உள்ளடக்கத்துக்குச் செல்

தானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தானம்:
எனில் கோவில் என்று ஒரு பொருள்..படம்:திருக்குடந்தை சக்கரபாணி சுவாமி திருக்கோயில்
தானம்:
எனில் சுவர்க்கம்.படம்:இந்து-புத்த சமயங்களின் சுவர்க்கம் மற்றும் நரகங்களைச் சித்தரிக்கும் சிற்பங்களுள்ள கம்போடியா நாட்டு அங்கோர் வாட் கோயில்

|200px}}

தானம்:
எனில் ஆசனம்/உட்காரும் இருக்கை
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- तान--தா1ந--பொருள் 1, 2 க்கு மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्तान/स्थान-ஸ்தா1ந/ஸ்தா2ந--பொருள் 3--15 க்கு மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- दान--தா3ந--பொருள் 16--23 க்கு மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्नान--ஸ்நாந--பொருள் 24 க்கு மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • தானம், பெயர்ச்சொல்.
  1. இசைச்சுரம் ( Mus. )
    (எ. கா.) 'பெருந்தானத் திலே பெருமிடறுசெய்து (ஈடு. 3, 8, ப்ர.)
  2. சுரவிஸ்தார முறை ( Mus. )
  3. இடம்
  4. உறைவிடம்
    (எ. கா.) தானத்தி லிருத்த லோடும் (சீவக. 1567).
  5. பதவி
    (எ. கா.) தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே (இனி. நாற். 14).
  6. கோயில் ((S. I. I.) i, 120.)
  7. சுவர்க்கம் (பிங். )
  8. ஆசனம்
    (எ. கா.) தானத்தி லிருக்க வென்றான் (சீவக. 542).
  9. எழுத்துப்பிறக்கும் இடம் (நன். 73.).... (இலக்கணம்)
  10. எண்ணின் தானம் (பேச்சு வழக்கு) .... (கணிதம் )
  11. சாதகசக்கரத்திலுள்ள வீடு.... ((சோதிடவியல்) )
  12. செய்யுட்பொருத்தத்தில் வரும் பாலத் தானம், குமரத்தானம், இராசத்தானம், மூப்புத்தானம், மரணத்தானம் என்ற நிலைகள் ....(கவிதை )
  13. காண்க... தானப்பொருத்தம்
  14. ஆற்றலில் சமமாயிருக்கை
    (எ. கா.) தானஞ் சமங்கொளல் (இரகு. திக்வி. 24).
  15. சக்தி
    (எ. கா.) அந்தமி றானங்கூடலின் (ஞானா. 59, 19).
  16. நன்கொடை
  17. தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை (பிங். ).... (புத்தத் தத்துவம்)
  18. நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை (சீவக. 747, உரை)
  19. ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஒளஷததானம் என்ற நால்வகை அறச்செயல்.... (Jaina. )
  20. இல்லறம் (திருநூற். 17, உரை.)
  21. யானைமதம் (பிங். )
    (எ. கா.) கைத்தானக் களிற் றரசர் (கம்பரா. கார்முக. 20).
  22. வேள்வி (பிங். )
  23. மகரவாழை (பிங். )
  24. ஸ்நானம்
    (எ. கா.) வன்னிதானம் புகுமுன் மானததானந்தோய மாட்டாரேனும் (குற்றா. தல. திருக்குற். 21).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. notes of the scale ( Mus. )
  2. singing the notes of the scale in various combinations ( Mus. )
  3. place, location, situation, spot, station
  4. home, abode
  5. position, status
  6. temple
  7. The heaven of Indra
  8. seat
  9. organs involved in articulation (இலக்கணம்)
  10. place, position of a figure in a series in notation, as indicating its value (கணிதம் )
  11. A house in an horoscope ((சோதிடவியல்) )
  12. stages counted in ceyyuṭ-poruttam, numbering five, viz., pāla-t-tāṉam, kumara-t-tāṉam, irāca-t-tāṉam, mūppu-t-tāṉam, mara- ṇa-t-tāṉam (கவிதை )
  13. see... தானப்பொருத்தம்
  14. state of being equal in power
  15. power, strength
  16. gift in charity, donation, grant, as a meritorious deed
  17. liberality, munificence, bounty, one of taca-pāramitai,...தசபாரமிதை ( ← இதைப் பார்க்கவும்) (புத்தத் தத்துவம்)
  18. gifts, as a political expedient, one of four upāyam, உபயம் ( ← இதைப் பார்க்கவும்)
  19. charitable assistance, of four kinds, viz., ākāra-tāṉam, apaya-tāṉam, cāstira-tāṉamauṣata-tāṉam....(Jaina. )
  20. householder's lifeஉபயம்
  21. must of the elephant
  22. sacrifice, as requiring offerings
  23. A kind of plantain
  24. bathFile:Angkor Wat - Heaven and Hell1.jpg
தானம்
அன்னதானம், கோதானம், கண்தானம், இரத்ததானம், கன்னிகாதானம்
தானி, தானியமான்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தானம்&oldid=1998208" இலிருந்து மீள்விக்கப்பட்டது