ஆர்ப்பாட்டம்
Appearance
ஆர்ப்பாட்டம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஒன்றை எதிர்த்தோ அல்லது கோரிக்கைகளை வலியுறுத்தவோ கூச்சல்களுடன் நடத்தும் கிளர்ச்சி, போராட்டம்
- வெற்று ஆரவாரம்; அமர்க்களம்; தேவையற்ற கெடுபிடி
- தேவையற்ற பகட்டு/ஆடம்பரம்
ஆங்கிலம்
- demonstration against someone/something, or urging some demands
- hubbub, fuss, eclat, tumult
- ostentation, vain show
விளக்கம்
பயன்பாடு
- கண்டன ஆர்ப்பாட்டம் - demonstration condemning something
- விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - demonstration against price rise
- போராட்டங்கள் - மறியல்கள் - ஆர்ப்பாட்டங்கள் - உருவ பொம்மை எரிப்புகள் என்று 2006 ஆம் ஆண்டு முழுதும் பெரியார் திராவிடர் கழகச் செயல்வீரர்கள் போராட்டக் களத்திலே நின்றனர். ([1])
- நாராயணன் சார் வந்தபோது அவரைப் பிடிக்கவில்லை. வீட்டை விட்டு உடனே போகச்சொல்லு என்று ஒரே ஆர்ப்பாட்டம் (வயது நாலு, எஸ். ராமகிருஷ்ணன்)
- வேறு யாருடைய பெயரையாவது சொல்லியிருந்தால் செங்கோடன், "அவனை விட்டேனா பார்! குத்திவிடுவேன்! கொன்று விடுவேன்!" என்று ஆர்ப்பாட்டம் செய்திருப்பான். ஆனால் சிவப்புத் தலைப்பாகைக்காரனோடு யார் சண்டை போட முடியும்? (பொய்மான் கரடு, கல்கி)
- தங்களுடைய நெற்றியில் ஒரு சிறு காயம் பட்டுவிட்டதற்காக அப்படித் தங்களைச் சூழ்ந்து கொண்டு, 'ஆ ஹு' என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களே, அவர்களை எல்லாம் தலையில் இரண்டு குட்டுக் குட்டிக் கன்னத்திலும் இரண்டு அறை கொடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது! (அலை ஓசை, கல்கி)
- இந்த விஷயம் காதில் விழுந்ததுமே ஹிஸ்டீரியா வந்தது போல் அழுது கதறிக் கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தாள் காமாட்சி அம்மாள் (துளசி மாடம், தீபம் நா. பார்த்தசாரதி)
- "இருந்தாலும் என்ன தடபுடல்! இந்த ஊரில் நம்மை யாரும் கேட்பாரைக் காணோம்! இந்த நம்பியைச் சூழ்ந்து கொண்டு ஜனங்கள் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே?" என்றார் மதுராந்தகத் தேவர் (பொன்னியின் செல்வன், கல்கி)
- நாதனுள்ளிருக்கையில் இந்த மனிதர்கள் ஏன் இப்படி நட்ட கல்லைச் சுற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. அழுதார்கள், தொழுதார்கள், ஆடினார்கள், பாடினார்கள், அதைக் கேட்டார்கள், இதைக்கேட்டார்கள், அர்ச்சனை அபிஷேகம் என்று என்ன என்ன வெல்லாமோ செய்தார்கள் (சகோதரர் அன்றோ, அகிலன்)
- "ஏண்டா இப்படி ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு ஆர்ப்பாட்டம் பண்றே?" என்று கேட்கையில் "உனக்குத் தெரியாதம்மா" என்று பதில் சொல்லிவிட்டுத் தொடர்ந்து கத்துவார் அவர். கோபமும் சரி, சந்தோஷமும் சரி, வந்ததுபோல் அடங்கியும் போகும் அவருக்கு. (புதிய வார்ப்புகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆர்ப்பாட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கிளர்ச்சி - போராட்டம் - ஆரவாரம் - அமர்க்களம் - ஆடம்பரம்