கண்டம்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
கண்டம் (பெ)
- துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
- நிலத்தின் பெரும்பிரிவு
- சோதிடத்தில் கிரகநிலைகளின் காரணமாக உயிருக்கு நேரிடக்கூடிய ஆபத்து
- அளப்பதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பகுதி
- பகுதி
- பல்வண்ணத் திரை
- வயல்வரம்பு
- வெல்லம்
- கண்டசர்க்கரை
- வாள்
- எழுத்தாணி
- கவசம்
- கேந்திரம்
- கண்டசாதி - தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று
- தொண்டை
- கழுத்து
- குரல்
- யானைக் கழுத்தில் இடும் கயிறு
- 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை, கண்ட யோகத்தின் தனித்தமிழ் சொல்லும் இதுவே.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- piece, cut or broken off; fragment, slice, cutting, chop, parcel, portion, slip
- continent
- (Astrol.)supposedly critical period of adversity as indicated by planetary positions
- block of land measuring between 300 and 350 acres taken for the purposes of survey
- section, part
- curtain made of parti-coloured material
- small ridges between paddy fields which divide the field into plots and embank
the water required for the crop
- jaggery
- a kind of sugar
- sword
- iron style for writing on palmyra leaves
- coat of mail
- (Astrol.) the rising, fourth, seventh and tenth signs
- (Mus.) A sub-division of time-measure, one of five cāti
- throat
- neck
- voice, vocal sound
- elephant's neck rope
பயன்பாடு
- இந்தியா ஆசியக் கண்டத்தில் உள்ளது.
- இந்தியத் துணைக்கண்டம் - Indian sub-continent
- கண்டம் துண்டமாக, கண்ட துண்டமாக - to pieces
- நம்மை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. (ராணி மங்கம்மாள், தீபம் நா. பார்த்தசாரதி)
- நாலு நாளைக்கு முன்னால் நம் சித்தப்பாவுக்கு ஒரு பெரிய கண்டம் வந்தது. கொலைகாரன் ஒருவன் அவர் மீது குத்தீட்டியை வீசி எறியக் குறி பார்த்தான் (பொன்னியின் செல்வன், கல்கி)
- நித்திய கண்டம் பூரண ஆயுசு (பழமொழி)
- பாம்பு தின்னும் ஊரில் நடுக்கண்டம் நமக்கு (பழமொழி)
- பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +