்கிறேன். எனவே இரண்டு நாட்கள் கழித்தே திரும்புவேன். உங்களுக்கு கட்டற்ற மென்மங்களில் நிரல் எழுதுவதில் ஆர்வமுண்டா? தமிழ் - தமிழ் - பன்மொழி அகரமுதலிக்கு பலவற்றை ஆரம்பிக்க வேண்டிய நிலையுள்ளது. தொடர்வோம். அதுவரை ஒலிக்கோப்புகளை உருவாக்கவும். அம்மா என்ற சொல்லின் சொல்வளப்பகுதியில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும் உருவாக்கி அலைப்பேசியிலேயே சேமித்து வைக்கவும். பிறகு அதனை ogg வடிவத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். சந்திப்போம்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 16:01, 6 நவம்பர் 2012 (UTC)
செயற்திட்டம்
[தொகு]நீங்கள் கூறியபடியே ஒலிக்கோப்பை சேமித்துவைக்கிறேன். நிரல் எழுதுவதில் அதீத ஆர்வங் கொண்டுள்ளேன். எனினும் நான் புதியவன். விக்கி தொழில்நுட்பம் கற்க நேரம் ஆகும். விக்சனரியில் நிரல்களை மாற்ற வேண்டும். இது குறித்து நிறைய பேச வேண்டும். நேரமின்மை :( -தமிழ்க்குரிசில்
- 5நிமிடங்கள் போதும். நிரல் பற்றிய தேவையொன்றைக் கூறுவேன். வருடக் கணக்கில் இது பற்றி சிந்தித்துள்ளேன்.அழையுங்கள்.நேரமின்மை பலருக்கும் உண்டு. இருப்பினும் அதிக நேரம் என்பதை ஆவலால் நாம் எடுத்துக் கொள்கிறோம்,. எனவே நமது ஆவலைச் சற்று குறைத்தால் ஓரளவு நேரம் கிடக்கும் என்றே நான் கருதுகிறேன்.--த♥ உழவன் +உரை.. 16:35, 6 நவம்பர் 2012 (UTC)
முடிந்தால் தற்போது கூகுள் அரட்டைக்கு வாருங்கள். காத்திருக்கிறேன்-தமிழ்க்குரிசில்
- எனக்கு மின்னஞ்சல் (tha.uzhavan AT ஜிமெயில்) ஒன்றை அனுப்புக!--த♥ உழவன் +உரை.. 16:52, 6 நவம்பர் 2012 (UTC)
- தேர்வுகள் இருக்கின்றன. நான்கு வாரங்களுக்கு வர இயலாது. பின்னர் பேசுகிறேன். குறிப்பிட வந்தது,,
பிற மொழி விக்சனரிகளில் பல தமிழ்ச் சொற்கள் பிழையாக உள்ளன. கிரந்தத்தைக் குறிக்கவில்லை. எழுத்துகள் விடுபட்டுள்ளன, தவறான எழுத்துக் கூட்டல்கள் உள்ளன. சில இடங்களில் தமிழ் அல்லாத சொற்கள் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன, எரிதங்களாக இருக்கலாம், நேரம் கிடைக்கும் போது திருத்துங்கள். செய்வதற்கான வழி: 1. xx.wiktionary.org/wiki/special:allpages செல்லவும். xx- இரண்டு எழுத்து மொழிக் குறியீடு 2. அதில், வரிசையாக, ”இதிலிருந்து இதுவரை” என இருக்கும். லத்தீன் எழுத்துகள், சிரில்லிக் எழுத்துகள், தேவநாகரி, குஜராத்தி எழுத்துக்களுக்குக் கீழே, தெலுங்கு, தாய், சீன எழுத்துக்களுக்கு மேலே, தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட சொற்கள் இருக்கும், 3. அதைச் சொடுக்க சொற்கள் பட்டியலிடப்படும் பார்த்துத் திருத்துங்கள்.
நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:01, 18 நவம்பர் 2012 (UTC)
- சரி. த.கு. மின்தடை காரணமாக, துல்லியமாக எதையும் செய்ய இயலவில்லை. இல்லையென்பதற்கு மாற்றாக 50-60% வேலைகளைச் செய்கிறேன். தொடர்ந்து முடிப்பேன். உங்களுக்கு அடுத்த முறை நேரம் கிடைக்கும் போது, சற்று முன் கூட்டியே சொல்லவும். செயற்படுவோம். வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 10:06, 18 நவம்பர் 2012 (UTC)
மயங்கொலிச் சொற்கள்
[தொகு]காண்க: மயங்கொலிச் சொற்கள் அருமையான சொற்கள்--HK Arun (பேச்சு) 11:23, 15 திசம்பர் 2012 (UTC)
- 2009 ஆம் ஆண்டு ஒரு இத்திட்டம் ஒன்றைத்துவங்கினேன். பகுப்பு:வேற்றெழுத்து வேறுபாடுகள் என்பதனையும் காணவும். அப்பகுப்பு விரிவாக்கத்திற்கு உதவும் மிக்க நன்றி. இனி இங்கு தமிழ் சொற்கள் வளரும். வணக்கம்--த♥ உழவன் +உரை.. 11:04, 1 சனவரி 2013 (UTC)