உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பட்டடை(பெ)

 1. சீரிடங்காணி னெறிதற்குப் பட்டடை (குறள், 821)
 2. அடைகல்
 3. பணை
 4. கொல்லன் பட்டறை; களரி
 5. குவியல்
 6. தானியவுறை
 7. தானியம் இடுவதற்கு ஓலைகளால் அமைத்த படுக்கை
 8. ஆணி முதலியன செல்லுதற்கு அடியிலிருந்து தாங்குங் கருவி
 9. கரையிலிருக்கும்போது பூமியிற் பதியாதபடி அடியில் வைக்குந் தோணி தாங்கி
 10. தலையணையாக உதவும் மணை
 11. உட்காரும் பலகை
 12. கால்வாய் கடத்தற்கு உதவும் பலகை
 13. அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை
 14. தொடர்ந்து வெடிக்கும் அதிர்வேட்டு
 15. சுவரிலிடும் மண்படை
 16. குடிவாரம்
 17. சாகுபடி செய்கை
  பட்டடைக்குத் தண்ணீர் இறைக்க
 18. இறைப்புப் பாசனமுள்ள நன்செய்த் தாக்கு
 19. ஐந்தாம் சுரமாகிய இளியிசை
  வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து (சிலப். 3, 63)
 20. ஓர் இசைக் கரணம்
 21. கழுத்தணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. anvil
 2. smithy, forge
 3. stock, heap, pile,as of straw, firewood or timber
 4. corn-rick, enclosure of straw for grain, wattle and daub, granary
 5. layer or bed of olas for grain
 6. anything held against another, as a support in driving a nail; prop to keep a thing from falling or moving
 7. frame of timbers to place under a dhoney when ashore, to keep it from the ground
 8. support for the head in place of a pillow
 9. piece of board temporarily used as a seat
 10. plank used for cross in a channel
 11. the platform of the car that carries the idol
 12. block of wood provided with iron-tubes for explosion of gun-powder
 13. repeated explosion of gun-powder stuffed in iron-tubes
 14. a layer or course of earthwork, as in raising mud-wall
 15. portion allowed to ploughmen from the proceeds of a harvest
 16. cultivation, irrigation
 17. plot of wet land cultivated mainly by lift-irrigation
 18. (Mus.) the fifth note of the gamut
 19. one of the movements in playing a lute
 20. neck-ornament
விளக்கம்
பயன்பாடு
 • தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம். அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு.
 • கொல்லப் பட்டடை
 • மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பட்டடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பட்டறை - உலைக்களம் - பட்டாடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டடை&oldid=1969238" இலிருந்து மீள்விக்கப்பட்டது