உள்ளடக்கத்துக்குச் செல்

தகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

தகை(பெ)

  1. பொருத்தம்
    • காண்டகைய செல்வக் கடம்பவனத்து (குமர. பிர. மதுரைக். 96.)
  2. ஒப்பு
    • புலித்தகைப் பாய்த்துள் (தொல். பொ. 287, உரை)
  3. மேன்மை, சிறப்பு, மேம்பாடு
  4. பெருமை
  5. அருள்
  6. அன்பு
  7. அழகு
    • தாடோய் தடக்கைத்தகைமாண்வழுதி (புறநா. 59, 2)
  8. நன்மை
  9. குணம்
  10. இயல்பு
    • பொருகளி றன்ன தகைசாம்பி (கலித்.60)
  11. நிகழ்ச்சி
    • போனான் வனமென்னுந் தகையுமுணர்ந்தார் (கம்பரா. தைல. 84)

(பெ)

  1. கட்டு
    • தகைமலர்த் தாரோன்(மணி. 24, 175)
  2. மாலை
  3. தடை
    • மணஞ்செய்வதற்கு நின்னாற் றகையிலை யென்னின் (பிரபோத. 8,11)
  4. கவசம்
  5. தளர்ச்சி
  6. தாகம்
  7. மூச்சிழைப்பு

(வி)

  1. தடு
    • தருதல் தகையாதான் மற்று (கலித். 92, 9)
  2. ஆணையிட்டுத் தடு
  3. பிடி
    • தடக்கையால் வளைக்கரந் தகைந்தான் (பாரத. அருச்சுனன்றீர். 70)
  4. அடக்கு
    • ஆழிதகைந்ததனுத்தொழிலான் (கம்பரா. அதிகாய. 62)
  5. உள்ளடக்கு
  6. பிணை
  7. ஒத்திரு
  8. தளர்

(வி)

  1. தடு
    • நின்னைத்தகைத்தனென் (கலித். 108, 20)
  2. கட்டு
    • நுண்கோற்றகைத்த தெண்கண்மாக்கிணை (புறநா. 70, 3)
  3. சுற்று
  4. வாட்டு
  5. அரி
    • மயிரிற் றகைத்து வறுத்தெரித்திடிப்பினும் (ஞானா. 31, 10)
  6. நெருங்கப்பெறு
    • சனத்தினாற் றகைத்திடம்பெறாது (சீவக. 825)
  7. களைப்படை

(v)

  • அழகு பெற்றிரு
    1. தகுதியுடையவன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம் (n)

  1. fitness, suitability, propriety
  2. likeness, resemblance
  3. worthiness, excellence
  4. greatness, superiority, dignity
  5. mercy, grace
  6. love, affection, kindness
  7. beauty, loveliness
  8. goodness
  9. quality, character
  10. nature
  11. fact, event

(n)

  1. binding,fastening
  2. garland
  3. obstruction, check, hindrance
  4. armour, coat of mail
  5. weariness, faintness
  6. thirst (colloq)
  7. shortness of breath, difficulty of breathing

(v)

  1. stop, resist, check, deter
  2. obstruct or forbid by oath
  3. seize, take hold of
  4. overpower, subdue
  5. shut in, enclose, include
  6. bind, fasten, yoke
  7. resemble
  8. falter, faint, be weary

(v)

  1. check, resist, stop, deter
  2. bind, fasten
  3. wind round, coil
  4. tease, tire out
  5. mince
  6. be crowded
  7. be fatigued ,wearied

(v)

  • be beautiful, lovely
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வேண்டா மையின் மென்மெல வந்து
வினவலுந் தகைத்தலுஞ் செல்லா ளாகி (நற்றிணை 308) - நான் பிரிதலில் விருப்பம் இன்றி மெல்ல மெல்ல வந்து நீ எங்கே போகின்றாய் என்று கேட்காமலும் போகவேண்டாம் என்று தடுக்காமலும்

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]
  • வோய் அமை வரை என்பன குறிக்கும் ஒரு சொல்

தருதலை

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தகை&oldid=1900468" இலிருந்து மீள்விக்கப்பட்டது