உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி மெகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள்அகரமுதலி மெகரவரிசை

[தொகு]

மெகரம்

[தொகு]

மெ

மெய்
= உண்மை, 249
= ௸, 300
= ௸, 354
= ௸, 355
= ௸, 356
= ௸, 423;
= நீதி, 857;
= மார்பு, 774;
= உடம்பு, 65
= ௸, 619
= ௸, 925;
= பிறப்பு வீடுகளை உள்ளவாறு உணர்தல்(=தத்துவ ஞானம்)[மெய்யுணர்தல்], அதி. 36.

மெலிந்து

[தொகு]
மெலிந்து
= இளைத்து[படர்மெலிந்திரங்கல்], அதி. 117.
மெலியார்
= எளியார், 250;
= துணைவலியுடன் இல்லாதவர், 861.
மெல்ல
= மெதுவாக = அளவிறவாமல், 562;
= வெளிப்படாமல், 1094.
மெல்லிது
= மென்மையானது, 1289.

மென்

[தொகு]
மென்
= மென்மையான, 919
= ௸, 1103
= ௸, 1111
= ௸, 1265
= ௸, 1279
= ௸, 1325.
மென்மை
= வலியின்மை, 877.


திருக்குறள் அகரமுதலி மெகர வரிசை முற்றும்


திருக்குறள் அகரமுதலி மேகார வரிசை

[தொகு]

மேகாரம்

[தொகு]

மே


மேக
= விரும்புக, 861.

மேய்ந்து

[தொகு]
மேய்ந்து
= மேய்ந்தாற்(போன்றது)[மேய்ந்து], 273.

மேல்

[தொகு]
மேல்
= உயர்ந்த(அமளி), 973|1|;
= உயர்வாகிய[மேல் உலகம்] (உலகம்=வீட்டுலகம்), 222;
= அறிவுடையார், 627;
= பெரியர், 973|2|;
= உயர்ந்தவர், 1016;
= மறுபிறப்பிலும்[மேலும்], 1262;
= ஏற்றுக்கொண்டு ஒழுகுவாரைக் காட்டிலும்[மேற் கொண்டாரின்], 551|1|;
= விரதமாகக் கைக்கொண்டு[மேற் கொண்டு], 326|1|;
= ஏற்றுக்கொண்டு, 551|2|;
= (தாம்)மேலிட்டுக் கொண்டு =(கற்றதுபோல்) பாவனை செய்து கொண்டு, 845;
= மேற்கொள்ளுவானாயின் [மேற்கொளின்], 836;
= மேற்கொளப் பண்ணி [மேற்கொளீஇ], 938;
= தம்மேற் கொள்பவர் [மேற் கொள்பவர்], 713;
= மேற்கொண்டொழுகுவார்க்கு, 981;
= முயல்வது [மேற்கொள்வது], 262;
= மேற் கொண்டு போதுகின்றது = ஏற்று வருவது, 1055;
= விரைந்து [மேற்சென்று], 335;
= முற்பட்டு, 784;
= உயர்ந்த சாதியிற் பிறந்தவர்கள் [மேற் பிறந்தார்], 409;
= மேல் வந்தாலும் = எதிர்த்தாலும் [மேல் வரினும்], 765;
= தங்கண் வருங்கால் [மேல் வருங்கால்], 733;
= எழுவதற்கு முன்னே [மேல் வாராமுன்], 335;
= (ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு)கண், இடத்தில், 232
= ௸, 250
= ௸, 326|2|
= ௸, 861
= ௸, 1079
= ௸, 1087
= ௸, 1182.
மேல
= இடத்தன, 320.
மேலர்
= மேலேயிருப்பவராக, 1218.

மேவல்

[தொகு]
மேவல்
= பொருந்துதல், 857.
மேவற்க
=பொருந்தாதொழிக, 877.
மேவன
= விரும்பியவை, 1073.
மேவார்
= விரும்புபவர், 1059.

மேற்று

[தொகு]
மேற்று
= மேலது, 1027.

மேனி

[தொகு]
மேனி
= நிறம், 1113
= ௸, 1182
= ௸, 1185
= ௸, 1189
= ௸, 1278.
மேன்மேல்
= பின்னும் பின்னும் = இடைவிடாமல், 368.
மேன்மை
= மேம்பாடு, உயர்வு, 137.


திருக்குறள் அகரமுதலி மேகார வரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி மைகார வரிசை

[தொகு]

மைகாரம்

[தொகு]

மை


மைந்து
= வலிமை, 539.

மையல்

[தொகு]
மையல்
= மயக்கம் = மயங்குதல், 838.
மையாத்தி
= நீ மயங்குகின்றாய், 1112.


திருக்குறள் அகரமுதலி மைகார வரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி மொகர வரிசை

[தொகு]

மொகரம்

[தொகு]

மொ


மொக்குள்
= முகிழ்ப்பு, 1274

மொய்ம்பினவர்க்கு

[தொகு]
மொய்ம்பினவர்க்கு
= வலியுடையவர்க்கு, 492.

மொழி

[தொகு]
மொழி
= சொல், 28|1|
= ௸, 567
= ௸, 1258;
= மந்திரம் [மறை மொழி], 28|2|;
= (மெல்லிய)மொழியினையுடையாள்[பணிமொழி], 1121.
மொழியின்
= சொன்னால், 295.
மொழிவது
= சொல்லப்படுவது, 643.


திருக்குறள் அகரமுதலி மொகர வரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி மோகார வரிசை

[தொகு]

மோகாரம்

[தொகு]

மோ


மோப்ப
= முகர = முகர்வதால், 90.


திருக்குறள் அகரமுதலி மோகார வரிசை முற்றும்


பார்க்க:

[தொகு]

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|