தும்பி
Appearance
ஒலிப்பு
File:Dragon fly .jpg
[[|150px|தும்பி|thumb|right]](கோப்பு)
பொருள்
- பெயர்ச்சொல், பல்பொருள் ஒரு மொழி
- ஒரு பறக்கும் பூச்சியினம்; தட்டான் .
- யானை (பிங்கல நிகண்டு.)
- தும்பியை யரிதொலைத் தென்ன ( வாலிவதைப்படலம் 51, கம்பராமாயணம் ).
- வண்டு (பிங்கல நிகண்டு.)
- துவைத்தெழு தும்பி (அகநானூறு. 317)
- ஆண்வண்டு (திவாகர நிகண்டு.)
- பதினொன்றரை அங்குலநீளம் வளரக்கூடியதும் செந்நிற முடையதுமாகிய கடல்மீன்வகை
- காட்டத்தி மரவகை
- கருந் தாளிகை - கறுப்பு மரவகை; மைசூர் மரவகை
- கரும்பு
- தும்பிலி
- கொற்றான் -இலையற்ற கொடி வகை.
தமிழ் இலக்கியங்களில் தும்பி
[தொகு]- கந்தபுராணம்: தும்பியின் முகத் தோன்றல் அருளினால்
- கம்பராமாயணம்: துயில் எழத் தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை.
- ஐங்குறுநூறு: கட்டளை அன்ன மணி நிற தும்பி
- அகநானூறு: அணி மலர் நறு தாது ஊதும் தும்பி
- புறநானூறு: நடுநாள் வந்து தும்பி உம் துவைக்கும்
- சிறுபாணாற்றுப்படை: காமரு தும்பி காமரம் செப்பும்
- கலிங்கத்துப்பரணி: வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரு தும்பி
- குறுந்தொகை: கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி
- மதுரைக்காஞ்சி: தாது உண் தும்பி போது முரன்றாங்கு
- நற்றிணை: காந்தள் ஊதிய மணி நிற தும்பி
- பரிபாடல்: வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர
- பதினெண்கீழ்க்கணக்கு:கடு பறை தும்பி சூர் நசைத்து ஆஅய்
- சிலப்பதிகாரம்: மழலைத் தும்பி வாய் வைத்து ஊத
- சீவக சிந்தாமணி: முருகு விம்மு குழலார் போல மொய் கொள் தும்பி
- திருக்குற்றாலம் பாடல்கள்: அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்
- திருப்புகழ்: தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்
- திருமந்திரம்: அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ்
- திருவாசகம்: திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்
- தேம்பாவணி: தும்பி தேனொடு தூங்கு இசை யாழ் செய,
- தேவாரம்: ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி
- தொல்காப்பியம்: (பொருள்): நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே/ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.
- பதினோராம் திருமுறை: ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்
- பாரதியார் பாடல்கள் : தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
- பதினெண் கீழ்க்கணக்கு: முல்லை நறு மலர் ஊதி இருந் தும்பி = ஐந்
- பெரியபுராணம்: மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர்
- மணிமேகலை: குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
- வில்லிபாரதம்: தும்பிமேல் மதத்திடை விழும் தும்பிபோல் விறல் தோன்றலும்,
-
கடல்மீன்(மேலும்..)
-
Cassytha filiformis
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- dragonfly
- elephant
- bee
- .
- A sea fish, reddish, attaining 11½ in. in length, Pterois rusellii (விலங்கியல் பெயர்)
- gaub - Diospyros tomentosa (தாவரவியல் பெயர்)
- ceylon ebony - Diospyros ebenum, Diospyros tupru (தாவரவியல் பெயர்)
- sugarcane
- few species of sea fish and trees
- parasitic leafless plant Cassytha filiformis (தாவரவியல் பெயர்)
- பிரான்சியம்
- மலையாளம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தும்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- தட்டான்(ஒத்த பெயர்) - பொதும்பி - வெதும்பி - ததும்பி - தும்பு - தும்பிச்சி - தும்பிலி - தும்பிக்கை - தும்பிக்கை ஆழ்வார் - தும்பிச்சிட்டு