உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி மகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள்அகரமுதலி மகரவரிசை

[தொகு]

மகரம்

[தொகு]

= ௸,
= ௸,
மகளிர்
= பெண்பாலார், 57
= ௸, 822
= ௸, 912
= ௸, 918
= ௸, 974;
= தந்நலம் விலைகொடுப்பார் யாவர்க்கும் விற்பதல்லது அதற்கு ஆவார், ஆகாதார் என்னும் வரைவிலாத மகளி்ரது இயல்பு[வரைவின் மகளிர்], அதி. 92.
மகற்கு
= புதல்வனுக்கு, 67;
= ஒருவனுக்கு, 110.
மகன்
= புதல்வன், 70;
= மனிதன், 196.
மகனை
= புதல்வனை, 69.
மகிழ்
= மகிழ்ச்சி = களிப்புறுதல், 1090
= ௸, 1201.
மகிழ்ச்சியின்
= களிப்பால், 531
= ௸, 539.
மகிழ்தல்
= (உணர்வழிந்து)களித்தல், 1281;
= [புணர்ச்சி மகிழ்தல்], அதி. 111.
மகிழ்ந்து
= களிப்புற்று, 1057.
மக்கட்கு
= மாந்தர்க்கு, 388.
மக்கள்
= புதல்வர், 60
= ௸, 61
= ௸, 62
= ௸, 63
= ௸, 64
= ௸, 65
= ௸, 66
= ௸, 68;
= மாந்தர், 196
= ௸, 410
= ௸, 600
= ௸, 993
= ௸, 997
= ௸, 1071;
= வீரர்[நிலைமக்கள்], 770.

மங்கலம்

[தொகு]
மங்கலம்
= நன்மை, 60.

மட

[தொகு]
மட
= வெருவுதலையுடைய, 1089;
= கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாதவழி நினைந்து கண்டவழி மறக்கின்ற, 1297.
மடங்கின்
= வாளாவிருப்பின், 1036.
மடந்தை
= மங்கை, 1116
= ௸, 1273.
மடந்தையொடு
= மங்கையுடன், 11122.
மடமை
= அறியாமை, 89.
மடல்
= பனையோலை, பனங்கருக்கு; பனங்கருக்குகளால் இயன்ற குதிரை(அதன்மேல் காதலன் ஏறித் தன் காதல் துன்பத்தை வெளியிடுவன்), 1131
= ௸, 1132
= ௸, 1133
= ௸, 1136
= ௸, 1137.
= ௸,
= ௸,
= ௸,
மடலொடு
= மடல் ஏறுதலுடன், 1135.
மடவரல்
= மங்கை, 1085.
மடவார்
= அறிவிலிகள், 153.
மடவார்கண்
= பேதையார் மாட்டு = அறிவிலிகள் மாட்டு, 89.
மடி
= சோம்பல், 371
= ௸, 601
= ௸, 602
= ௸, 603|1|
= ௸, 604
= ௸, 605
= ௸, 606
= ௸, 607
= ௸, 609
= ௸, 610
= ௸, 617
= ௸, 1028;
= மடியில், தன்னுள், 603|2|;
= ௸, ஆடை, 1023;
= கருதியன செய்யுங்கால் சோம்புதல் இல்லாமை[மடியின்மை], அதி. 61.
மடிந்து
= வீழ்ந்து = சோம்பி = சோம்புதலால், 604|2);
= நாள் உலந்து = அழிந்து, 604|1|.
மடிமை
= சோம்பல் = காரியக்கேடு, 608.
மடியும்
= அழியும், 603.
மடியை
= சோம்பலை, 602.
மடுத்த
= விலங்கிய, 624.

மண்

[தொகு]
மண்
= சுதை, 407;
= களிமண், 660;
= தரை, 966;
= மட்கலம், 883;
= நிலம், 742.
மணந்த
= வரைந்து கொண்ட, 1233.
மணந்தார்
= வரைந்து கொண்டவர், 1221
= ௸, 1226.
மணல்
= மணல், 396.
மணி
= மாணிக்கம், 742.
மணியில்
= பளிக்கு மணியகத்து, 1273.
மணியின்
= கருவிழியின்கண்(உறையும்)பாவை, 1123.
மண்ணோடு
= மண்ணுடன், 576.

மதலை

[தொகு]
மதலை
= முட்டுத் தூண், 449.
மதி
= (நுண்)அறிவு, 636
= ௸, 915
= ௸, 1229;
= திங்கள்(= முழுமதி), 782
= ௸, 1116;
= திங்களே/ நிலாவே, 1118
= ௸, 1119
= ௸, 1210.
மதிக்கண்
= திங்களிடத்தில், 957.
மதிக்கு
= திங்களின்கண், 1117.
மதிப்பின்
= நினைத்தால், 898.
மந்திரியின்,
= அமைச்சனை விட, 639.

மயக்கம்

[தொகு]
மயக்கம்
= அவிச்சை = அறியாமை, 360.
மயங்கி
= அறிவிழந்து, 348.
மயல்
= மயக்கம் = அறியாமை, 344.
மயிர்
= ரோமம், 964
= ௸, 969.
மயில்
= மயில்(பறவை), 1081.

மர

[தொகு]
மர
= மரத்தாலான[மரப்பாவை], 1020
= ௸, 1058.
மரத்து
= மரம்(போன்றது)[மரத்தற்று], 217;
= மரம்(போன்றிருப்பர்)[மரத்தனையர்], 576.
மரபினார்
= இயல்பினையுடையவர், 188.
மரம்
= மரம், 78
= ௸ 216,
= ௸, 600
= ௸, 870
= ௸, 997
= ௸, 1008.
மரீஇயவனை
= பயின்றவனை, 227.
மருங்கு
= பக்கத்தில் = கொடுநெறியிற் (சென்று), 210;
= கிளை = சுற்றம்(உடையார்)[மருங்குடையார்], 526.
மருட்டி
= மயக்கினார்(போலும்)[மருட்டியற்று], 1020.
மருண்டு
= மயங்கி, 1139
= ௸, 1229.
மருந்து
= அமிழ்தம், 82;
= ஔடதம், 217
= ௸, 942
= ௸, 950
= ௸, 958
= ௸, 1091
= ௸, 1102
= ௸, 1241
= ௸, 1275;
= பிணிகளைத் தீர்க்கும் மருந்தின் திறம்[மருந்து], அதி. 95.
மருவுக
= பயில்க, 800
மருள்
= மயக்கம் = அவிச்சை, 199
= ௸, 351
= ௸, 352;
= மயங்கிய, 1222
= ௸, 1230.
மருளான்
= மயக்கத்தால் = அவிச்சையால், 1002.

மலர்

[தொகு]
மலர்
= பூ, 595
= ௸, 650
= ௸, 1112
= ௸, 1119
= ௸, 1142
= ௸, 1231.
மலரின்
= பூவைக்காட்டிலும், 1289.
மலரும்
= விரியும், 1227.
மலர்தல்
= அலர்தல், விரிதல், 425.
மலர்மிசை
= மலரின்கண், 03.
= அடுக்கம், 737
= ௸, 742.
மலையின்
= மலையைக் காட்டிலும், 124.
மலைந்து
= மேற்கொண்டு, செய்து, 657.
மல்க
= நிரம்ப, 780.
மல்லல்
= வளப்பம், 245.

மழலை

[தொகு]
மழலை
= குதலை = கொச்சை மொழி, 66.
மழித்தல்
= சிறைத்தல், 280.
மழை
= மாரி, 12
= ௸, 15
= ௸, 55;
= கண்ணீர், 1239.

மறக்கல்லா

[தொகு]
மறக்கல்லா
= மறக்க முடியாத, 1297
மறத்தல்
= நினைவொழிதல், 152;
= ஒழிக, 303.
மறத்தலின்
= மறத்தலைவிட, 32.
மறத்திற்கு
= தீவினையை நீக்கவுதற்கு, 76.
மறந்தார்
= நினைவொழிந்தார், 263.
மறந்தீர்
= நினைத்திலீர், 1316.
மறந்து
= நினைவொழிந்து, 204
= ௸, 1284.
மறந்தேன்
= நினைவொழிந்தேன், 1297.
மறப்பது
= மறத்தல், 108.
மறப்பர்
= பொச்சாப்பர் = நினைப்பொழிவர், 560.
மறப்பின்
= நினைவொழிந்தால், 134
= ௸, 1125
= ௸, 1207
= ௸, 1262.
மறப்பு
= பொச்சாப்பு = நினைவு ஒழிதல், 1125
= ௸, 1207.
மறம்
= தறுகண்மை = வீரம், 766.
மறவர்
= வீரர், 778.
மறவற்க
= நினைவு கூர்க, 106.
மறவி
= பொச்சாப்பு = நினைவில்லாமை, 605.
மறன்
= வீரம், 384.
மறு
= மாசு = களங்கம், கறை, 957
= ௸, 1117.
மறுகில்
= தெருவில், 1139.
மறுகும்
= சுழலுகின்றது, 1139.
மறுத்தல்
= நீக்குதல்[புலான் மறுத்தல்], அதி. 26.
மறுத்தானை
= நீக்கியவனை, 260.
மறுத்து
= மீண்டும், 312;
= (உள்ளம் வேண்டிய அளவு)ஒழித்து, 945.
மறுமை
= வேறு பிறப்பு = துறக்கம், 98
= ௸, 459
= ௸, 904
= ௸, 1042.
மறை
= மறைத்தல், ஒழித்தல் 1138
= ௸, 1254;
= மந்திரம், 28;
= (சிலர்க்கு)மறுக்கப்படுவது= இரகசியம், 590
= ௸, 695
= ௸, 1076
= ௸, 1180;
= உபதேசம், 847.
மறைக்கும்
= மூடிவைக்கும், 980.
மறைத்தல்
= மூடுதல், 846.
மறைத்தீர்
= மறைக்கலுற்றீர், 1318.
மறைந்தவை
= மறையச் செய்த செயல்கள், 587.
மறைந்து
= ஒளிந்து, 274
= ௸, 278.
மறைப்பான்
= (குற்றம்)வராமற் காக்க முயல்பவன், 1029.
மறைப்பின்
= விலகினால், 1086.
மறைப்பேன்
= ஒளிப்பேன், 1161
= ௸, 1253.
மறையா
= கடியாத(போது), இலவாக்காத(போது)[மறையாவழி], 846.
மற்ற
= பிற (=அறத்தொடு பொருந்தாது வருவன)[மற்றெல்லாம்], 39.
மற்று
= அசைநிலை, 30
= ௸, 36
= ௸, 60
= ௸, 95
= ௸, 205
= ௸, 323
= ௸, 596
= ௸, 773
= ௸, 802
= ௸, 905
= ௸, 1122;
= வினைமாற்று = ‘அவ்வாறன்றி,’ ‘ஆனால்,’ ‘பின்’ என்னும் பொருளது, 15
= ௸, 16
= ௸, 65
= ௸, 248
= ௸, 266
= ௸, 349
= ௸, 359
= ௸, 362
= ௸, 364
= ௸, 459
= ௸, 490
= ௸, 506
= ௸, 655
= ௸, 695
= ௸, 923
= ௸, 966
= ௸, 968
= ௸, 1151
= ௸, 1155
= ௸, 1166
= ௸, 1178
= ௸, 1206
= ௸, 1294
= ௸, 1308
= ௸, 1316;
= பிறிது = வேறு, 173
= ௸, 221
= ௸, 380
= ௸, 588
= ௸, 591
= ௸, 1033;
= மீண்டு, 356;
= பின்னும்[மற்றும்], 344
= ௸, 345
= ௸, 373
= ௸, 540.
மற்றைய
= பிற, 289;
= (அஃது)ஒழிந்தவை, 661.
மற்றையவர்
= பிறர், 348.
மற்றையவர்கள்
= பிறர்கள், 263.
மற்றையவை
= ஒழிந்த பிற, 400.
மற்றையார்
= பிறர், 365.
மற்றையான்
= பிறன், 214.

மன்

[தொகு]
மன்
= அசைநிலை, 819
= ௸, 1016
= ௸, 1146
= ௸, 1164
= ௸, 1327;
= ஒழியிசை = சொல்லாதொழிந்த சொற்களால் பொருளை இசைப்பது, 378
= ௸, 540
= ௸, 990
= ௸, 996
= ௸, 1086
= ௸, 1102
= ௸, 1125
= ௸, 1161
= ௸, 1165
= ௸, 1170
= ௸, 1178
= ௸, 1184
= ௸, 1189
= ௸, 1206
= ௸, 1207
= ௸, 1212
= ௸, 1216
= ௸, 1253
= ௸, 1254
= ௸, 1265
= ௸, 1266
= ௸, 1284;
= ஆக்கம், 1329;
= மிகுதி, 1138;
= நிலைபேறு[மன்னுயிர்], 68
= ௸, 244
= ௸, 268
= ௸, 318
= ௸, 457
= ௸, 1168.
மன
= மனத்தின்கண் நிகழும்(கவலை)[மனக்கவலை], 07;
= மனத்தது நன்மை[மன நலம்], 457
= ௸, 458
= ௸, 459;
= மனத்தினது திண்மை[மனத்திட்பம்], 661;
= மனத்தினையுடைய மகளிர்[மனப் பெண்டிர்], 920.
மனத்தது
= நெஞ்சத்துள்ளது, 278.
மனத்தான்
= உள்ளமுடையவன், 271;
= உள்ளத்தோடு, 317;
= மனம் காரணமாக, 453.
மனத்தின்
= உள்ளத்தால், 825.
மனத்து
= உள்ளத்தின்கண், 454.
மனத்துக்கண்
= உள்ளத்தில், 34.
மனத்தொடு
= உள்ளத்தொடு(பொருந்த), 295.
மனம்
= உள்ளம், 253
= ௸, 455
= ௸, 456
= ௸, 822
= ௸, 823
= ௸, 884.
மனை
= வீடு, 820;
= இல்லாள், 60
= ௸, 148
= ௸, 901
= ௸, 1268.
மனையாளை
= இல்லாளை, 904;

(‘மனைவி’ என்னும் சொல்லாட்சி திருக்குறளில் இல்லை).

மன்ற
= தேற்றப் பொருள் = திண்ணமாக, ஒரு தலையாக, 143
= ௸, 229
= ௸, 649
= ௸, 867
= ௸, 880
= ௸, 1136.
மன்றில்
= சபையில், 820.
மன்று
= சபை = தந்தை, தன்னையர், 1138
= ௸, 1254.
மன்னர்
= வேந்தர், 692;
= அமைச்சர் அரசரைப் பொருந்தி ஒழுகுமாறு[மன்னரைச் சேர்ந்தொழுகல்], அதி. 70.
மன்னரான்
= வேந்தரால், 692.
மன்னர்க்கு
= வேந்தர்க்கு, 556.
மன்னவன்
= வேந்தன், 388
= ௸, 445
= ௸, 542
= ௸, 543
= ௸, 545
= ௸, 546
= ௸, 548
= ௸, 553
= ௸, 558
= ௸, 559
= ௸, 581
= ௸, 583
= ௸, 610.
மன்னன்
= வேந்தன், 386
= ௸, 448
= ௸, 520
= ௸, 544.
மன்னா
= நிலைக்கமாட்டா, 556.
மன்னிய
= நிலைபெற்ற, 692.
மன்னுதல்
= (புகழ்)நிலைபெறுதல், 556.
மன்னும்
= நிலைபெறுகின்ற(உயிருக்கு)[மன்னும் உயிர்க்கு], 190.


திருக்குறள் அகரமுதலி கரவரிசை முற்றும்

பார்க்க:

[தொகு]

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|