சீப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சீப்பு (பெ)
- முடி வாரும் சாதனம்
- வாழைப் பழக் கொத்து
- கதவின் தாழ்
- கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம்
- மதகிலுள்ள அடைபலகை
- விலா எலும்பு
- தோட்சீப்பு
- நெய்தற்கருவியின் ஓர் உறுப்பு
- சீப்பங்கோரை
- பாளம்
- காற்று முதலியவற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது. வாசம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- comb
- small cluster or bunch of bananas (Colloq.)
- bolt
- wooden brace to a door, driven into the ground in bolting
- shutter of a sluice
- rib
- bones of the shoulder joint
- weaver's reed frame having parallel flat strips of metal or reed between which the warp threads pass
- clubrush, bulrush
- lamina, flat piece
- that which is wafted, as fragrance by wind
விளக்கம்
பயன்பாடு
- வழுக்கை விழுந்தபின் வாழ்க்கையில் கிடைக்கும் சீப்பு தான் அனுபவம். (ஐரிஷ் பழமொழி) ([1])
- ஒரு சீப்பு வாழைப் பழம். ஒவ்வொன்றாக உரித்துத் தின்று கொண்டிருந்தார். எங்களை நோக்கி ஒரு பழத்தை எடுத்து நீட்டினார். (காற்றின் பதியம் : ஏரிகளிலிருந்து மேலெழும்புகின்றன சடலங்கள், ரவிக்குமார்)
- நுனிவாழையிலையை எங்களூரில் நாக்கிலை என்பார்கள். வாழையின் தண்டை வாழைக்கை என்பார்கள். வாழையின் அடிக்கிழங்கை வாழைமாணம்– வாழையின் பிருஷ்டம் – என்பார்கள். வாழை குலைப்பதற்காக முதல்பூநுனியை நீட்டுவதை தும்பிக்கை நீட்டுதல் என்பார்கள். வாழைக்காய் கொத்துகளை சீப்பு என்பார்கள். (புல்வெளி தேசம் 16 நீலமலை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- பெரு வெண் சீப்பிற் றிருவுற வாரி (பெருங். உஞ்சைக். 34, 190)
- எழுவுஞ் சீப்பும் (சிலப். 15, 215)
- மலிர்கால் சீப்பு (பரிபா. 8, 54)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சீப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +