கால்
Appearance
கால்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது.
- ஒன்றை ஈடாகப் பங்கிட்ட நான்கில் ஒரு பங்கு; (அரையில் பாதி); இந்தக் கால் என்னும் கீழ்வாய் எண்ணைக் குறிக்கும் வ என்னும் எண்ணெழுத்தின் பெயர்.
- காற்று (கால்-> காற்று)
- நாற்காலி, முக்காலி போன்ற இருக்கைகளைத் தாங்கி நிற்கும் பகுதி; கருவிகள் ஓரிடத்தில் ஊன்றி நிற்கப் பயன்படும் சற்று நீண்ட பகுதி.
- காடு, கான், கானகம், அடவி
- பிறப்பிடம், தோன்றும் இடம் (எ.கா. கால்கொள்ளுதல்), தோற்றம்
- வமிசம் (குடும்பக்கிளை வலை), இனமுறை
- கறுப்பு நிறம்
- இருள்
- வினையெச்ச விகுதி (இலக்கணச்சொல்)
- ஏழனுருபு (இலக்கணச்சொல்)
- உருளை, சக்கரம், ஆழி (எ.கா. தேர்க்கால், வண்டிக்கால்)
- வண்டி
- முளை
- பூந்தாள்
- மரக்கால்
- அடிப்பகுதி
- காலம் (நேரம்); பொழுது (காலைப்பொழுது)
- குறுந்தறி
- வழி
- மரக்கன்று
- மகன்
- வலிமை
- வாய்க்கால் நீர்க்கால் (பாசனக் கால்வாய்); (குருதிக்கால்)
- எழுத்தின் சாரியை (ஒரு பகுதி) (எ.கா. ஆகார உயிர்மெய்யின் துணை எழுத்து)
- வாதம்
- காம்பு (இலை, பூ முதலியன)
- தடவை (முறை) (இருகால் = இருமுறை, இரண்டு த்டவை)
- கழல்
- சரண்
- இயமன்
- பிரிவு
- மழைக்கால் (மழை பெய்யும் நீர்த்தாரை)
- நடை
- சிவபெருமான் ஆன்மாக்களைத் தம்முள் ஐக்கியமாக்கிக்கொண்ட தலம். (சான்று: தேவாரம்)
- கிரணம் (எ.கா:நிலாக்கால் விழுந்தனைய - மீனாட்சி. பிள்ளைத்தமிழ்)
- வெளியிடுதல் (எ.கா: ஒளி காலும் இருவாயி)
மொழிபெயர்ப்புகள்
- leg, air, quarter,pod ஆங்கிலம்
- pierna (பெண்பால்) எசுப்பானியம்
- पांव (பான்வ்), पैर (பைர்), पाया (பாயா) இந்தி
- ಕಾಲು (காலு) கன்னடம்
- కాలు (காலு) தெலுங்கு
-
கால்கள்
-
கால்பகுதி
- இலக்கிய மேற்கோள்கள்
- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974