மா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Tamil Numerals 1.jpg

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • மா, பெயர்ச்சொல்.
 1. ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ)
 2. 1/20 பின்னயெண் - ஒருமா
 3. மாநிறம்.
 4. குதிரை
 5. விலங்கு
 6. யானை , பன்றி ஆகியவற்றின் ஆண்
 7. சிம்மராசி
 8. வண்டு
 9. அன்னம்
 10. விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம்
 11. மாமரம்
 12. அழைக்கை
 13. சீலை
 14. ஆணி
 15. துன்பம் பொறுக்கை
 16. ஓர் அசைச்சொல்
 17. திருமகள்
 18. செல்வம்
 19. கலைமகள்
 20. மாற்று
 21. ஒரு நிறை
 22. கீழ்வாயிலக்கத்துள் ஒன்று
 23. நிலவளவைவகை
 24. வயல்
 25. நிலம்
 26. வெறுப்பு
 27. கானல்
 28. ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல்
 29. பெருமை
 30. வலி
 31. அழகு
 32. கருமை
 33. நிறம்
 34. மாமைநிறம்
 35. அரிசி முதலியவற்றின் மாவு
 36. துகள்
 37. நஞ்சுக்கொடி
 38. அளவை
 39. இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல் .

இடைச்சொல்[தொகு]

 1. உண்கமா, உயர்கமா - (இடைச்சொல்) "மாயக் கடவுட்கு உயர்கமா வலனே" (இளம்பூரணர் தொல்காப்பிய உரை மேற்கோள் 2-7-25) (இந்த முன்னிலை அசைச்சொல் வியங்கோள் மொழியைத் தொடர்ந்து வரும்)

உரிச்சொல்[தொகு]

 1. கருமை, பெருமை
 2. பெரிய - மாபெரும்.
 3. நிலம் - மாநிலம்.
மாமரம்
மொழிபெயர்ப்புகள்

{ஆதாரம்} --->tamillex 94 - 100

"https://ta.wiktionary.org/w/index.php?title=மா&oldid=1641134" இருந்து மீள்விக்கப்பட்டது