உள்ளடக்கத்துக்குச் செல்

தெளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தெளிதல் (வி) ஆங்கிலம் [[இந்தி ]]
தெளிவாதல் become clear, limpid, transparent, as water by the settling of sediment
அமைதியுறுதல் become serene, as the mind
ஒளிர்தல் be bright, as the countenance
வெண்மையாதல் become white, as cloths by washing;
ஒழிதல் clear away, disappear, as famine, as an epidemic
ஐயம் நீங்குதல் clear up, as doubt; to become evident, obvious, as the meaning of a passage
முடிவுக்கு வருதல் come to a conclusion
குணப்படுதல் be cured, as disease
செழித்தல் grow stout, fat, sleek, as persons or animals; thrive, as vegetation
இலாபம் காணுதல் turn out, as clear profit; accrue, as gain; to be a clear gain after allowing for all expenses
ஆராய்தல் consider, investigate
அறிதல் know, understand, perceive, experience
நம்புதல் trust, confide in
துளைத்தல் pierce, perforate
விளக்கம்
பயன்பாடு
  1. பஞ்சம் தெளிந்தது (famine ended)
  2. ஐயம் தெளிந்தது (doubt has cleared up)
  3. நோய் தெளிந்துவிட்டது (disease is cured)
  4. ஆள் இப்போது தெளிந்திருக்கிறான் (he has thrived)

(இலக்கியப் பயன்பாடு)

  1. பாகும் தெளிதேனும் (ஔவையார்)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தெளித்தல் (வி) ஆங்கிலம் [[இந்தி ]]
துப்புரவாக்குதல் clear, free, as from turbid or feculent matter; clarify, refine, clean
தெளிவித்தல் make known, affirm clearly, cause to believe
ஊடல் உணர்த்துதல் pacify, make up, as a love-quarrel
வெளிப்படுத்துதல் make manifest, reveal
நிச்சயித்தல் determine
தூவுதல் strew, scatter, sprinkle, as water
விதைத்தல் sow, as seed
கொழித்தல் cast up in sifting, as sand, as pearls
புடைத்தல் winnow, separate large from small particles by a fan
சாறு வடித்தல் extract the essence
உருக்கி ஓட வைத்தல் melt, as in refining gold
நீக்குதல் dispel, as fear, sorrow, delirium
சூளுறுதல் take an oath, swear
விளக்கம்
பயன்பாடு
  1. வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டாள் (She sprinkled water at the entrance ground and decorated it with colorful flour)

(இலக்கியப் பயன்பாடு)

மீந்தபாற் செம்பில் விழுது கரைத்துச்
சாய்ந்து விடாமல் தாழைத் திறந்து
தெருவின் குறட்டில் '''தெளித்தாள்'''! 

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தெளி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
தெளிவு clearness
சாறு juice, essence
ஒளி light
விதைப்பு sowing, as of seeds in a field
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெளி&oldid=1065282" இலிருந்து மீள்விக்கப்பட்டது