ஏசு
Appearance
ஏசு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ”எல்லாரும் பர மண்டலத்திலுள்ள ஏசு பிதாவைத்தான் வணங்குகிறோம்" என்றார். (தியாக பூமி, கல்கி)
- உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி, கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் வழியாக, அந்த மனுஷகுமாரன் வழியாக, பரமண்டலங்களில் இருக்கும் பிதாவை முழங்கால் படியிட்டு வேண்டிக் கொள்ளுங்கள் (நியாயம், புதுமைப்பித்தன்
- முன்பு ஏசு வந்தார், பின்பு காந்தி வந்தார் - இந்த
- மானிடர் திருந்திட பிறந்தார்
- இவர் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை - அந்த
- மேலோர் சொன்னதை மறந்தார் (பாடல்)
- நாயகன் ஏசுவின் வேதம்
- கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
- பாலகன் ஏசுவின் கீதம்
- அது வானகம் பாடிய முதல் பாடல்
- அந்த தூதுவன் ஆடிய விளையாடல் (பாடல்)
- ஏசற்றவர் - குற்றமற்றவர்
(இலக்கியப் பயன்பாடு)
- அண்ணல் ஏசு குருதி முகந்து அவிக்க வாரும் செகத்தீரே (இரட்சணிய யாத்திரிகம்)
- மகம்மதாய் ஏசு வாகிப் பலபல தெய்வ மாகி ( நாமக்கல் வெ. இராமலிங்கம்)
- ஏசுநாமமொன்றை நம்புவீர்
- ஏசு அறு தவன் உறை இடம் இது (கம்பராமாயணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஏசு (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இவனை எப்படி ஏசுவது என்று உள்ளுக்குள் பொங்கிய வெறுப்பையெல்லாம் உமிழ அவள் வார்த்தைகளைத் தேடினாள் (வாக்குமூலம், வாசந்தி)
- அடிக்கத் தொடங்கியவர் பிள்ளைகளையும் தாக்கினார். என்னைப் பைத்தியக்காரியென்று சொல்லிச்சொல்லி ஏசுவார் (புலம் பெயர் வாழ்வு (4), இளைய அப்துல்லாஹ்)
- வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா
- வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
- வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
- இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
- இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஏசவெண் டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425, 6)
- கொல் லம்பேசி (தேவா. 380, 6)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +