திருக்குறள்அகரமுதலி நெகரவரிசை
Appearance
திருக்குறள்அகரமுதலி நெகரவரிசை
[தொகு]நெகரவரிசை
[தொகு]நெ
- நெகிழ
- =மெலிய, 1236.
நெஞ்சத்தார்
[தொகு]- நெஞ்சத்தார்
- = உள்ளத்தின் கண்ணராக, 1218.
- நெஞ்சத்தான்
- = உள்ளம் உடையவன், 169
- = ௸, 185.
- நெஞ்சத்து
- = உள்ளத்தில், 115
- = ௸, 161
- = ௸, 288
- = ௸, 928
- = ௸, 1072
- = ௸, 1204
- = ௸, 1205
- = ௸, 1250;
- = அன்பால், 786;
- = உள்ளத்துடன், 910.
- = ௸,
- நெஞ்சத்தை
- = உள்ளத்தை, 1252.
- நெஞ்சம்
- = உள்ளம், 116
- = ௸, 253
- = ௸, 272
- = ௸, 706
- = ௸, 917
- = ௸, 1259
- = ௸, 1299
- = ௸, 1300
- = ௸, 1310.
- நெஞ்சில்
- = உள்ளத்தில், 288.
- நெஞ்சின்
- = உள்ளத்தால், 276
- = ௸, 917;
- = உள்ளத்துடன், 1297;
- = நெஞ்சினையுடைய, 1053.
- நெஞ்சினார்க்கு
- = உள்ளம் உடையவர்க்கு, 243
- = ௸, 1260.
- நெஞ்சு
- = உள்ளம், 281
- = ௸, 293
- = ௸, 842
- = ௸, 1081
- = ௸, 1264
- = ௸, 1291
- = ௸, 1295
- = ௸, 1296
- = ௸, 1298;
- = உள்ளமே, 1200
- = ௸, 1242
- = ௸, 1246
- = ௸, 1248
- = ௸, 1249
- = ௸, 1291
- = ௸, 1292;
- = தலைமகள் தன்னெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல்[நெஞ்சொடு கிளத்தல்], அதி. 125;
- = காரணம் உண்டாயவழியும் புலக்கக் கருதாது புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும், தலைமகன் புலத்தலுமாம்[நெஞ்சொடு புலத்தல்], அதி. 130.
- நெஞ்சே
- = உள்ளமே, 1112
- = ௸, 1237
- = ௸, 1241
- = ௸, 1243
- = ௸, 1244
- = ௸, 1245
- = ௸, 1247
- = ௸, 1291
- = ௸, 1293
- = ௸, 1294.
நெடிது
[தொகு]- நெடிது
- = நெடுநாளாக, 562
- = ௸, 943.
- நெடிய
- = நீண்டவாய், 1169.
- நெடு
- = தாழ்த்துச் செய்கின்ற, 605.
- நெடும்
- = அளவில்லாத, 17;
- = ஆழமுடைய, 495;
- = பெரிய, 566.
நெய்யால்
[தொகு]- நெய்யால்
- = நெய்யினால், 1148.
- நெருஞ்சி
- = நெருஞ்சி என்னும் முட்செடி, 1120.
- நெருநல்
- = நேற்று, 336
- = ௸, 1048.
- நெருநற்று
- = நேற்று, 1278.
- நெருப்பினுள்
- = தீயிடையில், 1049.
நெறி
[தொகு]- நெறி
- = நூல்முறை, 06
- = ௸, 324
- = ௸, 356
- = ௸, 477.
திருக்குறள்அகரமுதலி நெகரவரிசை முற்றும்
திருக்குறள்அகரமுதலி நேகாரவரிசை
[தொகு]நேகாரம்
[தொகு]நே
- நேர்
- = ஒக்கும், 550;
- = நேர்வர் = ஒப்பர், 813.
- நேரா
- = கூடாமலிருந்து, 821.
- நேர்ந்தேன்
- = உடம்பட்ட நான், 1181.
- நேர்வது
- = உடம்பட்டுக் கொடுப்பது, 733.
lதிருக்குறள்அகரமுதலி நேகார வரிசை முற்றும்
திருக்குறள்அகரமுதலி நொகரவரிசை
[தொகு]நொகரம்
[தொகு]நொ
- நொந்தது
- = வருந்தியது, 877.
- நொந்தார்
- = வருந்தினார், 1308.
- நொந்து
- = வருந்தி, 157
- = ௸, 1236.
திருக்குறள் அகரமுதலி நொகர வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி நோகார வரிசை
[தொகு]நோகாரம்
[தொகு]நோ
- நோ
- = துன்பம், 157.
- நோக்க
- = பார்க்கும் போது, 90
- = ௸, 1098.
- நோக்கப்படும்
- = பார்க்கப்படுவான், 1047.
- நோக்கம்
- = பார்வை, 1085
- = ௸, 1092.
- நோக்கா
- = ஆராயாத, 184.
- நோக்காக்கால்
- = பாராதபோது, 1094.
- நோக்காத
- = பார்க்காத(உட்கொள்ளாத), 148.
- நோக்காது
- = நினைப்பதும் செய்யாமல், 1009.
- நோக்காமை
- = பாராதிருத்தல், 1095.
- நோக்கான்
- = பாராதவனாக, 528;
- = (நீதி நூலை)ஓதமாட்டான், 865|1|;
- = பாரான், 865|2|.
- நோக்கி
- = பார்த்து, 93
- = ௸, 189|2|
- = ௸, 528
- = ௸, 673
- = ௸, 701
- = ௸, 708|1|
- = ௸, 1093
- = ௸, 1094
- = ௸, 1173
- = ௸, 1297;
- = கருதி, 189|1|;
- = எதிர்பார்த்து, 542|1|2|;
- = குறிப்பால் அறிந்து, 708|2|.
- நோக்கிய
- = பார்த்த, 1172.
- நோக்கின்
- = பார்த்தால், 528
- = ௸, 1320.
- நோக்கினாள்
- = பார்த்தாள், 1093;
- = பார்க்கப்பட்டவள் அல்லது அழகுடையவள், 1082.
- நோக்கினீர்
- = பார்த்தீர், 1320.
- நோக்கு
- = பார்வை, 1082
- = ௸, 1089
- = ௸, 1091
- = ௸, 1097
- = ௸, 1099
- = ௸, 1100.
- நோக்குதல்
- = பார்த்தல், 1082
- = ௸, 1099.
- நோக்கும்
- = பார்க்கும், 1094
- = ௸, 1114;
- = நோக்குகின்ற[நோக்குங்காலை], 1094.
நோதக்க
[தொகு]- நோதக்க
- = வெறுக்கத்தக்கனவற்றை, 805.
- நோதல்
- = வருந்துதல், 341
- = ௸, 1308.
நோய்
[தொகு]- நோய்
- = துன்பம், 261
- = ௸, 315
- = ௸, 359
- = ௸, 429
- = ௸, 442
- = ௸, 1160
- = ௸, 1162
- = ௸, 1174
- = ௸, 1200
- = ௸, 1226
- = ௸, 1241
- = ௸, 1243
- = ௸, 1266
- = ௸, 1303;
- = இன்னாதன, 320;
- = குற்றம், 851;
- = உடற்பிணி, 848
- = ௸, 853
- = ௸, 941
- = ௸, 946
- = ௸, 947
- = ௸, 948;
- = காமப்பிணி, 1091
- = ௸, 1147
- = ௸, 1159
- = ௸, 1171
- = ௸, 1175
- = ௸, 1183
- = ௸, 1227
- = ௸, 1255
- = ௸, 1280
- = ௸, 1301;
- = வினைப்பயன்கள், 360.
- நோயை
- = (காமத்)துன்பத்தை, 1161
- = ௸, 1162.
- நோய்க்கு
- = (காமப்)பிணி நீக்கத்திற்கு, 1102.
- நோய்ப்பால
- = துன்பஞ்செய்யுங் கூற்றனவாகிய தீவினைகள், 206.
நோலாதவர்
[தொகு]- நோலாதவர்
- = நோன்பு இயற்றாதவர்கள், 270.
நோவது
[தொகு]- நோவது
- = வருந்துதல், 237
- = ௸, 1242.
- நோவர்
- = நொந்துகொள்வர், 1219.
- நோவல்
- = நொந்துகொள்வேன், 1236.
- நோவற்க
- = நோவு சொல்லாதொழிக, 877.
- நோவார்
- = நொந்துகொள்ளாதவராய், 237.
நோற்கிற்பவர்
[தொகு]- நோற்கிற்பவர்
- = பொறுப்பவர், 159.
- நோற்கிற்பவர்க்கு
- = நோன்பு இயற்றும் ஆற்றலுடையவர்க்கு, 267.
- நோற்பார்
- = நோன்பு இயற்றுபவர்கள், 270;
- = (நோயைப்)பொறுப்பவர், 160.
- நோற்பாரின்
- = தவஞ்செய்வார் நிலையைக் காட்டிலும், 48;
- = (இன்னாத சொல்லைப்)பொறுப்பவரைக் காட்டிலும், 160.
- நோற்றலின்
- = தவம் காரணமாக (வருகின்ற), 269.
- நோற்றான்
- = நோன்பு இயற்றினான், 70.
நோனா
[தொகு]- நோனா
- = வருத்தத்தைப் பொறாத, 113
- = ௸, 1163.
- நோன்பிற்கு
- = தவம் செய்வார்க்கு, 344.
- நோன்மை
- = பொறை, 48;
- = தவம், 984.
- நோன்றல்
- = பொறுத்தல், 261.
திருக்குறள் அகரமுதலி நோகார வரிசை முற்றும்
பார்க்க:
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ. ||
க- | கா,கி,கீ- | கு, கூ- | கெ, கே, கை- | கொ, கோ, கௌ. || ச, சா, சி, சீ, சு, சூ- | செ- |- சே,சொ,சோ. || ஞா. || த- | தா,தி,தீ- | து,தூ,தெ,தே. || ந- | நா, நி- | நீ,நு,நூ- | நெ,நே,நொ,நோ. || ப | பா- | [[]] [[]]