உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி வெகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள் அகரமுதலி வெகர வரிசை

[தொகு]

வெகரம்

[தொகு]
வெஃகா
= விரும்பாத, 179.
வெஃகாமை
= விரும்பாதிருத்தல், 178;
= பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை [வெஃகாமை], அதி. 18.
வெஃகி
= விரும்பி, 172
= ௸, 173
= ௸, 175
= ௸, 176|1|
= ௸, 177;
= அவாவி, 176|2|.
வெஃகின்
= வௌவக் கருதினால், 171
= ௸, 180.
வெஃகுதல்
= வௌவக் கருதுதல், 174.

வெகுளாமை

[தொகு]
வெகுளாமை
= சினவாதிருத்தல், 308
= ௸, 1060;
= சினத்தைச் செய்யாமை [வெகுளாமை], அதி. 31.
வெகுளி
= சினம், 29
= ௸, 35
= ௸, 309
= ௸, 526
= ௸, 864;
= வெறுப்பு, 360,
வெகுளியின்
= சினம் கொள்வதினும், 531.
வெகுளியை
= சினத்தை, 303.
வெகுளும்
= பகைத்தலால் வரும்(எளிய பொருள் [வெகுளும் சிறுபொருள்], 870.

வெண்மை

[தொகு]
வெண்மை
= புல்லறிவுடைமை, 844.

வெம்

[தொகு]
வெம்
= வெய்தாகிய, கொடிய [வெங்கோலன்], 563
= ௸ [வெந்துப்பின்], 895.

வெயர்ப்ப

[தொகு]
வெயர்ப்ப
= வேர்வையுண்டாக, 1328.
வெயில்
= கதிரவன் வெப்பம், 77.
வெய்து
= கடிதில், 569;
= வெப்பமாக, 1128.

வெருவந்த

[தொகு]
வெருவந்த
= அஞ்சிய செயல்கள், 563;
= குடிகள்அஞ்சுவதும், பகுதியஞ்சுவதும், தான் அஞ்சுவதும் ஆகிய தொழில்களைச் செய்யாதிருத்தல் [வெருவந்த செய்யாமை], அதி.57.
வெருவந்து
= அஞ்சி, 569.
வெரூஉம்
= அஞ்சும், 599.

வெல்

[தொகு]
வெல்
= வெற்றி கொள்கின்ற [வெல்படை], 761.
வெல்லல்
= வெற்றிகொள்ளுதல், 647.
வெல்லும்
= வெல்லாநிற்கும், 181|1|
= ௸, 495
= ௸, 769;
= வெல்லக்கருதும்(அரசர்க்கு), 481|2|;
= வெல்லவல்ல (சொல்), 645.
வெல்வது
= வெற்றி கொள்ளுவது, 748.

வெளிப்படும்

[தொகு]
வெளிப்படும்
= அலராகும்(போதெல்லாம்) [வெளிப்படுந்தோறும்], 1145.
வெளியார்
= வெள்ளைகள் = அறிவிலிகள், 714.
வெளிறு
= வெண்மை = அறியாமை, 503.
வெள்ள
= வெள்ளமாகிய(நீரை) [வெள்ள நீர்], 1170.
வெள்ளத்து
= வெள்ளத்தை = நீர்ப்பெருக்கத்தை, 595
= ௸, 622.

வெறி

[தொகு]
வெறி
= நல்லமணம், 1113.
வெறிய
= அறிவொடுபடாத செயல்கள், 175.
வெறு
= செறியத்தக்க = நிலையான [வெறுத்தக்க], 993.
வெறுக்கை
= (ஊக்க)மிகுதி [உள்ள வெறுக்கை], 600
= ௸, 971.
வெறுக்கையுள்
= செல்வங்கள் எல்லாவற்றுள்ளும், 761.
வெறுப்பு
= விருப்பமின்மை, 696.

வென்ற

[தொகு]
வென்ற
= வெற்றி கொண்ட, 174.
வென்றது
= வெல்லப்பட்டது, 931.
வென்றார்
= வெற்றி கொண்டார், 1327.
வென்றி
= வெற்றி, 546
= ௸, 683.
வென்றிடின்
= வென்றால், 931.
வென்றீக
= வெல்க, 1265.
வென்று
= திண்ணமாக வெற்றி கொள்க [வென்று விடல்], 158.


திருக்குறள் அகரமுதலி வெகர வரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி வேகார வரிசை

[தொகு]

வேகாரம்

[தொகு]
வேட்ட
= விருப்பங்கூர்ந்த, 1105.
வேட்டலின்
= வேள்வி செய்தலை விட, 259.
வேட்டு
= விரும்பப்பட்டாற் போன்றது [வேட்டற்று], 1145.
வேட்டுவன்
= வேடன், 274.
வேட்ப
= விரும்பும் எண்ணம், 643
= ௸, 646
= ௸, 696.
வேட்பன
= விரும்புபவையாகிய செயல்கள், 697.

வேண்ட

[தொகு]
வேண்ட
= விரும்ப, 362
= ௸, 364.
வேண்டல்
= விரும்புதல், 82
= ௸, 871.
வேண்டற்க
= விரும்பாதொழிக, 177
= ௸௸, 931.
வேண்டா
= வேண்டுவதில்லை, 37
= ௸, 280
= ௸, 357
= ௸, 497
= ௸, 785
= ௸,942;
= நோக்கமாட்டா, 211;
= விரும்பாத, 777
= ௸, 901
= ௸, 1003.
வேண்டாதார்
= விரும்பாதவர், 922;
= பகைவர், 584.
வேண்டாதான்
= விரும்பாதவன், 163
= ௸, 206.
வேண்டாது
= விரும்பாது, 670;
= வேண்டாமல், 1037.
வேண்டாமை
= விரும்பாதிருத்தல் = வெறுத்தல், 04;
= அவாவாமை, 180
= ௸, 362
= ௸, 363.
வேண்டாரை
= (சிறந்ததென்று)கொள்ளாத அமைச்சரை, 670.
வேண்டி
= விரும்பி, 263
= ௸, 777
= ௸, 1177
= ௸, 1255;
= விரும்புவர் [வேண்டியிருப்பர்-ஒரு சொல் நீர்மைத்து], 804.
வேண்டிய
= விரும்பியவை, 265|1|
= ௸, 651;
= படைத்த பொருள்கள், 343;
= விரும்பிய(வாறு) [வேண்டியாங்கு], 265|2|.
வேண்டின்
= விரும்பினால், 154
= ௸, 342
= ௸, 893|1|
= ௸, 960
= ௸, 1062
= ௸, 1150;
= வேண்டியவழி, 893|2|.
வேண்டுக
= விரும்புக, 960.
வேண்டுங்கால்
= விரும்பினால், 362.
வேண்டுதல்
= விழைதல் = விரும்புதல், 04.
வேண்டுப
= விரும்புவனவாகிய செயல்கள், 696.
வேண்டுபவர்
= காதலிப்பவர், 173;
= விரும்புபவர், 320
= ௸, 562
= ௸, 580
= ௸, 602
= ௸, 962.
வேண்டும்
= விரும்பும், 21
= ௸, 362.
= தகும், 85
= ௸, 257
= ௸, 315
= ௸, 343
= ௸, 470
= ௸, 538
= ௸, 611
= ௸, 652
= ௸, 653
= ௸, 667
= ௸, 963
= ௸, 1060;
= விரும்பப்படும், 1282;
= இன்றியமையாதது, 481;
= சிறந்தது, 794;
= ௸, (விதிப்பொருட்டு)விரும்புக, 960.
வேண்டுவான்
= விரும்புபவன், 281.

வேந்தர்

[தொகு]
வேந்தர்
= மன்னவர், 691.
வேந்தர்க்கு
= மன்னவர்க்கு, 390
= ௸, 481
= ௸, 689.
வேந்தற்கு
= மன்னவனுக்கு, 382.
வேந்தன்
= மன்னவன், 389
= ௸, 528
= ௸, 530
= ௸, 549
= ௸, 557
= ௸, 564
= ௸,567
= ௸, 568
= ௸, 569
= ௸,582
= ௸, 756
= ௸, 761
= ௸, 1268;
= இந்திரன், 899.
வேந்தன்கண்
= மன்னவனிடத்தில், 665.
வேந்து
= மன்னவன், 550
= ௸, 551
= ௸, 561
= ௸, 735
= ௸, 740
= ௸, 895;
= அரசர் சாதி, 681;
= அரச பதவி, 899.

வேபாக்கு

[தொகு]
வேபாக்கு
= வெப்பமுறல் அல்லது கொடுமையுறல், 1128.

வேய்

[தொகு]
வேய்
= மூங்கில், 1113.

வேரார்

[தொகு]
வேரார்
= வெகுளமாட்டார், 487.
வேர்ப்பர்
= வெகுள்வர், 487.

வேல்

[தொகு]
வேல்
= எரியீட்டி, 772
= ௸, 774
= ௸, 775
= ௸, 1113;
= படைக்கலப் பொது, 546;
= வேற்படை ஏந்திய மறவன் [வேலாள்=வேல்+ஆள்.], 500.
வேலாருள்
= வேலையுடைய வேற்றரசரிடை, 683.
வேலி
= ஏமம் = பாதுகாப்பு, 1016.
வேலை
= (ஊழியின்)இறுதி நாளாய் இருந்தாய் அல்லது நீ வேற்படையாய் இருந்தாய், 1221.
வேலொடு
= வேற்படையுடன், 552.

வேள்

[தொகு]
வேள்
= உதவி [வேளாண்மை], 81;
= உபகாரியாந் தன்மை, 613
= ௸, 614;
= ஒப்புரவு, 212.
வேள்வி
= வேட்டல் = யாகம், 87
= ௸, 88.

வேறு

[தொகு]
வேறு
= பிறர்(ஆவர்), 143
= ௸, 926
= ௸, 1209;
= கூறு(ஆகும்), 374|1|;
= தனி(ஆகும்), 374|2|3|;
= மாறுபாடு(ஆகும்), 514
= ௸, 519
= ௸, 822;
= பிறிது(ஆகும்), 600
= ௸, 819;
= மாறுபட்டவர்(ஆவர்), 704;
= தனிச்சிறப்பு(ஆகும்), 1012;
= திண்ணமாக மாறும் [வேறுபடும்], 822
= மாறாக இருப்பவர் [வேறுபட்டார்], 819.
வேற்றுமையான்
= மாறுபாட்டினால், 972.


திருக்குறள் அகரமுதலி வேகார வரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி வைகார வரிசை

[தொகு]

வைகாரம்

[தொகு]

வை


வை
= வைக்கோல், 435.
வைகல்
= நாள் = நாடோறும் [வைகலும்], 83.
வைக்க
= கருத = கருதத்தகும், 50
= ௸, 214
= ௸, 388
= ௸, 850.
வைக்கும்
= இருத்தும், 776.

வைத்தான்

[தொகு]
வைத்தான்
= சேமித்து வைத்தானாக, 1001.
வைத்து
= ஈயாமல் சேமித்து, 228;
= உட்கொண்டு = நினைந்து, 1269;
= இட்டாற்(போன்ற) [வைத்தற்று], 840.

வைப்பர்

[தொகு]
வைப்பர்
= கொள்வர், 155.
வைப்பிற்கு
= (வீட்டு)நிலத்திற்கு, 24.
வைப்பின்
= உலகத்தில், 149.
வைப்பு
= வைத்தல், வைத்தற்கு (உரிய இடம்) [வைப்புழி], 226.

வையகத்து

[தொகு]
வையகத்து
= மண்ணுலகத்தில், 75
= ௸, 1055.
வையகம்
= மண்ணுலகம், 101
= ௸, 547.
வையக்கு
= நில உலகத்திற்கு, 701.
வையத்தார்க்கு
= நிலவுலகத்துள்ளவர்க்கு, 238.
வையத்தின்
= நிலவுலகத்தைவிட, 353.
வையத்து
= உலகத்தில், 22
= ௸, 850.
வையத்துள்
= நிலவுலகத்துள், 50.
வையம்
= நிலம், 189.
வையாது
= கருதாது, 117;
= (உலகத்தார்)கொள்ளார், 841.
வையார்
= (உள்ளத்துக்)கொள்ளார், 155.


திருக்குறள் அகரமுதலி வைகார வரிசை முற்றும்

திருக்குறள் அகரமுதலி முற்றும்

[தொகு]

பார்க்க:

[தொகு]

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.

க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-| வா-| வி,வீ-| வெ,வே,வை. ||