சாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஆரஞ்சுப் பழச் சாறு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாறு   (பெயர்ச்சொல்)

  1. பழத்தின் பிழிவு, பிழி; இலை, தண்டு, முதலான தாவரப்பொருள்களின் பிழிவு
  2. கள்
  3. பூசை
  4. திருவிழா, கூட்டம்
  5. கொத்து
  6. குலை
  7. திருமணம்
  8. உள்தன்மை, சாரம்
விளக்கம்
  1. ஒன்று சேர்தல், திரள்தல் என்பது அடிக்கருத்து. பழத்தின் பிழிவு என்பது பழத்தின் பகுதிகளை ஒருசேர நெருக்கிப் பிழிவதால் பெறும் நீர்மம். திருவிழா, பூசை, கொத்து குலை திருமணம் என்பனவெல்லாம் ஒன்று சேர்தல், கூடுதல் என்னும் அடிப்பொருள் கொண்டவை.
பயன்பாடு
  • பழச்சாறு சாறு உடலுக்கு உகந்தது.; ஆரஞ்சுப் பழச்சாற்றில் உயிர்ச்சத்து "C" அதிகம் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்

[தொகு]

சொல்வளம்[தொகு]

சாறு
பழச்சாறு, சுவைச்சாறு, கனிச்சாறு
எலுமிச்சைச்சாறு, தக்காளிச்சாறு, ஆரஞ்சுச்சாறு, கருப்பஞ்சாறு, புளிச்சாறு
சாறுபிழி, சாறெடு
சாறுண்ணி

வினைச்சொல்[தொகு]

சாறு   (வினைச்சொல்)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பிழி
  • வில் (விற்பனை செய்)
  • திரட்டு, கூட்டு


சான்றுகோள்
  • கழகத் தமிழ் அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாறு&oldid=1967964" இருந்து மீள்விக்கப்பட்டது