மடங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மடங்கல்--வளையும்/மடங்கும் கம்பி
மடங்கல்:
-இடியின் ஒலியைக் கேளீர்
மடங்கல்:
-எனில் இயமன்--தன் எருமை வாகனத்தின்மீது இயமன்
மடங்கல்-முழங்கும் சிங்கம்
மடங்கல்:
-நரசிங்கம்-திருமாலின் நான்காகாவது அவதாரம்
மடங்கல்:
-கற்தூண்களில் செதுக்கிய உருவம் யாளி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மடங்கல், பெயர்ச்சொல்.
 1. வளைகை (திவா.)
 2. கோணம்
 3. மீளுகை
 4. மழுங்கிப்போகை
 5. அடக்கம் (சூடாமணி நிகண்டு)
 6. ஒடுக்கம்
  (எ. கா.) மைந் துடை யொருவனு மடங்கலுநீ (பரிபா. 1, 44)
 7. முடிவு (பிங். )
 8. இடி (பிங். )
 9. வடவைத்தீ (பிங். )
  (எ. கா.) மடங்கல் வண்ணங்கொண்ட கடுந்திறல் (பதிற்றுப். 62, 8).
 10. ஊழிக்காலம்
  (எ. கா.) மடங்கற் காலை (கலித். 120)
 11. இயமன்
  (எ. கா.) மடங்கல்போற் சினைஇ (கலித். 2).
 12. இயமனேவல் செய்யுங் கூற்றம்
  (எ. கா.) தருமனு மடங்கலும் (பரிபா. 3, 8). (பிங். )
 13. சிங்கம்
  (எ. கா.) மடங் கலிற் சீறை மலைத்தெழுந்தார் (பு. வெ. 3, 24).
 14. காண்க...நரசிங்கம்
  (எ. கா.) மடங்கலாய் மாறட்டாய் (சிலப். 17, முன்னிலைப்பரவல், 3)
 15. யாளி (பிங். )
 16. நோய்வகை (பிங். )
 17. முற்றிவளைந்து சாய்ந்த கதிர் (உள்ளூர் பயன்பாடு)
 18. காண்க..தாழை (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. bending, being bent
 2. crook, angle, corner
 3. returning
 4. curving or blunting of the edge
 5. suppression, control
 6. absorption
 7. end
 8. thunderbolt
 9. submarine fire
 10. termination of a Yuga
 11. yama, as subduer of all things
 12. servant of Yama
 13. lion
 14. man-lion incarnation of Viṣṇu
 15. fabulous griffin
 16. a disease
 17. ripened sheaf of grain
 18. summer catch-crop sown after campā
 19. fragrant screw-pine

விளக்கம்[தொகு]


சொல்வளம்[தொகு]

இராசிகள்
உதள்
மேஷம்
ஏற்றியல்
ரிஷபம்
ஆடவை
மிதுனம்
நள்ளி
கடகம்
மடங்கல்
சிம்மம்
ஆயிழை
கன்னி
நிறுப்பான்
துலாம்
நளி
விருச்சிகம்
கொடுமரம்
தனுசு
சுறவம்
மகரம்
குடங்கர்
கும்பம்
மயிலை
மீனம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
( மொழிகள் )

சான்றுகள் ---மடங்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடங்கல்&oldid=1990781" இலிருந்து மீள்விக்கப்பட்டது