முதுவாய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முதுவாய், .
விளக்கம்
- முதுவாய்க் குயவன் = ஊரில் திருவிழாக் கொண்டாடும் நாளை அறிவிப்பான் (நற்றிணை 200-4)
- முதிவாய்க் கோடியர்
- தெருவில் யாழ் மீட்டுவர்(பட்டினப் பாலை 253)
- முரசு முழக்குவர் (குறுந்தொகை 78-2)
- முதுவாய்ப் பெண்டிர் = முருகு அயர்ந்தால், இவள் தணிகுவள் என்பர் (அகம் 22-7)
- முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் = தன் கையிலுள்ள பிரம்பால், பெண்ணின் கையைத் தொட்டுப் பார்த்து, இவள்மீது முருகு ஏறியுள்ளது என்பர் (அகம் 98-8)
- முதுவாய்ப் பெண்டு = பந்தற்காலில், சிவப்புநிறம் பூசிய குடில்களில் வாழ்வர் (அகம் 63-14)
- முதுவாய் இரவலன் என்னும் முருகு ஏறிய வேலன், முருகன் குடிகொண்டுள்ள இடங்களுக்கெல்லாம் ஆற்றுப்படுத்தப் படுகிறான் (முருகு 284 )
- சிறுபாண் என்னும் சீறியாழ்ப் பாணன், முதுவாய் இரவலன் என்று விளிக்கப்படுகிறான் (சிறுபாணாற்றுப்படை 40)
- பேழியாழ் மீட்டும் பாணன், முதுவாய் இரவலன் என்று விளிக்கப்படுகிறான் (பதிற்றுப்பத்து 66-3)
- புலவனை, முதுவாய் இரவலன் என்றனர் (புறம் 48-7, 70-5)
- பாணனை, முதுவாய் இரவலன் என்றனர் (புறம் 180-52)
- முதுவாய் வேலன் = கழங்கை உருட்டி, குறி சொல்லும் வேலன் (நற்றிணை 282-5) வெறி ஆட்டு விழா நடத்தும்படி அன்னையிடம் கூறுபவன் (அகம் 388-19)
- முதுவாய்ப் பாணன் = நான் உனக்கு முயல்கறி தருவேன், அரசன் வாகை சூடி வந்தபின், உனக்கு வாடாத் தாமரை சூட்டுவான் என்று அரசி ,முதுவாய்ப் பாணனிடம் கூறுகிறாள் (புறம் 319-9)
- முதுவாய் ஒக்கல்
- பல்வேறு ஊர்களில் வாழும் முதுவாய் ஒக்கல், திருவிழாக் காலத்தில் ஒன்று கூடுவர் (பட்டினப் பாலை) 214
- தலைவன் மாண்டபோது முதுவாய் ஒக்கல், தன் கை வளையல்களை உடைத்துப் போட்டது, வாழைப்பூ உதிர்ந்து கிடப்பது போல் கிடந்தது (புறம் 237-12)
- முதுவாய்ச் சாடி = கஃடு என்னும் கள் ஊற்றி முற்றத்தில் வைத்திருந்த தானை (புறம் 319-3)
- முதுவாய்ப் பல்லி = பல்லி பசியில் ஒலிக்கும், அந்த ஒலியைக் கேட்டுப் போருக்குச் சென்றவன், உயிரோடு உள்ளான் என்று, அவன் மனைவி நம்பினாள்(அகம் 387-16)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- .
- .
- .
( மொழிகள் ) |
சான்றுகள் ---முதுவாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி