சுரணை
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
சுரணை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "ஏனய்யா இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான். ([1])
- சற்றே சுரணை வர வர, வலி முழுவதுமாகத் தெரிய வந்தாலும் சற்றும் முனகினானில்லை (வன மோகினி, கே.ஆர்.ஐயங்கார்)
- கழுதை வயசாகிறது. ஆனால் அறிவு வேலை செய்ய மறுக்கிறது. இவையெல்லாமும் அவள் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமா? உனக்கே மனதில் உதிக்காதா? உன் சிந்தனை உன் கட்டுக்குள் இல்லையா? அதைப் பிறர் பிறாண்டி விட்டால்தான் உனக்குச் சுரணை வருமா? (மீட்சி, உஷாதீபன்)
- படித்துப் பதவி பெற்று வயிறு வளர்க்கும் பெரும்பான்மைத் தமிழனுக்குக் கூட மொழி பற்றிய அக்கறை கடுகளவும் இல்லையே. தன் இனம் இப்படித் தாழ்ந்து கிடக்கின்றதே என்ற சூடு சுரணை இல்லாமல்தானே அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றான்! (தமிழினம் கொஞ்சமும் தற்காப்புணர்வு அற்றிருப்பது ஏன்?, பேரா. ம.லெ. தங்கப்பா)
- நெருப்புக்குப் பல குணங்கள் உண்டு. எனினும், சட்டென்று நினைவுக்கு வருவது, நெருப்பு சுடும் என்பதுதான். எனவே, நெருப்பாய் இரு என்றால், தமிழா நீ சூடு, சுரணை உள்ளவனாக இரு என்று பொருள். தமிழனுக்குச் சூடே கிடையாதா, அவனுக்குக் கோபமே வராதா என்று கேட்டால், அப்படிச் சொல்லிவிட முடியாது. தன் சாதியைப் பற்றி யாராவது இழிவாகக் கூறிவிட்டால், தமிழன் கோபக் கனலாகி விடுகிறான். அவனிடம் சூடு பறக்கிறது. ஆனால், நம் மொழி, இனம் பற்றி எவரேனும் இழிவாய்ப் பேசினால், நாம் ஆறிய சோறாய் அடங்கிப் போகிறோம். அங்கேதான் நெருப்பாய் இருக்க வேண்டும் என்கிறார் கவிஞர். (இருப்பாய் தமிழா நெருப்பாய்!, சுப. வீரபாண்டியன்)
- அவன் மிக்க சுரணை உள்ளவன்
(இலக்கியப் பயன்பாடு)
- அதிக நித்திரை கொடுக்கச் சுரணைகெட்டு (இராமநா. உயுத். 33)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +